Monday, 19 November 2012

கடல் வாழ் உயிரினங்கள் பற்றிய அறிவு மனிதனிடம் மிக குறைவாகவே உள்ளது : நியூசிலாந்து ஆய்வாளர்கள்

நியூசிலாந்து கடல் ஆய்வாளர்கள் இணைந்து சமீபத்தில் மேற்கொண்ட சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி ஒன்றின் போது வியப்பான தகவலை வெளியிட்டுள்ளனர்.
அதாவது கடலில் வாழும் தாவரங்கள் மற்று உயிரினங்கள் பற்றிய அறிவு இன்றைய மனிதனிடம் 1/3 பங்கே உள்ளது எனவும் கடல் உயிரினங்கள் பற்றி இன்னும் அதிகளவு மனிதன் கற்க வேண்டியுள்ளது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

உயிரியல் பாடத்திட்டத்தில் சமீபத்தில் சேர்க்கப் பட்ட கல்வியின் படி இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதாவது உயிரியலில் விளக்கப்பட்டுள்ள 226 000 உயிரினங்கள் மற்றும் விளக்கப் படவுள்ள 72 000 உயிரினங்கள் உட்பட சுமார் 1 மில்லியன் உயிரினங்கள் உலகம் முழுதும் கடலுக்கடியில் வாழ்கின்றன.

மிக அரிதான மற்றும் அழகிய கடல் வாழ் உயிரினங்களைக் கொண்டுள்ள நியூசிலாந்தின் கடல் பரப்பில் ஆய்வு செய்து வரும் கடலியலாளர்கள் மேலே கூறப்பட்ட எண்ணிக்கையுடன் மேலும் 20 000 கடல் உயிரிகளை கடந்த 10 வருடங்களுக்குள் கண்டுபிடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து 21 ஆம் நூற்றாண்டே இதுவரை கடல் வாழ் உயிரினங்களை அதிகம் கண்டுபிடித்த நூற்றாண்டாகும் என நியூசிலாந்தின் அவுக்லாந்து பல்கலைக்கழகத்தின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஆய்வின் பொருட்டு உலகி அதி சிறந்த 120 நிபுணர்கள் பணியாற்றியுள்ளனர். இதற்கென கடலில் வாழும் உயிரினங்களான பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, பூச்சிகள், மற்றும் பெரிய தாவரங்கள் ஆகியவற்றை வகைப் படுத்தி ஆராய்ந்துள்ளனர். உலகெங்கும் பரந்து வாழும் கடல் வாழ் உயிரினங்களை வகைப் படுத்தும் பணியில் 32 நாடுகளைச் சேர்ந்த 300 விஞ்ஞானிகளின் திறந்த பாவனைக்கான ஆன்லைன் தகவல் களஞ்சியம் பயன்படுத்தப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment