www.keelakaraitimes.com
சென்னையில் பள்ளி சிறுமி ஸ்ருதி பள்ளி வாகன ஓட்டையிலிருந்து விழுந்து உயிரழந்த பரிதாப சம்பவம் நடைபெற்றது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பள்ளி வாகனங்களை மட்டுமே ஆய்வு செய்யப்படும் நிலையில் கீழக்கரையில் பள்ளி வாகனங்களை விட தனியார் வாடகை வாகனங்கள் தான் குழந்தைகளை அதிக அளவில் பள்ளிக்கு அழைத்து செல்கின்றனர்.எனவே தனியார் வாகனங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கீழக்கரையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கீழக்கரையை சேர்ந்த சமூக ஆர்வலர் முசம்மில் கூறுகையில்,
கீழக்கரையில் அதிக அளவில் ஆம்னி வாகனங்களில் பள்ளி குழந்தைகளை மாத வாடகை அடிப்படையில் அழைத்து செல்கின்றனர்.இவற்றில் பல வாடகைக்கு இயக்க முறையான அனுமதி பெறவில்லை மேலும் சிலருக்கு இதில் ஓட்டுநர் லைசென்ஸ் இல்லை.கூடுதல் வாடகைக்க்காக அதிக அளவில் பள்ளி குழந்தைகளை புளி மூட்டை போல் அடைத்து ஏற்றி செல்கின்றனர்.புத்தக பைகளை அதிக அளவில் மேற்கூரையில் ஏற்றுவதால் வளைவுகளில் கவிழும் ஆபத்து உள்ளது மேலும் தெருக்களிலும்,வளைவுகளிலும் அசுர வேகத்தில் செலவதால் அடிக்கடி சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன.எனவே அரசு அதிகாரிகள் பள்ளி வாகனங்களை மட்டும் ஆய்வு செய்வதோடு நிறுத்தி விடாமல் தனியார் வாகனங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி நாட்களில் காலை 7.30 மணியிலிருந்து 9.00 மணி வரை அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்
No comments:
Post a Comment