புதுடெல்ல விண்வெளியில் சூரியனை சுற்றி வரும் புதிய வால்நட்சத்திரத்தை டெல்லியை சேர்ந்த மாணவர் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார். அவரை இங்கிலாந்தில் உள்ள வானவெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள் சங்கம் பாராட்டியுள்ளது. டெல்லி அல்கான் பப்ளிக் ஸ்கூலில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர் பிரபுல் சர்மா. டெல்லியில் அறிவியல் நிகழ்வுகளை உலகறிய செய்யும் தன்னார்வ தொண்டு நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தில் ஒரு உறுப்பினராக மாண வர் சர்மாவும் இருந்து வருகிறார். சூரிய ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் வானவெளியில் உலவி வரும் சூரிய குடும்பத்தை சேர்ந்த கோள்கள் மற்றும் நட்சத்திரங் களை ஆராயும் திட்டத்தில் சர்மாவும் சீனாவை சேர்ந்த மாணவன் லியாங் லீயும், ஜனவரி மாதம் உறுப்பினர்களாக சேர்ந்தனர். அன்று முதல் இருவரும் கூட்டாக இணைந்து புதிய வால்நட்சத்திரங்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்காக அவர்கள் அமெரிக்காவின் நாசா, ஐரோப்பாவின் விண்வெளி ஆய்வு மையம் ஆகியவற்றின் உதவியுடன் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.அப்போது அவர்கள் வானவெளியில் புதிதாக ஒரு வால் நட்சத்திரம் இருப்பதை கண்டுபிடித்தனர். சூரிய குடும்பத்தை சேர்ந்த அந்த வால் நட்சத்திரத்துக்கு ‘ஷோஹோ,2333’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சூரிய குடும்பத்தை சேர்ந்த ‘மச்சோல்’ என்ற வால் நட்சத்திரம் சூரியனின் அருகே சென்றபோது அதில் இருந்து பிரி ந்த நட்சத்திரம்தான் இந்த நட்சத்திரம். ‘ஷோஹோ,2333’ விட அதன் தாய் நட்சத்திரமான மச்சோல் வால் நட்சத்திரம் பல மடங்கு பெரியது.
அந்த வால் நட்சத்திரம் சூரியனை நெருங்கும்போது சூரிய கதிர்களின் வெப்பத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் அதில் இருந்து பிரிந்து விழுந்ததுதான் ‘ஷோஹோ, 2333’ என்று மாணவன் சர்மா கண்டுபிடித்த தகவலை இங்கிலாந்தில் உள்ள பிரிட்டீஷ் விண்வெளி ஆராய்ச்சி மையம் ஏற்றுக் கொண்டு உறுதி செய்து பாராட்டியுள்ளது. மேலும் இதுபற்றி சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியாளர் கார்ல் பாட்டம்ஸ் கூறுகையில், ‘இதுபோன்ற வால் நட்சத்திரங்களை கண்டுபிடிப்பது உண்மையிலேயே மிகவும் சிக்கலானது. இதற்கு தீவிர முயற்சியும், அந்த வால் நட்சத்திரத்தை தொடர்ந்து ஆராய்வதும் மிகவும் முக்கியம். இப்படிப்பட்ட கண்டுபிடிப்புக்களால் வானில் உலாவும் வால் நட்சத்திரங் க ளையும், சூரியனில் இருந்து பிரிந்து விழுந்த சூரிய குடும்பத்தை சேர்ந்த சிறு நட்சத்திர கூறுகளையும் அறிய முடியும்’ என்றார்.

No comments:
Post a Comment