அவுஸ்டன் : அமெரிக்க வாழ் இந்தியரான சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி கலத்தை இன்று சென்றடைந்தார். விண்வெளியில் 30க்கும் மேற்பட்ட அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 3 பேர், சர்வதேச விண்வெளி கலத்தில் 4 மாதகாலம் தங்க உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் சோயுஸ் விண்கலத்தில் புறப்பட்ட அவர்கள், இன்று சர்வதேச விண்வெளி கலத்தை அடைந்தனர். சுனிதா வில்லியம்ஸ் மேற்கொள்ளும் 2வது விண்வெளிப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment