Monday, 16 July 2012

மனிதர்கள் ‌சோதனை விலங்குகளா? சுப்ரீம் கோர்ட் கேள்வி

புதுடில்லி : மருத்துவப் சோதனைகளின் போது மனிதர்கள் பயன்படுத்துவதற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்தியபிரதேச மாநிலம் மற்றும் நாட்டின் பலபகுதிகளில் மருத்துவ ச‌ோதனைகளுக்கு மனிதர்களை பயன்படுத்தி வருவதாகவும், இதை உ‌டனே தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அது இன்று, நீதிபதி லோதா தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மருத்துவ சோதனைகளில் பெரும்பாலும் பன்றி, எலி, முயல் போன்ற சோதனை விலங்குகளை தான் பயன்படுத்துவோம். இதற்கு மனிதர்களை பயன்படுத்துவதாக வந்துள்ள தகவல் கடும் அதிர்ச்சியளிக்கிறது. இதுகுறி்த்து, அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில், 8 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவும் பிறப்பித்துள்ளது..நன்றி தினமலர்..

No comments:

Post a Comment