Thursday, 27 September 2012

ஆண் வாரிசு இல்லாத பெற்றோருக்கு ரூ 500 ஓய்வூதியம்


போபால்: ஆண் வாரிசு இல்லாத தாய், தந்தையருக்கு வயதான காலத்தில் மாதம் தலா ரூ 500  ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் அமைச்சரவை கூட்டம் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் நேற்று நடந்தது. 12வது ஐந்தாண்டு திட்டத்தில் செய்ய வேண்டிய  நல திட்டங்களுக்கு இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. எல்லை பாதுகாப்பு படை தலைமை அலுவலகம் கட்டுவதற்காக 11 ஹெக்டேர் நிலம் ஒதுக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தவிர ஆண் குழந்தைகள் இல்லாத தாய், தந்தைய ருக்கு வயதான காலத்தில் மாதம் ^500 ஓய்வூதியம் தனித்தனியாக வழங்கும் சிறப்பு திட்டத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஓய்வூதியம் பெற வருமான வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. வருமான வரி செலுத்தாத, 60 வயது பூர்த்தியடைந்த ஆண் வாரிசு இல்லாத பெற்றோராக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

34 ஆண்டு பயணம்.. சூரிய குடும்பத்தை கடந்து அண்டவெளியில் நுழைந்த வாயேஜர்-1 விண்கலம்!

-ஏ.கே.கான்
இந்த மாதத்தின் துவக்கத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
மனிதனால் ஏவப்பட்ட ஒரு விண்கலம் முதன்முதலாக நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் அனைத்தையும் தாண்டி, நமது பால்வெளி மண்டலத்துக்குள் (Milky way galaxy) நுழைந்துள்ளது.
பால்வெளி மண்டலத்துக்குள் தான் நமது சூரியன், அதைச் சுற்றியுள்ள 9 கோள்கள் ஆகியவை உள்ளன. நமது சூரிய குடும்பத்தின் கோள்களையும் தாண்டிச் சென்றால் என்ன இருக்கும்?. வெறுமையான அண்டவெளி (Interstellar space) தான். இந்த அண்டவெளியில் கோள்களோ, நட்சத்திரங்களோ, எரிகற்களோ எதுவுமே இருக்காது.
இந்தப் பகுதியை முழுக்க முழுக்க வெறுமையான பகுதி என்று சொல்லிவிட முடியாது. மிக 'கனமான' வெற்றிடம் என்று சொல்லலாம். இந்த வெற்றிடத்துக்கு 'கனம்' எங்கிருந்து வருகிறது?. அயனி நிலைக்குத் தள்ளப்பட்ட (ionized state) ஹைட்ரஜன், ஹீலியம், நியூட்ரினோக்கள் (இவை சூரியனி்ல் நடக்கும் அணு இணைப்பால் உருவாகும் சப் அடாமிக் பார்ட்டிகிள்), மின்காந்த கதிர்வீச்சு ஆகியவை தான் இந்த வெற்றிடத்தை நிரப்பியுள்ள விஷயங்கள்.
இந்தப் பகுதிக்குள் தான் இப்போது நுழைந்துள்ளது வாயேஜர்-1 விண்கலம். ஏவப்பட்டு 34 ஆண்டுகளுக்குப் பின் இந்தப் பகுதியை அடைந்துள்ளது வாயேஜர்-1, இதனோடு சேர்த்து ஏவப்பட்ட வாயேஜர்-2 விண்கலமும் அந்தப் பகுதியை நோக்கி சென்று கொண்டுள்ளது.
அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகம் உருவாக்கிய வாயேஜர்-1 மற்றும் வாயேஜர்-2 விண்கலங்கள் 1977ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டன. வாயேஜர்-1 விண்கலம் ஜூபிடர், சனி கிரகங்களை எட்டிப் பார்த்துவிட்டும், வாயேஜர்-2 விண்கலம் யுரேனஸ், நெப்டியூன் கிரங்களுக்கு அருகே சென்று படம் பிடித்துவிட்டும் இப்போது அண்டவெளியை அடைந்துள்ளன.
இதில் வாயேஜர்-1 இன்றைய தேதியில் பூமியிலிருந்து 17,000 கோடி கி.மீ. தூரம் பயணித்துவிட்டது. (இது கடக்கும் தூரத்தை உடனுக்குடன் அறிய). இன்னொரு பாதையில் இந்த பயணத்தில் ஈடுபட்டுள்ள வாயேஜர்-2 சுமார் 14,000 கோடி கி.மீ. தூரத்தைக் கடந்துவிட்டது.
அதாவது, இவை இரண்டுமே ஒரு நொடிக்கு 5 கி.மீ. தூரம் என்ற வேகத்தில் பறந்து கொண்டுள்ளன.
இந்த இரு விண்கலங்களுமே இன்னும் பூமிக்கு தகவல்களை அனுப்பிக் கொண்டுள்ளன என்பது தான் இதில் மிகவும் முக்கியமான விஷயம்.
இந்த 33 ஆண்டுகளில் இந்த இரு விண்கலங்களும் ஜூபிடர் (வியாழன் கிரகம்), சனி, யுரானஸ், நெப்டியூனின் 23 நிலவுகளைக் கண்டுபிடித்தன, ஜூபிடரின் நிலவான 'லோ'-வில் வெடித்துச் சிதறும் எரிமலையைக் கண்டுபிடித்தன, சனி கிரகத்தைப் போல ஜூபிடருக்கும் வளையங்கள் இருப்பதை கண்டுபிடித்தன, நெப்டியூனில் மணிக்கு 1,200 கி.மீ. வேகத்தில் வீசும் புயல்களைக் கண்டுபிடித்தன, நியூட்டனின் நிலவான ட்ரைடனில் இருந்து நைட்ரஜன் வாயு அண்டவெளியில் பாய்வதைக் கண்டுபிடித்தன.
மேலும் ஜூபிடரின் நிலவான 'லோ'-விலிருந்து வெடித்துச் சிதறும் எரிமலைத் துகள்கள் ஒன்று சேர்ந்து தான் ஜூபிடருக்கு வளையத்தை உருவாக்கியதையும் வாயேஜர் விண்கலங்கள் கண்டுபிடித்தன.
மேலும் சனி கிரகத்தை சுற்றியுள்ள வளையங்கள் அனைத்தும் பல்வேறு சிறிய வளையங்களால் ஆனவை என்பதும், இதில் 'எப்' என்ற வளையத்தை இரு சிறிய துணைக் கோள்கள் கட்டுப்படுத்துவதையும் வாயேஜர் விண்கலங்கள் கண்டுபிடித்தன.
மேலும் சனி கிரகத்தின் இந்த வளையங்களில் அலைகள் இருப்பதும், இந்த கிரகத்தின் நிலவுகளால் தான் இந்த அதிர்வு-அலைகள் உருவாவதையும் இந்த விண்கலங்கள் கண்டுபிடித்தன. இதை வைத்து அந்த வளையங்களின் எடையையும் கூட நாஸாவால் கணக்கிட முடிந்தது.
வழியில் வேற்றுகிரகவாசிகள் யாராவது இந்த விண்கலங்களைக் காண நேர்ந்தால், பூமியைப் பற்றிய தகவல்களை அவர்களுக்கு சொல்லும் வகையில், இந்த விண்கலத்தில் மனிதர்களின் படங்கள், பூமியின் படங்கள், சூறாவளி-கடல் அலைகளின் சத்தம், பறவைகளின் ஓசை, இசை என பலவகைப்பட்ட தகவல்களும் இடம் பெற்றுள்ளன!.
1990ம் ஆண்டில் சூரிய குடும்பத்தின் கடைசி கோளான புளுட்டோவைக் கடந்த இந்த விண்கலங்கள், இந்த மாத துவக்கத்தில் "heliosheath" என்ற நமது சூரியனின் கதிர்வீச்சுகள் தொடும் அதிகபட்ச தூரத்தை எட்டியுள்ளன. இந்தப் பகுதியைத் தாண்டிவிட்டால், சூரிய கதிர்வீச்சுக்கள் கூட இருக்காது, அதாவது நமது சூரியனின் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை தாண்டிவிட்டதாக அர்த்தம்.
இந்த விண்கலங்கள் இன்னும் 2,96,000 வருடங்களுக்கு சேதமடையாமல் பயணித்தால் தான் வானிலேயே மிக பிரகாசமான நட்சத்திரமான சிரியசிலிந்து (Sirius) 37 டிரில்லியன் கி.மீ. தூரத்தை இவை அடைய முடியும்.
இப்போது புரிகிறதா.. இந்த அண்டவெளி எப்படி விரிந்து 20 Nasa Voyager 1 Cosmic Purgatory Verge Of Milky Way Aid0090
கிடக்கிறது என்று!20 Nasa Voyager 1 Cosmic Purgatory Verge Of Milky Way Aid0090

வாசிங்டன்: நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி பரப்பானது நேற்று இருந்தது போல் இன்றில்லை. இன்று இருப்பது போல் நாளை இல்லை என்ற நிலையில் புதுப்புது மாற்றங்களால் நிறைந்து கொண்டே போகிறது.. இந்த மாற்றங்கள் ரசிப்புக்குரியதோ வியப்புக்குரியதோ அல்ல... இந்த பூமிப் பந்தானது பெரும் பிரளயத்தை நோக்கிச் சென்று கொண்டே இருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான் இது என்கிறது அறிவியல் உலகம்...

 Sun Could Save Earth From Collision With Asteroid
வாஷிங்டன்: 2036ம் ஆண்டில் பூமியின் மீது 200 மீட்டர் விட்டம் கொண்ட 'அபோபிஸ்' என்ற விண் கல் மோத வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
2012 QG42 என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு விண் கல் அடுத்த வாரம், 14ம் தேதி, பூமிக்கு அருகே, அதாவது 2.84 மில்லியன் கி.மீ. தூரத்தில், கடந்து செல்லவுள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி இதே விண் கல் பூமியிலிருந்து 26,9000 கிலோ மீட்டர் அருகே பறந்து செல்லும். அண்டவெளியின் விசாலத்தோடு ஒப்பிடுகையில் இந்த தூரம் மிக மிக நெருக்கமானதாகும். ஆனாலும் இதன் வட்டப் பாதையை வைத்துக் கணக்கிடுகையில் இது பூமியை மோத வாய்ப்பில்லை.
இது ஒரு புறம் இருக்க அபோபிஸ் என்ற ஒரு விண்கல் 2036ம் ஆண்டு பூமியை மோதலாம் என்று ஒரு பிரிவு விஞ்ஞானிகளும், சூரியக் கதிர்வீச்சு இந்த விண்கல்லின் போக்கை மாற்றிவிடும், இதனால் பூமி மீது மோதாது என பெரும்பாலான விஞ்ஞானிகளும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்த விண்கல் 2029ம் தேதி ஏப்ரல் 13ம் தேதி பூமியிலிருந்து 38,000 கி.மீ. தூரத்தில் பறந்து செல்லவுள்ளது. பூமியின் ஈர்ப்பு விசையால் அப்போது இதன் வட்டப் பாதையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.
இதன் பிறகு 2036ம் ஆண்டில் இந்த விண்கல் மிக மிக அருகே வர வாய்ப்புள்ளது. ஆனால், இதன் சூரிய கதிர்வீச்சுகளும், 'Yarkovsky effect' எனப்படும் இயற்பியல் விதியும் சேர்ந்து அதன் பாதையையும் வேகத்தையும் அதிகரிக்க வைத்து திசை திருப்பி விடும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இந்த விண்கல்லின் போக்கு குறித்து அமெரிக்காவின் நாஸா மற்றும் ரஷ்யன் இன்ஸ்ட்டியூட் ஆப் அஸ்ட்ரானமி விஞ்ஞானிகள் தீவிர ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.
இந்த விண்கல் மோதினால் பல நூறு அணு குண்டுகள் வெடித்த அளவுக்கு சேதம் ஏற்படும் என்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நூற்றாண்டின் இறுதியில் பூமியின் நிலைமை தலைகீழாகிவிடும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

 Earth Headed Catastrophic Collapse
வாசிங்டன்: நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி பரப்பானது நேற்று இருந்தது போல் இன்றில்லை. இன்று இருப்பது போல் நாளை இல்லை என்ற நிலையில் புதுப்புது மாற்றங்களால் நிறைந்து கொண்டே போகிறது.. இந்த மாற்றங்கள் ரசிப்புக்குரியதோ வியப்புக்குரியதோ அல்ல... இந்த பூமிப் பந்தானது பெரும் பிரளயத்தை நோக்கிச் சென்று கொண்டே இருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான் இது என்கிறது அறிவியல் உலகம்...
பெருகி வரும் மக்கள் தொகையால் நீர், வனம் மற்றும் விளைநிலங்களின் பயன்பாடு என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இதன் விளைவுதான் இந்த நூற்றாண்டின் இறுதியில் பூமிப் பந்தானது பெரும் பிரளயத்தை எதிர்கொள்ளப் போகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
சுமார் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப்பாறைகள் போன்றவை இல்லாத ஒரு உலகம் இருந்த நிலையை நோக்கி இப்பொழுது நகர்ந்து கொண்டிருப்பதாகவும் நூற்றாண்டின் இறுதியில் அனேகமாக பூமியின் அமைவிடமே விசித்திரத்துக்குரியதாகவும் இருந்துவிடும் என்றும் அமெரிக்காவின் கலிபோனியா விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இவர்கள் மட்டுமல்ல.. புவி வெப்பமயமாதல் மற்றும் சூழலியல் தொடர்பான விஞ்ஞானிகள் பலரும் இன்னும் அதிர்ச்சியூட்டும் ஆருடங்களை வெளியிட்டு வருகின்றனர். நம் கண்கூடே நேற்று நாம் பார்த்த பறைவியினங்களும் தாவர இனங்களும் காட்சிப் பொருளாகிவிட்ட நிலையில் இனிவரும் காலங்களும் இப்படித்தான் இருக்குமாம்! பல விலங்கினங்கள், தாவர இனங்கள் பூண்டோடு அழிந்து போவது மட்டுமல்ல.. புதிய புதிய விலங்கினங்களும் தாவர இனங்களும் விஸ்வரூபமாக பிறப்பெடுத்து பேரிடர்களுக்கு வழிவகை செய்யக் கூடிய சாத்தியங்களும் இருக்கின்றனவாம்.
நாம் இப்பொழுது பனிப்பாறைகளின் கடைசி யுகத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.. இன்னும் சிறிதுகாலம்தான்... பனிப்பாறைகள் இல்லாத ஒரு உலகம் உருவாகிவிடக் கூடும். தொழில்துறை வளர்ச்சியினால் வளிமண்டத்தில் 35 விழுக்காடு அளவுக்கு கரியமில வாயுவை செலுத்தியிருப்பதும் இதற்கு முக்கிய காரணமாக சொல்லலாம்..
பூமிப்பரப்பில் இப்பொழுது 43 விழுக்காடு பரப்பானது நகரங்களாகவும் விளைநிலங்களாகவும் மாற்றப்பட்டுவிட்டது. பனிப்பிரதேசத்தின் பரப்பளவு 30 சதவீதமாக இருக்கிறது. எஞ்சிய நிலப்பரப்பும் பெருகிவரும் மக்கள் தொகையால் நிச்சயம் வேட்டையாடப்பட்டு பூமிப் பந்து பிரளயத்தை எதிர்நோக்கலாம்.
மாற்றம் என்பது மட்டுமே இந்த பூமிப் பந்தில் மாறாதது என்கிறபோது மனிதர்களும் இன்ன பிற உயிரினங்களும் தாவரங்களும் மாறிக்கொண்டே இருப்பதும் கூட புதியதோர் உலகுதானோ?

Wednesday, 26 September 2012

மன இறுக்கத்தை போக்கும் வாழைப்பழம்


நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் பாகற்காய்

பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு, இரத்த கொதிப்பு காரணமாக உண்டாகும் அரிப்பு மற்றும் இரத்த கோளாறு போன்ற வற்றிற்கு பாகற்காய் சிறந்த மருந்தாகும். இரண்டு ஸ்பூன் பாகற்காய் சாறுடன் எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல்நிலையில் மாற்றம் ஏற்படும். இரத்த கொதிப்பு இரத்த கோளாறுகள், போன்றவைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

ஆரம்ப கட்டத்தில் ஏற்பட்டிருக்கும் காலரா மற்றும் வாந்தி பேதியை போக்க இரண்டு டீஸ்பூன் பாகற்காய் இலையின் சாறு, இரண்டு டீஸ்பூன் டீத்தூள், வெங்காயச்சாறு இரண்டு டீஸ்பூன், எலுமிச்ச சாறு இரண்டு டீஸ்பூன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் காலராவினால் ஏற்பட்ட வாந்தி பேதி குணமாகும். காலரா குணமாகும் வரை சாப்பிடவேண்டும்.

பழுத்த பாகற்காய் இரத்தம் மற்றும் சீறுநீரில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது ஏனெனில் பாகற்காய் செடியில் இன்சுலின் கொண்டுள்ளது. குறிப்பிட்ட அளவு பாகற்காயை  ஜீஸ் செய்து சாப்பிட்டால் ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பது மட்டுமின்றி குளுக்கோஸ் சகிப்பு தன்மையை அதிகரிக்கிறது.

தொடர்ந்து பாகற்காய் சாறு சாப்பிட்டு வந்தால் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும். நல்ல தூக்கத்தை ஏற்படுத்தவும் பாகற்காய் சிறந்ததாகும். பாகற்காயில் அதிக பீட்டா கரோட்டின் மற்றும் பிற பண்புகள் அடங்கியுள்ளன. இது கண்ணில் ஏற்படும் சிக்கல்களை போக்க சிறந்த மருந்தாகும்.பாகற்காய் பழம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும்.

பாகற்காற் பழத்தின் சாறு மது போதை மற்றும் நச்சுத் தன்மை நிறைந்த சிகிச்சைகளுக்கு சிறந்ததாகும்.. இது குடிப்பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு டம்ளர் மோரில் மூன்று டீஸ்பூன் பாகற்காய் சாறு சேர்த்து மாதத்திற்கு மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலம் நோய் குணமாகும். மேலும் பாகற்காய் செடியின் வேர்களை பேஸ்ட் போல அரைத்து மூலம் ஏற்பட்டிருக்கும் இடத்தில் தடவ வேண்டும். இவ்வாறு செய்து வர மூலநோய் குணமாகும்.

கைகளில் ஏற்படும் அரிப்பு, கால்களில் ஏற்படும் பூஞ்சை, தோல் தடிப்பு,சொரியாஸிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்க பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிடவேண்டும். பாகற்காய் நச்சுத் தன்மையை அகற்றி இரத்தத்தை சுத்திகரிப்பதில்  முக்கிய பங்கு வகிக்கிறது. சுவாச கோளாறு மற்றும் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால் பாகற்காயை பொரியல் செய்தோ அல்லது ஜீஸ் செய்தோ சாப்பிட சுவாச கோளாறுகளில் ஏற்பட்ட பிரச்சனை தீரும்.

பப்பாளியின் பயன்கள்


இயற்கையின் கொடையான பப்பாளி பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வீடு, தோட்டம் என பல்வேறு இடங்களில் சர்வசாதாரணமாக நாம் பார்க்கக் கூடிய மரங்களில் ஒன்று பப்பாளி மரம். மருத்துவ குணங்கள் நிறைந்த பழம் பப்பாளியில், வைட்டமின் ஏ, சி ஷ்மற்றும் இ ஆகியவை உள்ளன.

பப்பாளி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கும். நார்சத்து மிக்கது. செரிமானத்துக்கு நல்லது. உடலுக்கு புத்துணர்வை தரும் பப்பாளி, தோலில் ஏற்படும் குறைபாடுகளை களையவல்லது.

இதனால் உடல் பொலிவு பெறும்.  கண் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது பப்பாளி. இதயம் தொடர்பான பிரச்னைகள், கேன்சர் வராமல் தடுக்கிறது. இதுபோன்று பல்வேறு நன்மைகளை தரும் பப்பாளி பழம், மற்ற பழங்களை விட விலையும் குறைவு.

எளிதாகவும் கிடைக்க கூடியது. எனவே, பப்பாளி பழத்தை நாமும் சாப்பிட்டு பயன்பெறலாமே.  பப்பாளி பழத்தை காயாகவோ, அதிமாக பழுத்த பின்னரோ சாப்பிடுவதை விட, சரியான பதத்தில் உள்ள பழத்தை சாப்பிடுவதே சிறந்தது.

Monday, 24 September 2012

உங்களை நினைவில் நிறுத்தும் பிஸ்தா பருப்பு !

இளமையும், ஆரோக்கியமும் இருக்கும் வரையே நம்மால் புத்துணர்ச்சியாக இருக்க முடிகிறது. அதே நேரம் முதுமையின் ஆரம்பக் கட்டத்தை நெருங்கும் பொழுதும்,
நோய்வாய் படும்பொழுதும் புத்துணர்ச்சி குறைய ஆரம்பிக்கிறது. இளமைக்காலத்தில் கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து வந்த உடலானது முதுமையை நெருங்கும் பொழுது செல்களின் பல்முறை பெருக்கம் குறைந்து, செல் அழிவை சந்திக்க நேரிடுகிறது.
இதனால் தோல் சுருங்குதல், சதை வற்றுதல், ஐம்பொறிகளின் பலன் குன்றுதல், முதுமைகால நோய்களின் ஆதிக்கம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பல தொல்லைகளை சந்திக்க நேரிடுகிறது. அதுபோல் பல வகையான நோய்களால் உடல் பாதிக்கப்படும் பொழுது செல்களின் ஆற்றல் குறைந்து ஒருவித பலஹீனம் ஏற்படுகிறது. இந்த பலஹீனத்தினாலும் புத்துணர்ச்சி மறைந்து ஒருவிதமான சோர்வு நம்மை ஆட்கொள்கிறது.
உடலுக்கு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் உண்டாக்குவதில் ஹார்மோன்கள் பெரும் பங்கை வகிக்கின்றன. இந்த ஹார்மோன்களில் சுரக்கும் நாளமில்லா சுரப்பிகள் ஆயுட்காலத்தை நீடிக்கச் செய்யும் அத்தியாவசிய உறுப்புகளாக கருதப்படுகின்றன. இந்த உறுப்புகள் தங்கள் சுரப்பை அதிகப்படுத்தும் பொழுதும், குறைக்கும் பொழுதும் உடலில் பலவித குறைபாடுகள் தோன்றுகின்றன. இந்த நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு மருத்துவ உலகிற்கு சவாலாகவும், பலவித ஆச்சர்யங்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
நமது உடலின் உறுப்புகள் செயலிழந்தால் அவற்றை மாற்றி பிறரின் உறுப்புகளை அறுவை சிகிச்சையின் மூலம் பொருத்துவது போல் நாளமில்லா சுரப்பிகளை மாற்றம் செய்யும்படியான மருத்துவ விஞ்ஞான வளர்ச்சி இன்னும் ஏற்படவில்லை என்பதே உண்மை. ஹார்மோன்களின் செயல்பாடானது செல் வளர்ச்சியை சீராக்கவும், செல் முதிர்ச்சியை கட்டுப்படுத்தவும், செல் அழிவை தடுக்கவும் பயன்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இனப்பெருக்க உறுப்புகளை கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் ஒரு மனிதனை நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆண்களின் டெஸ்டோஸ்டீரோன் மற்றும் பெண்களின் ஈஸ்ட்ரோஜன் இனப்பெருக்க ஹார்மோன்கள் முதுமையை கட்டுப்படுத்துகின்றன. டெஸ்டோஸ்டீரோன்கள் குறைபாட்டால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும், அலித்தன்மையும், தோல் சுருக்கம், தோல் வறட்சி மற்றும் ஒருவித பலஹீனமும் உண்டாகின்றது. அதே போல் ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டால் பெண்களுக்கு விரைவில் மெனோபாஸ் ஏற்படுகிறது. ஆண்களுக்கு வளர்வது போன்ற ரோமங்களும், சதை தொங்குதல், முடி உதிர்தல் போன்ற முதுமையின் குணங்களும் தோன்றுகின்றன. இந்த ஹார்மோன்களை சுரக்கக்கூடிய இனப்பெருக்கம் சார்ந்த நாளமில்லா சுரப்பிகளும், இவற்றை கட்டுப்படுத்தும் பிட்டுயூட்டரி என்னும் நாளமில்லா சுரப்பியும் தங்கள் பணியில் தொய்வடைவதால் விரைவில் முதுமை ஏற்படுவதுடன் பாலுறவில் ஆர்வக்குறைவும் தோன்றுகிறது.
தாம்பத்ய உறவில் மிதமாக ஈடுபடுபவர்களுக்கு இதயக்கோளாறு, இரத்தக்கொதிப்பு மற்றும் அதிக இரத்த உறைவு நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக சமூக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பாலுறவில் ஈடுபட வாய்ப்பில்லாத மற்றும் பாலுறவு துணை இல்லாத ஆண்களும், பெண்களும் விரைவில் மனநோய்க்கு ஆளாகின்றனர் என்பது அனைவரும் அறிந்த உண்மையே.
ஆண் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் இனப்பெருக்க ஹார்மோன்களின் குறைபாட்டை நீக்கி, பாலுறவில் ஈடுபடுவதற்கு ஏற்ற உடற்தகுதியையும், மனப்புத்துணர்ச்சியையும் தரும் அற்புத மூலிகை தான் பிஸ்தா. பிஸ்டேசியா வீரா என்ற தாவரவியல் பெயர் கொண்ட அனகார்டியேசியே என்ற குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறுமரங்களின் உலர்ந்த பழ பருப்புகளே பிஸ்தாபருப்பு என்று அழைக்கப்படுகின்றன.
பிஸ்தா பருப்பில் டெரிபின்தினேட், இனிப்புச் சுவையுடைய நறுமண எண்ணெய், காலோடானிக் அமிலம் ஆகியன காணப்படுகின்றன. இவை நரம்பு மணடலத்தை தூண்டி, ஹார்மோன்களின் சுரப்பை அதிகப்படுத்தி, புத்துணர்ச்சியை உண்டாக்குகின்றன. பிஸ்தா பருப்பை இளவறுப்பாக வறுத்து, ஒன்றிரண்டாக இடித்து, கற்கண்டு சேர்த்த பாலுடன் கலந்து தினமும் 1 முறை சாப்பிட தேகம் ஆரோக்கியமடைவதுடன் பாலுறுப்புகள் வலுவடைகின்றன. பிஸ்தா பருப்பை நெய்விட்டு வறுத்து, ஒன்று அல்லது இரண்டு தினமும் சாப்பிட செரிமான சக்தி அதிகப்படுவதுடன் சுறுசுறுப்பு உண்டாகும். பிரசவித்த பெண்கள் பிஸ்தா பருப்பை பாலுடன் வேகவைத்தோ அல்லது நெய்யில் பொரித்தோ சாப்பிட தாய்ப்பால் நன்கு சுரக்கும். ஆண், பெண் இருபாலரும் பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊறவைத்து தினமும் மாலையில் சாப்பிட போக சக்தி அதிகரிக்கும்.
மணம் மற்றும் நறுசுவை நிறைந்த பிஸ்தா பருப்பானது ஐஸ்கிரீம், கேக், சாக்லேட் போன்றவற்றில் பெருமளவு சேர்க்கப்படுகிறது.
4தமிழ்மீடியாவுக்காக: டாக்டர்.ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை.

உலகின் மிகப்பெரும் பள்ளிக்கூடமாக இந்திய பள்ளி கின்னஸ் சாதனை

AddThis Social Bookmark Button
உலகின் மிகப்பெரிய பள்ளிக்கூடமாக லக்னோவில் உள்ள சிட்டி மாண்டெஸ்சோரி எனும் பள்ளி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
நிலப்பரப்பில் இல்லாது, கல்வி பயிலும் மாணவர் அடர்த்தியின் அடிப்படையில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இப்பள்ளியில் கடந்த 2010-11 ஆண்டு கல்வியாண்டு நிலவரப்படி 39,437 மாணவர்கள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர்.

இக்கல்வி ஆண்டில், இது 45,000 ற்கு அதிகமான மாணவர் சேர்க்கையை எட்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே 2013க்கான உலக கின்னஸ் சாதனை புத்தகத்தின் 57 வது பதிப்பில் இச்சாதனை பதியப்படவுள்ளது.


இது குறித்து அப்பள்ளி நிர்வாகி ஜெகதீஷ் காந்தி கூறுகையில், உலக அளவில் இப்பள்ளிக்கு கிடைத்த அங்கீகாரம் பெருமை அளிப்பதாக உள்ளது. இதனை சிறப்பாக கொண்டாட உள்ளோம் என்றார்.

1959ம் ஆண்டு ரூ.300 முதலீட்டில் வாடகை கட்டிடமொன்றில் 5 மாணவர்களுடன் குறித்த சி.எம்.எஸ் பள்ளி தொடங்கப்பட்டது. பின்னர் வேகமாக வளர்ச்சி அடைய தொடங்கிய இப்பள்ளியின் சிறப்பான கல்வி நிர்வாகம், கற்றுகொடுத்த தரம் என்பவற்றை பாராட்டி 2002ம் ஆண்டு யுனெஸ்கோவின் அமைதிக்கல்விக்கான கௌரவ சிறப்பு விருதையும் இப்பள்ளி பெற்றுள்ளது. இவ்விருதை பெற்ற ஒரே ஒரு உலக பள்ளி இது மட்டுமே. இப்பள்ளிக்கு லக்னோவில் மட்டும் 20 கிளைகள் உள்ளன.

தசரா பண்டிகை: மைசூர் அரண்மனையில் சைக்கிள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் அறிமுகம்

 Pedal Power Will Light Up Mysore Palace This Dasara
மைசூர்: தசரா பண்டிகையின் போது மைசூர் அரண்மனையை அலங்கார விளக்குகளால் ஜொலிக்க செய்ய மின் தட்டுபாடு தடையாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் உதவுடன் சைக்கிள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள அரண்மனை உலக புகழ் பெற்றது. இங்கு ஆண்டுதோறும் தசரா பண்டிகையின் போது, அலங்கார விளக்குகள் மூலம் அரண்மனையை ஜொலிக்க வைப்பது வழக்கம். இதற்காக அரண்மனையில் நிரந்தரமாக 15 வாட் திறன் கொண்ட 98,260 பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை ஒருமித்து ஒளிர செய்தால் ஒரு மணிநேரத்திற்கு 1 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது.
ஆனால் தற்போது கர்நாடகாவில் கடும் மின் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே மைசூர் அரண்மனையில் உள்ள அலங்கார பல்புகளை ஒளிர செய்ய ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி டைனமோக்கள் மூலம் மின் உற்பத்தி செய்ய திறன் கொண்ட 10 சைக்கிள்கள் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் இந்த சைக்கிள்களை ஓட்டி, மின்சார உற்பத்திக்கு உதவலாம் என்று மைசூர் அரண்மணை வாரியத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது,
மைசூர் அரண்மனையில் சைக்கிள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை, மைசூர் அரண்மனை வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து, ஒரு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் உதவியுடன் செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அரண்மனையில் உள்ள எல்லா அலங்கார பல்புகளையும் ஒளிர வைக்க முடியாது. ஆனால் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பல்புகளுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
சைக்கிள்களில் உள்ள டைனமோக்கள் மூலம் பெறப்படும் மின்சாரம் பேட்டரிகளில் சேமிக்கப்படுகிறது. இதை தசரா பண்டிகையின் போது பயன்படுத்தி பல்புகளை ஒளிர வைக்க முடியும்.
தினமும் அரண்மனைக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் இந்த திட்டம் சுற்றுலா பயணிகள் இடையே வரவேற்பை பெறும் என்று நம்புகிறோம். மேலும் சைக்கிள் ஓட்டுவது மூலம் கிடைக்கும் நன்மைகளையும் மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என்றனர்.
அடுத்த மாதம் (அக்டோபர்) 16ம் தேதி மைசூர் அரண்மனையில் தசரா பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையி்ல், சைக்கிள்கள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டம் சுற்றுப்பயணிகள் இடையே பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேசமால் தமிழ்நாட்டில் இந்த சைக்கிள் டைனமோவை கட்டாயமாக்கிவிடலாமே!

Sunday, 23 September 2012

1,300 அடி உயர கட்டடத்தில் ஏறி பிரான்ஸ் "ஸ்பைடர் மேன்' சாதனை

பீஜிங்: சீனாவில், 1,300 அடி உயர கண்ணாடி கட்டடத்தில் ஏறி, பிரான்ஸ், "ஸ்பைடர்மேன்' புதிய சாதனை படைத்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆலென் ராபர்ட், 50, உலகின் உயரமான கட்டடங்கள் மீதேறி, சாதனை படைப்பதே இவரது பொழுது போக்கு. கயிறு, பாதுகாப்பு சாதனம் எதுவுமின்றி, இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்களில், ராபர்ட் ஏறி உள்ளார். இதனால், "ஸ்பைடர்மேன்' என்ற சிறப்பு பெயரும், இவருக்கு உண்டு. மிகவும் சவால் நிறைந்த கட்டடமாக கருதப்படும், சீனாவின் செங்சோ நகரில் உள்ள, 1,300 அடி உயரம் கொண்ட, "போர்டலேசா டவர்' ராபர்ட்டின் அடுத்த குறியாக இருந்தது. இக்கட்டடத்தின் முதல், 400 அடிக்கு மேல், பயங்கரமாக வழுக்கும் தன்மையுடன் கூடிய கண்ணாடி மற்றும் உலோகத்தாலான வெளிப்புறச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. கை, கால்களை ஊன்றக்கூடிய வகையில், பிடிமானம் சற்றும் இல்லாததால், இந்த கட்டடத்தின் மீது ஏறுவது மிகவும் சவால் நிறைந்ததாக கருதப்பட்டது. இதனால், வேறு வழியின்றி, கண்ணாடி சுவரில், சில சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு கயிறு போன்றவற்றின் துணையோடு, ராபர்ட், கட்டடத்தின் மீது ஏற ஆரம்பித்தார். முதல், 400 அடியை சிரமமின்றி ஏறி முடித்த ராபர்ட், பின், மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து, இரண்டு மணி நேரத்தில் உச்சியை சென்றடைந்தார். அங்கே, அவருக்காக காத்திருந்த வரவேற்பு குழுவை சேர்ந்தோர், கைதட்டி ஆரவாரம் செய்து, ராபர்டை வரவேற்றனர். ராபர்ட்டின் சாகசத்தை, சீன தொலைக்காட்சி ஒளிபரப்பியது. ராபர்ட், சீனாவில், இதற்கு முன், 2007ல், ஷாங்காய் மாகாணத்தில் உள்ள, 1,400 அடி உயரம் கொண்ட, ஜின் மாவ் டவரில் ஏறி சாதனை படைத்தார். கடந்த மார்ச்சில், துபாயில் உள்ள, உலகின் மிக உயர்ந்த கட்டடமான, "புர்ஜ் கலிபா' டவர் மீது ஏறி, உலக மக்களின் கவனத்தை கவர்ந்து பாராட்டு பெற்றார். 2, 716 அடி உயரம் கொண்ட இக் கட்டிடத்தின் மீது, ராபர்ட் ஏறும் போது, பயங்கர பாலைவனக்காற்று வீசிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இவரது சாதனைகள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

Tuesday, 18 September 2012

''பசியும் மருந்தாகும்''

ஆக்கம்: டாக்டர் பீ. ஹாமிது அப்துல் ஹை
மனிதனின் நலத்திற்கும் வளத்திற்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்வன இஸ்லாமியக் கொள்கைகள்.

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான ஐம்பெருங்கடமைகள் - கலிமா, தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் - மனிதகுலத்தின் ஒருமைப்பாடு, சமத்துவம், சகோதரத்துவம், உலக அமைதி, பொருளாதாரப் பங்கீடு ஆகியவற்றின் திறவுகோலாக உள்ளன.
"இறைவன் ஒருவனே, அவனே வணங்குவதற்குரியவன்" என ஏற்கும் பொழுது பிறப்பு, தோல், நிறம், பேசும் மொழி, வாழுமிடம் ஆகியவற்றால் தோற்றுவிக்கப்படும் வேற்றுமைகள் மறைந்து விடுகின்றன. ஐந்து வேளை கூட்டுத்தொழுகை, உயர்வு, தாழ்வு, செல்வந்தர், வறியவர் என்ற வேறுபாட்டை நீக்கி விடுகிறது. ரமளான் நோன்பு பசியை உணர வைத்து, சக மனிதர்களின் சிரமத்தை உணர்த்தி விடுகிறது. ஸகாத் என்ற ஏழைவரி (வருமானத்தில் ஆகுமான செலவு போக மீதமுள்ள பணத்தில்) செல்வம் ஓரிடத்தில் தங்காமல் பகிர்ந்து கொள்ளும் நிலையைத் தோற்றுவிக்கிறது. ஹஜ் மனித சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும், அமைதியையும் உலகுக்கு எடுத்துக்காட்டி விடுகிறது.
மறுமை வாழ்வு, நீதித் திருநாள், கேள்வி கணக்கு சுவனம் என்பன பற்றி மனிதனுக்கு அறிவுறுத்தி நல்வழிப்படுத்துவதற்கு உதவுவதாக திருமறையும், திருநபி (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் அமைந்துள்ளன. இவற்றில் மூன்றாவது கடமையான ரமளான் நோன்பு பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
ரமளான் என்ற சொல் கரித்தல், சுட்டெரித்தல் என்ற பொருள் கொண்டது. விறகை தீ எரிப்பது போல நோன்பு பாவங்களை எரித்து விடுகிறது என்பதால் நோன்பு கடமையாக்கப்பட்ட இஸ்லாமிய ஆண்டின் ஒன்பதாவது மாதம் ரமளான் என்றழைக்கப்படுகிறது. இம் மாதத்தை அல்லாஹ்வின் மாதம், பொறுமையின் மாதம், ஈகையின் மாதம் என நபி (ஸல்) அவர்கள் புகழ்ந்து கூறியுள்ளார்.
ரமளான் மாதம் பகற்பொழுதில் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பரிசுத்தவான்களாகலாம் (2:183,185) என வான்மறை விளக்குகிறது.
நபிமார்களுக்கு வழங்கப்பட்ட "ஸுஹுபுகள்" என்ற வேதக்கட்டளைகளும், தவ்ராத், ஸபூர், இன்ஜீல், திருக்குர்ஆன் ஆகிய நான்கு வேதங்களும் வழங்கப்பட்ட புனித மாதமாக ரமளான் அமைந்துள்ளது. மனிதர்களுக்கு நேர்வழியைக் காட்டி நன்மை, தீமைகளைப் பிரித்தறிவிக்கும் திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமாக ரமளான் இருப்பதால், அம்மாதத்தை கடமையான நோன்பு நோற்கும் காலமாக அல்லாஹ் அறிவித்துள்ளான். (2:185) ஹிஜ்ரி 2ம் வருடம் முதல் ரமளான் நோன்பு கட்டாயக் கடமையாக்கப்பட்டது.
உணவு, தண்ணீர், உடல் இச்சை ஆகியவற்றை பகற்காலங்களில் தவிர்ப்பது என்பது மட்டும் நோன்பின் நோக்கமல்ல. நோன்பு நோற்றிருக்கும் போது பொய், புறம் பேசுவது, தீய பார்வை, தீயன கேட்டல், தீய உணர்வுகள் ஆகியவற்றை விலக்கி வைப்பதும் கட்டாயமாகும். இதனைத் தவிர்க்காமல் உணவையும் பானத்தையும் விட்டிருப்பதால் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தேவையுமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஒரு மாத நோன்பு, உடற்கழிவுகளை நீக்கி, இரைப்பை, குடல் முதலியனவற்றைப் புதுப்பிக்கிறது. அவற்றின் பணிகள் சிறக்க உதவுகின்றன. உடல் பருமன் குறைவதற்கு வழியேற்பட்டு ரத்தக் கொதிப்பு, இதய நோய்கள் போன்றவை தாக்காமல் உடல் காக்கப்படுகிறது.
உணர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டு மிருக உணர்வுகள் களைந்து எறியப்படுகின்றன. உணவு, பானம், உறக்கம் ஆகியவற்றில் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் தோற்றுவிக்கிறது. நோன்பு நோற்பவரின் உள்ளத்தில் உயர்ந்த இறையுணர்வைத் தூண்டுகிறது. அல்லாஹ்வின் அன்பைப் பெற்றுத் தருகிறது.
வீண்பேச்சு, பொய், புறங்கூறல், சண்டை -சச்சரவு, காமப் பார்வை முதலியனவற்றைத் தடுத்து, ஒழுக்க உணர்வுகளைப் பரிணமிக்க செய்வதால் நோன்பு ஒரு கேடயம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "பசித்திருத்தல் ஓர் அருமருந்து" (லங்கனம் பரம ஒளஷதம்) என்பது முதுமொழி.
தனித்திருப்பதும் பசித்திருப்பதும் விழித்திருப்பதும் ஆன்மீக உயர்வுக்கு வழிகாட்ட வல்லன. பிராணிகள் நோயுற்றால் இறை தின்ன மறுத்து விடுகின்றன. விரைவாக நலம் பெற அது உதவுகிறது. மனிதனுக்கும் அது பொருந்தும். ஏனெனில் வயிறு ஒரு கெட்ட பாத்திரம். உடல் நோய்களுக்கு அதுவே காரணமாகி விடுகிறது.
'வயிறு நலமுடன் பேணப்பட்டால் உடல் நலமும் பேணப்படுகிறது" என்பது நபிமொழியாகும்.(பைஹகீ) “ நம்பிக்கையாளர் ஒரு வயிற்றில் உண்ணுகிறார். இறைமறுப்பாளர் ஏழு வயிற்றில் உண்ணுகிறார்" என்பதும் நபிமொழி (திர்மிதீ). அதாவது அளவுக்கதிகமாக உண்ணுகிறார் என்பது கருத்து.
“உண்ணும்பொழுது வயிற்றில் மூன்றில் ஒரு பகுதி உணவுக்கும். மற்றொரு பகுதி தண்ணீருக்கும், இன்னொரு பகுதி காலியாகவும் இருக்கட்டும்" என்பது நபிமொழியாகும் (திர்மிதீ) அதுவே உணவின் அளவாகும்.
“உண்ணுங்கள், பருகுங்கள், மிதமிஞ்சி விடாதீர்கள் (குர்ஆன் 7:31) என்ற மாமறையின் வழியைப் பின்பற்றி வாழ்ந்த வழிகாட்டிகளான பெரு நபித்தோழர்கள் நோயற்றவர்களாக வாழ்ந்திருந்தனர் என வரலாறு பதித்திருக்கிறது. அளவின்றி உணவுண்டு, உடல் பருத்து விடுவதே பெரும்பாலான நோய்களுக்குக் காரணமாகி விடுகிறது.
''அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு'' (திருக்குறள்-943)
எனவே பசித்திருப்பதும் பசித்த பின்பே உண்ணுவதும் நலம் தரும் செயற்களாகும். ஏனெனில் நோன்பு என்ற நற்செயல் உடலுக்கு மிகுந்த நலனை வழங்குகிறது.
“நோயுற்றவரிடமிருந்து உணவை நீக்கி விடுங்கள். இப்பொழுது பட்டினி கிடப்பது நோயுற்றவர் அல்ல; அவருடைய நோயே" என அமெரிக்க மருத்துவர் டியூவே கூறுகிறார்.
மற்றொரு அமெரிக்க மருத்துவர் டாக்டர் எல்ஸன் எம். ஹாஸ் என்பவர் கூறுகிறார் (நோய்த் தடுப்பு மையத்தின் இயக்குனர்)
“நோன்பு மிகச்சிறந்த இயற்கை மருத்துவம். மிகத் தொன்மையான உலகளாவிய நோய் நிவாரணி. 15 வருடங்களுக்கு முன்பு நான் நோயுற்ற பொழுது உணவைத் தவிர்த்திருந்ததே என் உடல் நலம் தேற உதவியது எனக் கண்டுபிடித்தேன். புதிய சக்தி உடலில் பாய்வதை உணர்ந்தேன். உடலியக்கத்தில் ஓர் உத்வேகம் பளிச்சிடுவதையும் உணர்ந்து கொண்டேன். நலம் தரும் நோன்பு பல நோய்களைத் தடுக்கிறது" மேலும் கூறுகிறார்.
“அமெரிக்கார்களின் பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் உணவுக் கட்டுப்பாடு இல்லாததேயாகும். நோன்பு என்பதே அவர்களுக்குத் தெரியாத ஒன்றாகும். உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, சர்க்கரை நோய் முதலியன தோன்றுவதற்கு உணவுக் கட்டுப்பாடின்மையே காரணமாகும். நோன்பு இவற்றைத் தடுக்கும் கருவியாக உள்ளது."
“நோன்பு உடல் கழிவுகளை நீக்க உதவுகிறது. தசைகளுக்கு வலுவூட்டுகிறது. உடலியக்கத்தை சமநிலைப்படுத்துகிறது."
“பல மணிநேரம் பசித்திருப்பதன் மூலம் உடற் செல்கள் புத்துணர்வு பெறுகின்றன. சிதைவுகள் சீர் செய்யப்படுகின்றன. ஆகவே தான் மனித குலம் தோன்றியதிலிருந்து ஏதாவதொரு வகையில் நோன்பு நோற்பது பின்பற்றப்பட்டு வந்துள்ளது."
அனைத்தையும் அறிந்த அல்லாஹ், ரமளான் மாதத்தில் ஒரு மாத காலம் நோன்பு நோற்பதைக் கடமையாக்கி, நம் உடல் நலம் பேண உதவி செய்துள்ளான் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நற்செயல்களுக்கு நன்மை வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பாளிக்கு அல்லாஹ்வே நன்மை வழங்குகிறான். “நோன்பு எனக்காக நோற்கப் படுகிறது அதற்கு நானே கூலி வழங்குகிறேன்" என அல்லாஹ் கூறுகிறான். 'ரய்யான்" என்ற தனி சுவனமே நோன்பாளிகளுக்கு மட்டும் காத்திருக்கிறது.
உடல் நலத்தை வழங்கி, நீண்ட ஆயுளையும் தந்து, இறைவனின் அன்பைப் பெற்றுத் தரும் ரமளான் நோன்பு நமக்கு மிகப்பெரும் நற்பேறே!
“ரமளான் மாதத்தை கண்ணியப்படுத்திக் கொண்டிருக்கும் வரை என் சமூகத்தார் இழிவுபடுத்தப்பட மாட்டார்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறிய சொற்களை நினைவில் கொள்வோம்.
நன்றி: சிந்தனை சரம்

Monday, 17 September 2012

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் முதலில் கிளிக் செய்யுங்கள் .இப்போது ஒரு வீடியோ திறக்கும்.இனிமேல்தான் காமெடி இருக்கிறது.உங்கள் மவுஸ் கர்சரை சரியாக வீடியோவில் காணும் நபரின் முகத்தில் வையுங்கள்...அப்புறமாக வேடிக்கையைப் பாருங்கள்...

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில்  முதலில் கிளிக் செய்யுங்கள் .இப்போது ஒரு வீடியோ திறக்கும்.இனிமேல்தான் காமெடி இருக்கிறது.உங்கள் மவுஸ்  கர்சரை சரியாக வீடியோவில் காணும் நபரின் முகத்தில் வையுங்கள்...அப்புறமாக வேடிக்கையைப் பாருங்கள்...



                                                           வீடியோ லிங்க்

Sunday, 16 September 2012

உலகின் சில அற்புதமான பூங்காவனங்கள்


உலகின் சில நாடுகளில் கண்களை கவரும் விதத்தில் வித்தியாசமான முறையில்
அமைக்கப்பட்டுள்ள பூங்காவனங்களில் புகைப்படங்கள் சில:
பிரிட்டன் கோன்வாலில் உள்ள லாஸ்ட் எனும் பூங்கா


நெதர்லாந்தில் உள்ள Paleis Het Loo எனும் பூங்கா


பிரான்ஸ் பாரிஸ் இல் உள்ள வெர்சாய் எனும் பூங்கா


பிரான்ஸ் பாரிஸ் நகரில் உள்ள Musée de Quai Branly எனும் ஓர் செங்குத்தான பூங்கா


பிரிட்டன் டம்ப்ரைஸ் உள்ள Cosmic Speculation எனும் பூங்கா


அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள Huntington Library எனும் தாவரவியற் பூங்கா


ஜப்பான் ஒசாக்காவில் உள்ள நம்மா எனும் பூங்கா

பார்வைகள் பலவிதம்..!

AddThis Social Bookmark Button
மைக்கேல் ஏஞ்சலோ ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார்.
ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சியுடன் அந்தக் கடைக்காரரிடம், 'ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?' என்று கேட்டார்.
'தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர்.
பாறாங்கல்லை உருட்டிச் சென்ற ஏஞ்சலோ, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான இயேசுநாதர் சிலை ஒன்றை உருவாக்கினார்.
அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டார். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர்.
முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலை யைப் பெற்றுக் கொண்டார்.
மைக்கேல் ஏஞ்சலோவை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், 'இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?'… என்று கேட்டார்.
அதற்கு ஏஞ்சலோ, 'வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன். என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் தாங்கள் கொடுத்த கல்தான் இது' என்றார்.
கடைக்காரர் வியந்தார்.
'ஆம். தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது. என் பார் வையில் இயேசு நாதரைப் பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது. வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த இயேசுநாதர் வெளிப்பட்டுவிட்டார்!' என்றார்.
இதைத்தான் பார்க்கும் கோணம் – Focus என்கிறோம்
உயர்வும் தாழ்வும் அங்கு கிடந்த கல்லில் இல்லை அதைப் பார்த்த மனத்தின் கோணத்தில் தான் இருந்தது. கடைக்காரர் பார்வையில் அது தடைக்கல். சிற்பியின் பார்வையிலோ அது அவரை உயர்த்த வந்த படிக்கல்.
வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் எந்த நிகழ்ச்சியும் பார்க்கும் கோணத்தைப் பொறுத்தே உயர்வாகவோ, தாழ்வாகவோ மாறும். எரிச்சலுடன் ஏனோதானோவென்று சந்தித்த பல நபர்களின் வாழ்வில் மகத்தான் திருப்பங்களை உருவாக்கிய சிலர் மாமனிதர்களாக இருந் துள்ளனர்.
விழிப்புணர்வுடன் இருந்து, விருப்பு வெறுப்பின்றி எதையும் சரியான கோணத்தில் பார்க்கும் மனப்பக்குவம் பெறவேண்டும். அதைப் பெற்று விட்டால் வாழ்க்கை நமக்கு வழங்கும் ஒவ்வொரு நிகழ்வும் நம்மை உயர்த்த வரும் வாய்ப்பாய், வரமாய்த் தெரியும். இல்லையேல் எதிர்ப்படும் ஒவ்வொன்றும் எரிச்சலும் துன்பமுமாய்த் தெரியும்.
தனக்கு என்று எதைப்பார்த்தாலும் மனம் நமக்குத் துணைய்ச் செயல் படும். மற்றவர்களுக்கு என்று எதைப் பார்த்தாலும் மனம் நமக்கு எதிர்ப் பாய்ச் செயல்படும். நம் மனதை எதிர்ப்பாய் நினைப்பதையும் செயல்படுவதையும் அனுமதித்தால் வாழ்வில் எல்லாமே நமக்கு எதிரானவையாக தோன்றும். எனவே, பார்க்கும் கோணத்தை மாற்றுவோம்; வாழ்வில் வெற்றிகளைப்பெறுவோம்.
இந்தக் குறிப்பினை Kanaga Gnana அவர்களின் பேஸ்புக் சமூக வலைத் தளத்தில் காணக்கிடைத்தது. அவரது தளத்தில் மேலும் பல தகவல்களுடன், இந்தியாவில் மேற்கொள்ளப்படும், சூரிய ஒளி மின்சாரம் குறித்த பல தகவற்குறிப்புக்களும், இணைப்புக்களும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது

இஸ்லாத்துக்கு எதிரான திரைப்படத்தை நீக்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கைக்கு கூகுள் மறுப்பு


கூகுள் நிறுவனத்திடம் முகமது நபி குறித்த சர்ச்சைக்குரிய வீடியோ பதிவை யூடியூபில் இருந்து நீக்கும் படி அமெரிக்கா விண்ணப்பித்த கோரிக்கையை கூகுள் நிறுவனம் நிராகரித்துள்ளது.
இந்த வீடியோப் பதிவு காரணமாகவே மத்திய கிழக்கு மட்டுமல்லாது இஸ்லாமியர்கள் பரவலாக வாழும் அனைத்து நாடுகளிலும் அமெரிக்க அரசு மற்றும் அதன் தூதரகங்கள் மீது தாக்குதலும் அச்சுறுத்தலும் விளைவிக்கப் பட்டு வருகின்றது. இந்நிலையில் கூகிள் நிறுவனம் இந்த விவகாராம் தொடர்பாக கருத்துரைக்கையில்  இந்த வீடியோப் பதிவு இந்தியாவிலும் இந்தோனேசியாவிலும் சென்சார் செய்யப் பட்டிருப்பதாகவும் புதன்கிழமை எகிப்து மற்றும் லிபியாவில் முற்றாகத் தடை செய்யப் பட்டதாகவும் கூறியுள்ளது.

இஸ்லாமியர்களின் இறை தூதுவர் முகம்மது நபியை அவமரியாதை செய்யும் வகையில் இவ்வீடியோ சித்தரிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இந்நிலையில் கூகிள் நிறுவனம், அரசியல் நியாயங்களால் அல்லாது வேறு எந்த ஒரு சாதாரண சட்டங்களின் பிராகாரமும் இவ்வீடியோ பதிவை முழுமையாக நீக்க முன்வரப் போவதில்லை என்றும் கூறியுள்ளது. எனினும் வெள்ளை மாளிகை, இந்த வீடியோப் பதிவு YouTube இன் சட்டதிட்டங்களை மீறும் விதத்தில் அமைந்திருக்கிறதா என மறுபடி ஒரு முறை அலசிப் பார்க்கும் படி கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கு பதில் அளித்த கூகிள் நிறுவனம்  இவ்வீடியோ முறையான வழி நடத்தல்கள் மற்றும் சட்டப்படியே வெளியிடப் பட்டிருந்தது எனக் கூறியுள்ளது.
இதேவேளை இப்படத்தை தயாரித்த எகிப்தின் கிறிஸ்தவ மத வழி வந்த 'நகௌலாக் பஸ்ஸெலெய்' தெற்கு கலிபோர்னியாவில் வசித்து வந்த போதும் 2010 ஆம் ஆண்டு ஒரு வங்கிக் கொள்ளையில் சம்பந்தப் பட்டு கைது செய்யப் பட்டதுடன் கடந்த வருடம் (2011) ஜூனில் விடுவிக்கப் பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, 13 September 2012

வெங்காயத்தில் பல விஷயம் இருக்கிறது!

 “உணவே மருந்து மருந்தே உணவு” என்ற கொள்கையின் அடிப்படையே நமது இந்திய உணவுகள்தான்.
நாம் உண்ணும் உணவானது உடலுக்கு ஊட்டச்சத்தை தருவது மட்டுமின்றி, இரத்தத்தை சுத்தம் செய்து, நுண்கிருமியின் வளர்ச்சியை கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும். பாரம்பரிய இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் பல பதார்த்தங்கள் உணவுக்கு சுவையை தருவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஆற்றலையும் கொண்டுள்ளன. ஒரு உணவு பதார்த்தமானது உணவாக பயன்படுவது மட்டுமின்றி, மருந்தாகவும் பயன்பட்டால் அதைப் போல் சிறந்தது வேறு எதுவுமில்லை.
இரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர்வதால் குழாய்கள் தடிமன் அடைகின்றன. இரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதய தசைகளுக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் இதய தசைகள் பாதிக்கின்றன. அதே போல் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டமும் குறைகிறது. இதனால் சோர்வும், நரம்புத்தளர்ச்சியும் உண்டாகிறது. உடம்பில் ஏற்படும் நுண்கிருமிகளின் தொற்று, வி­க்கடிகள் போன்றவற்றால் புரோஸ்டோகிளாண்டின் என்னும் பொருள் அதிகரித்து உணர்வு நரம்புகளை பாதிக்கின்றன. மேலும் உடலில் சேர்ந்த நுண்கிருமிகள் சிறுநீர்பாதை மற்றும் மலப்பாதையில் தங்கி மலம் கழிக்கும் போது வலியையும், சிறுநீர் செல்லும் போது எரிச்சலையும் உண்டாக்கின்றன. அது போல் இரத்தத்தில் அதிகரித்த யுரிக் அமிலம் எலும்பு இணைப்புகளை பாதிப்பதுடன் சிறுநீர்ப் பாதையில் யுரிக் அமிலக் கற்களையும் உற்பத்தி செய்கின்றன.

உடலின் அத்தியாவசிய செயல்பாடு மற்றும் மனநலனின் பாதுகாப்பிற்கு தேவையான துத்தநாகம், கந்தகம், செலினியம் போன்றவை உடலில் நுண்கிருமிகள் தாக்குவதை தடுப்பதுடன், உடலுக்கு ஊட்டச்சத்தையும் ஏற்படுத்தி மன இறுக்கத்தை போக்குகின்றன. சருமத்திற்கு தேவையான கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் போன்றவை சீரான முறையில் உற்பத்தியாகவும், தோலில் தங்கவும் அத்தியாவசிய புரதச்சத்துக்கள் நிறைந்த உணவு நமக்கு தேவைப்படுகிறது.
இவ்வாறு குறிப்படப்பட்ட பலவிதமான சத்துக்கள் இரத்தத்தில் குறைவதால் நமது அன்றாட  உடலின் செயல்பாடு பாதிக்கப்படுவதுடன், பலவிதமான நோய்களும் உண்டாகின்றன. ஆகவே நாம் உண்ணும் உணவில் மேற்கண்ட சத்துக்கள் தவறாமல் இடம்பெற வேண்டுமா?  கவலை வேண்டாம். நாம் உண்ணும் உணவில் அன்றாடம் வெங்காயத்தை சேர்த்துக் கொண்டாலே போதுமானது. இந்திய உணவில் முக்கியப் பங்கை வகிப்பது வெங்காயமே. வெங்காயம் உணவின் ருசியை கூட்டுவதுடன், பலவிதமான சத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆண் மற்றும் பெண்களுக்கான ஹார்மோன்களின் வளர்ச்சியை தூண்டுவதுடன், இனப்பெருக்க உறுப்புகளில் நுண்ணிய குழாய்களில் ஏற்படும் இரத்த தடையையும் நீக்கும் அற்புத ஆற்றல் வாய்ந்தது வெங்காயம். சித்த மருத்துவத்தில் வளி, அழல், ஐயம் என்று சொல்லப்படும் மூன்று குற்றங்களையும் தணிக்கும் திரிதோட சமனிப் பொருளாக வெங்காயம் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆலியம் சீபா என்ற தாவரவியல் பெயர் கொண்ட லில்லியேசியே குடும்பத்தைச் சார்ந்த வெங்காயத்தில் சிறிதாக காணப்படும் சற்று காரம் மிகுந்த சின்ன வெங்காயமே ஏராளமான மருத்துவக் குணங்களை உள்ளடக்கியுள்ளது. வெங்காயத்தில் ஏராளமான நீர்ச்சத்து அடங்கியுள்ளதாலும், குறைந்த அளவு கலோரிகளே சேமிக்கப்படுவதாலும் உடல் பருமனானவர்களும், சர்க்கரை நோயாளிகளும் வெங்காயம் மிகச் சிறந்த உணவாகும். 100கிராம் வெங்காயம் உட்கொள்ளும் பொழுது 51 கலோரிகள் மட்டுமே சத்து கிடைக்கின்றது. ஆகவே கலோரி சத்து அதிகம் நிறைந்த அசைவ உணவுகளுடன் வெங்காயமும், பூண்டும் சேர்க்கப்படுகிறது.
வெங்காயத்திலுள்ள சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, ஏ, பி, சி வைட்டமின்கள் இரத்தக்குழாய்களில் அடைப்பை நீக்குகின்றன. இவை உடலில் சேரும் பொழுது பைபிரினோலைசின் என்னும் பொருளை உற்பத்தி செய்து இரத்தக் கட்டிகளை கரைக்கின்றன. ஆகவே இதய நோயாளிகளுக்கு ஏற்ற உணவு வெங்காயம். வெங்காயத்திலுள்ள அலினின் மற்றும் அலிசின் என்ற பொருள் செல்களுக்கு இன்சுலினின் தேவையை குறைக்கிறது. அது போல் ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிறிய வெங்காயத்தை அடிக்கடி உட்கொள்ள அதிலுள்ள தையோசல்பனேட்டுகள் ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகின்றன.


தேனீ மற்றும் வி­ வண்டுகள் கொட்டிய இடங்களில் சின்ன வெங்காயத்தை தடவ வி­ம் நீங்கும். ஆறாத புண்கள் ஆறவும், கட்டிகள் உடையவும் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டி, லேசாக வதக்கி இளஞ்சூட்டில் கட்டி வரலாம். வெயில் காலங்களில் ஏற்படும் தோல் கருமை மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டை நீக்க வெங்காயத்தை அடிக்கடி உணவில் உட்கொள்வதுடன் வெங்காயச் சாறை வெயில் படும் இடங்களில் தடவி வரவேண்டும். இனப்பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதாலும், விரைப்புத் தன்மையை அதிகப்படுத்துவதாலும் தாம்பத்ய குறைபாடுள்ள ஆண்கள் அடிக்கடி வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மாதவிலக்கின் போது குறைவான இரத்தப் போக்குள்ள பெண்கள் வெங்காயத்தை மைய அரைத்து சாப்பிட இரத்தம் நன்கு வெளியேறும்.

எனக்கு உடல் பருமன் உள்ளது. மலச்சிக்கலுக்காக வாழைப்பழம் சாப்பிடுகிறேன். இதனால் இன்னும் உடல் பருமானவது போல் உள்ளது. நான் வாழைப்பழம் சாப்பிடலாமா? வாழைப்பழ தோலில் மட்டுமே நார்சத்து உள்ளது. உள்ளே உள்ள பழத்தில் நார்சத்து இல்லை. மேலும் வாழைப்பழத்தின் உள்ளே உள்ள மாவுப்பொருள் உடல் பருமனை கூட்டலாம். ஆகவே வாழைப்பழத்தை உட்கொள்ளும் பொழுது மேற்தோலின் உட்புறமுள்ள நார்சத்து நிறைந்த, சற்று மென்மையும், கடினமும் கலந்த பகுதியை உரித்து சாப்பிட மலச்சிக்கலும் நீங்கும். உடல் பருமனும் கூடாது. மேலும் தோலின் உட்புறம் உடலின் ஆயுளை நீட்டிக்கும். செரடோனின் என்னும் பொருள் நிறைந்துள்ளது.
 
இரத்தச்சோகை இப்பொழுது பெரும்பாலானோரை பாதித்து வருகிறது. ஆண்களை விட பெண்கள் இரத்தச்சோகையால் அவதிப்படுகின்றனர். 12 வயதை நெருங்கும் பெரும்பாலான பெண்களுக்கு இரத்தச்சோகை உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கம்பு, கேழ்வரகு, சோளம், வெந்தயம், பாதாம், முந்திரி, பிஸ்தா, பட்டாணி, உளுந்து, சுண்டைக்காய், பூசணிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய், பீட்ரூட், முட்டைகோஸ், அனைத்து கீரைகள், பேரீட்சை, மாதுளை, ஆப்பிள், நெல்லிக்காய் போன்ற பழங்களிலும், மீன், ஆட்டு இறைச்சி, ஈரல், மூளை போன்ற அசைவ உணவுகளிலும் இரும்புச் சத்தை அதிகப்படுத்தும் பிற சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆகவே இவற்றை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்வதால் இரத்தச் சோகையை தவிர்க்கலாம்.
4தமிழ்மீடியாவுக்காக: டாக்டர்.ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை

Tuesday, 11 September 2012

இந்தியாவில் 4ல் ஒருவருக்கு பிபி, 10ல் ஒருவருக்கு நீரிழிவு!

இளம் தலைமுறை இந்தியா நோயாளி இந்தியாவாக மாறிவருகிறதோ என்ற அச்சம் உருவாகும் அமைந்துள்ளது சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரம் ஒன்று. அதாவது இந்தியாவில் உள்ள இளம் தலைமுறையினரில் நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது. அதேபோல் பத்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
உடல் ஏற்றுக்கொள்ளும் உணவை உண்ணவேண்டும் என்பது இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் அறிவுரை. நாமே வளர்ந்த நாடுகளின் கழிவுகளை உணவாக உட்கொள்கிறோம். அவர்கள் ஒதுக்கிய குப்பையில் தூக்கிப்போடும் மருந்துகளை நாம் விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். இதன் காரணமாகவே நம் இந்தியாவில் உள்ள மக்கள் இன்றைக்கு பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
உயர் ரத்த அழுத்தம் மெல்லக்கொல்லும் ஒரு நோய். இது இதயம் தொடர்பான நோய்களையும், பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல் நீரிழிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளை தொடங்கி பாதம் வரை நோய் தாக்குகிறது. முறையற்ற உணவுப்பழக்கத்தினாலேயே இந்த நோய்களில் சிக்கித் தவிக்கின்றனர் இன்றைய இளைய சமுதாயத்தினர். இது தவிர இந்தியாவில் 26 சதவிகித மக்கள் புகையிலை உபயோகிக்கின்றனர் என்றனர் என்றும் இது தொடர்பான நோய்களில் சிக்கிக் கொண்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. 2012 ம் ஆண்டிற்கான புள்ளிவிபரத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மூன்றில் ஒருவருக்கு உயர்ரத்த அழுத்தம் பாதித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 51 சதவிகித மரணங்கள் பக்கவாதம் மற்றும் இதயம் தொடர்பான நோய்களினால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.
வளரும் நாடுகளில் உடல்பருமன் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ளனர். இதுவே உயர்ரத்த அழுத்த நோய்க்கு அடிகோலுகிறது. இந்தியாவில் 23.1 சதவிகிதம் ஆண்களும், 22.6 சதவிகித பெண்களும் உயர் ரத்த அழுத்த நோய்க்கு ஆளாகியுள்ளனர். அதேபோல் 11.1 சதவிகித ஆண்களும், 10.8 சதவிகித பெண்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே கடந்த 20 ஆண்டுகளில் பிரசவகால மரணங்கள் இந்தியாவில் குறைந்துள்ளது என்பது ஆறுதல் தரக்கூடிய செய்தியாகும். 1990 களில் 5.4 லட்சமாக இருந்த பேறுகால மரணம் தற்போது 2.9 லட்சமாக குறைந்துள்ளது.
இதேபோல் சைட் எனப்படும் ஸ்கிரீன் இன்டியா டுவின் எபிடெமிக் அமைப்பு இந்தியர்களை பாதிக்கும் நோய்கள் குறித்த மிகப்பெரிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டது, அதில் பல்வேறு முடிவுகள் தெரியவந்துள்ளது.
எட்டு மாநிலங்களில் நகர்புறங்களில் வசிக்கும் 16 ஆயிரம் மக்களிடம் மூன்று ஆண்டுகளாக சோதனை செய்யப்பட்டது. அவர்களில் 60 சதவிகிதத்தினர் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்தஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டதாக சைட் அமைப்பின் தலைவர் டாக்டர் சசாங்ஜோசி தெரிவித்துள்ளார். நோய் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் பலரும் ரெகுலராக ரத்த சர்க்கரை, மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்களாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பலரது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 7 சதவிகிதம்தான் இருந்துள்ளது. கெட்ட கொழுப்பின் அளவு 100 மி.லி கிராம் அளவிற்கு இருந்து. ஏராளமானோர் ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருப்பதும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த 8 மாநிலங்களில் எடுக்கப்பட்ட சர்வேயின் படி பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது நோய் பற்றிய விழிப்புணர்வு மகாராஷ்டிராவில் குறைவாகவே உள்ளது தெரியவந்தது. இந்தியா முழுவதும் 7 சதவிகிதத்தினர் தங்களுடைய நோய் பற்றிய விழிப்புணர்வு அன்றி இருக்கின்றனர். மகாராஷ்டிராவில் 5 சதவிகிதத்தினர் நோய்பற்றி அறியாமையிலேயே இருக்கின்றனர்.
மாறிவரும் உணவுப்பழக்கமே இதுபோன்ற நோய் பாதிப்பிற்கு காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே வருங்கால சமுதாயத்தினரையாவது நோயற்ற சமுதாயமாக உருவாக்க நோய் பற்றிய விழிப்புணர்வும், அதனை கட்டுப்படுத்துவது குறித்த தெளிவும் இருக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

உங்கள் பிள்ளைகளை சைபர் குற்றங்களிலிருந்து காப்பாற்றுவது எப்படி?

தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக உலகமே சுருங்கி உள்ளங்கையில் அமர்ந்துள்ளது. இணையத்தின் பயன்பாட்டினால் எந்தளவிற்கு நன்மை உண்டோ அதே அளவிற்கு தீமையும் உண்டு. இன்றைக்கு பள்ளி மாணவர்கள் கூட மடிக்கணினி பயன்படுத்த 18 How Protect Your Child From Cyber Crime Aid0174தொடங்கிவிட்டனர். எனவே பாடத்திற்கு தேவையான விசயங்களை அவர்கள் இணையத்தின் மூலம் எளிதில் பெற்றுக்கொள்ள முடியும். இருப்பினும் இணைய பயன்பாட்டின் மூலம் எளிதில் ஏமாற்றத்திற்குள்ளாவோரும் உள்ளனர். சைபர் குற்றங்கள் எனப்படும் இணையதள குற்றங்கள் அதிகமாகி வருகின்றன.

இந்தியா இரண்டாவது இடம்

உலக அளவில் சைபர் குற்றங்களால் பாதிக்கப்படுவோரில் இந்தியா இரண்டாம் இடம் வகிப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. இணையத்தை பயன்படுத்துபவர்களில் 65 சதவிகிதம் பேர் சைபர்கிரைமால் ஏமாறுகின்றனர். ஆனால் இந்தியாவில் 76 சதவிகிதம் பேர் சைபர்கிரைமால் பாதிக்கப்படுகின்றனர் என்று நார்டன் சைபர்கிரைம் ரிப்போர்ட்: தி ஹ்யூமன் இம்பாக்ட் என்னும் ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. சைபர் குற்றங்களால் 12 சதவிகித குழந்தைகள் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே கண்ணுக்குத் தெரியாத எதிரிகளிடம் இருந்து நம் குழந்தைகளை பாதுகாப்பது நமது கடமையாகும்.

பாதிப்பிற்கு காரணம்

இன்டர்நெட் பயன்படுத்தும் குழந்தைகள் பிறரிடம் சாட் செய்யும் போது 62 சதவிகிதம் பேர் தங்களின் சொந்த விசயங்களை தெரிவிக்கின்றனராம். 58 சதவிகிதம் பேர் தங்களின் இருப்பிட முகவரியை பரிமாறுகின்றனராம். இதுவே சைபர் குற்றவாளிகளுக்கு தோதாக போய்விடுகின்றது. எனவே இன்டர்நெட் பயன்படுத்தும் குழந்தைகளை கண்கணித்து சொந்த விசயங்களையோ, முகவரியையோ கேட்கும் நபரிதவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும்.

குழந்தைகளுடன் விவாதியுங்கள்

தினமும் குழந்தைகளிடம் சில மணிநேரமாவது பேசவேண்டும். ஆன்லைனில் யாரிடம் அவர்கள் சாட் செய்கின்றனர். தெரிந்த நபரா? நண்பர்களா? அல்லது முகம் தெரியாத புதுமுகமா? என்னென்ன உரையாடுகின்றனர் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். அவர்களின் சம்பாசனைகளையும் கேட்டுத் தெரிந்து கொள்வது அவசியம். அப்பொழுதுதான் முகம் தெரியாத எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க முடியும்.

கண்காணிப்பு அவசியம்

சைபர் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக அதற்கென உள்ள நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது பெற்றோரின் கடமை.

கணினியின் திரை எப்பொழுதுமே நம்முடைய கண்ணில் படுமாறு வைத்திருப்பது அவசியம். அப்பொழுதுதான் தேவையற்ற வெப்சைட்கள், குழந்தைகளை திசை திருப்பும் படங்கள், நமக்குத் தெரியாமல் சிறுவர்கள் தவறான வெப்சைட் முகவரிகளின் பக்கம் திரும்பமாட்டார்கள்.

பெண் குழந்தையா கூடுதல் கவனம்

பெண் குழந்தைகள் சாட் செய்யும் போது கவனமாக இருக்க வலியுறுத்த வேண்டும். வயதானவர்கள் கூட பள்ளிச் சிறுமிகளை ஏமாற்றிய வாய்ப்புண்டு. மெயில் அனுப்பும் முறைகளையும், பைல்களை அட்டாச் செய்யும் முறைகளையும் விவரம் தெரியும் வரை கற்றுத் தராமல் இருப்பது நல்லது. அதேபோல் ப்ளாக்குகளில் உள்ள படங்களையும், மெயில் முகவரிக்கு வரும் இணைப்புகளையும் கவனமாக கையாள வேண்டும். வைரஸ்கள் உங்கள் கம்யூட்டரையே முடக்கிவிடும் ஜாக்கிரதை.

தற்பொழுது நடைபெறும் சைபர் குற்றங்கள் பலவும் சிறுவர்கள் தரும் தகவல்களைக் கொண்டே நடைபெறுவதாக தெரியவந்துள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பான ஆய்வை நடத்திய "குளோபல் இ-செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ்' என்ற நிறுவனம் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது:

இணைதளங்கள் வாயிலாக, ஆன்-லைன் கிரெடிட் கார்டு மோசடிகள், வைரஸ் தாக்குதல், பாலியல் குற்றங்கள், லாட்டரி மோசடிகள், வங்கி கணக்கு மற்றும் பாஸ்வேர்டுகளை திருடுதல், இணையதளங்களை முடக்குவது, சமூக வலைதளங்களில் இருந்து அந்தரங்க விவரங்களை திருடுதல் உள்ளிட்ட சைபர் குற்றங்கள் ஏராளமாக அரங்கேறி வருகின்றன.

உலகளவில் இணையதளம் பயன்படுத்துவோரில் 65 சதவீதம் பேர் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில், சைபர் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இணையதளம் பயன்படுத்தும் இந்தியர்களில் 76 சதவீதம் பேர் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் சீனா உள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே உங்கள் கணினியை பாதுகாக்க தேவையான பாதுகாப்பு மென்பொருட்களை பொருத்துவது அவசியம். அதன் மூலம் உங்கள் குழந்தைகளையும் பாதுகாக்க முடியும்.

லேப் டாப்பை உலகிற்கு அறிமுகப்படுத்திய பில் மாக்ரிட்ஜ் மறைவு
















நியூயார்க்: லேப்டாப்பை உருவாக்கி உலகிற்கு அளித்த பில் மாக்ரிட்ஜ் சனிக்கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 69. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த போதும் நோயின் தீவிரம் காரணமாக மரணமடைந்தார். பிரிட்டனைச் சேர்ந்த பில் மாக்ரிட்ஜ் லண்டனில் உள்ள சென்ட்ரல் ஸ்கூல் ஆப் டிசைனில் பட்டப் படிப்பை முடித்தார். தலைசிறந்த கணினி வடிவமைப்பாளராக விளங்கிய மாக்ரிட்ஜ், அங்குள்ள ராயல் காலேஜ் ஆப் ஆர்ட்ஸ்சில் கவுரப் பேராசிரியாக பணியாற்றினார். அவர் லண்டனில் கடந்த 1969ல் வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை துவங்கினார். கிரிட் காம்பஸ் என்ற பெயரில் 1979-ல் முதல் மடிக்கணினியை உருவாக்கினார். முதலில் இது அமெரிக்க ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டது. பின்னர், 1985-ல் ஏவப்பட்ட டிஸ்கவரி விண்வெளி ஓடத்தில் பயன்படுத்தப்பட்டது. மேலும் இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கவுரவ பேராசிரியராக பணியாற்றியுள்ளார். பின்னர் அமெரிக்காவில் குடியேறிய அவர், நியூயார்க் நகரில் கூப்பர் ஹெவிட் தேசிய வடிவமைப்பு அருங்காட்சியகத்தின் இயக்குநராகப் பதவி வகித்தார். 2010 வரை இப்பதவியில் இருந்த அவர் பின்னர் புற்றுநோய் பாதிப்பினால் அதிலிருந்து விலகினார். நோயின் தீவிரம் அதிகரிக்கவே கடந்த சில நாள்களாக உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, சனிக்கிழமையன்று அவர் மரணமடைந்தார்.

Monday, 10 September 2012

சென்னையில் பரவலான மழை: 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: சென்னை உட்பட தமிழகத்தின் சில பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்ததால், கோடை வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெப்ப சலனம் காரணமாக சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர் வறண்டு வருகிறது. கடும் வெப்பம் காரணமாக சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த நிலையில் சென்னையில் கடந்த 2 நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசான மழை செய்தது. இதனால் கோடை வெப்பம் குறைந்து, குளிர்ந்த காற்று வீசியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னை நுங்கம்பாக்கதில் 3.6 மி.மீட்டரும், மீனம்பாக்கத்தில் 13.6 மி.மீட்டரும் மழை பெய்தது. மேலும் தாம்பரம், சோழிங்கநல்லுர், திருவொற்றியூர், சேலம், ராசிபுரம், திருச்செங்கோடு, ஒசூர் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது. வெப்ப சலனம் காரணமாக மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சூப்பர் மழை... 4 மணிக்கு ஆரம்பித்து 5 மணி வரை வெளுத்த பேய் மழை..சென்னையில் வெள்ளக்காடு!

சென்னை: சென்னையில் இன்று மாலை சுமார் ஒரு மணி நேரம் கன மழை கொட்டித் தீர்த்து விட்டது. காற்று இல்லை, இடி மின்னல் இல்லை... இதெல்லாம் இல்லாமல் படு அழகாக பெய்த அந்த பேய் மழையால் நகரின் பல பகுதிகள் குறிப்பாக புறநகர்ப் பகுதிகள் வெள்ளக்காடாகி விட்டன. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி வாகனப் போக்குவரத்து வெகுவாக தடைபட்டது. சென்னையில் கடந்த சில தினங்களாக இரவில் மழை பெய்து வருகிறது. பகல் முழுக்க வாட்டி வதைக்கும் வெயில், இரவில் கொஞ்ச நேரம் மழை என்று ரேஞ்சில் இருந்து வந்த நிலையில் இன்று மாலை கன மழை புரட்டிப் போட்டு விட்டது. மாலை 4 மணியளவில் லேசாக ஆரம்பித்த இந்த மழை போகப் போக வெளுத்து வாங்கியது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தொடர்ந்து பெய்த இந்த கன மழையால் சென்னை நகரின் பல பகுதிகள் ஸ்தம்பித்தன. குறிப்பாக புறநகர்ப் பகுதிகள் முடங்கிப் போயின. பள்ளி கல்லூரிகளை விட்டு வந்த மாணவர்கள், வேலை பார்த்து திரும்புவோர் என சகலரும் மழையில் சிக்கிக் கொண்டனர். தாம்பரம், ஆவடி, மேடவாக்கம் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் மழை பலமாக பெய்து தீர்த்தது. இடி மின்னல், காற்று அவ்வளவாக இல்லாததால் மழை விடாமல் பெய்ததது. இந்த கன மழையால் முக்கியச் சாலைகளில் நீர் வெள்ளம் போல ஓடியது. இப்படி டெய்லி ஒருவாட்டி மழை பெஞ்சா போதுமே, தண்ணிக்கு அல்லாட வேண்டியிருக்காதே என்று மகிழ்ச்சியோடு சொன்னார், குரோம்பேட்டை பகுதியில் கன மழைக்கு ஒரு மெக்கானிக் ஷாப்பில் தஞ்சம் புகுந்திருந்த பெரியவர்!.

Sunday, 9 September 2012

திருப்பதி: இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவின் 100வது ராக்கெட் பயணம் இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலையில், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது பி.எஸ்.எல்.வி - சி21 ராக்கெட்.

திருப்பதி: இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவின் 100வது ராக்கெட் பயணம் இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலையில், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது பி.எஸ்.எல்.வி - சி21 ராக்கெட். 2 செயற்கைக் கோள்களுடன் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி21 ராக்கெட் சரியாக 9.51 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதையடுத்து பிரதமர் உள்ளிட்டோர் கைகளைத் தட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா. இதை ரஷ்ய ராக்கெட் மூலம், 19-4-1975 அன்று விண்ணில் செலுத்தியது. ஆர்யபட்டாவின் மூலம் தனது விண்வெளி பயணத்தை துவங்கிய இஸ்ரோ இன்று காலை 9.51 மணிக்கு தனது 100வது ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது. பிஎஸ்எல்வி-சி21 ராக்கெட் மூலம் 715 கிலோ எடை கொண்ட ஸ்பாட் 6 என்ற பிரான்ஸ் நாட்டு செயற்கைக்கோள் மற்றும் 15 கிலோ எடை கொண்ட பிராய்டெர்ஸ் என்ற ஜப்பானிய செயற்கைக் கோளை தாங்கிச் சென்றது. ராக்கெட் செலுத்தப்பட்ட 17வது நிமிடத்தில், முதலில் பிரெஞ்சு செயற்கைக் கோளை அது புவிவட்டப் பாதையில் விட்டது. அடுத்து ஜப்பான் செயற்கைக் கோள் புவி வட்டப் பாதையில் செலுத்தப்பட்டது. 100வது ராக்கெட் விண்ணில் பாய்வதை பிரதமர் மன்மோகன் சிங் நேரில் கண்டு களித்தார். இதற்காக அவர் ஏற்கனவே ஸ்ரீஹரிகோட்டா வந்திருந்தார். அவருடன் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியும் வந்திருந்தார்.

Saturday, 8 September 2012

அனுபவம் பேசுகிறது!: ஒரு பெரும் 'பொருளாதாரப் புயலை' நோக்கி உலகம்!!

உலகப் பொருளாதாரம் ஒரு மாபெரும் புயலை சந்திக்கவுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இத்தாலியின் கோமோ ஏரியின் அருகே உள்ள செர்னோபியோ நகரில் ஆண்டுதோறும் உலகப் பொருளாதார நிபுணர்கள் கூடி விவாதிப்பது வழக்கம். Ambrosetti Forum என்று அழைக்கப்படும் இந்த மாநாட்டில் உலகத் தலைவர்களும், சர்வதேச நிதி விவகாரங்களில் முக்கிய பங்கு வகிக்கும் நிபுணர்கள் கலந்து கொள்வர். இந்த ஆண்டுக்கான கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் பேசிய பெரும்பாலான சர்வதேச நிபுணர்களும், உலகம் ஒரு மாபெரும் பொருளாதாரப் புயலை சந்திக்கப் போவதாக எச்சரித்துள்ளனர். ஐரோப்பாவில் நிலவும் பொருளாதார தேக்கம் தொடரப் போகிறது, அமெரிக்க பொருளாதாரத்தை அந் நாட்டு அரசியல் போட்டி கீழே தள்ளிவிடப் போகிறது, இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைய ஆரம்பித்துவிட்டது, இத்தோடு ஈரானின் அணு ஆயுத விவகாரத்தால் நிலவும் ஆபத்தான சூழல்.. இவை அனைத்தும் சேர்ந்து உலகை ஒரு புரட்டு புரட்டி போடப் போகின்றன என்றனர் இந்த மாநாட்டில் பேசிய பல நிபுணர்களும். இப்போது நிலவும் அசாதாரணமாக சூழ்நிலையில் தனியார் நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் தங்களது பணத்தை முதலீடு செய்வதை நிறுத்த ஆரம்பித்துள்ளனர். அத்தோடு நுகர்வோரும் வீண் செலவுகளை கட்டுப்படுத்த ஆரம்பித்துவிட்ட நிலையில், பல்வேறு நாடுகளும் தேக்க நிலைக்குள் போய்விட்டன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் அதிகரித்து வரும் கடன் சுமையும் அந் நாடுகளின் அரசியல் நிலவரமும் உலகை வாட்டும் முக்கியமான கவலைக்குரிய விஷயங்கள் என்று கூறும் நிபுணர்கள், இதனால் யூரோ கரன்சியின் மதிப்பு அதிவேகமாக சரிந்து வருவதையும் சுட்டிக் காட்டினர். இந் நிலையில் உலகின் பணக்கார நாடுகளின் கூட்டமைப்பு (இதில் பல 'முன்னாள்' பணக்கார நாடுகள்... இப்போது கையேந்திகள்) என்று அழைக்கப்படும் OECD (Organisation for Economic Co-operation and Development) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச பொருளாதார வளர்ச்சி சரிய ஆரம்பித்துவிட்டது. அடுத்த சில காலத்துக்கு உலகின் டாப் 7 பணக்கார நாடுகளின் வளர்ச்சி விகிதம் வெறும் 0.3 சதவீதமாகத் தான் இருக்கும் (கிட்டத்தட்ட பூஜ்யம்!). இதனால் சர்வதேச அளவில் முதலீடுகளும் வர்த்தகமும் ஸ்தம்பிக்கும். இதன் எதிரொலியாக வேலைவாய்ப்புகளும் குறையும் என்று கூறப்பட்டுள்ளது. சரி, ஐரோப்பிய பொருளாதார சிக்கலை தீர்க்க என்ன தான் வழி என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டன. அப்போது, பலரும் கிரீஸ் நாட்டின் தவறான கொள்கைகளை தாக்கினர். ஜெர்மனி போன்ற பலமான நாடுகள் கிரீஸ் போன்ற நாடுகள் மீது கொஞ்சம் கூட இரக்கம் காட்டாமல் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகளும் அடுக்கப்பட்டன. இந்த விஷயத்தில் துருக்கி நாட்டின் துணைப் பிரதமரான அலி பபிகான் ஒரு தீர்வைக் கூறினார். அது சாத்தியம் அல்லாத ஒன்று என்றாலும் கூட அவர் சொன்ன தீர்வுக்கு பலத்த வரவேற்பு இருந்தது. யூரோ என்ற ஒரே கரன்சிக்குள் வந்துவிட்ட ஐரோப்பிய நாடுகள், தாங்கள் ஒரு கரன்சியின் மதிப்பை காக்க வேண்டியவர்கள் என்பதை மறந்துவிட்டு, சுயநலத்தோடு நடந்து கொள்கின்றன. இதனால், எல்லா யூரோ நாடுகளுக்கும் என பொதுவாக ஒரு நிதியமைச்சர் இருக்க வேண்டும். யூரோ ஒன்றியத்தில் உள்ள எந்த நாடும் பொருளாதார தவறுகள் செய்யாமல் அவர் தடுக்க வேண்டும் என்றார். இதற்கு கைத் தட்டல்கள் எழுந்தாலும், கிரீஸ் நாட்டுக்கு இணையாக பெரும் கடனில் மூழ்கியுள்ள ஸ்பெயின் நாட்டின் பிரதமரிடம் இருந்து இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு உடனடியாகக் கிளம்பியது. நீங்கள் சொல்வதைப் பார்த்தால், ''United States of Europe'' என்ற ஒரு கூட்டமைப்பு நாடு தான் உருவாக வேண்டும். இது அமெரிக்கா அல்ல. ஐரோப்பாவில் ஒவ்வொரு நாட்டுக்கும் தனி வரலாறும், தனி கலாச்சாரமும் உண்டு என்று அலி பபிகான் மீது பாய்ந்தார். ஐரோப்பாவாவது பரவாயில்லை, அங்கு அடுத்து என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். (அதாவது இப்போதைக்கு அங்கு எந்த மாயாஜாலமும் நடக்கப் போவதில்லை. தேக்க நிலை தொடரத் தான் போகிறது.) ஆனால், அமெரிக்கப் பொருளாதாரம் தான் உண்மையிலேயே உலகை அச்சுறுத்துகிறது என்றார் பபிகான். அங்கு அதிபர் தேர்தலையொட்டி நடந்து வரும் அரசியல் போட்டியில் பொருளாதாரம் மாட்டிக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு அந் நாட்டு பட்ஜெட் குறித்து யாருக்கும் விவரம் தெரியாது.. அடுத்த ஆண்டு யார் பதவிக்கு வரப் போகிறார்கள்.. என்ன செய்யப் போகிறார்கள் என்பதும் தெரியாது.. ஒரு மலை உச்சியில் பெரும் பள்ளத்தாக்கை நோக்கி நகர்வதைப் போல இருக்கிறது அமெரிக்காவின் நிலைமை என்றார். அடுத்துப் பேசிய தீன பொருளாதார வல்லுனரான லி செங் முதல்முறையாக தனது நாட்டின் நிலைமை மோசமாக உள்ளதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். சீனா 7 சதவீத பொருளாதார வளர்ச்சி அடைந்து வருகிறது என்று நீங்கள் எல்லாம் (அமெரிக்கா-ஐரோப்பா) வேண்டுமானால் கொண்டாடலாம். ஆனால், 11 சதவீத வளர்ச்சியில் இருந்து 7 சதவீதத்துக்கு சரிந்துள்ளது சீனா. இது எங்கள் மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல. பொருளாதாரம் மீழ்ச்சி அடையாவிட்டால் எங்கள் நாட்டில் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் காணாமல் போகும். வேலைவாய்ப்புகள் இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும். ஒரு கம்யூனிச நாட்டில் வேலைவாய்ப்புகள் இல்லாவிட்டால் ரத்தப் புரட்சி தான் ஏற்படும் என்று மிரட்டினார் செங். இப்போதுள்ள பொருளாதார நிலைமையில் இந்த உலகம் மேலும் ஒரு பெரிய பிரச்சனையை சந்திக்கும் நிலையில் இல்லை. ஆனால், அதையும் மீறி ஈரான் மீது அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ தாக்குதல் தொடுத்தால், உலகளவில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயரும். இது உலக நாடுகளின் பொருளாதாரத்துக்கு மரண அடியாக இருக்கும் என்றனர் சில நிபுணர்கள். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசினார் 89 வயதான இஸ்ரேல் அதிபர் ஷிமோன் பெரஸ். அவர் கூறுகையில், இங்கே அமர்ந்திருக்கும் பெரும்பாலானோருக்கு முடி நரைத்துவிட்டது. நாம் நமது வாழ்நாளில் எத்தனையோ பொருளாதார பிரச்சனைகளை சந்தித்துவிட்டோம். ஆனால், இப்போது உலகம் சந்திப்பது புது மாதிரியான பொருளாதார சிக்கல். இதைச் சந்திக்கும் அளவுக்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டாம். இது பொன்ற நெருக்கடியை சமாளிக்க நம்மிடம் ஒரு ஆழமான மாற்றம் தேவை. வயதைத் தாண்டிவிட்ட நாம் மாறுவது சாத்தியமில்லை. இதனால் இந்த விவகாரங்களை இளைய தலைமுறையிடம் ஒப்படைத்துவிட்டு நாம் ஒதுங்குவதே நல்லது. அவர்களுக்கு நம்மைவிட உலக பார்வையும், கல்வியும், அறிவும் அதிகம் என்றார். அனுபவம் பேசுகிறது!

இந்தியாவின் 100 ஆவது ராக்கெட் தயார் நிலையில் : ஒரு பார்வை

இந்தியாவின் 100 ஆவது ராக்கெட்டுக்கான கவுண்ட் டவுன் இன்று வெள்ளிக் கிழமை இந்திய நேரப்படி காலை 6.51 am இற்கு ஆந்திராவின் சிறீ ஹரி கோட்டா ஏவு தளத்தில் ஆரம்பமானது. பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் தயாரிக்கப் பட்ட இரு செய்மதிகளை ஏவிக் கொண்டு பூமியின் துருவப் பகுதிக்கு மேலே செல்லக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இந்திய ராக்கெட்டான PSLV 21 (Polar Satellite Launch Vehicle), எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை காலை 9.51 மணிக்கு விண்ணுக்கு ஏவப்படவுள்ளது. இந்த இரு செய்மதிகளில் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட 15 Kg எடையுள்ள செய்மதி 'ப்ராய்டரஸ்' எனவும் பிரான்ஸில் தயாரிக்கப் பட்ட 712 Kg எடையுள்ள செய்மதி 'ஸ்பாட் 6' எனவும் பெயரிடப் பட்டுள்ளது. ராக்கெட்டுக்கான கவுன்ட் டவுனின் போது இவற்றில் திரவ நிலையில் எரிபொருள் நிரப்பப்படுவதுடன் கட்டுப்பாட்டுப் பிரிவு சரியாகத் தொழிற்படுகிறதா என்ற கண்காணிப்பும் இடம் பெற உள்ளது. இஸ்ரோவினால் இதுவரை ஏவப்பட்ட செய்மதிகளிலேயே மிக அதிக எடையுடைய செய்மதி இம்முறை ஏவப்படும் பிரான்ஸின் 'ஸ்பாட் 6' என்பது குறிப்பிடத்தக்கது. 1975 ஆம் ஆண்டு 'ஆர்யபட்டா' செய்மதியை ஏவியதன் மூலம், இந்தியா விண்வெளித் துறையில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்தது. இது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இந்தியா 62 செய்மதிகளையும் 37 ராக்கெட்டுக்களையும் தயாரித்துள்ளது. மேலும் PSLV ரக ராக்கெட்டு மூலம் இதுவரை ஏவப்பட்ட 54 செய்மதிகளில் 53 வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளன. மேலும் இஸ்ரோ இதுவரை 27 வெளிநாட்டு செய்மதிகளையும் விண்ணில் ஏவியுள்ளது. இச் செய்மதி விண்ணில் ஏவப்படுவதை இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் இணைந்து பிரதமர் மன்மோகன் சிங் பார்வையிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, 5 September 2012

தமிழரின் தொன்மையான கண்ணகி கோயில் – சிறப்புப் படங்களுடன் ஒரு அறிமுகம்!


மிழக – கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோயிலும், ஆண்டுக்கு ஒரு முறை சித்ரா பவுர்ணமியன்று அந்தக் கோயிலுக்குச் செல்ல தமிழர்கள் படும் பாடுகளும்தான் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும்.
ஆனால் தமிழ்நாட்டுக்குள், தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட இன்னுமொரு கண்ணகி கோயில் உள்ளது பலருக்கும் தெரிந்திருக்காது. இந்தக் கோயில் இருப்பது தூத்துக்குடி மாவட்டம் மாறமங்கலம் – கொற்கைக்கு இடையில். வரலாற்றில் நாம் படித்த பாண்டியர்களின் தலைமை துறைமுக நகரமான அதே கொற்கைதான் இது. தூத்துக்குடியிலிருந்து 15 கிமீ தூரத்தில் உள்ளது.. இந்தப் பக்கம் ஏரலிலிருந்து போனால் 5 கிமீ!
இந்த இடத்திலிருந்து கப்பல்களில் பயணித்து கடல் கடந்து போய் வாணிகம் செய்திருக்கிறார்கள் பழந்தமிழர்கள். இங்குள்ள கோயிலில் இருப்பது, தமிழரின் கலாச்சார அடையாளங்களுள் ஒன்றாகக் கருதப்படும் கண்ணகியின் உண்மையான சிலை என்கிறார்கள்.
பல நூற்றாண்டுகளைப் பார்த்த கோயில். ரொம்ப ரம்யமான இடம்.

சுற்றிலும் பெரிய குளம்… அதன் முகப்பில் கண்ணகி கோயில், கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது.
கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு முந்தைய 25-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள குளப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் மனித எலும்புக் கூடுகள் இருந்தன. அவற்றை கார்பன் டேட்டட் முறையில் ஆய்வு செய்தபோதுதான், அவற்றுக்கு வயது 3000 ஆண்டுகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்தக் குளத்தை ஆய்வு செய்த போது, மேலடுக்கில் களிமண்ணும், அதன் அடியில் சாதாரண மண்ணும், கீழடுக்கில் கடல் மணலும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
குளத்தின் முகப்பிலேயே உள்ளது கண்ணகி கோயில். ரம்மியமான சூழல்…  இந்தக் கோயிலிலிருந்து சில சுரங்க வழிகள் கூட இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஒரு சில தங்க நாணயங்களும் கிடைத்ததாகக் கூறுகிறார்கள். அதனால் தொடர்ந்து இங்கே தோண்டிக் கொண்டே இருந்திருக்கிறார்கள். இதில் உள்ள மணலையும் கொஞ்ச காலம் சுரண்டி எடுத்திருக்கிறார்கள். இப்போது இதற்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இப்போதும்கூட முதுமக்கள் தாழிகள் தட்டுப்படுவதாகவும், அவற்றின் பெருமை தெரியாமல் மக்கள் அவற்றை உடைத்துவிடுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் அரசு அருங்காட்சியகம் ஒன்று
கண்ணகி குளத்தில் கிடைத்த 3000 ஆண்டு பழமை வாய்ந்த முதுமக்கள் தாழி…
கொற்கையில் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் அது நெல்லைக்கு மாற்றப்பட்டுள்ளது. இப்போது கண்ணகி குளத்தின் பெருமை புரிந்து, மீண்டும் கொற்கைக்கு அரசு அருங்காட்சியகத்தை கொண்டுவருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தக் கோயிலுக்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்து, திடீர் கடைகள் முளைத்து, இருக்கும் அழகை நாறடிக்க வேண்டும் என்பது சத்தியமாக நம் விருப்பமல்ல. ஆனால் இந்தக் கோயிலின் தொன்மையும், இங்கு வசித்த ஆதித் தமிழர்கள் நாகரீகமும் வரலாற்றில் முறையாகப் பதியப்பட வேண்டும் என்பதுதான் நம் ஆசை!
-என்வழி ஸ்பெஷல்
படங்கள்: ஜான்

கீழக்கரையில் பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்பட்ட விலையில்லா காலணிகள் - கீழக்கரை நகர் நல இயக்கத்தின் சிறப்பான சேவை !

கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பில் பள்ளி மாணவியருக்கான விலையில்லா காலணிகள்  வழங்கும் நிகழ்ச்சியில் 250 க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவிகள் பயனடைந்தனர். இதற்கான நிகழ்ச்சி கிழக்குத் தெரு கைராத்துல் ஜலாலியா மேனிலைப் பள்ளியில் நேற்று (30.07.2012) மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர் ஜனாப்.செய்யது இபுராகிம் ( இரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் - ஓய்வு) தலைமை வகித்தார்.


கிழக்குத் தெரு ஜமாஅத் நிர்வாகிகள், கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் ஜனாப். பசீர் அகமது, பொருளாளர் ஜனாப்.ஹாஜா அனீஸ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தாளாளர் டாக்டர். J.சாதிக், கீழக்கரை இஸ்லாமிய பைத்துல்மாலின் செயலாளர். ஜனாப். முகைதீன் தம்பி, கீழக்கரை நகர் நல இயக்கத்தின் உறுப்பினர் மற்றும் மக்கள் நல பாதுகாப்புக் கழக பொருளாளர் ஜனாப். முஹம்மது சாலிஹ் ஹுசைன் ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினர். இதில் நகர் நல இயக்கத்தின் நிர்வாகிகள் திரு. இராஜேந்திரன், திரு.விஜயன், திரு. கெஜி என்கிற கெஜேந்திரன், கவுன்சிலர்கள் இடி மின்னல் ஹாஜா, முகைதீன் இபுறாகீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





முன்னதாக பள்ளியின்  தலைமை ஆசிரியர் முஹம்மது மீரா வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியர்.சந்திர மோகன் நன்றி கூறினார். இதில் 118 பள்ளி மாணவியருக்கான விலையில்லா காலணிகள் வழங்கப்பட்டன.  மேலும் ஹமீதியா பெண்கள் மேனிலை பள்ளியில் இன்று (05.09.2012) காலை 9 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  ஆசிரியர் தின நிகழ்ச்சியில், கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக 140 மாணவியருக்கான விலையில்லா காலணிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை நகர் நல இயக்கத்தின் நிர்வாகி திரு.விஜயன், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Saturday, 1 September 2012

கின்னஸ் சாதனைக்காக சந்தித்துக்கொண்ட உலகின் மிகக் குள்ளமான ஆணும் பெண்ணும் - வீடியோ

வரலாற்றில் முதன் முறையாக உலகின் மிகக் குள்ளமான ஆணும் குள்ளமான பெண்ணும் சந்தித்துப் பேசி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளனர்.
மிகக் குள்ளமான மனிதராக 72 வயதுடைய நேபாளில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சந்திரா பஹதுர் டாங்கியும் மிகக் குள்ளமான பெண்ணாக 18 வயதுடைய இந்தியாவின் நாக்பூரைச் சேர்ந்த ஜோதி அம்கேவும் கின்னஸ்ஸில் பதியப் பட்டுள்ளனர்.

ஒருத்தருக்கு ஒருவர் இணையானவர்கள் என்று கருதக் கூடிய இந்த Match Makers, செப்டம்பர் 13 இல் வெளியாகவுள்ள 2013 ஆம் ஆண்டுக்கான கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக நடத்தப்பட்ட போட்டோ சூட் ஒன்றிட்காகவே இவர்கள் இருவரும் சந்திக்க நேரிட்டுள்ளது.

மேலும் இந்த போட்டோ சூட்டின் போது இவர்கள் இருவருக்கும் இடையே 12 இஞ்ச் உயரமுள்ள கின்னஸ் புத்தகம் ஒன்றையும் வைத்து புகைப்படம் எடுத்துள்ளனர். இவர்களில் சந்திரா பஹதுர் டாங்கி 21.5 இஞ்ச் உயரமும் ஜோதி அம்கே 25 இஞ்ச் உயரமும் உடையவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
http://www.youtube.com/watch?v=5eGMPCg2tsA&feature=player_embedded