Wednesday, 29 August 2012

நோன்புப் பெருநாளும் புத்தாடைத் தேடலும் ! - இலங்கையில் இருந்து கட்டுரையாளர் எம்.ரிஷான் ஷெரீப்

நோன்புப் பெருநாளை அண்மித்த நாட்களில் இப்பொழுது நாம் இருக்கிறோம். ‘எவ்வளவு விரைவாக நோன்பு முடியப் போகிறது? நேற்றுத்தான் முதல் நோன்பு ஆரம்பித்த மாதிரி இருக்கிறது’ என்றெல்லாம் வியந்தபடி கதைத்துக் கொள்கிறோம். கிட்டத்தட்ட எல்லா இஸ்லாமிய வீடுகளிலும் பெருநாளுக்கான முதலாவது ஆயத்தம் குடும்பத்தவர்களுக்கான புத்தாடைகள் குறித்தான தேடல் தான். புனித ரமழானின் இறுதிப் பத்து நோன்புகளும் அனேகமாக, நமது புத்தாடைகளின் கொள்வனவிற்காகவும், அவற்றைத் தேடுவதற்காகவுமே கழிந்துவிடுகின்றன.

ரமழான் மாதம் குறித்து அந்நிய மத நண்பர் ஒருவர் இவ்வாறு சொல்கிறார். “நோன்பு மாதத்தில்தான் இரண்டு வகையான முஸ்லிம் பெண்களை வீதிகளில் பரவலாகக் காண முடிகிறது. புத்தாடைகளையும் புதுப் புதுப் பொருட்களையும் வாங்குவதற்காகக் கடை கடையாக ஏறி இறங்கும் முஸ்லிம் பெண்கள் ஒரு வகை. கந்தல் ஆடைகளோடு தெரு வழியே வீடுகள் தோறும், கடைகள் தோறும் யாசகம் கேட்டு வரும் முஸ்லிம் பெண்கள் மற்றொரு வகை”. இது அந்நிய மதத்தவர் ஒருவரது பார்வை மட்டுமல்ல. அனேகமானவர்களது கருத்தும் இதுவாகவே இருக்கிறது.  உண்மைதான்....

இக்காலத்தில், தெருவுக்குத் தெரு, பளபளப்பான விளக்குகளாலும், அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளாலும் மின்னும் புடைவைக் கடைகளிலும் ஆபரணக் கடைகளிலும் தான் நமது முஸ்லிம்களின் புனித ரமழானுடைய இறுதிப் பத்து நோன்புகளும் செலவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆடைகளின் வடிவங்களில் நாளுக்கு நாள் மாறும் ஃபேஷன் குறித்து அறிந்து, புதுப் புது ஃபேஷன்களில் ஆடைகளைத் தேடியும், தனது தெருவில் உள்ளவர்கள், தனது அயலவர்கள், நண்பர்கள் வாங்கியிருப்பதைக் காட்டிலும் மேலானதாகவும் பெருமதியானதாகவும் வாங்கி உடுத்தி, அவற்றின் பெருமையைப் பீற்றிக்கொள்ளவும் ஆசைப்பட்டு, பல கடைகள் வழியே ஏறியிறங்கித் தமது காலத்தையும் பணத்தையும் வீணாக்கிக் கொண்டிருப்பவர்கள் இன்று நம்மில் அனேகம் பேர். ஒரு சுன்னத்தான வழிமுறையைப் பின்பற்றுவதற்காக, பல பர்ளுகளை விட்டு விடும் அபாயமும் இக் காலத்தில்தான் மிக அதிகமாக நிகழ்கின்றது.



‘பெறுமதியானதை வாங்கிவிட்டேன். ஒரு முறைதான் அணிந்தேன். வீட்டுப் பாவனைக்கும் உடுத்த முடியாது. வெளிப் பயணங்களுக்கும், வைபவங்களுக்கும் உடுத்தலாமென்றால் வாங்கிய சில மாதங்களிலேயே அவற்றின் ஃபேஷன் சீக்கிரம் மாறிவிட்டிருக்கிறது’ என்று நம்மில் எத்தனை பேர் போன பெருநாட்களுக்கு வாங்கிய உடைகளை, ஒருமுறை அணிந்துவிட்டு அப்படியே எடுத்துப் பத்திரமாக மடித்து வைத்திருக்கிறோம்?

நோன்புப் பெருநாளுக்கொரு புத்தாடை. ஹஜ்ஜுப் பெருநாளுக்கொரு புத்தாடை. அடுத்த பெருநாட்கள் வரவிருக்கும் ஒரு வருட இடைவெளியில் வரும் வைபவங்களுக்காக வாங்கப்படும் புத்தாடைகள் என நமது அலமாரிகள் ஒவ்வொரு வருடமும் எத்தனை புத்தாடைகளால் நிறைகின்றன? உண்மையில் நாம் நமது தேவைக்காகத்தான் அவற்றை வாங்கி அடுக்கி வைத்திருக்கிறோமா?

நமது முன்னோரின் காலத்திலென்றால் வீட்டு வேலைகளும் தோட்ட வேலைகளும் நிறைந்து காணப்பட்ட காலமென்பதால், அணிந்திருந்த ஆடைகள் எளிதில் கிழிசல் கண்டிருக்கும். ஆனால் இக்காலத்தில் எல்லாவற்றுக்கும் இயந்திரங்கள் வந்த பிறகு, நம்மில் யாருமே கிழிந்து கந்தலாகும் வரை எந்த உடையையுமே அணிவதில்லை. ஒரு ஆடையில் நிறம் சற்று மங்கியதும், அல்லது பொத்தானொன்று கழன்றதுமே அந்த ஆடையை ஓரமாக்கி விடுகிறோம். மானத்தை மறைக்க ஆடையணிவதற்குப் பதிலாக ஒரு பகட்டுக்காகவும், பிறரிடம் தனது அந்தஸ்தினை அதிகரித்துக் கொள்வதற்காகவுமே ஆடையணியும் பழக்கம் இன்று தோன்றியிருக்கிறது.

மறைக்கப்பட வேண்டிய உடலை வெளிக்காட்டும் விதமான மெல்லிய துணியாலான ஆடைகளையும், இறுக்கமான ஆடைகளையுமே நாகரீகமான உடைகளாக இன்று ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியபடி உள்ளன. அவற்றில் மதிமயங்கிப் போன நாமும் அவ்வாறான ஆடைகளைத் தேடியவாறே கடை கடையாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறோம். இங்கெல்லாம் அதிக பணத்தையும், நேரத்தையும் வீணாக்காமல் ஆடைகளை வாங்குவது எப்படி எனப் பார்ப்போம்.



முதலாவதாக பெருநாளைக்கு ஆடைகள் வாங்கத் தீர்மானிக்கும்போதே அதற்கான செலவையும் வரையறுத்து விடுங்கள். இவ்வளவு ரூபாய்க்குள்தான் எமது குடும்பத்துக்கான ஆடைகளை வாங்க வேண்டுமெனவும், வாங்கவேண்டிய ஆடைகளையும் தீர்மானித்து விடுங்கள். அந்தக் குறிப்பிட்ட தொகைக்குள் உங்களுக்கு விருப்பமான, கண்ணியமான ஆடைகளை வாங்கி விடுங்கள். ஆடைகள் நமக்கு கண்ணியத்தை வழங்கக் கூடியவை. ஒரு சக மனிதன் நமது ஆடையைத்தான் முதலில் காண்கிறான். அந்த ஆடையானது நம் மீது கௌரவத்தையும் கண்ணியத்தையும் ஏற்படுத்தக் கூடியவையாக அமையட்டும். நாகரிகமெனும் பெயரில் அங்கும் இங்கும் கிழிசலுற்றுத் தொங்கும் ஆடைகளை நடிகர்களே அணியட்டும். இஸ்லாமியர்களான எமக்கு அவை வேண்டாம்.

ஆடைகளை வாங்க முற்படும்போது அவை உருவாக்கப்பட்டிருக்கும் துணியின் மீது முதலில் கவனம் செலுத்துங்கள். நமது தோலுக்கும், நாம் வசிக்கும் பிரதேசத்தின் கால நிலைக்கும் அவை ஒத்து வருமா, தாக்குப் பிடிக்குமா என்பவற்றையும் தீர்மானித்து, பொருத்தமானவற்றை மட்டுமே வாங்குங்கள். மிக அதிகமான விலையுடைய ஆடைதான் நல்ல ஆடை எனவும் தரத்தில் சிறந்த ஆடை எனவும் எண்ணமிருந்தால், அந்த எண்ணத்தை முதலில் விட்டொழியுங்கள். பிரமாண்டமான கடைகளில் உள்ள ஆடைகளின் விலையானது, அக் கடைகளின் மின்சாரச் செலவு, ஊழியர்களுக்கான வேதனம், இறக்குமதி வரிகள், இலாபம் என அனைத்தும் உள்ளடங்கியதென்பதை நினைவில் வைத்திருங்கள். எனவே நல்ல தரமான ஆடைக்கும், அவற்றின் விலைக்கும் சம்பந்தமேயில்லை. நேர்த்தியான, ஒழுங்கான ஆடைகள் வீதியோரத்திலுள்ள சிறிய கடைகளிலும் கூட மலிவு விலைககளில் கிடைக்கும்.

இன்றைய காலத்தில் பட்டுத் துணியால் நெய்யப்பட்ட நாகரீகமான ஆடைகளை ஆண்கள் பரவலாக அணிகிறார்கள். ஹராமென இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ள பட்டாடைகளை அணிவதை விட்டும் ஆண்கள் தவிர்ந்திருங்கள். அதேபோல பெண்கள், மெல்லிய துணிகளாலான மற்றும் உடலோடு ஒட்டிப் பிடிக்கும் இறுக்கமான ஆடைகளை வாங்குவதை விட்டும் தவிர்ந்திருங்கள். அடுத்தது முக்கியமாக, பெரிய கடைகள், வாங்கப் போகும் ஆடையை அணிந்து பார்க்கவென்று சிறிய அறைகளைக் கொண்டிருக்கும். அவற்றின் கண்ணாடிச் சுவர்களில், மேற்கூரையில் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராக்கள், ஆடை மாற்றுபவர்களைப் படம்பிடித்து இணையத்தில் உலவவிட்ட சம்பவங்கள் பரவலாக இருப்பதால், அவற்றில் போய் ஆடை மாற்றிப் பார்ப்பதை இயன்றவரை தவிர்ந்துக்கொள்ளுங்கள்



வளர்ந்து வரும் குழந்தைகளுக்கான ஆடைகள், சப்பாத்துகளை வாங்கும்போது சற்றுப் பெரிய அளவில் உள்ளதையே வாங்குங்கள். குழந்தைகளை அலங்கரித்துப் பார்க்கும் ஆசை எல்லாப் பெற்றோர்களுக்குமே உள்ளதுதான். எனினும் இக் காலத்தில் எளிதில் உடைந்துவிடக் கூடிய, மணிகள் கோர்க்கப்பட்ட, கண்ணாடி ஆபரணங்களை சிறு குழந்தைகளுக்கு வாங்கி அணிவிப்பதைத் தவிர்ந்துகொள்வது நல்லது. குழந்தைகளை அவை காயப்படுத்திவிடக் கூடும். சிறு ஆபரணங்களைக் குழந்தைகள் விழுங்கி, பெரிய சிகிச்சைகளுக்கு அவை இட்டுச் சென்றதைச் செய்திகள் மூலம் நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

இவ்வாறாக, பெருநாளைக்கான ஆடைகளை வாங்கிவிட்டோம். இனி அவற்றைப் பெருநாளன்று குளித்து, ஆசையோடு அணியப் போகிறோம். பிறகு? அவற்றைக் கழுவி, அலமாரிக்குள் நிறைந்திருக்கும் மற்ற ஆடைகளோடு மடித்துவைத்து விடுவதால் நன்மை கிடைத்துவிடுமா? எல்லாம் வல்ல இறைவன், நமக்கு வசதியைத் தந்திருக்கிறான். விருப்பம் போல புத்தாடைகளை வாங்கிக்கொள்ள நம்மால் முடிந்தது. ஆனால் தொழுகைக்கு அணிந்து செல்வதற்குக் கூட ஒழுங்கான ஆடையில்லாமல் நமது ஊரில், அயல் கிராமங்களில், யாசகம் கேட்டு வருவோரில் என எத்தனை பேர் வருந்திக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

எங்கோ ஒரு ஊரில் நல்லவிதமாக வாழ்ந்தவர்கள், யுத்தச் சூழலால், சுனாமியால், வெள்ளத்தால் இடம் பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டு முகாம்களிலிருந்து, உதவி கேட்டு நம்மிடம் வருகிறார்கள். அவர்களுக்குச் சில்லறைகளையும், அரிசியையும் கொடுத்து விடுவதோடு நமது ஸதகாக் கடமைகள் நிறைவு பெற்றுவிடுகின்றன என எப்படி இருந்து விட முடியும்? தொழுகைக்குச் செல்ல வழியில்லாமல், கந்தலாடைகளோடும் கண்ணீரோடும் அவர்கள் நின்றிருக்கையில், மனம் நிறைந்த பூரிப்போடு பெருநாளை எவ்வாறு நம்மால் பூரணமாகக் கொண்டாடிவிட முடியும்?

ரமழான் என்பது ஏழைகளின் பசியை மாத்திரம் உணரச் செய்யும் மாதமல்ல. அவர்களது அத்தனை குறைகளையும் நீக்கிவிடவென வரும் மாதம் அது. வசதியும், உதவுவதற்கான உள்ளமும் கொண்ட எல்லா இஸ்லாமியரும், தன்னிடம் மேலதிகமாக உள்ளவற்றைக் கொடுத்து உதவுவதில் ஒரு பொழுதேனும் தயங்கக் கூடாது. அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டு, வீணாகப் பூச்சிகளரிக்க விடப்பட்டுள்ள உங்களது ஆடைகள், இன்னுமொரு ஏழையின் மானத்தை மறைக்க உதவும். 

 ஃபேஷன் போய்விட்டதெனச் சொல்லி நீங்கள் ஒதுக்கி வைத்திருக்கும் ஆடைகள், இன்னுமொரு வறியவருக்கு புத்தாடைகளாகத்தான் இருக்கும். உங்கள் குழந்தைகளின் பாதங்களின் அளவை விடச் சிறிதாகிவிட்டன என்று மூலையில் போட்டு வைத்திருக்கும் சப்பாத்துகள், கல்லும் முள்ளும் தீண்டும் ஏழைக் குழந்தைகளின் பாதங்களை அலங்கரிக்கட்டும். இவ்வாறாக இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவுவது, உங்களுக்கு மனநிறைவைத் தருவதோடு, இவை போன்ற உங்கள் ஸதகாக்களும், அவர்களது பிரார்த்தனைகளும் உங்களுக்கான நன்மைகளையும் அதிகரிக்கச் செய்யும்.

அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் பின் வருமாறு அறிவிக்கிறார்.

“ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிருந்து, ‘அல்லாஹ்வின் அடியாரே! இது (பெரும்) நன்மையாகும்! (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்!)’ என்று அழைக்கப்படுவார். (தம் உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் ‘ஜிஹாத்’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் ‘ரய்யான்’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்;

தர்மம் செய்தவர்கள் ‘சதகா’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்க ‘ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நம்புகிறேன்!” என்றார்கள். (ஸஹீஹ் புஹாரி – 1897)

ரமழான் மேற்கூறிய அனேகக் கடமைகள் ஒன்றாகச் சங்கமிக்கும் மாதம். இம் மாதத்தில் அதிகம் அதிகமாக ஸதகாக்கள் கொடுத்து ஏழை மக்களை இன்புறச் செய்வதோடு, நமது நன்மைகளையும் அதிகப்படுத்திக் கொள்வோம். புனித ரமழானின் பகல்களில் நோன்புகளை நோற்று, இரவுகளில் நின்று வணங்கி, ஸகாத், ஸதகா கொடுத்து, பாவ மன்னிப்பு வேண்டிக் கையேந்தி நிற்கும் நாம், வாங்கப் போகும் புத்தாடைகளிலும் இஸ்லாமிய நடைமுறையைப் பின்பற்றுவோம் இன்ஷா அல்லாஹ்.

இது, ரமழானில் மாத்திரமல்ல. புதிதாக ஒவ்வொரு ஆடை வாங்கும்போதும், நீங்கள் அணியாமல் வெறுமனே வைத்திருக்கும் நல்ல ஆடையொன்றை, சப்பாத்துச் சோடியொன்றை இல்லாதவரொருவருக்கு கொடுப்பதற்காக எடுத்து வையுங்கள். பரீட்சைகளுக்காக நீங்கள் வாங்கிப் படித்த புத்தகங்களை, அந்தப் பரீட்சை முடிந்ததும், அவை உங்களுக்குத் தேவையற்றதெனில், பரீட்சையை எதிர்பார்த்திருக்கும், புத்தகங்களை வாங்க வசதியற்றிருக்கும் ஏழை மாணவர்களுக்கு அவற்றைக் கொடுத்துவிடுங்கள். அத்தோடு ஏழை, எளியோருக்கு, தேவையுள்ளோருக்கு எதைக் கொடுக்கும் போதும் உங்கள் குழந்தைகளை முன்னிலைப்படுத்துங்கள்.

குழந்தைகள் கைகளினால் அவற்றைக் கொடுக்கும்படி செய்யுங்கள். ஸதகா கொடுக்கும் அந்நற்பழக்கம், குழந்தைகளையும் தொற்றிக் கொள்ளும். உங்களை முன்மாதிரியாகக் கொண்டே உங்கள் குழந்தைகள் வளருவார்கள் என்பதால் ஈகைக் குணம் கொண்ட ஒரு நல்ல சந்ததி உங்களிலிருந்து உருவாகி விடுவார்கள். அவர்களிலிருந்து வரும் நன்மைகள், நீங்கள் மரணித்த பின்பும் உங்களைச் சேர்ந்துகொண்டே இருக்கும்.

சிந்திப்போம் சகோதரர்களே!

நோய் எதிர்ப்பு சக்தி தரும் உலர் திராட்சை


என்னதான் வைட்டமின் மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டாலும் இயற்கை குணம் வாய்ந்த பழங்களுக்கு நிகர் எதுவும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை... அந்த வகையில் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதில் உள்ள வைட்டமின் மற்றும் அமினோ அமிலங்கள் சக்தியை தருகின்றன. விளையாட்டு வீரர்களுக்கு போட்டியின் நடுவே ஊக்கமளிக்க கூடிய பழ வகைகளில் மிகவும் முக்கியமானது இந்த உலர் திராட்சை. இதில் உள்ள தாமிரசத்து ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

மஞ்சள்காமாலை நோயுள்ளவர்கள் தினமும் 2 வேளை இந்த பழத்தை சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். தொண்டைக்கட்டு பிரச்னை உள்ளவர்கள் இரவு தூங்கும் முன் 20 உலர் திராட்சை பழங்களை சுத்தம் செய்து பசும்பாலில் போட்டு காய்ச்சி 10 வால்மிளகை தூள் செய்து, பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் தொண்டைக்கட்டு சென்ற இடமே தெரியாது.

மூல நோயுள்ளவர்கள் தினமும் உணவுக்கு பின்னர் காலை மற்றும் மாலையில் 25 உலர் திராட்சை பழங்களை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பூரண குணம் பெறலாம்.

குடல் புண்ணை குணமாக்கும் மாதுளை


மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

Tuesday, 28 August 2012

கட்டப்பஞ்சாயத்து கும்பல் பிடியில் கீழக்கரை!

கீழக்கரை, : கீழக்கரை பகுதியில் கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து கும்பல் பிடியில் சிக்கி அப்பாவி மக்கள் தவிக்கின்றனர். மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை காவல்துறை ஒடுக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபகாலமாக கீழக்கரை நகரில் கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து கும்பலின் அட்டூழியம் பெருகி வருகிறது. வறுமையில் நலிந்த நடுத்தர குடும்பங்களை குறிவைத்து கடன் தருவதாக கந்துவட்டி கும்பலும், சொத்து தகராறு, பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு போன்ற விவகாரங்களை தேடிப்பிடித்து பிரச்னையை தீர்ப்பதாக கட்டப்பஞ்சாயத்து கும்பலும் களத்தில் இறங்கி கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இவ்விரு கும்பலிடம் சிக்கிக் கொண்டு சொத்து, வீடு, அந்தஸ்தை இழந்து பரிதவிக்கும் அப்பாவிகள் எண்ணிக்கை எகிறிக் கொண்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தரப்பை சேர்ந்த அசில் என்பவர் கூறுகையில், ‘சில தினங்களுக்கு முன்பு கூட, கீழக்கரையில் ஒரு சம்பவம் நடந்தது. ஓராண்டுக்கு முன்பு ஒருவர், குடும்பச்சூழல் காரணமாக தனது வீட்டை ரூ.2.50 லட்சத்திற்கு கந்துவட்டி கும்பலிடம் அடமானம் வைத்துள்ளார். ஓராண்டு முடிவில் வட்டியுடன் ரூ.3.50 லட்சமாக கடன்தொகை உயர்ந்தது. அதனை கொடுத்து வீட்டை மீட்க முயன்றார் அந்த நபர். வீட்டை கொடுக்க முடியாது என கந்துவட்டி கும்பல் மிரட்டியது. இதனையறிந்த கட்டப்பஞ்சாயத்து கும்பல், பாதிக்கப்பட்ட நபரை அணுகி, எங்களுக்கு ரூ.50ஆயிரம் கொடுத்து விடுங்கள். பிரச்னையின்றி வீட்டை மீட்டுத்தருகிறோம் என்றனர். அந்த பணத்தையும் வேறொரு இடத்தில் வட்டிக்கு கடன் வாங்கி கட்டி வீட்டை மீட்டுள்ளார். இதனால் வீட்டு உரிமையாளருக்கு வீட்டை மீட்க ரூ.4 லட்சம் செலவானது. இதுபோன்று வாரம் ஒரு சம்பவம் நடந்து வருகிறது‘ என்றார்.
கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழக நிர்வாகி முகைதீன் இப்ராகிம் கூறுகையில், ‘கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி கும்பல் ஏதாவ தொரு கட்சியின் பின்புலத்துடன் செயல்படுகின்றன. இவர்களது மிரட்டலால் அப்பாவிகள், போலீசாரிடம் பிரச்னையை கொண்டு செல்லவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாய் தவிக்கின்றனர். இக்கும்பல்களை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்‘ என்றார்.

செவ்வாய்: கடந்த 24 மணி நேரத்தில் உலகின் வெவ்வேறு இடங்களில் ‘கிளிக்’

இந்தியக் கடலில், இலங்கையின் தென் பகுதியில் எடுக்கப்பட்ட போட்டோ. இதில் காணப்படும் கப்பல் சைப்பிரஸ் நாட்டுக்கு சொந்தமானது. பெயர், Thmothrmopolyseara. கப்பல் மூழ்கத் துவங்கியுள்ளது. அதில் உள்ள எண்ணை, கடலில் கலக்கிறது. எண்ணை இலங்கையின் கடற்கரையில் படிவுகளை ஏற்படுவதை எப்படி தடுக்கலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது இலங்கை அரசு.

Monday, 27 August 2012

செவ்வாயின் தரையில் என்ன உள்ளது? 'கியூரியாசிட்டி'யிலிருந்து 'தாக்கல்' வந்தது!

நாசா: செவ்வாய் கிரகத்தின் தரைத்தளம் குறித்த புதிய தகவல்களை கியூரியாசிட்டி விண்கலத்தின் செம்கேம் (Chemistry and Camera) லேசர் காமரா அனுப்பியுள்ளது. இதுவரை கிடைத்திராத புதிய தகவல்கள் இதில் அடங்கியிருப்பதால் கியூரியாசிட்டியை கண்காணித்து வரும் செவ்வாய் கிரக அறிவியல் ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பெரும் மகிழ்ச்சியும், திரில்லும் அடைந்துள்ளனர். மிகவும் அருமையான  Curiosity Sends Data About Martian Surface முடிவுகளை கியூரியாசிட்டி அனுப்பியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கியூரியாசிட்டியின் செம்கேம் லேசர் கேமரா மூலம் இந்த லேசர் ஒளிக்கற்றைப் படங்கள். கிட்டத்தட்ட 500 ஒளிக்கற்றைப் படங்களை செம்கேம் அனுப்பிக் குவித்துள்ளதாம். இதுவரை இல்லாத அளவுக்கு செவ்வாய்க்கிரக தரைத்தளத்தின் கட்டமைப்பு குறித்த உறுதியான, தெளிவான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இந்த ஆய்வகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செம்கேம் லேசர் காமராவை கண்காணிக்கும் குழுவில் இடம் பெற்றுள்ளவரான லாஸ் அலமோஸில் உள்ள தேசிய பிளானட்டரி ஆய்வக விஞ்ஞானி ரோஜர் வெய்ன்ஸ் கூறுகையில்,இதைப் பார்த்தால் பூமியைப் பார்ப்பது போலவே இருக்கிறது. மிகவும் அரிய தகவல் இது. இந்தப் படங்களைப் பார்த்து நாங்கள் பெரும் குஷியாகி விட்டோம். அந்தக் குஷியில் கொஞ்சம் சாம்பெய்னையும் கூட எடுத்து வாயில் விட்டுக் கொண்டோம் என்றால் பாருங்களேன் என்றார் படா குஷியுடன்.
அடுத்து இந்தப் படங்களையும், பூமியின் தரைத்தளத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கப் போகிறார்கள் நாசா விஞ்ஞானிகள். மேலும், செவ்வாயில் உள்ள மலைச் சிகரங்கள், குன்றுகளையும் படம் எடுத்து அனுப்பப் போகிறது கியூரியாசிட்டி. அதையும் பூமியில் உள்ள மலைச் சிகரங்கள், குன்றுகளின் தன்மையோடு ஒப்பிட்டுப் பார்க்கவுள்ளனர்.
தற்போது கிடைத்துள்ள படங்களின்படி, செவ்வாயின் தரைத் தளமானது, ஹைட்ரஜன் மற்றும் மெக்னீசியத்தால் சூழப்பட்டுள்ளதாக தெரிகிறது.

குவைத்தில் சிறப்பாக நடைபெற்ற நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகை

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்கு ஏற்பாடு செய்த நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகை
மற்றும் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் கடந்த 19.08.2012 ஞாயிற்றுக்கிழமை, குவைத், ஃகைத்தான் பகுதியிலுள்ள K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பாபள்ளிவாசலான அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசலில் நடைபெற்றன.
அதிகாலை 5:30 மணிக்கே சாரிசாரியாக வரத் தொடங்கிய பெருமக்களை நறுமணம் பூசி, பேரீத்தம் பழம் அளித்து சங்கத்தின் நிர்வாகிகள் வரவேற்றனர். தமிழகத்திலிருந்து வருகை தந்த சிறப்பு விருந்தினர் மவ்லானா மவ்லவீ அஃப்ழலுல் உலமா பன்னூலாசிரியர் அல்ஹாஜ் மு. முஹம்மது அபூதாஹிர் பாகவீ ஃபாஜில் தேவ்பந்தி (பேராசிரியர், நூருல் இஸ்லாம் அரபுக்கல்லூரி, சேலம்) அவர்கள் "முன்மாதிரி முஸ்லிம்" என்ற தலைப்பில், ஒவ்வொரு இஸ்லாமியரிடமும் இருக்க வேண்டிய பண்புகள், பிற மக்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், பெருநாள் அன்று எடுக்க வேண்டிய உறுதிமொழிகள் போன்றவற்றை தெளிவான முறையில் அழகு தமிழில் எளிய நடையில் சிந்திக்க வைக்கும் அற்புதமான சொற்பொழிவை நிகழ்த்தினார்கள்
சிறப்புச் சொற்பொழிவைத் தொடர்ந்து சரியாக காலை 7:35 மணிக்கு சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ அவர்கள் பெருநாள் தொழுகை முறை, புத்தாடை அணியும் போது ஓதும் துஆ மற்றும் வாழ்த்துக்கள் கூறும் முறை போன்றவற்றை விளக்கமாக எடுத்துரைத்து, பெருநாள் தொழுகையை நடத்தி வைத்தார்.
தொழுகையைத் தொடர்ந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., அவர்கள் "பெருநாள் ஃகுத்பாப் பேருரை" நிகழ்த்தினார். அவர் தனது உரையில், ரமழானில் மேற்கொண்ட பயிற்சிகள் காலமெல்லாம் நிலைத்திருக்க வேண்டும், நோன்பினால் இறையச்சம் (தக்வா) ஏற்பட்டதா? என்பதை ஒவ்வொருவரும் சுய பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Sunday, 26 August 2012

எம்டனைத் தெரியுமா

அவ்வளவு எளிதில் சிக்காதவர்களையும், புரிந்து கொள்ள முடியாதவர்களையும் "சரியான எம்டன்' என அடைமொழி இட்டு அழைப்பது வழக்கம். அது என்ன "எம்டன்' என, யோசித்திருக்கிறீர்களா? இதன் பின்னணியில் சுவாரசியமான சம்பவம் உண்டு.
முதல் உலகப்போரில் இந்தியா நேரடிப் பங்கு பெறவில்லை. ஆனால், பிரிட்டிஷ் காலனி ஆதிக்க நாடு என்பதால், ஜெர்மானியர்கள் இந்தியாவையும் தாக்கினர். தீவிர தாக்குதல் இல்லை எனினும், சிறிய அளவிலான தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
ஜெர்மனியின் "பாக்கெட் பேட்டில்ஷிப்' ரகத்தைச் சேர்ந்த ஒரு நீர்மூழ்கிக் கப்பல் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுற்றித் திரிந்தது. அதை பிரிட்டிஷாரால் பின்தொடரவோ, கண்காணிக்கவே இயலவில்லை. எப்பொழுது எங்கு இருக்கும் என கணிக்க முடியாத அளவுக்கு அதன் செயல்பாடு இருந்தது.
1914ம் ஆண்டு செப்., 22ம் தேதி இக்கப்பல் மதராசப்பட்டினத்துக் கரையோரத்துக்கு வந்து குண்டு வீசியது. ஏன், எதற்கு என யாருக்கும் காரணம் புரியவில்லை.
இக்குண்டு வீச்சால், மூன்று பேர் மட்டுமே இறந்ததாக "இந்து' நாளிதழ் செய்தி வெளியிட்டது; 30 பேர் இறந்ததாக வெளியான தகவல் வதந்தி எனவும் கூறியது. ஆனால், மக்கள் பீதியடைந்து நகரத்தை விட்டு வெளியேறத்துவங்கினர்.
இத்தாக்குதலில் அப்போதைய உயர்நீதிமன்றத்தின் சுவர் கொஞ்சமாக சேதமடைந்தது. அந்தச் சுவரில் பதிக்கப்பட்ட நினைவுக்கல் உடைந்து போனது. சம்பந்தப்பட்ட இடத்தில் கிடைத்த குண்டின் பகுதிகள், தற்போது கோட்டை அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
எம்டன் கப்பலில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் செண்பகராமன் பிள்ளை என்பவரும் பணியாற்றிருக்கிறார். சப்தம் செய்யாமல் திடீர் தாக்குதலை நிகழ்த்தி விட்டு, வந்த சுவடே தெரியாமல் சென்றதால், "எம்டன்' தமிழர்களால் மறக்க முடியாத ஒன்றாகி விட்டது.
முதலில் எம்டனைக் கண்காணிக்க முடியாத பிரிட்டிஷார் பின்னர் அதன் வழித்தடங்கள், எந்த நாட்களில் எங்கு நின்றது, எப்படித் தப்பியது என்பன போன்ற தகவல்களை ஒரு "மேப்'பாக வரைந்து வைத்துள்ளனர். 1914ல் வரையப்பட்ட இந்த மேப், நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள "மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டி'யில் இன்றும் நல்ல நிலையில் பாதுகாக்கப்படுகிறது

மதுரைக்கு வந்த 2 சர்வதேச விமானங்கள்! கொழும்புக்கு விமான சேவை தொடங்குகிறது!

2 International Flights Greet Madurai
மதுரை: மதுரை விமான நிலையம் இப்பொழுது சர்வதேச விமான நிலையங்களின் பட்டியலில் இணைந்திருக்கிறது. மலேசியாவிலிருந்து 23 பயணிகளுடன் 2சிறிய ரக தனியார் விமானங்கள் நேற்று மதுரை விமான நிலையத்துக்கு வந்திறங்கின. இமிக்ரேஷன் சோதனையை எம்.பி. மாணிக்கம் தாகூர் தொடங்கி வைத்தார்.
மதுரை விமான நிலையமானது ரூ130 கோடியில் சர்வதேச தரத்துடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விமான நிலைய ஓடுதளமும் 7,500 அடியாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மதுரையிலிருந்து கொழும்புக்கு விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது. இலங்கை அதிபர் ராஜபக்சவின் பெயரிலான மிகின் லங்கா நிறுவனம் செப்டம்பர் 8-ந் தேதி முதல் கொழும்பில் இருந்து மதுரைக்கு விமான சேவையை தொடங்க இருந்தது. ஆனால் அது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 23 பயணிகளுடன் 2 சிறிய ரக மலேசிய விமானங்கள் மதுரை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. கோயில் நகரமான மதுரைக்கான விமான சேவை தங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று மலேசிய பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சன் குழுமத்தின் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் செப்டம்பர் 20-ந் தேதியிலிருந்து இலங்கைக்கு விமான சேவையைத் தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, 25 August 2012

ஏரிகள் உருவான வரலாறு


பூமித்தாய் உருவாக்கிய அதிசயங்களில் ஏரிகளும் முக்கியமானவையே. தண்ணீர் பாய்ந்து வந்து நிறைகிற வெற்றிடமோ, பள்ளமோ நாளடைவில் ஏரியாகி விடும். தண்ணீர் ஊறி மண் வழியே வெளியேறாத நிலமும், அணைக்கட்டுகளுக்குப் பின்னால் உள்ள இடங்களும்தான் ஏரிக்கு ஏற்றவை. பூமித்தட்டின் நடனமும் பனிக்கட்டி உருகுதலுமே பல ஏரிகள் ஏற்பட காரணம். படிப்படியாக பூமித்தட்டு மேலே எழும்போது அணைகள் போன்ற அமைப்புகளும், கன்னாபின்னா வென இயக்கம் ஏற்படும்போது அகன்ற, ஆழமான ஏரிகளும் உருவாகின்றன. ஆப்ரிக்காவையும் ஆசியாவையும் வெட்டியதுபோல பிரிக்கும் ரிஃப்ட் பள்ளத்தாக்கு, பல கன்னாபின்னா ஏரிகள் அமையக் காரணமாக இருந்தது.

உதாரணம் சாக்கடல் என்றழைக்கப்படுகிற டெட் ஸீ, நயஸா ஏரி. உருகும் பனிக்கட்டிப்பாறைகள் தரையைத் தேய்த்து, சுத்தம் செய்து பள்ளங்களை உருவாக்குகின்றன. அதோடு அங்கே நிறைய வீழ்படிவுகளையும் கொண்டுவந்து சேர்த்து, ஒரு முகடு அல்லது வரப்பு போன்ற அமைப்பையும் ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் இயற்கை அணைக்கட்டுகள் உருவாகின்றன. வட அமெரிக்காவின் பிரமாண்ட ஏரிகளும், ஐரோப்பாவின் ஆல்பைன் ஏரிகளும் இப்படித் தோன்றியவையே. ஹைதராபாத் நகரத்தை அருமையான சுற்றுலாத்தலமாக மாற்றிய பெருமை ஹுசைன் சாகர் என்ற ஏரியைச் சேரும்.

பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து


உண்மைதான்... பனி உருவத்தில் பெரிதாகி, கடலில் மிதந்து கொண்டிருந்தால் பலரது உயிரையும் காவு வாங்கிவிடும். 1912ல் உற்சாகமான முதல் பயணத்தைத் தொடங்கிய டைட்டானிக் கப்பலுக்கு எமனாக நகர்ந்து வந்தது ஒரு பனிக்கட்டிப்பாறைதான். மரங்களாலும், இரும்பினாலும், இன்னபிற வலுவான பொருட்களாலும் உருவாக்கப்பட்ட அந்த மெகா கப்பலை, வெறும் தண்ணீரால் மட்டுமே ஆன பனிப்பாறை ஆட்டம் காணச் செய்தது. 1517 பேரை சாகடித்தது. இந்த அளவு அசாத்திய சக்தி கொண்ட பனிப்பாறைகள் பூமிப்பந்தின் சில இடங்களில் கடலாகவே விரிந்து கிடக்கின்றன.

வடதுருவத்தின் ஆர்க்டிக் கடல் நிரந்தரமாக ஐஸ் கட்டிகளால் மூடப்பட்டிருக்கிறது. தென்துருவத்தின் அன்டார்க்டிகாவிலும் ஐஸ்... ஐஸ்தான். இந்த ஐஸ் பாறைகளின் பருமன் மட்டுமே 6 ஆயிரத்து 500 அடி. இவை எல்லாம் உருகிவிடுவதாகக் கற்பனை செய்யும்போதே விஞ்ஞானிகளுக்கு நடுக்கம் வந்துவிட்டது. உலகின் கடல் மட்டமே 180 அடி அதிகரித்துவிடும் என்பதுதான் காரணம். பூமி வெப்பநிலை உயராமல் பார்த்துக்கொள்வது நம் கடமை என சுற்றுச்சூழலாளர்கள் வாய் ஓயாமல் கத்துவதற்கும் இதுவே காரணம்.

3.74 லட்சம் டாலருக்கு ஏலம் போன ஸ்டீவ் ஜாப்ஸ் கம்யூட்டர்

 Steve Jobs Original Apple Computer Sets Record
ஸ்டீவ் ஜாப் முதன் முதலாக உருவாக்கிய ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் 3,74,500 அமெரிக்க டாலருக்கு ஏலம் போயுள்ளதாம்.
‘இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்' என்ற பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ ஆப்பிள் கம்யூட்டர் ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு பொருந்தும். ஆப்பிள் நிறுவனத்திற்காக அவர் முதன் முதலாக உருவாக்கிய கம்யூட்டர் சமீபத்தில் நியூயார்க் நகரில் ஏலம் விடப்பட்டது. அது 3,74,500 டாலருக்கு ஏலம் போனது.
ஆப்பிள் 1 என்ற அந்த கம்யூட்டர் 1976 ம் ஆண்டு 666.66 டாலர் செலவில் தயாரிக்கப்பட்டது. ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கிய ஸ்டீவ் ஜாப்ஸ்தான் இதை உருவாக்கினார்.
1977 ம் ஆண்டு ஆப்பிள் 2 கம்யூட்டர் அறிமுகம் செய்யப்பட்ட உடன் ஆப்பிள் 1 விற்பனையை நிறுத்திவிட்டனராம். ஆனால் 35 வருடங்களைத் தாண்டியும் அந்த கம்யூட்டர் பழுதில்லாமல் வேலை செய்கிறதாம்.

Friday, 24 August 2012

செவ்வாய் கிரகத்துக்கு இந்தியாவின் விண்கல: செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு

 From The Red Fort The Red Planet India Mars Mission
டெல்லி: இந்தியா சார்பில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பப்படும் என்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன்சிங் தமது உரையில், செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புவதற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்திருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் இருந்து நாம் பெறப்போகும் தகவல்கள் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்றார் மன்மோகன்சிங்.
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் செவ்வாய்கிரகத்துக்கு விண்கலம் அனுப்பப்பட இருக்கிறது. இத்திட்டத்துக்கு சுமார் 450 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள்? மனிதர்களின் ஆராய்ச்சியை வேவுபார்க்கின்றன?

வாஷிங்டன்: செவ்வாய்க்கிரகத்தில் இருந்து கியூரியாசிட்டி விண்கலம் அனுப்பியிருக்கும் படங்களில் காணப்படும் மர்ம பொருளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. கியூரியாசிட்டி அனுப்பியிருக்கும் மர்ம பொருள் வேற்றுகிரகவாசிகளின் வேவு கப்பல்களாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நாம் வாழுகிற பூமியில் இருந்து 57 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது செவ்வாய் கிரகம்! இங்கு உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராய அமெரிக்காவின் நாசா சார்பில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்ந்து புகைப்படங்களை அனுப்பி வருகிறது.
இந்நிலையில் செவ்வாய் கிரகத்தின் அடிவானப் பகுதியில் மர்மமான 4 பொருட்கள் அசைந்தாடுவது போன்ற படங்களை கியூரியாசிட்டி அனுப்பி வைத்திருக்கிறது. இந்த மர்ம பொருள் அங்குமிங்கும் அசைந்தாடக் கூடியதாக இருக்கிறது. இருப்பினும் அது என்ன என்று உறுதியாக சொல்ல முடியாததாகவும் உள்ளது. இது தொடபாக விஞ்ஞானிகளிடையே பல்வேறு கருத்துகள் உலா வருகின்றன.
நாம் நீண்டகாலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேற்றுக்கிரகவாசிகள்தான் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் தற்போது தொடங்கியிருக்கும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை தங்களது கப்பல்கள் மூலமாக வேவு பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பது ஒருதரப்பு விஞ்ஞானிகளின் கருத்து. மற்றொரு தரப்பினரோ தொழில்நுட்பத்தில் ஏற்படும் பிக்சல்கள்தான் இந்த அசைந்தாடும் பொருட்கள் என்கின்றனர். இதேபோல் இவை அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களா? அல்லது துகள்களா? என்ற சந்தேகமும் உள்ளது.
ஆக மனிதனோடு பஞ்சாயத்துக்கு மல்லுக்கட்ட வேற்றுக்கிரகவாசிகள் தயாராகிவிட்டார்களோ? Curiosity Spots Ufos Zooming Across Mars

கடல் திருடர்க்ள் பற்றி தகவல்'''''.

கடல் கொள்ளையர் உருவான விதம் விதம் பற்றி தகவல் !!!!

கடலில் கப்பல் போக தொடங்கிய காலத்தில் இருந்தே கடல் கொள்ளையும் தொடங்கி விட்டது. வேதங்களிலும் புராணங்களிலும் கூட கடல் கொள்ளை பற்றி கூறப்பட்டுள்ளது.

எகிப்தில் கொள்ளையர் தாக்குதல் பற்றிய முதல...
் செய்தி, கி.மு. 1350 -ல் பேரரசர் அக்னாடென் ஆட்சி காலத்து களிமண் பலகையில் குறிப்பிட்டுள்ளது. கடல் கொள்ளையர்களை கடல் மக்கள் என்று குறிப்பிடுகிறார்கள். மத்திய தரைக்கடல் பகுதியில் ஒரு புதிய கூட்டமைப்பை உருவாக்கி, அருகில் உள்ள நாடுகளை தாக்கத் தொடங்கினர். இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று இன்னும் உறுதியாக கூறமுடியவில்லை. ஆனாலும் 200 ஆண்டுகளுக்கு எகிப்து, கிரேக்கம், ஹிட்டைட், மைசீனியா, மிட்டானி ஆகிய நாடுகள் இவர்களது தாக்குதலுக்குள்ளானது.

எகிப்து பேரரசர் மூன்றாவது ராம்சேசின் களிமண் வெட்டு ஒன்று அவர்களது (கொல்லையர்களது) ஆயுதங்களுக்கு முன்னாள் அனைத்து நாடுகளும் சிதறிப்போயின. யாராலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை' என்று கூறுகிறது.

இந்த கடல் மக்களின் படையெடுப்பால் மத்திய தரைக்கடல், கடல் கொள்ளையரின் கூடாரமாக மாறிப்போனது. அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மத்திய தரைக்கடலின் பல தீவுகள் கொள்ளையரின் தலைமையிடங்களாக செயல்பட்டன. எகிப்து பேரரசின் பலம் குறைந்தது அவர்களுக்கு சாதகமாகிப் போனது.

ஒரு நாட்டின் வர்த்தக கப்பல்களை தாக்கி கொள்ளையடித்துவிட்டு அதன் எதிரிநாட்டு துறைமுகத்தில் பாதுகாப்பாக அவர்களால் பதுங்கிக் கொள்ள முடிந்தது. கிரேக்கத்தில் கடல் கொள்ளை என்பது அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சியாக இருந்தது. சண்டையிடும் நாடுகள் கொள்ளையர்களை கூலிப்படையாக பயன்படுத்திக் கொண்டன. சில நாடுகளின் கடற்படை தளபதிகள் போரில்லாத காலத்தில் கொள்ளையர்களாக பணிபுரிய தொடங்கினர். கைச் செலவுக்கு காசில்லை என்றால் அரசாங்க அதிகாரிகள் கூட கப்பல்களை கடத்தி, மாமூல் வசூலிப்பது சகஜமானது. இப்படியாக கடற்கொல்லையின் ஆரம்ப காலங்கள் இருந்தன.
பொதுவாகவே திருடர்கள், கொள்ளைக்காரர்கள் என்று சட்டத்தை மீறுபவர்கள்மீது மக்களுக்கு ஓர் இனம்புரியாத கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது. அதிலும், கடல் கொள்ளையர்கள் என்றாலே பலருக்கு அலாதி பிரியம். கடற்கொள்ளையர் என்றவுடன் நம்மில் பலருக்கும் உடனே நினைவுக்கு வரும் உருவம், தோளில் கிளி, ஒரு கண்ணை மறைக்கும் கண்பட்டை, ஒரு மரக்கட்டைக் காலுடன் கூடிய கருப்பு தாடிக்காரர். இன்னும் கொஞ்சம் யோசித்தால், மண்டையோடும் எலும்புகளும் கொண்ட கருப்புக்கொள்ளையர் கொடியும், பாய்மரக் கப்பல்களும், புதையல் பெட்டிகளும் நினைவுக்கு வரும்.

இந்த பொது பிம்பம் உருவாக, பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் கரிபீயன் கடலைக் கலங்கடித்துக் கொண்டிருந்த பல கொள்ளையர்கள்தான் காரணம். இவர்களைப் பற்றிய செய்திகள், காலங்காலமாகக் கதைகளாகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்து கடற்கொள்ளையர்களின் மீது மக்களின் மனதில் ஒருவித ஆர்வத்தையும் ஈர்ப்பையும் ஏற்படுத்தின. என்னதான் கேட்பதற்கு கவர்ச்சியாக இருந்தாலும், கடற்கொள்ளையர்கள் சட்டத்தை மீறிய திருடர்கள். வர்த்தகர்களுக்குப் பெரும் தலைவலியாக இருந்தவர்கள். இந்த வில்லன்களில் மிகவும் பரவலாக அறியப்பட்ட வில்லன், 'Black Beard' எனப்படும் Edward Teach. கடற்க்கொள்ளையர்கள் குறித்த பொதுவான பிம்பத்துக்கு, 'கறுப்புத் தாடியை' இரவல் கொடுத்தவர் இவர்தான்.

பதினேழு - பதினெட்டாம் நூற்றாண்டுகள், வரலாற்றாளர்களால் கடல் கொள்ளையின் பொற்காலம் (Golden Age of piracy) என்றழைக்கப்படுகின்றன. அமெரிக்கக் கண்டம் கண்டுபிடிக்கப்பட்ட இருநூறு ஆண்டுகளுக்குள், ஐரோப்பிய நாடுகள் அங்கே பல காலனிகளை உருவாக்கி தங்கள் மக்களைக் குடியேற்றின. பெரும் பரப்பளவில், பண்ணைகளும் தோட்டங்களும் உருவாக்கப்பட்டு, பருத்தி, கரும்பு போன்றவை பயிரிடப்பட்டன.

பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் இங்கிலாந்து, பிரான்சு, ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற அனைத்து முன்னணி ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவில் காலனிகள் இருந்தன. காலனிகளுக்கும் ஐரோப்பாவுக்கும் நடுவே அட்லாண்டிக் கடல் இருந்தது. அதிவேகமான கப்பலில் பயணம் செய்தாலும், அதைக் கடக்க, குறைந்த பட்சம் சில வாரங்களாவது ஆகும். காலனிக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே வர்த்தகம் வருடந்தோறும் பெருகி வந்ததால், கப்பல்களுக்கும் மாலுமிகளுக்கும் பெரும் கிராக்கி ஏற்பட்டது.

கப்பல் வாழ்க்கை என்பது சாதாரணமானதல்ல. ஒவ்வொரு பிரயாணமும் மாதக் கணக்கில் நீடிக்கும்.உயிருடன் திரும்பி வருவோம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஊதியமோ மிகக் குறைவு. அதுவும் சரியாக, நேரத்துக்குக் கிடைப்பது சந்தேகம். கப்பல் மேலதிகாரிகள் ஊழலுக்குப் பேர் போனவர்கள். மாலுமிகளின் சம்பளத்தைத் திருடுவது, அவர்களுக்கான உணவை, உடைகளை வாங்குவதில் ஊழல் எனப் பலவகையிலும் தங்கள் கைவரிசையைக் காட்டினார்கள்.

பெரும்பாலும் படிப்பறிவில்லாதவர்களாக இருந்த மாலுமிகளால் இதை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை. எதிர்த்துப் பேசினால் சாட்டையடி விழும். வாரக்கணக்கில் இருட்டறையில் அடைத்துவிடுவார்கள். அல்லது, பட்டினி கிடக்கவேண்டியிருக்கும். பல சமயங்களில், சிறு குற்றங்களுக்குக் கூட தூக்கில் போட்டுவிடுவார்கள். உண்மையில், பெரும்பாலான மாலுமிகள், இந்தக் கொடுமையான கப்பல் வாழ்க்கையிலிருந்து தப்பிப்பதற்கான வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.

எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் ஓர் அளவுக்கு மேல் கொடுமைகளைத் தாங்க முடியாதல்லவா? அதுதான் இங்கும் நடந்தது. பல கப்பல்களில் மாலுமிப் புரட்சிகள் வெடித்தன. மாலுமிகள், தங்கள் மேலதிகாரிகளைக் கொன்று கப்பல்களைக் கைப்பற்றினார்கள். புரட்சிக்குப் பின் அவர்களால் தாய்நாடு திரும்ப முடியவில்லை. திரும்பினால் தூக்குக் கயிறு காத்திருந்தது. கொள்ளையராக மாறுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியிருக்கவில்லை. கடுமையான மாலுமி வாழ்க்கையைவிட கொள்ளையர் வாழ்க்கை அவர்களுக்கு எளிதாகத் தெரிந்தது. இப்படித்தான் பல புதிய கொள்ளையர் கூட்டங்கள் உருவாயின.

இப்படி, மாலுமியாக இருந்து, கொள்ளையரானவர் தான் எட்வர்ட் டீச். ஐந்துக்கும் பத்துக்கும் கொள்ளையடிக்கும் கூட்டத்தில் இருந்த டீச், புகழ்பெற்ற கொள்ளையர் கேப்டனான பெஞ்சமின் ஹார்னிகோல்டின் சீடனாக ஆனார். அதற்குப் பிறகு, பெரிய அளவில் கொள்ளையடிக்கத் தொடங்கினார். அமெரிக்கக் கண்டத்திலிருந்து ஐரோப்பாவுக்குப் புதையல்களைக் கொண்டு சென்ற ஸ்பானிஷ் கப்பல்களைக் கொள்ளையடித்து, பெரும் பொருள் சேர்த்த ஹார்னிகோல்டு, கொள்ளையர்களுக்காகவே பிரத்யேகமாக ஒரு வாழ்விடம் வேண்டுமென்று விரும்பினார்.

அதற்காக கரிபீயன் தீவுகளில் ஒன்றான பஹாமாசின் தலைநகர் நசாவுவைக் கைப்பற்றினார். அந்தத் தளத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டது கொள்ளையர் கூட்டமைப்பு. முன்னைவிட அதிகமான முனைப்புடன் கொள்ளை தொழிலில் இறங்கினார்கள். விரைவில் குருவை மிஞ்சிய சிஷ்யனாக மாறி விட்டார் எட்வர்ட். ஹார்னிகோல்ட், பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர். தேசப்பற்றால் பிரிட்டிஷ் கப்பல்களைத் தாக்குவதில்லை என்ற கொள்கை கொண்டிருந்தார். ஆனால், அவரது சீடர்களோ, நமக்கு தேசமும் வேண்டாம், பற்றும் வேண்டாம் என்று கறாராக சொல்லிவிட்டார்கள். அதோடு, அவரை கேப்டன் பதவியிலிருந்து இறங்கிவிட்டார்கள். ஹார்னிகோல்டின் இடத்தை 1717 இல், Black beard பிடித்துக்கொண்டார்.

கொள்ளையர்களுக்கு கேப்டன் ஆன பிறகு, எட்வர்ட் டீச்சின் கொள்ளைத் தாக்குதல்கள் அதிகமாயின. அதுவரை சின்னச் சின்ன வணிகக் கப்பல்களை மட்டும் தாக்கிக் கொள்ளையடித்து வந்த அவரது கூட்டம், மாபெரும் போர்க் கப்பல்களைக் கூடத் துணிந்து தாக்கத் தொடங்கியது. 'லா கன்கார்ட்' என்ற ஆயுதமேந்திய பிரெஞ்சு சரக்கு கப்பலை கைப்பற்றினார் எட்வர்ட். அதையே தனது கொள்ளைக் கோட்டத்துக்கு தலைமை கப்பலாக ஆக்கிக் கொண்டார். 'Queen Anne Revenge' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்தக் கப்பல் தான், அதுவரை கடற்கொள்ளையர்கள் பயன்படுத்திய கப்பல்களிலேயே மிகவும் பலம் வாய்ந்தது.

எட்வர்டின் தலைமை கப்பலில், அதிகமாக பீரங்கிகளும் திறமையான கேப்டனும் இருந்தார்கள். 'Queen Anne வருகிறது' என்ற செய்தியை கேட்டாலே வணிகக் கப்பல் கேப்டன்களுக்கு குலை நடுங்கும் நிலை உருவானது. எட்வர்டின் புகழ், பிற கொள்ளையர்கள் மத்தியிலும் வேகமாகப் பரவியது. பல கொள்ளையர்கள், தேடிவந்து அவருடைய கூட்டத்தில் இணைந்துகொண்டார்கள். 'எட்வர்ட் டீச் கூட்டத்தின் உறுப்பினர்' என்ற கெளரவம்(!) கிடைத்தாலும், அவருடைய கூட்டம் அடிக்கடி வெற்றிகரமாக கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதால், சீக்கிரமே பணக்காரர்களாகி விடலாம் என்ற எண்ணம் தான் மற்றவர்களைக் எட்வர்டின் பக்கம் ஈர்த்தது.

எட்வர்டின் கொள்ளைக் கூட்டம் 150 பேர் கொண்டதாக பெருகியது. அனைவரையும் ஒரே கப்பலில் வைத்திருக்க முடியாதென்பதை உணர்ந்தார் எட்வர்ட். தான் கைப்பற்றிய மேலும் இரு கப்பல்களைக் கொள்ளைக் கப்பல்களாகத் தயார் செய்தார். தன் சகாக்களிடம் கொடுத்தார். மொத்தம் மூன்று கொள்ளைக் கப்பல்கள். ஒரு கப்பலுக்கு கேப்டனாக இருந்தவர், மூன்று கப்பல்களுக்கு கமேண்டராகி விட்டார். இந்த காலகட்டத்தில் தான் அவருக்கு 'Black beard (கருந்தாடி)' என்ற பெயர் பிரபலமானது.

அதுவரை 'எட்வர்ட் டீச்' என்றே அறியப்பட்டு வந்த அவர், தன்னை பார்க்கிறவர்கள் பயப்படவேண்டும் என்பதற்காகவே, தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டார். நீண்ட கருந்தாடி, தோலின் குறுக்கே பல கைத் துப்பாக்கிகள் அடங்கிய தோல் பட்டை, பெரிய தொப்பி, நீண்ட அங்கி என் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார். அவரது பெயரும் 'Black Beard' என்று மாறியது.

1718 இல், எட்வர்டின் கொள்ளைத் தாக்குதல்கள் மேலும் அதிகரித்தன. கரீபியன் கடலில் ஒரு குறுகிய பகுதியில் மட்டும் கொள்ளையடித்து வந்தவர், அந்த ஆண்டு, அந்த பகுதியிலிருந்த பிற ஐரோப்பிய காலனிகளிலும் தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கினார். எட்வர்டின் சாகசங்கள் பிற கொள்ளையர்களுக்கும் தைரியமளித்தது. அவர்களும் தங்கள் கைவரிசையை பல இடங்களில் காட்டினார்கள். ஹார்னி கோல்டு, நசாவுவில் உருவாகியிருந்த கொள்ளையர் தளம், ஒரு குடியரசைப் போன்று செயல்படத் தொடங்கியது. கொள்ளையர்கள் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி ஒன்றிணைந்து செயல்பட ஆரம்பித்தார்கள்.

கொள்ளையர்கள் தொந்தரவால் வட அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையே நடைபெற்ற கடல்வழிப் போக்குவரத்து முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டது. ஐரோப்பாவிலிருந்து வந்து, அமெரிக்காவை காலனியாக்கிக் கொண்டவர்கள், ஆடிப் போனார்கள். கொள்ளையர்களிடமிருந்து தங்களை காப்பாற்றுமாறு இங்கிலாந்தின் முதலாம் ஜார்ஜ் மன்னரிடம் முறையிட்டார்கள்.

மன்னரும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துகொண்டார். 'கொள்ளையர்களின் கொட்டத்தை அடக்கவேண்டுமேன்றால் முதலில் பஹாமாஸ் தீவுகளைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்' என்றார்கள் அவருடைய அமைச்சர்கள். எனவே, பஹாமாசுக்கு ஒரு புதிய ஆளுனரை நியமித்தார் முதலாம் ஜார்ஜ். அவரை பெரும் படைபலத்துடன் கரிபீயனுக்கு அனுப்பி வைத்தார்.

வூடஸ் ரோஜர்ஸ் என்ற அந்த தளபதி ஒரு கப்பல் படையுடன் கொள்ளையரை ஒழிக்க இங்கிலாந்திலிருந்து கரீபியன் தீவுகளுக்குக் கிளம்பினார். ரோஜர்ஸ், கரீபியன் தீவுகளை நெருங்கிக்கொண்டிருந்தபோது, எட்வர்டின் கொள்ளைப் படை தங்கள் தொழிலில் உச்சகட்ட சாதனையை நிகழ்த்திக் கொண்டிருந்தது.

இதுநாள் வரை, கரிபியன் பகுதியிலிருந்த ஐரோப்பிய காலனிகளை மட்டும் கொள்ளையடித்து வந்த எட்வர்டிற்கு, வட அமெரிக்கப் பகுதிகளில் ஏன் கொள்ளையடிக்கக் கூடாது என்ற எண்ணம் வந்தது. அதுவரை யாரும் கொள்ளையடிக்காத பகுதியென்பதால் அங்கு பாதுகாப்புக்குக் கடற்ப்படை கப்பல்கள் ஏதும் இல்லை. எனவே, 1718, மே மாதத்தில், அமெரிக்கா காலனியான தெற்கு கரோலினாவின் தலைநகர் சார்லஸ்டன் துறைமுகத்தை தாக்கினார் எட்வர்ட் டீச்.

ஒரு கொள்ளையர் கூட்டம், தைரியமாக ஒரு பெரிய நகரை நேரடியாகத் தாக்குவது அதுவே முதல் முறை. சார்லஸ்டன் துறைமுக வாயிலில் தன் கப்பல்படையை நிறுத்திய எட்வர்ட், அங்கு வந்த பல கப்பல்களை கைப்பற்றினார். அதிலிருந்த பயணிகளை சிறைபிடித்தார். தனக்கு வேண்டிய சில மருந்துகளை உடனடியாக அனுப்பாவிட்டால் பிணைக் கைதிகளை கொன்றுவிடுவதாக சார்லஸ்டன் ஆளுநரை மிரட்டினார். சில நாட்களுக்கு இந்த முற்றுகை நீடித்தது. மருந்துகளை பெற்றுக்கொண்டு கைதிகளை விடுவித்தார் எட்வர்ட். அவர் நினைத்திருந்தால் சார்லஸ்டன் நகரையே தரைமட்டமாக்கியிருக்கலாம். ஆனால், வெறும் சில மருந்துகளுக்காக ஏன் இப்படியொரு தாக்குதலை நடத்தினார் என்பது இன்றுவரை புரியாத மர்மம்.

வட அமெரிக்காவிலிருந்து திரும்பிய எட்வர்டிற்கு, ரோஜர்சின் படை நசாவுவை நோக்கிச் செல்லும் செய்தி கிடைத்தது. அதனை சமாளித்துப் போரிட முடியாது என்பது அவருக்கு தெரிந்தே இருந்தது. அவர் தற்காலிகமாக கொள்ளை தொழிலிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்தார். அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தின் ஆளுநருக்கு லஞ்சம் கொடுத்து அங்கு குடியேறினார். அதற்காகவே, வேண்டுமென்றே தனது 'Queen Anne' கப்பலைத் தரைதட்டச் செய்தார்.

சில மாதங்கள் அமைதியாக வடக்கு கரோலினாவில் காலம் கடத்தினார். இந்நேரத்தில் ரோஜர்சின் கப்பற்படை, நாசாவு தீவினை அடைந்து அங்கிருந்த கொள்ளையர்களை அடித்து விரட்டியது. பல கொள்ளையர் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்கள். அவர்களுக்கு நேர்ந்த கதியிலிருந்து புத்திசாலித்தனமாக எட்வர்ட் தப்பிவ்ட்டாலும், அவரால் நிலத்தில் அமைதியாக வாழ முடியவில்லை. மீண்டும் கொள்ளை தொழிலுக்கு திரும்பவேண்டுமென்ற ஆசையை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

சில மாதங்களுக்குப் பிறகு, வட கரோலினா கடற்கரைப் பகுதிகளில் தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கினார். நசாவுவிலிருந்து தப்பி வந்திருந்த வேறு சில கொள்ளையர் கேப்டன்களும் அவருடன் இணைந்து கொண்டார்கள். ஆனால், இம்முறை காலனிய ஆட்சியாளர்கள் விழிப்புடன் இருந்தனர். வட கரோலினாவுக்குப் பக்கத்து மாநிலமாக வர்ஜீனியாவின் ஆளுநர், எட்வர்ட் மீண்டும் கொள்ளை தொழிலில் இறங்கியதை கேட்டவுடன், அவரை ஒழிக்க உடனடியாக ஒரு கடற்படையை தயார் செய்தார்.

இந்தப் படை, லெப்டினன்ட் மேனார்ட் தலைமையில் எட்வர்ட் டீச்சின் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை ரகசியமாக அணுகியது. எட்வர்டின் கப்பலின் மேல்தளத்தில், அவரின் கூட்டத்திற்கும் மேனார்டின் படைவீரர்களுக்குமிடையே கடும் சண்டை நிகழ்ந்தது.ஆவேசத்துடன் எட்வர்ட் போராடினாலும் இறுதியில் மேனார்டின் வீரர்கள் அவரை தீர்த்துக் கட்டினார்கள். அவரது தலை துண்டிக்கப்பட்டு, மேனார்டின் கப்பல் பாய்மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்டது.

எட்வர்ட் டீச் இறந்த சில வருடங்களில் பிற கொள்ளையர் தலைவர்களும் பிடிபட்டார்கள். கடற்கொள்ளையின் பொற்காலமும் முடிவுக்கு வந்தது. ஆனால், மரணத்துக்கு பிறகும் எட்வர்டின் புகழ் இன்றும் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. 'கடற்க் கொள்ளையர்' என்றாலே எட்வர்ட் டீச்சின் உருவம் நினைவுக்கு வருமளவுக்கு இன்றைக்கும் அவர் பலருடைய நினைவில் இருக்கிறார். நிஜ வாழ்வில் கரிபியன் கடற்பகுதியைக் கலங்கடித்தவர், இப்போது கதைகள், திரைப்படங்கள் மொலமாக உலகையே கலக்கிக் கொண்டிருக்கிறார்.

புத்தகம் : கிழக்கு பதிப்பகம்.
See More
54 · ·

Thursday, 23 August 2012

உத்தரகண்ட்: குருத்வாராவில் பெருநாள் தொழுகை நடத்திய முஸ்லிம்கள்

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் இடத்தில் மழைநீர் தேங்கியதால் குருத்வாராவில் பெருநாள் தொழுகை நடத்த சீக்கியர்கள் அனுமதி அளித்தது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் என்னும் சிறிய கிராமத்தில் பலத்த மழை பெய்ததால் முஸ்லிம்கள் ஈத் பெருநாள் தொழுகை நடத்தும் காந்தி மைதானத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால் தொழுகை நடத்த இடமின்றி அவர்கள் தவித்தனர். இந்நிலையில் இது குறித்து அறிந்த சீக்கியர்கள் தங்கள் குருத்வாராவில் வந்து தொழுகை நடத்துமாறு முஸ்லிம்களை அழைத்தனர். அவர்களின் அழைப்பை ஏற்ற முஸ்லிம்கள் ஜோஷிமத்தில் உள்ள குருத்வாராவில் பெருநாள் தொழுகை நடத்தினர். அதன் பிறகு முஸ்லிம்களும், சீக்கியர்களும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி நட்பை வெளிப்படுத்தினர். ஈத் கொண்டாட்டத்தில் இந்துக்களும் கலந்து கொண்டனர்.
இது குறித்து மௌலவி ஆசிப் கூறுகையில், சீக்கியர்களின் தாராள குணத்தை பாராட்டுவதுடன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து மதங்களையும் எப்படி மதிக்க வேண்டும் என்பதை அவர்கள் காட்டிவிட்டனர் என்றார்.

Wednesday, 22 August 2012

உலகின் தீர்க்கப்படாத மர்மம்: ‘பர்மியூடா முக்கோண’ மாய மறைவுகள்-3

கேப்டன் ஸ்டீவரின் குரல், தரை கட்டுப்பாட்டு மைய ரேடியோவில், “எங்களது விமானங்கள் எந்த பொஸிஷனில் பறக்கின்றன என்பதை புரிந்து கொண்டு விட்டேன் என்று நினைக்கிறேன்” என்று கேட்டபோது, கீழே இருந்தவர்களுக்கு ஓரளவுக்கு நிம்மதி ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் ஸ்டீவரின் குரல் மீண்டும் ரேடியோவில் ஒலித்தது. “இப்போது எல்லாமே எனக்கு புரிந்து விட்டது. நாங்கள் சரியான திசையில்தான் பயணத்திருக்கிறோம். ஆனால் அதீத உயரத்தில் பறந்துவிட்டோம். இதனால் புளோரிடாவைத் தாண்டி மெக்ஸிகோ வளைகுடாவுக்கு மேலே பறக்கிறோம். உயரம் அதிகமாக இருப்பதால் தரை தெரியவில்லை. அவ்வளவுதான்”
இந்தச் செய்தி கிடைத்ததும் தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தவர்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
கீழேயிருந்து அறிவுறுத்தல் அனுப்பப்பட்டது.
“உங்களது விமானங்கள் மெக்ஸிகோவை நோக்கிப் போகின்றன என்றால், விமானங்களின் உயரத்தைக் குறைத்து, கிழக்கு நோக்கித் திருப்புங்கள்.”
“சரி. அப்படியே செய்கின்றோம்.”
ஐந்து விமானங்களும் கிழக்கு நோக்கித் திருப்பப்பட்டன.
“உயரத்தை குறைந்து விட்டீர்களா?”
“இன்னமும் இல்லை. எல்லா விமானங்களிலும் உயரத்தைக் காட்டும் கருவிகள் செயலிழந்துள்ளன.”
“கீழே தரையோ கடலோ தெரிகின்றனவா?”
“இல்லை”
‘அப்படியானால் தைரியமாக உயரத்தைக் குறையுங்கள். மீட்டர்கள் இயங்கா விட்டாலும் பரவாயில்லை.”
“சரி. 10,000 அடிவரை குறைக்கலாமா?”
“செய்யுங்கள்.”
இப்படிச் சொன்னாலும், தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தவர்களுக்கு ஒரு விஷயம் புரிந்திருந்தது. என்னதான் விமானிகள் 10,000 அடிவரை உயரத்தைக் குறைக்க போவதாகக் கூறினாலும், உயரத்தைக் காட்டும் கருவிகள் இயங்காத போது, அவர்களால் தங்களது விமானங்களின் உயரத்தை சரியாக 10,000 அடி குறைக்க முடியாது.
வேண்டுமானால் சுமாராக குறைக்கலாம். அவ்வளவுதான். அதுவும் ஆபத்துத்தான். ஆனால் வேறுவழியில்லை.
மேலும் 20 நிமிடங்கள் சென்றன.
இவர்களது விமானங்கள் ஸ்டீவர் கூறியதுபோல மெக்ஸிகோ வளைகுடா பக்கமாக சென்றிருந்தால், அவை கிழக்குத் திசையில் திருப்ப பட்டிருந்தால், இப்போது புளோரிடாவின் ஓரமாகவுள்ள சிறிய தீவுகள் கண்ணில் பட வேண்டும்.
ஆனால் தெரியவில்லை. கீழே கடலும் தெரியவில்லை.
“இதில் ஏதோ தவறு இருக்கிறது. நாங்கள் உயரத்தைக் கணிசமாக குறைந்து விட்டோம். விமானங்களை கிழக்குத் திசையில் திருப்பி பறக்கிறோம். அப்படியிருந்தும் எதுவும் தெரியவில்லை” விமானியின் குரல் லோசாக நடுங்குவதை, கீழேயிருந்தவர்கள் கவனித்தார்கள்.
“உயரத்தை இன்னமும் குறையுங்கள்”
“குறைக்கிறோம்.”
“நீங்கள் பறந்து கொண்டிருக்கும் இடத்தில் வெளியே பார்க்க முடியாதபடி, மேகங்களோ, பனி மூட்டமோ இருக்கிறதா?”
“இல்லை. வானம் தெளிவாக இருக்கிறது.”
இப்போது தரையில் இருந்தவர்களுக்கு ஒரு பயம் ஏற்பட்டிருந்தது. மேலேயிருந்து கூறியவர்கள் தாங்கள் புளோரிடாவைக் கடந்து மெக்ஸிகோ வளைகுடாவின் மேலே பறந்து கொண்டிருப்பதாகக் கூறியதால்தான், அவர்களை கிழக்கு பக்கமாகத் திரும்பும்படி தரையில் இருந்து கூறியிருந்தார்கள்.
ஒருவேளை, அவர்கள் மெக்ஸிகோ வளைகுடாவின் மேல் பறக்காமல், புளோரிடாவின் மறுபக்கத்தில் (அட்லான்டிக் சமுத்திரப் பக்கத்தில்) நின்றிருந்தால்?
கிழக்குப் பக்கம் திருப்பப்பட்ட விமானங்கள் புளோரிடா கரையை நோக்கி வராமல், நடுக்கடலை நோக்கச் சென்று கொண்டிருக்கும்.
அடுத்து ஐந்து நிமிடங்களுக்கு ரேடியோ நிசப்தமாக இருந்தது. விமானிகள் தங்களுக்குள் பேசிக் கொள்வதுகூடக் கேட்கவில்லை. கீழேயிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்குக்கூட மேலேயிருந்து பதில் வரவில்லை.
ஐந்து நிமிடங்களின் பின்னர், ரேடியோவில் கரகரவென்று விசித்திரமான இரைச்சல் ஒலியொன்று சில விநாடிகள் கேட்டது. இரைச்சலின் முடிவில், ஐந்து விமானிகளில் ஒருவரின் குரல் ரேடியோவில் கேட்டது.
அவர் குழப்பமான நடுங்கும் குரலில், ஒரு வாக்கியம் சொன்னார்.
அந்த வாக்கியம்தான், ஐந்து விமானங்களில் இருந்தும் கடைசியாகப் பேசப்பட்ட வாக்கியம். அதன் பிறகு ஐந்து விமானங்களில் இருந்தவர்களும் தரையைத் தொடர்பு கொள்ளவே இல்லை.
கடைசியாகக் கூறப்பட்ட வாக்கியம் -
“எமது விமானங்கள் இப்போது வெள்ளை நிற திரவத்துக்குள் நுழைகின்றன”

உலகின் தீர்க்கப்படாத மர்மம்: ‘பர்மியூடா முக்கோண’ மாய மறைவுகள்-2

மேற்கு எந்தத் திசையில் இருக்கிறது என்பதே தெரியவில்லை. எல்லாமே குழப்பமாக இருக்கின்றது. இப்போது கீழே கடல் தெரிகிறது. ஆனால் அது கூட வழமையாகத் தெரியும் கடல் போல இல்லை. எல்லாமே வித்தியாசம். நாங்கள் வேறு கண்டத்திலோ, கிரகத்திலோ இருக்கிறோமா?” என்று விமானத்தில் இருந்து வந்த ரேடியோ மெசேஜ்,  தரையில் இருந்தவர்களை குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது.
திசைகூடத் தெரியவில்லையா?
விமானங்கள் காலையில் தரையில் இருந்து புறப்பட்டுச் சென்றபோது, அவற்றில் கோளாறுகள் எதுவுமில்லாமல் இருந்தன என்று மெக்கானிக்குகள் பரிசோதித்து கிளியரன்ஸ் கொடுத்திருந்தார்கள். அன்றைய தினத்தில் வானம்கூட முகில்கள் அற்று கிளியராக இருந்தது. மோசமான காலநிலை இல்லை. இரவு நேரம் அல்ல.
அப்படியான சூழ்நிலையில் விமானிக்கு மேற்கு எந்த பக்கத்தில் இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை என்றால், அவர்களால் சூரியனைப் பார்க்க முடியவில்லை என்றும் அர்த்தமாகின்றது.
வானம் தெளிவாக இருக்கும்போது, இது எப்படிச் சாத்தியமாகும்?
விமானங்கள் புறப்பட்டுச் சென்ற நேரம், வேகம், ஆரம்ப திசை ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது, இந்த விமானங்கள் கிட்டத்தட்ட எந்த வான் பகுதியில் பறந்து கொண்டிருக்கலாம் என்பதை தரையிலிருப்பவர்களால் ஊகிக்கக் கூடியதாக இருந்தது.
அந்த வான்பரப்பு -
பர்மியூடா முக்கோணத்தின் மேலுள்ள வான் பகுதி!
எங்கேயிருக்கின்றது இந்த அபாய முக்கோணம்?
உலக வரைபடத்தில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து பர்மியூடா தீவுக்கு ஒரு கோடு கீறுங்கள். பர்மியூடா தீவில் இருந்து போட்டோ ரிக்கோ தீவுக்கு மற்றுமோர் கோட்டைக் கீறுங்கள். இறுதியாக போட்டோ-ரிக்கோ தீவிலிருந்து மற்றுமோர் கோடு கீறவேண்டும்.
இந்த மூன்றாவது கோடு போட்டோ ரிக்கோவிலிருந்து பகாமாஸ் தீவின் ஊடாக மறுபடியும் புளோரிடாவை தொடவேண்டும்.
கீறப்பட்ட மூன்று கோடுகளும் ஒரு முக்கோணத்தை உருவாக்குகின்றன அல்லவா. அதுதான். பர்மியூடா முக்கோணம் என்று அழைக்கப்படும் மர்மப் பிரதேசம். இந்தச் சிறிய கடற்பகுதியில்தான் கடலிலும் வானிலும் திடீர் மறைவுகள் பல ஏற்படுகின்றன.
அபாய முக்கோணத்துக்கு மேலே பறந்து கொண்டிருந்த 5 விமானங்களும் இப்போது மற்றுமோர் சிக்கலைச் சந்திக்கத் தொடங்கின. தரையுடன் அவர்கள் வைத்திருந்த ரேடியோ தொடர்புகள், சத்தம் குறைவாகவும், தெளிவில்லாமலும் போகத் தொடங்கின.
ரேடியோ தொடர்பில் வேறு சில ஒலிகளும் இடையூறு செய்ய தொடங்கின.
ஆனால் தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இந்தப் பிரச்சனை இருக்கவில்லை.
வானில் இருந்த விமானி தரைக்கு கூறும் ரேடியோச் செய்திகளும் தெளிவாகக் கேட்டன. அதுமாத்திரமல்ல, வானில் இருந்த ஐந்து விமானங்களிலிருந்து ஐந்து விமானிகளும் தங்களுக்கிடையே பேசிக்கொண்டே உரையாடல்கள்கூட தரையில் இருந்தவர்களுக்குத் துல்லியமாகக் கேட்டது.
விமானிகளின் உரையாடல்களின்படி அவர்களது விமானங்கள் எல்லாவற்றிலும் இருந்த கன்ட்ரோல் உபகரணங்கள் சரியாக இயங்கவில்ல. ஏறுமாறான தரவுகளைக் காட்டின. அத்துடன் திசைகாட்டும் கம்பாஸ் கருவி முழுமையாகவே இயங்காது போய்விட்டிருந்தது.
விமானிகளின் குரல்களில் ஆரம்பத்தில் குழப்பம் தெரிந்தது. சிறிது சிறிதாக அந்தக குழப்பம் பயமாக மாறத் தொடங்குவது தெரிந்தது.
இதற்கிடையே விஷயம் தரையிலுள்ள மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. உயரதிகாரிகள் பலர் தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்து விட்டார்கள்.
அத்துடன் விமானிகளுக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளர்களும் தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு அழைக்கப்பட்டார்கள். காரணம், தரையில் இருந்தபடியே ரேடியோ மூலமாக பயிற்சியாளர்களால், விமானம் இயக்குவது பற்றிய அறிவுறுத்தல்களை விமானிகளுக்கு தெரிவிக்கமுடியும்.
வந்திருந்த பயிற்சியாளர்கள் பல வருடங்களாக விமானிகளுக்கு பயிற்சி கொடுத்தவர்கள். புதிய விமானிகள் பயிற்சிக்காகப் பறக்கும்போது அவர்களுடன் பலதடவைகள் கூடவே பறந்தவர்கள். அத்துடன் அவர்களே எத்தனையோ தடவைகள் பர்மியூடா முக்கோணப் பகுதிக்கு மேலாக பறந்திருந்தவர்கள். அந்த வான் பகுதியை நன்றாக அறிந்திருந்தவர்கள்.
5 விமானிகளும் தமக்கிடையே பதட்டமாக பேசிக் கொண்டதை, கீழேயிருந்த பயிற்சியார்கள் கூர்ந்து கவனித்து கொண்டிருந்தார்கள். அவர்களது பேச்சுக்களில் இருந்து ஏதாவது க்ளூ கிடைக்கிறதா என்று தெரிந்து கொள்ள முயன்றார்கள்.
“உங்களது திசைகாட்டும் கருவியின் வாசிப்பு எப்படி இருக்கிறது? திசை தெரிகிறா?” ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் கேட்கிறார்.
“கருவி இயங்கவில்லை. தென்கிழக்குத் திசையில் அசையாமல் நிற்கிறது.”
“கடைசியாக திசைகாட்டும் கருவி எப்போது இயங்கியது என்பது ஞாபகம் இருக்கிறதா?”
“ஆம். கடைசியாக பகாமாஸ் தீவின் மேல் சிக்கன் ஷோவால்ஸ் பகுதி வான்பரப்பில் வைத்து விமானத்தை வடக்கு நோக்கித் திருப்பினேன். அப்போது திசைகாட்டும் கருவி சரியாக இயங்கியது.”
“அதன் பின்னர் இயங்கவில்லையா?”

உலகின் தீர்க்கப்படாத மர்மம்: ‘பர்மியூடா முக்கோண’ மாய மறைவுகள்!

இது ஒரு முக்கோண கடல் பகுதி. இங்கு வந்த பல கப்பல்கள் மாயமாக மறைந்து போகின்றன. இந்த கடலுக்கு மேலே பறந்த பல விமானங்களும் மிஸ்ஸிங். என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை.
காற்றில் கரைகின்றனவா? வேறொரு கிரகத்துக்கு இழுக்கப்படுகின்றனவா? அல்லது கடலின் அடிப்பகுதியை நோக்கி உறுஞ்சப்படுகின்றனவா?
இந்த கடல் பகுதியில் எத்தனையோ விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், விபத்துக்குள்ளான கப்பல்களிலோ விமானங்களிலோ இருந்த ஒருவரது உடல்கூட ஏன் இதுவரை கிடைக்கவில்லை?
உடல்களை விடுங்கள் – அவை சிறியவை. விபத்துக்குள்ளாகிய கப்பல்கள் அல்லது விமானங்களின் பாகங்கள் கூடக் கிடைக்காமல் மாயமாக மறைகின்றனவே. அது எப்படி?
இதுதான் பர்மியூடா முக்கோணம்
பல வருடங்களாக நடைபெற்றுள்ள ‘காரணம் கூறப்படாத விபத்துக்கள்’ எல்லாவற்றிலும், இப்படியான மாய மறைவுகள்தான் ஒரேயொரு ஒற்றுமை என்பது ஆச்சரியமாக இல்லையா?
இந்த இடத்தில் பொதிந்திருக்கும் மர்மம், எப்போது அவிழும்?
மேலே கூறப்பட்ட கேள்விகள் அனைத்தும் குறிக்கும் இடம் – பர்மியூடா முக்கோணம் (The Bermuda Triangle) எனப்படும் இடம். இந்த இடத்துக்கு மற்றொரு பெயர், பிசாசு முக்கோணம் (Devil’s Triangle)
அட்லான்டிக் சமுத்திரத்திலுள்ள ஒரு சிறிய பகுதி இது. எல்லைகள் எவை? முக்கோணத்தின் ஒரு பக்கம், அமெரிக்கா, புளோரிடாவின் சில பகுதிகள், மற்றொரு பக்கம், பஹாமாஸ், மூன்றாவது பக்கம், அட்லான்டிக் சமுத்திரம். இந்த ஏரியாவுக்குள், மயாமி, சான்-வான் (San Juan-க்கு சரியான உச்சரிப்பு) போட்டோ ரிக்கோ, மற்றும் மிட்-அட்லான்டிக் தீவான பர்மியூடா.
இந்த பிசாசு முக்கோணத்தில் நடைபெற்ற சில மர்மச் சம்பவங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாமா?
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள ஃபோட் லாரடேல் விமான தரைக் கட்டுப்பாட்டு மையத்துக்கு ரேடியோ செய்தி ஒன்று வருகின்றது.
“ஆபத்து! அபாய அறிவிப்பு!! எங்களுக்குக் கீழே திடீரென தரை தெரியவில்லை. நாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதும் தெரியவில்லை”
இந்த அபாய அறிவிப்பு தரைக் கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்தது, மேலே பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் இருந்து. அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான விமானம் அது. பிளைட் இலக்கம் 19.
விமானத்தில் இருந்து ரேடியோ மூலம் தரையை தொடர்பு கொண்ட விமானி யின் பெயர், லெப்டினென்ட் சார்ள்ஸ் டெய்லர். அன்று மதியம் 2 மணிக்கு பிளைட் இலக்கம் 19 விமானத்த்தில் புறப்பட்டு சென்றிருந்தார் – வழமையான ரோந்து நடவடிக்கைக்காக.
1945-ல் வெளியான பத்திரிகை தலைப்புச் செய்தி!
சம்பவம் நடைபெற்ற தினம் டிசம்பர் 5-ம் தேதி, 1945-ம் ஆண்டு.
மாலை 3.45-க்கு விமானம் திரும்பி விமானப் படை முகாமுக்கு வந்திருக்க வேண்டும். வரவில்லை. ரேடியோ மூலம் அபாய அறிவிப்புத்தான் வந்து சேர்ந்தது. விமானிக்கு, தாம் எங்கே பறக்கிறோம் என்பதே தெரியாத விசித்திர செய்தியுடன்!
“நீங்கள் இப்போது பறந்து கொண்டிருக்கும் பொசிஷன் என்ன?” தரைத் தொடர்பு அதிகாரி ரேடியோவில் கேட்டார்.
“மீண்டும் சொல்கிறோம். நாங்கள் இருக்கும் பொசிஷன் எது என்றே தெரியவில்லை. சற்று நேரத்துக்கு முன்புவரை கீழே தரை தெரிந்து கொண்டிருந்தது. திடீரென தரை தெரியாமல் மறைந்து விட்டது” விமானத்திலிருந்து பதில் வந்தது.
லெப்டினென்ட் சார்ள்ஸ் டெய்லர் அமெரிக்க விமானப் படையின் திறமைசாலியான விமானிகளில் ஒருவர். பல வருட ஃபிளையிங் அனுபவம் உடையவர். அவரே தாம் பறந்து கொண்டிருக்கும் பொசிஷன் தெரியாது என்று கூறியது, தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தவர்களுக்கு மகா ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
விமானம் எங்கே போயிருக்க முடியும்? தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த ஃபிளைட் பிளானை பார்த்தார்கள். பிளைட் இலக்கம் 19-க்கு கொடுக்கப்பட்டிருந்த பறக்கும் பாதை, புளோரிடாவின் கரையோரமாக கிழக்கு நோக்கி பகாமாஸ் தீவுகள் வரை செல்வது. அது கிட்டத்தட்ட 160 மைல்கள் பறக்கும் தொலைவு.
அந்த இடத்தில் சென்றடைந்த பின், அங்கிருந்து வடக்கே 40 மைல்கள் பறந்து, மீண்டும் தென்மேற்குத் திசையில் திருப்பி புளோரிடாவிலுள்ள விமானப் படை முகாமுக்கு திரும்பி வரவேண்டும் என்பதே, விமானிக்கு கொடுக்கப்பட்ட பிளைட் பிளான்.
அன்றைய தினத்தில் ரோந்து நடவடிக்கைகளுக்காக பிளைட் இலக்கம் 19 தனியே செல்லவில்லை. அந்த விமானத்துடன், வேறு 4 விமானங்களும் புறப்பட்டுச் சென்றிருந்தன. அந்த விமானங்களும் வந்து சேரவில்லை. அவர்களிடம் இருந்து தகவலும் ஏதுமில்லை.
அந்த நாட்களில் அமெரிக்க விமானப்படையின் ரோந்து விமானங்கள் ஒவ்வொன்றிலும் மொத்தம் 3 பேர் இருப்பார்கள். ஒரு விமானி, ஒரு துப்பாக்கி இயக்குபவர், ஒரு ரேடியோ ஆபரேட்டர்.
1945, டிசம்பர் 5-ம் தேதி புறப்பட்டுச் சென்ற விமானங்களில் செல்ல வேண்டியவர்களில் ஒருவர் மாத்திரம் முன்கூட்டியே லீவுக்கு விண்ணப்பித்திருந்தார். அவர் ஒரு ரேடியோ ஆபரேட்டர். கடற்படை முகாமின் தலைமை அதிகாரி அவருக்கு லீவு கொடுத்திருந்தார். ஆனால் அவரது இடத்தை நிரப்புவதற்கு வேறு ஒரு ரேடியோ ஆபரேட்டரை நியமிக்கவில்லை.
விமானங்கள் புறப்பட வேண்டிய நேரத்துக்கு சில நிமிடங்கள் முன்புதான் இது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் ரோந்து விமானங்களை செலுத்த வந்த விமானிகள் யாரும் அதை பெரிது படுத்தவில்லை. அநேகமாக எல்லா விமானிகளும் ரேடியோ இயக்குவதில் பயிற்சி பெற்றவர்கள் என்பதால், ரேடியோ ஆபரேட்டர் இல்லாவிட்டால் பரவாயில்லை என்று விட்டுவிட்டார்கள்.
அது, அப்போது பெரிய பிரச்னையாக இருக்கவில்லை. இப்போது, விமானங்களுக்கு சிக்கல் வந்தபோது, அந்த விஷயமும் அலசப்பட்டது. புறப்பட்டுச் சென்ற விமானங்கள் திரும்பவில்லை. விமானத்திலிருந்து அபாய அறிவிப்பு வருகின்றது. மொத்தம் 5 விமானங்கள். அதில் 14 ஆட்கள்!
தரைக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து ரேடியோ உரையாடல்கள் தொடர்ந்தன.
“உங்களுக்கு தரப்பட்ட பிளைட் பிளானின் படி, நீங்கள் முதலாவது கட்ட பறத்தலை (first leg of the flight plan) முடித்து விட்டீர்களா?”
“முடித்து விட்டோம்” சார்ள்ஸ் டெயிலரிடம் இருந்து பதில் வந்தது.
“அப்படியானால் புளோரிடாவில் இருந்து 160 மைல்கள் கிழக்கே சென்றுவிட்டீர்கள்”
“ஆம்”
“இரண்டாவது கட்டப் பறத்தலை ஆரம்பித்து விட்டீர்களா?”
“இன்னும் இல்லை”
“நல்லது. இரண்டாவது கட்டத்தில் நீங்கள் வடக்கு நோக்கி 40 மைல்கள் பறப்பதாக பிளைட் பிளான் இருக்கிறது. அதைச் செய்ய வேண்டாம். விமானத்தை மேற்கு நோக்கித் திருப்பி தொடர்ந்து பறவுங்கள். கடலுக்குள் செல்லாமல், புளோரிடா கரையை நோக்கி வரத் துவங்குவீர்கள்” என்று தரையில் இருந்து ஐடியா கொடுக்கப்பட்டது.
இதற்கு, விமானத்தில் இருந்து வந்த பதில், தரைக்கட்டுப்பாட்டு அதிகாரியை தூக்கிவாரிப் போட்டது.
“மேற்கு எந்தத் திசையில் இருக்கிறது என்பதே தெரியவில்லை. எல்லாமே குழப்பமாக இருக்கின்றது. இப்போது கீழே கடல் தெரிகிறது. ஆனால் அது கூட வழமையாகத் தெரியும் கடல் போல இல்லை. எல்லாமே வித்தியாசம். நாங்கள் வேறு கண்டத்திலோ, கிரகத்திலோ இருக்கிறோமா?”

Tuesday, 21 August 2012

கிராமமாக இருந்து மாநகரமான சிங்காரச் சென்னைக்கு இன்று 373வது பிறந்தநாள்

 Chennai Celebrates 373rd B Day Today
சென்னை: கிராமமாக இருந்து மாநகரமான சென்னை இன்று தனது 373வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.
இன்று மாநகரமாக உள்ள சென்னை ஒரு காலத்தில் சிறு, சிறு கிராமங்களாக இருந்தது. அவற்றை பல்லவ, சோழ, பாண்டிய மற்றும் விஜயநகர மன்னர்கள் ஆண்டனர். மன்னர் ஆட்சி நடக்கையில் வெளிநாட்டு வர்த்தகர்களும், மதபோதகர்களும் கப்பல் மூலம் சென்னை கடற்கரையில் வந்திறங்கினர். அப்போது சென்னை, சென்னப்பட்டிணம் என்று அழைக்கப்பட்டது.

1639ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜெண்டுகளான பிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் சென்னப்பட்டிணத்தில் ஆங்கிலேயர்களுக்கு குடியிருப்பு கட்ட முடிவு செய்தனர். பின்னர் ஓராண்டு கழித்து புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அதை மையமாக வைத்து தான் ஆங்கிலேயர்களுக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்த காரணத்தால் சென்னப்பட்டிணத்தை சுற்றி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு போன்ற கிராமங்கள் ஒன்றிணைக்கப்பட்டன.
தொடர்ந்து 1688ம் ஆண்டு சென்னையை முதல் நகரசபையாக அறிவித்தார் இரண்டாம் ஜேம்ஸ் மன்னர். இதன் மூலம் இந்தியாவின் முதல் நகரசபை ஆன பெருமை சென்னைக்கு கிடைத்தது.
இந்நிலையில் 1746ல் ஜார்ஜ் கோட்டை மற்றும் சென்னை நகரை பிரான்ஸ் நாட்டினர் கைப்பற்றினர். பின்னர் 1749ம் ஆண்டு அவை மீண்டும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். இரண்டாம் முறை சென்னை ஆங்கிலேயர்கள் கைக்கு வந்த பிறகே அதீத வளர்ச்சி கண்டது. இந்தியாவின் முக்கிய நகரங்களை சென்னையுடன் இணைக்க ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன.

கிராமமாக இருந்த சென்னப்பட்டிணம் மதராஸ் மாகாணம் மற்றும் மதராஸ்பட்டிணம் என்று அழைக்கப்பட்டது. 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மதராஸ் மகாணாத்தின் தலைநகரானது சென்னை.

பின்னர் 1956ம் ஆண்டு இந்திய மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டன. அப்போது தமிழகத்தின் தலைநகரானது மதராஸ். கடந்த 1996ம் ஆண்டு மதராஸ் என்ற பெயரை மாற்றி சென்னை என்று அழைக்கப்பட்டது. பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழும் காஸ்மோபாலிடன் நகரமாக உள்ளது சென்னை.

இந்தியாவிலேயே அதிகமாக வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் சென்னையில் தான் உள்ளன. ஜவுளி, பெட்ரோ கெமிக்கல்ஸ் என்று பல்வேறு துறைகளில் சென்னை சிறந்து விளங்கி வருகிறது.
சென்னையில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்ல ரயில் மற்றும் விமான போக்குவரத்து வசதி உள்ளது. மேலும் வெளிநாடுகளுக்கும் விமான சேவை உள்ளது. இது தவிர கப்பல் போக்குவரத்தும் உள்ளது. மேலும் மெட்ரோ மற்றும் மோனோ ரயில் திட்டங்கள் விரைவில் வரவிருக்கின்றன.
பண்டைய கால கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக சென்னை பல்கலைக்கழகம், உயர் நீதிமன்றம், எழும்பூர் அருங்காட்சியகம், ரிப்பன் மாளிகை, விக்டோரியா ஹால், மெமோரியல் ஹால், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள் ஆகியவை கம்பீரமாக காட்சியளிக்கின்றன.
அந்த காலத்தில் கூவம் மற்றும் அடையாறு ஆகியவை தூய்மையான ஆறாக இருந்தன. ஆனால் தற்போது சென்னையின் மக்கள் தொகையால் அவற்றில் சாக்கடை தான் ஓடுகிறது. கிராமமாக இருந்து நகரமாக மாறி தற்போது கிரேட்டர் சென்னையாக தரம் உயர்ந்துள்ள தமிழகத்தின் தலைநகரம் இன்று தனது 373வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது

புகைப்பட ஆல்பம்: ரமலான் கொண்டாட்டம் ; ஸ்பெஷல் கவரேஜ் !

பொது ஆல்பம்: 21-08-2012

Photo GalleryPhoto GalleryPhoto Gallery