மும்பை : நாட்டின் பொருளாதாரம் முன்னேறுவதற்கு மக்கள் தங்கத்தின் மீதான மோகத்தை விடவேண்டும். பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி துணை கவர்னர் சக்கரவர்த்தி அறிவுரை கூறுகிறார். ரிசர்வ் வங்கியின் வாராந்திர கூட்டத்தில் துணை கவர்னர் சக்கரவர்த்தி பேசியதாவது: நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.2% ஆக அதிகரித்துள்ளது. 1991ல் பொருளாதார பின்னடைவு காலத்தில் கூட 3% ஆகவே இருந்தது. இதற்கு காரணம், நமது இறக்குமதி செலவு அதிகரித்து, ஏற்றுமதி வருவாய் குறைந்ததுதான்.
தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்குத்தான் நாம் அதிகமாக செலவிடுகிறோம். உலக தங்க கவுன்சில் புள்ளிவிவரப்படி, 2011,2012 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி செலவு 6000 கோடி டாலராக(969டன்) உயர்ந்துள்ளது. அரசு புள்ளி விவரப்படி, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு 15,560 கோடி டாலராக உள்ளது. எனவே, இந்த இரண்டின் இறக்குமதியையும் குறைத்து விட்டால் நமது பொருளாதார பிரச்னை தீர்ந்து விடும். இறக்குமதி தங்கம் அவ்வளவும் நகைக்காகவோ, கோயில் காணிக்கையாகவோ போகிறது.
இன்னும் ஏன் பழங்கால வழக்கப்படி தங்கத்தின் மீது மக்கள் மோகம் கொண்டிருக்கிறார்கள்? இதிலிருந்து மக்கள் மனநிலை மாற வேண்டும். அதே போல், மும்பை போன்ற நெருக்கடியான நகரங்களில் சைக்கிளில் போனால் வசதி, உடம்புக்கும் நல்லது என்று பிரபலப்படுத்த வேண்டும். தங்கத்தை விட்டு வேறு வகைகளில் சேமியுங்கள். பெட்ரோல் பயன்பாட்டை குறையுங்கள். நாட்டின் பொருளாதாரம் முன்னேறி விடும். இவ்வாறு சக்கரவர்த்தி பேசினார்.

No comments:
Post a Comment