Tuesday, 31 July 2012

கீழக்கரை அரசு மருத்துவமனையில் பிரசவம் உள்ளிட்ட மருத்துவ பணிகளுக்கு புதிய உபகரணங்களுடன் பெண் மருத்துவரும் நியமனம்!


ப‌ட‌ விள‌க்க‌ம்:- சென்ற‌ ஜ‌ன‌வ‌ரி மாத‌ம் கீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னைக்கு அமைச்ச‌ர் சுந்த‌ர்ராஜ‌ன் வ‌ருகை த‌ந்து ஆய்வு செய்தார்.அப்போது அளித்த‌ பேட்டியில் பெண் ம‌ருத்துவ‌ர் விரைவில் நிய‌மிக்க‌ப்ப‌டுவார் என‌ அறிவித்திருந்தார்.


கீழ‌க்கரை அரசு மருத்துவமனையில் க‌ட‌ந்த‌ ப‌ல‌ ஆண்டுக‌ளாக‌ பெண் ம‌ருத்துவ‌ர் இல்லை என்ற‌ நிலை இருந்து வ‌ந்த‌து கீழ‌க்க‌ரை ம‌ற்றும் அத‌ன் சுற்று வ‌ட்டார‌ ப‌குதிக‌ளில் உள்ளோர் பிரசவம் உள்ளிட்டவைகளுக்கு ராம‌நாத‌புர‌ம் அர‌சு ம‌ருத்துவ‌ம‌னை சென்று சிகிச்சை பெறும் சூழ்நிலை நில‌விய‌து.

இத‌னால் நீண்ட‌கால‌மாக‌ பெண் டாக்ட‌ர் நிய‌மிக்க‌ வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வ‌ந்த‌ன‌ர்.பல்வேறு தரப்பினரும் இதற்காக முயற்சியை மேற்கொண்டு வந்தனர்.இந்த‌ கோரிக்கையை ஏற்ற‌ அதிமுக‌ அர‌சு கீழ‌க்க‌ரைக்கு பெண் டாக்ட‌ரை நிய‌மித்துள்ளத்து.இத‌ன் இப்ப‌குதியில் உள்ள‌ தாய்மார்கள் கீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் பிரச‌வ‌த்திற்கான‌ சிகிச்சையை பெற்று கொள்ள‌ வ‌ச‌தி ஏற்ப‌ட்டுள்ள‌து.


இது குறித்து கீழ‌க்க‌ரை அர‌சு த‌லைமை ம‌ருத்துவ‌ர் ராஜ்மோக‌ன் கூறிய‌தாவ‌து,

கீழ‌க்க‌ரை ம‌க்க‌ளின் ந‌ல‌னை க‌ருத்தில் கொண்டு த‌ற்போதைய‌ அர‌சான‌து பிர‌ச‌வ‌ம் பார்ப்ப‌த‌ற்கு தேவையான‌ உப‌க‌ர‌ண‌ங்க‌ள்(ஸ்கேன்) உள்ப‌ட‌ அனைத்தையும் கீழ‌க்க‌ரை ம‌ருத்துவ‌ம‌னைக்கு வ‌ழ‌ங்கிய‌துட‌ன் பெண் ம‌ருத்துவ‌ர்(முத்தமிழ‌ர‌சி) ஒருவ‌ரையும் நிய‌ம‌ன‌ம் செய்துள்ள‌து.மேலும் குழ‌ந்தைக‌ள் ம‌ருத்துவ‌ர்க‌ள் இருவ‌ரை நிய‌ம‌ன‌ம் செய்துள்ள‌து.

கீழ‌க்க‌ரை,மாய‌குள‌ம்,ஏர்வாடி,காஞ்சிர‌ங்குடி உள்ளிட்ட‌ பகுதிகளை சேர்ந்த‌ ம‌க்க‌ளில் தேவையான‌வ‌ர் இங்குள்ள‌ ம‌ருத்துவ‌ வ‌ச‌திக‌ளை ப‌ய‌ன் ப‌டுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.மேலும் பிர‌ச‌வ‌த்திற்கு அவ‌ச‌ர‌ உத‌விக்கு 04567 - 244551 என்ற‌ எண்னில் தொட‌ர்பு கொள்ளலாம் என்றார். பேட்டியின் போது ம‌ருத்துவ‌ர்க‌ள் அசின்,ஜ‌வாஹிர் ஹுசைன்,முத்த‌மிழ‌ர‌சி ஆகியோர் உட‌னிருந்த‌ன‌ர்.

ஜனவரி மாதம் அமைச்சர் சுந்தர்ராஜன் கீழக்கரை அரசு மருத்துவமனை வந்திருந்த போது விரைவில் பெண் மருத்துவர் நியமிக்கபடுவார் என அறிவித்தார் அதன் படி நியமனம் செய்யப்படுள்ளது குறிப்பிடதக்கது பார்க்க செய்தி :-http://keelakaraitimes.blogspot.com/2012/01/blog-post_10.html
நீண்ட கால கோரிக்கையான பெண் ம‌ருத்துவ‌ நியமன‌த்திற்க்காக‌ முய‌ற்சித்த‌ அனைவ‌ருக்கும் நியமனம் செய்த‌ த‌மிழ‌க‌ அர‌சிற்கும் பொதும‌க்க‌ள் சார்பில் சமூக ஆர்வலர் நெய்னார் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்த‌ன‌ர்.

காரில் 'ஓடி' வந்த மாரதான் வீரர், பெண் உருவில் வந்த ஆண் வீரர்.. ஒலிம்பிக் மோசடிகள்

பெங்களூர்: கடந்த பல ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் போது, மோசடி செய்து பதக்கம் வென்ற பலர் சிக்கி உள்ளனர். ஊக்க மருந்து பயன்படுத்தல், ஆள்மாறாட்டம், பாலின மாறாட்டம் போன்ற மோசடிகளின் மூலம் பதக்கம் வென்றவர்களிடம் பதக்கங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன.
லண்டன் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. லண்டன் ஒலிம்பிக் போட்டி துவங்குவதற்கு முன்பே ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில் 107 பேர் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஆனால் ஒலிம்பிக் போட்டியில் ஊக்க மருந்து பயன்படுத்துவது மட்டுமே மோசடியாக இருந்தது என்று கூற முடியாது. பல முறைகளில் மோசடிகள் செய்து வீரர்களும், வீராங்கனைகளும் பதக்கங்களை வென்றுள்ளனர். அதன்பிறகு அவை கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து பதக்கங்கள் பறிக்கப்பட்டுள்ளது.
ரன்னிங்கில் கன்னிங்:
கடந்த 1904ம் ஆண்டு செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்றது. இதில் அமெரிக்க வீரர் பிரிட் லார்ஸ் போட்டியில் மாரத்தான் போட்டியி்ல் கலந்து கொண்டார். போட்டியின் முடிவில் உலக சாதனை படைத்த லார்ஸ் தங்கப்பதக்கம் வென்றார்.
ஆனால் இது குறித்து விசாரித்த போது, போட்டியின் மொத்தம் ஓட்டத்தூரத்தில் இவர் 9 மைல்கள் மட்டும் ஓடிவிட்டு, இடைப்பட்ட 11 மைல்களை காரில் பயணித்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது.
பாலின குளறுபடி:
கடந்த 1932 மற்றும் 1936 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டவர் ஸ்டானிஸ்லாவா வாலஸிவிக்ஸ். போலாந்தை சேர்ந்த இவர் 1932 லாஸ் ஏஞ்சில்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் 100 மீட்டர் பெண்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட ஸ்டானிஸ்லாவா தங்கப்பதக்கம் வென்றார்.
அதேபோல கடந்த 1936ம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். கடந்த 1930களில் இவர் பங்கேற்ற சர்வதேச போட்டிகளில் 18 உலக சாதனைகளை செய்தார். சர்வதேச அளவில் ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்த இவர், கடந்த 1980ம் ஆண்டு இறந்தார். அப்போது அவருக்கு நடைபெற்ற பிரேத பரிசோதனையின் போது, இவருக்கு ஆண் பிறப்புறுப்பு இருந்தது தெரியவந்தது.
'ஷாக்' கொடுத்த வீரர்:
கடந்த 1976 கனடா ஒலிம்பிக் போட்டியில் பென்டதலான் போட்டி நடைபெற்றது. இதில் ரஷ்ய வீரர் போரிஸ் ஒனிஸ்சின்கோ பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். பென்டதலான் போட்டியில் தட்டு ஏறிதல், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், ஈட்டி ஏறிதல், கத்தி சண்டை, தடை தாண்டி ஓடுதல் என்று மொத்தம் 5 போட்டிகள் நடைபெறும்.
இதில் வாள் சண்டையின் போது அதிரடியாக ஆடியாக போரிஸ் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றார். இந்த நிலையில் இவரது வாள் மீது சந்தேகமடைந்த இங்கிலாந்து அணியினர், ஒலிம்பிக் போட்டி ஒருங்கிணைப்பாளர்களிடம் புகார் அளித்தனர். இதனால் இவரது வாளுக்கு பதிலாக புதிய வாள் கொடுக்கப்பட்டது.
அப்போது போரிஸ் தோல்வி அடைந்தார். போரிஸின் வெற்றி பயன்படுத்தப்பட்ட வாளை பரிசோதித்த போது, அதில் மின்சாரம் வரும் வகையில் சுவிட்ச் உடன் கூடிய ஓயர் இணைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஷாக் கொடுத்த போரிஸின் தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது.
ஆள்மாற்றாட்டம்:
கடந்த 1984ம் ஆண்டு லாஸ் ஏஞ்சில்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் நீளம் தாண்டுதல் போட்டியில் யூர்டோ ரிகா நாட்டை சேர்ந்த மேட்லைன் டி ஜிசஸ் கலந்து கொண்டார். அதே ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் ரிலே ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள இருந்தார். ஆனால் நீளம் தாண்டுதல் போட்டியில் காயமடைந்த அவர், அவரது இரட்டை பிறவியான சகோதரி மார்க்ரேட்டை, 400 மீட்டர் ரிலே ஓட்டப்பந்தயத்தில் களமிறங்க செய்தார்.
இதில் பதக்கம் வென்ற பிறகு கண்டுபிடிக்கப்பட்டதால், யூர்டோ ரிகா அணி, இறுதிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்டது.
ஊக்க மருந்து ஜான்சன்:
கடந்த 1988ம் ஆண்டு சீயோல் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்க வீரர் பென் ஜான்சன் கலந்து கொண்டார். இதில் படுவேகமாக ஓடிய ஜான்சன், 9.79 நிமிடத்தில் இலக்கை எட்டி, புதிய உலக சாதனையும், தங்கப்பதக்கதையும் வென்றார்.
ஆனால் அதன்பிறகு நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் ஜான்சன் ஸ்டிராய்டு என்ற ஊக்க மருந்து பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது தங்கப்பதக்கம் மற்றும் சாதனைகள் ரத்து செய்யப்பட்டது.

Monday, 30 July 2012

கீழக்கரையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் தனியார் வாகனங்களை ஆய்வு செய்ய கோரிக்கை!



www.keelakaraitimes.com

சென்னையில் பள்ளி சிறுமி ஸ்ருதி பள்ளி வாகன ஓட்டையிலிருந்து விழுந்து உயிரழந்த பரிதாப சம்பவம் நடைபெற்றது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ப‌ள்ளி வாக‌ன‌ங்க‌ளை ம‌ட்டுமே ஆய்வு செய்ய‌ப்ப‌டும் நிலையில் கீழ‌க்க‌ரையில் ப‌ள்ளி வாக‌ன‌ங்க‌ளை விட‌ த‌னியார் வாட‌கை வாக‌ன‌ங்க‌ள் தான் குழ‌ந்தைக‌ளை அதிக‌ அளவில் ப‌ள்ளிக்கு அழைத்து செல்கின்ற‌ன‌ர்.என‌வே த‌னியார் வாக‌ன‌ங்களையும் ஆய்வு செய்ய‌ வேண்டும் என்று கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

இது குறித்து கீழ‌க்கரையை சேர்ந்த‌ ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர் முச‌ம்மில் கூறுகையில்,

கீழ‌க்க‌ரையில் அதிக‌ அளவில் ஆம்னி வாக‌ன‌ங்க‌ளில் ப‌ள்ளி குழ‌ந்தைகளை மாத வாடகை அடிப்படையில் அழைத்து செல்கின்ற‌ன‌ர்.இவ‌ற்றில் ப‌ல வாடகைக்கு இயக்க முறையான‌ அனுமதி பெறவில்லை மேலும் சில‌ருக்கு இதில் ஓட்டுந‌ர் லைசென்ஸ் இல்லை.கூடுதல் வாடகைக்க்காக அதிக அளவில் ப‌ள்ளி குழ‌ந்தைக‌ளை புளி மூட்டை போல் அடைத்து ஏற்றி செல்கின்ற‌னர்.புத்தக பைகளை அதிக அளவில் மேற்கூரையில் ஏற்றுவதால் வளைவுகளில் கவிழும் ஆபத்து உள்ளது மேலும் தெருக்க‌ளிலும்,வ‌ளைவுக‌ளிலும் அசுர‌ வேக‌த்தில் செல‌வதால் அடிக்க‌டி சிறு சிறு விப‌த்துக‌ளும் ஏற்ப‌டுகின்ற‌ன‌.என‌வே அரசு அதிகாரிகள் ப‌ள்ளி வாக‌ன‌ங்க‌ளை ம‌ட்டும் ஆய்வு செய்வ‌தோடு நிறுத்தி விடாம‌ல் த‌னியார் வாக‌ன‌ங்க‌ளையும் ஆய்வு செய்ய‌ வேண்டும். ப‌ள்ளி நாட்க‌ளில் காலை 7.30 ம‌ணியிலிருந்து 9.00 ம‌ணி வ‌ரை அதிகாரிக‌ள் ப‌ல‌ குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்

வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் காலூன்றுவதன் பின்னணியில் சீனா?

இடா நகர்: வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் காலூன்ற சீனா உதவி வருவதாக அருணாசலப் பிரதேசத்தில் அண்மையில் கைது செய்ய மூன்று மாவோயிஸ்ட் இயக்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.
அசாமில் அண்மையில் சில மாவோயிஸ்டுகள் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களை வைத்து அருணாசலப் பிரதேசத்தில் சில நாட்களுக்கு முன்பு அசாம் ரைபிள்ஸ் படையினரும் சிறப்பு புலனாய்வுக் குழுவினரும் தீவிர தேடுதல் நடவடிக்கையை முடுக்கிவிட்டனர். அப்போது நிபெஞ்யோதி செதியா, டோடோங் நியோக் மற்றும் ஜிந்து செதாய் ஆகிய மூன்று மாவோயிஸ்டுகள் பிடிபட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது மாவோயிஸ்டுகள் வடகிழக்கு மாநிலத்தில் காலூன்றுவதற்கு நிதி உதவி மற்றும் ஆயுதங்களை சீனா வழங்குவதுடன் ஆயுதப் பயிற்சிகளையும் சீனா, மியான்மர் எல்லையோரத்தில் வழங்கி வருகிறது எனவும் கூறியுள்ளனர்.
மேலும் இந்த 3 பேரிடமும் 7 சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டு அவை தடவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சிம் கார்டுகள் மூலம் கூடுதல் தகவல் ஏதும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் மூவருக்கும் கம்தாபூர் விடுதலை முன்னணி என்ற வடகிழக்கு மாநில தீவிரவாத அமைப்புடன் தொடர்பிருந்ததும் தெரியவந்துள்ளது. இதேபோல் வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்டு அமைப்புக்கு தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் சிலருக்கு சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் வனப்பகுதியில் பயிற்சி கொடுப்பதும் அம்பலமாகியுள்ளது

அழகிய படம்

Sunday, 29 July 2012

ரசிகர்களைப் பார்க்கும்போது ஒரு கடன்காரனைப் போல கூச்சத்தோடு ஓடி ஒளிகிறேன்…- சூப்பர் ஸ்டார் பேச்சு!


சென்னை: என்னை மீண்டும் இங்கே இத்தனை சக்தியோடு நிற்க வைத்திருப்பது உங்களின் பேரன்புதான். இந்த அன்பை எப்படி திருப்பித் தரப் போகிறேன் என்று தெரியவில்லை. அதனால்தான் மக்களைச் சந்திக்காமல், ஒரு பெரிய கடன்காரனைப் போல கூச்சத்தோடு ஒளிந்து ஒளிந்து வாழ்கிறேன், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
சிவாஜிகணேசன் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு நாயகனாக அறிமுகமாகும் கும்கி படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு திடீரென வந்தார் ரஜினி.
பிரபு மகன் விக்ரம் பிரபுவை வாழ்த்தி ரஜினி பேசியதுதான், வழக்கம் போல விழாவின் உச்சமாக அமைந்தது.
ரஜினியின் முழுப் பேச்சு:
பத்மஸ்ரீ, உலகநாயகன், என் நண்பர், நான் முன்பே சொன்னதுபோல என் கலையுலக அண்ணா கமல்ஹாஸன் அவர்களே, அருமை நண்பர் சத்யராஜ் அவர்களே, தயாரிப்பாளர் லிங்குசாமி அவர்களே, இயக்குநர் பிரபு சாலமன் அவர்களே, அருமை சகோதரர் பிரபு அவர்களே… என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களே…
இப்போதெல்லாம் நான் எந்த விழாக்கள், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை. ஒரு நிகழ்ச்சிக்கு போய்விட்டு இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்லாவிட்டால் வருத்தப்படுவார்கள். சினிமாவில் எல்லோரும் எனக்கு நண்பர்கள். எதிரியே கிடையாது. எனக்கு நான்தான் எதிரி.
ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்குப் போக வேண்டும் என்று ஒப்புக் கொண்டால், அந்த நிகழ்ச்சி முடியும்வரை அதே சிந்தனையில் டென்ஷனாக இருப்பேன். எந்த விஷயத்திலும் அப்படித்தான்.
இன்னொன்று, உடலில் முழுமையான எதிர்ப்பு சக்தி திரும்பும்வரை விழாக்களில் பங்கேற்க வேண்டாம் என  டாக்டர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.
நடிகர் பிரபு சில மாதங்களுக்கு முன் இந்த விழாவுக்கு என்னை அழைத்தபோது வர இயலாது என்றுதான் கூறினேன். ஆனால் நேற்று பிரபு எனது வீட்டுக்கு நேரில் வந்து அழைப்பிதழை கொடுத்துவிட்டுப் போனதாகச் சொன்னார்கள்.
நான் அவருக்குப் போன் செய்து, என்னால விழாவுக்கு வரமுடியலியேன்னு வருத்தமா இருக்கு. நீங்க அழைப்பிதழ் கொடுத்திருக்கீங்க. எனக்கு மனசுக்கு சங்கடமா இருக்கு… என்று கூறினேன். ‘உங்களுக்கு அழைப்பிதழ் தருவது என் கடமை.. விழாவுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் ஆசீர்வாதம் இருந்தால் போதும்’ என்றார்.

எனக்கு இரவெல்லாம் தூக்கமில்லை. யோசித்துப் பார்த்தேன். சிவாஜி வீட்டு விழா. நாம போகாம இருக்கிறது சரியில்ல… என்ற முடிவு செய்து, பிரபுவுக்கு மட்டும் காலையில் போன் செய்து, நான் விழாவுக்கு வருகிறேன் என்றேன். வந்து விட்டேன்.
சிங்கப்பூர் மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்றபோது கமல் என்னை பார்க்க வந்திருந்தார். டாக்டர்கள் சந்திக்க விடாததால் வருத்தத்தோடு திரும்பினார்.
ரஜினியைப் பார்க்க நான் சிங்கப்பூர் போயும், பார்க்க அனுமதிக்கவில்லையே என்று வெளியில் சொல்ல முடியாத சூழலாகிவிட்டதே என கமல் என்னிடம் பின்னர் வருத்தத்துடன் கூறினார். ஐயாம் சாரி கமல்… நான் சென்னை திரும்பியதும் நானே உங்களை வந்து சந்திக்கிறேன் என்று தெரிவித்தேன். சென்னை திரும்பியதும் முதலில் அவரிடம்தான் பேசினேன்.
கமல் மிகச் சிறந்த கலைஞர். அவருக்கு ஹாலிவுட் படத்தை நடித்து இயக்க கமலுக்கு அழைப்பு வந்துள்ளது. அதுவும் சாதாரண தயாரிப்பாளரிடமிருந்தல்ல… லார்ட் ஆப் தி ரிங்ஸ் படத்தைத் தயாரித்த நிறுவனத்திடமிருந்து. இதன் மூலம் தமிழ் திரையுலகுக்கும், இந்தியாவுக்கும் கமல் பெருமை சேர்த்துள்ளார்.
என் ரசிகர்கள், என் மீது அன்பு செலுத்தி பிரார்த்தனை செய்த மக்களைப் பற்றி நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர்ளை நான் சந்திக்கக் கூட இல்லை. அது எனக்கு மிகுந்த சங்கடமாக உள்ளது.
காரணம் அவர்களுக்கு ஒரு கடன்காரனை போலத்தான் நான் இருக்கிறேன். ரசிகர்கள் மற்றும் தமிழக மக்கள் பிரார்த்தனையால்தான் நான் குணம் அடைந்தேன். ஆனால் அவர்களுக்கு நான் எதுவுமே செய்யவில்லை. கடன் வாங்கி விட்டு திருப்பி கொடுக்க முடியாதவனைப் போல கூச்சத்தோடு ஒதுங்கி நிற்கிறேன். இந்த அன்பை நான் எப்படி திருப்பிச் செலுத்தப் போகிறேன் என்று தெரியவில்லை.

என்னைப் போன்ற கலைஞர்கள், பர்மார்மன்ஸ் – படங்களில் நடித்து அவர்களைத் திருப்திப்படுத்துவதன் மூலம்தான் ஓரளவு இதை திருப்பிச் செலுத்த முடியும். அப்படி நான் சில படங்களைச் செய்ய, அதற்கான உடல் பலம் தேவை. நான் ஒரு இயக்குநர் அல்ல, எழுத்தாளர் அல்ல. நடிகன். உடல்தான் அதற்கு மூலம். எனவே அதில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
இளைய தலைமுறை நடிகர்களுக்கு நான் ஒன்றைச் சொல்வேன். வருடத்துக்கு ஒரு படம் மட்டும் நடிப்பது என்று இல்லாமல் இரண்டு, மூன்று படங்களில் நடிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு படம் நன்றாக போகாவிட்டாலும், மற்றவை கை கொடுக்கும். இல்லாவிட்டால், ஒரு படம் சரியாகப் போகாத டென்ஷன், மன அழுத்தம் காரணமாக அடுத்த படத்தில் கவனம் சிதறிவிடும்.
நான் சினிமாவுக்கு வந்தபோது…
நான் சினிமாவுக்கு வந்தபோது, எங்க அப்பா சந்தோஷப்பட்டார். ஆனால், விக்ரம் பிரபு சினிமாவுக்கு வருகிறார் என்றதும் பிரபுவுக்கு கவலை வந்திருக்கும். பையன் அப்பா பெயரை காப்பாற்ற வேண்டுமே… நம் பெயரைக் காப்பாற்ற வேண்டுமே என்று கவலைப்பட்டிருப்பார். ஒரு சாதனையாளரின் மகனாக இருப்பது ரொம்ப பொறுப்பு மிகுந்தது.
விக்ரம் பிரபுவுக்கு பயம் இருக்கலாம். கவலை இருக்கக்கூடாது. அந்த பயத்தை போக்க பிரபு சாலமன் மாதிரி டைரக்டர்கள் இருக்கிறார்கள்.  இந்த கலையுலகமே கை கொடுக்கும்.
காலரைத் தூக்கிவிட்டா…
சிவாஜி பற்றி எல்லோரும் நிறைய சொன்னார்கள். எனக்கும் சொல்ல நிறைய இருக்கிறது. ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். படையப்பா ஷூட்டிங்கின்போது நிறைய நேரம் அவருடன்தான் இருந்தேன்.
ஒரு முறை அவர் என்னிடம் சொன்னார்…”நீ புத்திசாலிடா.. உன்னால காலரைத் தூக்கிவிட்டு நடக்க முடியும். ஆனால், காலரைத் தூக்கினா பட்டன் கழன்டுடும்னு உனக்குத் தெரிஞ்சிருக்கு. அதான் அப்படியே இருக்கேன்”னு சொன்னார். அதைத்தான் விக்ரம் பிரபுவுக்கும் சொல்லிக் கொள்கிறேன்…,” என்றார்.
-என்வழி ஸ்பெஷல்

நான் சாகத் தயார்.. ஆனா நீங்க என்ன சாகவிட மாட்டீங்கன்னு தெரியும் – அடுத்த நாடகத்தில் இறங்கிய ஹஸாரே!

நாடகத்தில் இறங்கிய ஹஸாரே!

டெல்லி: லோக்பால் நாடகத்தின் அடுத்த பாகத்தை அரங்கேற்றி வருகின்றனர் அன்னா ஹஸாரேயும் அவரது கோஷ்டியினரும். கடந்த நான்கு தினங்களாக யாராலும் கண்டுகொள்ளப்படாததால், ஞாயிற்றுக்கிழமை தானே களமிறங்கினார் ஹஸாரே.
‘இந்த முறை நான் சாகத் தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கு என்னை மக்கள் விடமாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது,” அவர் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் ஊழலுக்கு எதிரான, வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றக்கோரி அன்னாஹசாரேவும் அவரது கோஷ்டினரும் கோரி வருகின்றனர்.
ஆரம்பத்தில் இவருக்கு பலத்த ஆதரவு இருந்தது. ஆனால் இவருடன் உள்ளவர்களின் சுயநல நாடகங்கள், அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் வெளிநாட்டு கார்ப்பொரேட்டுகளிடம் இவர்கள் வாங்கிக் குவித்த நிதி உதவி, சிறப்பு விருந்தினர் என்ற போர்வையில் தொண்டு நிறுவனங்களிடம் அல்பத்தனமாக அடித்த ரொக்கம்.. என எல்லாம் புரிய ஆரம்பித்த பிறகு மக்கள் ஆதரவு சுத்தமாகவே இல்லாமல் போனது.
அரசு நிறைவேற்றுவதாகக் கூறும் லோக்பால் மசோதாவை ஏற்க மறுத்துள்ள ஹஸாரே கோஷ்டி, அரசின் மொத்த கட்டுப்பாடும் தங்கள் வசம் இருப்பது போன்ற லோக்பால்தான் வேண்டும் என்று கூறிவருகின்றனர். குடிமைப் பணிகள் அனைத்தையும் தங்கள் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முனைகிறது.
மூன்றாவது முறை மும்பையில் இந்த கோஷ்டி உண்ணாவிரதம் இருந்தபோது, மைதானமே ஈயோடிக் கொண்டிருந்தது. வெறுத்துப் போய் மூன்று நாள்களில் உண்ணாவிரதத்தை வாபஸ் வாங்கிக் கொண்டு போன இந்த கோஷ்டி, இப்போதுதான் மீண்டும் திரும்பியுள்ளது.
‘கல்யாண வீட்டில் இழவு கொட்டும்’ முயற்சியை பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற நாளில் உண்ணாவிரதத்தை அரங்கேற்றினர். ஆனால் ஒருவரும் சீந்தவில்லை.
அப்போது, முதலில் ஹஸாரே உண்ணாவிரதத்துக்கு வரவில்லை.  ஐபிஎல் சியர் லீடர் மாதிரி வந்து உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்.
‘ஏன் வயதான ஹஸாரேவை துன்புறுத்துகிறார்கள். அவர்கள் கோஷ்டியில் உள்ள கேஜ்ரிவாலோ, கிரண் பேடியோ, பிரசாந்த் பூஷணோ உண்ணாவிரதமிருக்க வேண்டியதுதானே’, என்ற கேள்வியைத் தவிர்க்க, முதலில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் உண்ணாவிரதம் என அறிவித்தனர்.
மிக சொற்ப கூட்டம்தான் வந்தது. உடனே, தங்களை காங்கிரஸ் தொண்டர்களை விட்டு தாக்கப் பார்ப்பவதாக புரளி கிளப்பிவிட்டார்கள். அப்படியும் ஒருவரும் வரக்காணோம்.
இப்படியே போனால், ரொம்பத்தான் காமெடி பீஸாகிவிடுவோம் என நினைத்த ஹஸாரே கோஷ்டி, பாபா ராம்தேவின் தயவை நாட, அவர் தனது அடியாள் படையுடன் மைதானத்துக்கு வந்து, கொஞ்சம் குரளி வித்தை காட்டிப் பார்த்தார்!
அப்படியும் கூட மீடியாவின் கவனம் இந்தக் குழுவினர் பக்கம் திரும்பவே இல்லை. இந்த நிலையில், அரசுக்கு தான் விதித்த 4 நாட்கள் கெடு முடிந்துவிட்டதாகவும், அப்படியும் அரசு கண்டுகொள்ளவே இல்லையே என்ற புலம்பலுடன், தானே களத்தில் குதிப்பதாக அறிவித்துள்ளார் ஹஸாரே.
டெல்லி ஜந்தர் மந்தர் மைதான மேடையில் அமர்ந்து காலை 10.30 மணிக்கு உண்ணா விரதத்தைத் தொடங்கினார் (இடையிடையே தண்ணீர், குளுக்கோஸ் உண்டு). ஹஸாரேவும் களத்தில் குதித்ததால், விடுமுறை நாளில் இந்த நாடகத்தை வேடிக்கைப் பார்க்க கொஞ்சம் கூடுதலாக ஆட்கள் வந்திருந்தனர்.
பிரதமர் வீட்டு முன்பு…
இந்த நிலையில் திடீரென, எல்லோரும் ரேஸ் கோர்ஸ் சாலை செல்லுங்கள். அங்குதான் இனி போராட்டம் நடக்க வேண்டும் என்று ஹஸாரே கூற, சில ஆதரவாளர்கள் அந்த சாலையில் உள்ள பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
சென்னையில் சிதம்பரம் வீட்டு முன்பு போராட்டம் நடத்த முயன்ற சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நான் சாவேன்… ஆனா மாட்டேன்!

தனது உண்ணாவிரத சீரியலின் இந்த பாகம் குறித்து ஹஸாரே பேசுகையில், “நான் இந்த முறை நிஜமாகவே சாகும் வரை உண்ணாவிரதமிருக்கப் போகிறேன். ஆனால் நான் சாக விரும்பினாலும் என்னை அந்த நிலைக்கு போக விடமாட்டார்கள் மக்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. லோக்பால் கிடைக்கும் வரை நீங்கள் என்னை சாகவிட மாட்டீர்கள்,” என்றார்.
உங்கள் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவில்லையே என்றபோது, கூடும் கூட்டத்தை வைத்து போராட்டத்தை எடை போடக் கூடாது என்றார். ஆனால் இதற்குமுன் நடந்த உண்ணாவிரதங்களில் கூடிய மக்கள் கூட்டத்தைக் காட்டித்தான் அரசை ஹஸாரே கோஷ்டி மிரட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தற்போது குடியரசுத் தலைவர் ஆகிவிட்ட பிரணாப் முகர்ஜி உள்பட 15 மத்திய அமைச்சர்கள் மீது குற்றப்புகார் கூறிய ஹஸாரே கோஷ்டியினர், தங்களிடம் உள்ள அதற்கான ஆதாரங்களை வெளியிடப் போவதாகக் கூறினர். ஆனால் பின்னர் அவற்றை பிரதமருக்கும், சோனியாவுக்கும் மட்டும் அனுப்பிவிட்டதாகக் கூறி அமைதியாகிவிட்டனர்!

Saturday, 28 July 2012

அசாமில் அமைதி திரும்புகிறது முகாமில் 4 லட்சம் பேர் தஞ்சம்



கவுகாத்தி : அசாமில் அமைதி திரும்பினாலும், 4 லட்சம் மக்கள் வீடிழந்து, முகாம்களில் உள்ளனர். அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டம் ஜெயபூரில் வங்கதேச முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்குள்ள போடோ பழங்குடியினத்தை சேர்ந்த மாணவர் அணித்தலைவர்கள் இரண்டு பேர் மீது கடந்த வாரம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.  கலவரம் துப்ரி, சிராங், உதல்குரி ஆகிய பக்கத்து மாவட்டங்களுக்கும் பரவியது. 100 வீடுகள் கொளுத்தப்பட்டன. வீடுகளை விட்டு வெளியேறிய 4 லட்சம்  பேர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். கலவரத்தை அடக்க ராணுவம் குவிக்கப்பட்டு ரோந்து சுற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கவுகாத்தியில் நேற்று பேட்டியளித்த முதல்வர் தருண் கோகய் கூறியதாவது: அசாமில் ஏற்பட்ட கலவரத்தால் அரசு மோசமான நெருக்கடியை சந்தித்தது. கலவரத்தை தடுக்க அரசு சரியான நேரத்தில் நடவடிக்கைகள் மேற்கொண்டது. கலவரத்தில் 45 பேர் கொல்லப்பட்டனர். 4 லட்சம் மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

நிலைமையை பிரதமர் மன்மோகன் சிங் நாளை பார்வையிடுகிறார். மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. கோக்ரஜாரில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. ரயில்போக்குவரத்தும் தொடங்கியுள்ளது.
இவ்வாறு தருண் கோகய் கூறினார்.

மத்திய அரசு மீது புகார்: கலவரம் ஏற்பட்டதுமே ராணுவம் வரவேண்டும் என்று விரும்பினோம். ஆனால், தாமதமாகத்தான் ராணுவம் வந்தது. தாமதத்துக்கு சில நடைமுறை விதிகளும் காரணம். இவ்வாறு தருண் கோகய் கூறினார்.

த்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து



புதுடெல்லி : உலகின் மிகப்பெரிய திறந்தவெளி கழிப்பிடமாக இந்திய ரயில்வே திகழ்கிறது என்று மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
சுற்றுச்சூழலை பாதிக்காத நவீன கழிப்பறைகளை தயாரிக்க ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் மத்திய குடிநீர் துறை டெல்லியில் ஒப்பந்தம் செய்தது. இதற்கான விழாவில் கலந்து கொண்ட மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

உலகிலேயே திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. திறந்தவெளி கழிப்பிடங்களின்  தலைநகராக இந்தியா திகழ்கிறது. உலக அளவில் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவோரில் 60 சதவீதம் பேர் இந்தியர்கள். இது வெட்க கேடான விஷயம். அடுத்த 10 ஆண்டில் அனைவருக்கும் கழிப்பறை வசதி செய்து தர அரசு திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக 300 கிராம பஞ்சாயத்துகளில்  அடுத்த 2 ஆண்டில் சுற்றுச்சூழலை பாதிக்காத நவீன பயோ கழிப்பறைகள் அமைக்கப்படும். மொத்தம் 1 லட்சம் கழிப்பறைகள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு ரூ.150 கோடி செலவாகும்.

உலகிலேயே மிகப்பெரிய திறந்தவெளி கழிப்பிடமாக இந்திய ரயில்வே திகழ்கிறது. ரயில்களில் தினமும் 1.1 கோடி பேர் பயணம் செய்கிறார்கள். ரயில்களில் உள்ள கழிப்பறைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படு வதோடு, ரயில் தண்டவாளம், ஸ்லீப்பர் கட்டைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க ரயில்களில் உள்ள கழிப்பறைகளை மாற்றி நவீன பயோ கழிப்பறைகள் அமைக்க வேண்டும். தற்போதுள்ள 50 ஆயிரம் ரயில் பெட்டிகளிலும் பயோ கழிப்பறைகளை நிறுவ தயாராக உள்ளோம். மொத்தம் 500 கோடி செலவாகும். இதில் 50 சதவீதத்தை என் அமைச்சகம் ஏற்கும். இது தவிர 15 லட்சம் கழிப்பறைகளில் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் முறை உள்ளது. இதையும் மாற்ற வேண்டும் என்றார்.

Friday, 27 July 2012

கீழக்கரையில் 12ஆண்டுகளாக தொடரும் ராதகிருஸ்ணின் ரமலான் மாத நோன்பு !



ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், லேத் பட்டறை நடத்தி வரும்
தங்கம் ராதாகிருஷ்ணன், 12 ஆண்டுகளாக ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து வருகிறார். கீழக்கரையை சேர்ந்தவர் தங்கம் ராதாகிருஷ்ணன்(65). இவர், தபால் அலுவலக‌ தெருவில் சீனியப்பா ஹோட்டல் அருகில் லேத் பட்டறை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஆறு பிள்ளைகள் உள்ளனர். சமூக நல சேவை இயக்கத்தின் செயலாளராக பணியாற்றி வரும் இவர் பல்வேறு நலப்பணிகளை ஆற்றி வருகிறார்.

இவர் கூறியதாவது:
நண்பர் ஒருவரிடம் கடந்த 2000ல் ரமலான் நோன்பு கடைபிடிப்பது தொடர்பாக போட்டி ஏற்பட்டது.போட்டிக்காக‌ அந்த ஆண்டு நோன்பு நூற்றேன்.மனதளவில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது அதன் பின் கடந்த 12 ஆண்டுகளாக‌ தொடர்ந்து ஆண்டுதோறும் முழுமையாக நோன்பு கடை பிடித்து வருகிறேன். இதற்காக அதிகாலையில், எனக்காக எனது மனைவி உணவு தயார் செய்து தருகிறார். எனது பட்டறையில், முஸ்லிம் நண்பர்களுடன் இணைந்து நோன்பு திறந்து வருகிறேன்.நோன்பு இருப்பதால் அதன் மகிமையை என்னால் உணர முடிகிறது. இதில் மன திருப்தி ஏற்படுகிறது .உடல் ஆரோக்கியம் பெறுகிறது.இம்மாதம் நோன்பு நோற்கும் அனைத்து இஸ்லாமியா சகோதரர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

இது குறித்து கீழக்கரையை சேர்ந்த நல்ல இப்ராகிம் என்பவர் கூறுகையில் ,த‌ங‌க‌ம் ராதாகிருஸ்ண‌ன் ப‌ல‌ ஆண்டு காலமாக அனைத்து ச‌மூக‌ ம‌க்க‌ளிட‌மும் ச‌கோத‌ர‌ பாச‌த்துட‌ன் ப‌ழ‌குப‌வ‌ர். மத நல்லிணக்கத்துக்காக பாடுபடுபவர் என்றார்

Wednesday, 25 July 2012

காற்றாலைகளும், காணாமல் போன குருவிகளும்!

திருநெல்வேலி-கன்னியாகுமரி இடையே பயணித்தால் இருபுறமும் உயர்ந்து நிற்கும் ஆயிரக்கணக்கான காற்றாலைகள் நம்மை பரவசத்தில் ஆழ்த்தும்.
இந்த காற்றாலைகள் தான் தமிழகத்தின் மின்சார நிலைமை கொஞ்சமாவது சொல்லிக் கொள்ளும்படி இருக்க முக்கியக் காரணம்.
நாட்டிலேயே இவ்வளவு அதிகமான காற்றாலைகள் எந்தப் பகுதியிலும் இல்லை, காற்றாலைகள் மூலம் இவ்வளவு மின்சாரத்தை எந்த மாநிலமும் தயாரிப்பதும் இல்லை.
இந்தியாவில் மொத்தமாக உற்பத்தியாகும் காற்றாலை மின் உற்பத்தியில் பாதி அளவு இந்த இரு மாவட்டங்களில் தான் உற்பத்தியாகிறது. இந்த இரு மாவட்ட காற்றாலைகளின் நிறுவு திறன் 6,500 மெகாவாட் ஆகும். ஆனால், காற்றின் அளவைப் பொறுத்து உற்பத்தி ஏறி, இறங்கும்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து வீசும் காற்றை பயன்படுத்தி இயக்கப்படும் இந்தக் காற்றாலைகளால் இதுவரை உள்ளூர் மக்களுக்கு பெரிய அளவில் லாபம் ஏதும் இல்லை என்பதே உண்மை.
காற்றாலைகளுக்காக இடம் தர விளை நிலங்கள் விற்கப்படுவதால் நிலத்தின் விலை உயர்ந்ததும், உள்ளூரில் மின்சாரத் தடை இல்லாததும் மட்டுமே இப் பகுதிக்கு ஏற்பட்ட லாபம். அதே போல காற்றாலைகளை நிறுவுதல், பராமரிப்பு என கிரேன் சர்வீஸ், எலெக்ட்ரீசியன்கள் என சில ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன.
ஆனால், ஒவ்வொரு காற்றாலையும் சுமார் ரூ. 2 கோடி செலவில் நிறுவப்பட்டு வரும் நிலையில், இங்கு செய்யப்பட்டுள்ள முதலீடு சில லட்சம் கோடிகளைத் தாண்டும். ஆனால், இந்த அளவுக்கு செய்யப்பட்ட பெரும் முதலீடு அந்த அளவுக்கு வேலைவாய்ப்புகளையோ அல்லது இந்தப் பகுதியில் வளர்ச்சியையோ கொண்டு வந்துவிட்டதா என்றால் அது தான் இல்லை.
நிலங்களை விற்றவர்கள் லாபம் அடைந்ததோடு, சில ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்ததோடு அது நின்றுவிட்டது. இந்தப் பகுதியின் ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கோ எந்தப் பயனும் இல்லை.
இந் நிலையில் தான், காற்றாலைகளுக்கு வரி விதிக்க அந்தப் பகுதிகளின் பஞ்சாயத்துகளும் உள்ளாட்சி அமைப்புகளும் முடிவு செய்துள்ளன. இதுவரை இந்தக் காற்றாலைகள் வரி ஏதும் செலுத்தாமல் இருந்து வந்தன.
அத்தோடு ஒவ்வொரு காற்றாலைக்கும் மத்திய அரசு மானியம் தந்ததால் அதை நிறுவியவர்களுக்கு லாபமும், சில வரிச் சலுகைகளும் கிடைத்து வந்தன.
இப்போது காற்றாலைகள் லோக்கல் பஞ்சாயத்துக்கு வரி செலுத்த வேண்டும் என்றதும் அதற்கு காற்றாலை உரிமையாளர்களிடமிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதை எதிர்த்து காற்றாலை மின் உற்பத்தி சங்கங்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளதோடு முதல்வர் ஜெயலலிதாவுக்கும் மனு கொடுத்துள்ளன.
இந்த வரி காரணமாக ஒரு மெகாவாட் மின்சாரத்தின் விலை ரூ. 8 முதல் ரூ. 10 லட்சம் உயரும் என்று காற்றாலை மின் உற்பத்தி சங்கம் கூறுகிறது. வழக்கமாக ஒரு காற்றாலையை நிறுவும் நிறுவனம், அதில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தை மத்திய மின் கிரிட்டில் ஏற்றிவிடும். அதே நேரத்தில் தனக்குத் தேவையான மின்சாரத்தை நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் பெற்றுக் கொள்ளும். நிறுவனம் பயன்படுத்திய மின்சாரத்தின் அளவு குறைவாக இருந்தால் அரசு அவர்களுக்கு கட்டணம் தரும். அதே நேரத்தில் தங்களது காற்றாலை தயாரித்த மின்சாரத்தை விட அதிகமான மின்சாரத்தை அந்த நிறுவனம் பயன்படுத்தினால், அதற்குரிய கட்டணத்தை அவர்கள் அரசுக்கு செலுத்துவர். இது தான் பொதுவான நடைமுறை.
இந் நிலையில், தான் புதிதாக வரி போட்டால் ஒரு மெகாவாட் மின்சாரத்தின் விலை ரூ. 8 முதல் ரூ. 10 லட்சம் உயரும் என்று காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், காற்றாலைகள் வந்தததால் தங்களது ஊரில் விவசாயமே நின்றிவிட்டதாகவும் இங்கு காற்றாலைகளைத் தவிர வேறு தொழிலே இல்லை என்றும் கூறுகின்றன ஆரல்வாய்மொழி, ராதாபுரம் பஞ்சாயத்துகள்.
மரங்களை அழித்து, பறவைகளின் எண்ணிக்கையைக் குறைத்து, தங்களது விவசாய வருவாயையும் அழித்த காற்றாலைகள் தான் வரி செலுத்தி தங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு செய்ய வேண்டும் என்பது இந்த பஞ்சாயத்துகளின் கோரிக்கை.

Tuesday, 24 July 2012

30 வருடங்களாக அன்னமிடும் கைகள்!

AddThis Social Bookmark Button

சென்னை மேற்கு முகப்பேரில் பிரம்மாண்ட பெருமாள் கோயில் ஒன்று உள்ளது.
அந்த கோயிலுக்கு அருகில் ஒரு சைவ மெஸ் இருக்கிறது. அங்கே சாப்பிட்டுப் பாருங்கள், வீட்டில் அம்மா கையில் சாப்பிட்ட மாதிரியே இருக்கும். இப்படித்தான் வாய்வழியாகவே இந்த மெஸ் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. அதோடு அன்று முதல் இன்று வரை அனைத்து தரப்பினரையும் சுண்டியிழுத்து வருகிறது.

மெஸ்-க்கு இன்று வரை ஒரு பெயர் இல்லை. பெருமாள் கோயில் பக்கத்து மெஸ்தான் இதன் அடையாளம். குளிருக்கும் வெயிலுக்கும் ஏற்றமாதிரியான குளுகுளு கூரைக்குக் கீழ்தான் உணவு சாப்பிடும் இடம். இதன் உரிமையாளர், சமையல் காரர், பரிமாறுபவர், கல்லாக் கட்டுபவர் என்று எல்லாமே ஒன் மேன் ஆர்மி போல ஒன் மேன் ஷோதான். அந்த ஒன் மேன் நபர்தான் கிருபானந்தன்.

இவரின் நடவடிக்கைகள் வாடிக்கையாளர்களுக்குப் பழகிப் போன ஒன்று என்றாலும் புதிதாக செல்பவர்களுக்கு கொஞ்சம் பயமாகக் கூட இருக்கும். வாடிக்கையாளர்கள் அனாவசியமாக ஏன், அவசியமாகக் கூட வாயைத் திறக்கமாட்டார்கள். அவ்வளவு அமைதியாக சாப்பிடும் வேலை மட்டுமே நடக்கும். ஒருவேளை இது கிருபானந்தனின் அருமையான உணவு ருசிக்கு அவர்கள் தரும் மரியாதையோ என்னவோ...
 
காலை 9 மணிக்குள் காலை உணவு முடிந்து விடும், மதியம் 2 மணிக்குள் மதிய உணவு முடிந்து விடும். அதற்குமேல் கிருபானந்தனிடம் பேச்சுக்கெல்லாம் இடமில்லை. வெளியில் கைகழுவ என்று வைத்திருக்கும் தண்ணீர் நிரம்பிய பக்கெட், உள்ளே வந்தால் சாப்பாடு தயார். அது உள்ளே சென்றுவிட்டால் சாப்படு காலி அவ்வளவுதான்.

மதிய உணவுக்கு இதெல்லாம் தயார் என்று போர்டெல்லாம் கிடையாது. வீட்டில் எப்படி உணவுகள் சஸ்பென்சாக இருக்குமோ, அதேசமயம் ருசியாக இருக்குமோ அப்படி ஒரு உணவு உள்ளே சென்றுவிட்டால் உங்களுக்கு உத்திரவாதம். அவ்வளவுதான். இன்று என்ன சாப்பாடு என்றெல்லாம் கூட நீங்கள் கிருபானந்தனிடம் கேட்டுவிட முடியாது. நீங்கள் உட்கார்ந்தால் பொறுமையாக ஒரு விருந்தினருக்குப் பரிமாறுவது போல அன்புடன் பரிமாறுவார்.

உங்கள் இலையில் எது இல்லை என்று நீங்கள் கேட்பதற்குள் அவர் அந்த இல்லாத காய்கறியையோ, சாம்பாரையோ கையில் வைத்துக் கொண்டு நிற்பார். 30 வருடங்களாக மெஸ் நடத்திவருகிற நேரத்தில் இதுவரை ஒரு பொரியல், அவியல் இந்த கடைசி இலைக்கு இல்லை என்கிற நிலை வந்ததில்லை. உணவு தீரும் வரை சாப்பிட வரும் அனைவருக்கும் இலையில் எல்லாமும் இருக்கும். மற்ற உணவகங்கள் போல நேரமாகிவிட்டது, வெறும் அப்பளம் மட்டும்தான் என்கிற கதை எல்லாம் கிருபானந்தனிடம் கிடையாது. இருந்தால் எல்லாம் இருக்கும், இல்லையானால் எதுவும் இல்லை. இவர் சிரித்து நிறைய வாடிக்கையாளர்கள் பார்த்திருக்க மாட்டார்கள், ஆனால் பரிமாறும்போது இவர் அன்பை உணராதவர்கள் இருக்க மாட்டார்கள். உபசரிப்பில் மனிதர் சாப்பிட வரும் அனைவருக்கும் இன்னொரு அம்மாதான்.

இவர் மனைவி ராதாவும் அப்படித்தான். ஆனால், இவர் பேசியபடி பரிமாறுவார். இவர் முகத்தில் கனிவு சிரிப்பு இரண்டையுமே பார்க்கலாம். கிருபானந்தன் விதிமுறைகளை தனக்குத் தானே கடைப் பிடிப்பவர். பக்கெட் வெளியில் இல்லை, நீங்கள் முன்னமேயே சாப்பிட அமர்ந்து விட்டீர்கள் என்றால், வெளியில் எல்லாம் அனுப்பிவிட மாட்டார். ஆனால், சாப்பாடு தயார் ஆனவுடனதான், இலை போடுவார், லைட், மின்விசிறி எல்லாமே போடுவார். உட்கார்ந்து கொண்டு மின்விசிறி போடுங்கள் என்று சொன்னாலும் கிருபானந்தனிடம் இருந்து பதில் வராது. இப்படி கிருபானந்தனிடம் ஏகப்பட்ட தரமான விஷயங்களை நிச்சயம் நாமும் கடைப் பிடிக்கலாம். சரி, கிருபானந்தன் மெஸில் அப்படி என்னதான் ஸ்பெசல்? இதோ வாடிக்கையாளர்கள் சொல்கிறார்கள்.

"என்னவோ தெரியலை இங்கு சாப்பிட்டால் வீட்டில் சாப்பிட்ட மாதிரியே இருக்கும். சாதம் வீட்டு சாதம் போலவே மிருதுவாக சோடா போன்ற விஷயங்கள் இல்லாமல் ஒரிஜினல் சுவையில் இருக்கும். சாப்பிட்ட திருப்தி இருக்கும். அடுத்த வேலைக்கு சரியான நேரத்தில் வீட்டில் சாப்பிட்டால் ஒருவித ஆரோக்கியப் பசி எடுக்குமே அதுபோல பசி எடுக்கும். அதனால்தான் தேடிவந்து இங்கு சாப்பிடுகிறோம்" என்று சொல்லும் நண்பர்கள் ராஜேஷ், பிரசன்னா இருவருமே ஐ டி யில் வேலை பார்ப்பவர்கள்.

"என்னதான் நிறைய சம்பாதித்தாலும், பெருமைக்கு பெரிய இடங்களில் சாப்பிட்டாலும் காசு போவதும் வியாதி வருவதும்தான் மிச்சம். இங்கு காசும் கம்மி, ஆரோக்கியமும் கிடைக்கிறது" என்பது இவர்கள் இருவரும் கூடுதலாக சொன்ன தகவல்.
  
நக்கீரன், முருகேசன் இருவரும் கம்பெனியில் டர்னர்,பிட்டர் என்று வேலை பார்ப்பவர்கள். இவர்கள் சொல்வது "வீட்டில் இருந்து தனியாக வந்து வேலை பார்க்கிறோம். வெளியில் சாப்பிட்டுக் கட்டுபடியாகாது. அப்படியே கையேந்தி பவன்களில் சாப்பிட்டாலும் ருசி இருக்காது. எங்களை மாதிரி ஆட்களுக்கு இந்த மெஸ் ஒரு வரப் பிரசாதம். விலை ரொம்பக் கம்மி. ஒரு சாப்பாடு 25 ரூபாய்தான். அதுவும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். வேறு எங்கேயாவது இப்படிக் கிடைக்குமா என்று தெரியவில்லை. இதுவரை அப்படி நான் கேள்விப் படவில்லை. முதலில் 20 ரூபாய்தான் இருந்தது. இப்போதுதான் 5 ரூபாய் ஏற்றி இருக்கிறார்கள். உண்மையிலேய இந்த மெஸ் இல்லை என்றால் இந்த சென்னையில் நாங்கள் வேலை பார்க்க முடியாது. இந்த மெஸ்க்கு நாங்கள் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்" என்கிறார்கள்.
    தேவேந்திரன், இவர் கம்பெனி வைத்து நடத்திக் கொண்டிருப்பவர். இவர் வீட்டில் சென்று தினம் சாப்பிட்டுவிட்டு கம்பெனி வரவேண்டும் என்றால், கம்பெனியில் பலவேலைகள் தங்கிப் போய்விடும். இவருக்கும் கைகொடுப்பது இந்த மெஸ்தான். "அப்படியே வீட்டு சாப்பாடுதாங்க. வெளியில் சாப்பிட்டால் தேவையில்லாத மசாலாக்கள் தொந்திரவு கொடுக்கும். சாப்பிடும் போதே உணவில் ஒரு திகட்டல் வரும். சாப்பிட்டு முடித்த பின் ஒரு நெஞ்சு எரிச்சல் வரும். அதெல்லாம் இங்கு சாப்பிட்டால் இருக்கவே இருக்காது. வீட்டு சாப்பாட்டின் தரம் இதை விட வேறென்ன சொல்வது" என்கிறார் இவர்.

இளைய சேகர், இவர் கல்லூரியில் படித்துவிட்டு, வேலை தேடி சென்னை வந்திருக்கிறாராம். இவரும் இந்த மெஸின் வாடிக்கையாளர்."இங்கே சாப்பிட்டுவிட்டு வேலை தேடுவது நிறைய சிக்கனமாக செலவாவது போல இருக்கிறது. இங்கு மதியம் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டால் இரவு சாப்பிடாமல் கூட இருந்து விடலாம். வேலை தேடுபவர்கள் வேறென்ன செய்ய முடியும். இது போல சிக்கன நடவடிக்கைகளை கடைப் பிடித்தால்தான் இங்கு குப்பைக் கொட்டி வேலை கிடைக்கும் வரைப் போராட முடியும்" என்கிறார்.

கிருபானந்தன் நடத்தும் இந்த ஒரு மெஸ் எத்தனை பேருக்கு எப்படியெல்லாம் பயனுள்ளதாக இருக்கிறது பாருங்கள். மேலும் இங்கு சமைப்பது கிருபாநந்தனின் 83 வயதான அம்மா ஜெயலக்ஷ்மிதானாம் கூடவே மனைவி ராதாவும், கிருபானந்தனும் அம்மாவுக்கு உதவியாக இருப்பார்களாம்.

ஜெயலக்ஷ்மி அம்மா, கிருபானந்தன், ராதா இவர்கள் மூன்று பேரின் 30 வருட அன்னமிடும் கைகளுக்கு என்ன பரிசு அளிக்கலாம்? இலவசமாக விளம்பரம் கொடுப்பதாக நினைத்துவிடாதீர்கள். ஹோட்டல்களில் வீட்டு சாப்பாடு போல் கிடைப்பது மிக குறைவு. உங்கள் ஊரில், சாப்பாட்டுக்கு எது பெஸ்டு ஹோட்டல்? எனக்கேட்டால், சட்டென மனதுக்குள் ஒரு ஹோட்டல் தோன்றுமல்லவா? அப்படித்தான், இந்த மெஸ்ஸை சுற்றியிருக்கும் பல நூற்றுக்கணக்கானோருக்கு இது ஸ்பெஷல். நீங்கள், சென்னை வாசியா? ஒருமுறை இங்கு வந்து சாப்பிட்டு பாருங்கள். இப்பதிவின் நோக்கம் புரியும்.
- 4தமிழ்மீடியாவுக்காக செவ்வியும் படங்களும் எழில்செல்வி

Sunday, 22 July 2012

நாட்டின் பொருளாதாரம் முன்னேற தங்கம் வாங்காதீர்கள் சைக்கிளில் போங்க...



மும்பை : நாட்டின் பொருளாதாரம் முன்னேறுவதற்கு மக்கள் தங்கத்தின் மீதான மோகத்தை விடவேண்டும். பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி துணை கவர்னர் சக்கரவர்த்தி அறிவுரை கூறுகிறார். ரிசர்வ் வங்கியின் வாராந்திர கூட்டத்தில் துணை கவர்னர் சக்கரவர்த்தி பேசியதாவது: நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.2% ஆக அதிகரித்துள்ளது. 1991ல் பொருளாதார பின்னடைவு காலத்தில் கூட 3% ஆகவே இருந்தது. இதற்கு காரணம், நமது இறக்குமதி செலவு அதிகரித்து, ஏற்றுமதி வருவாய் குறைந்ததுதான்.

 தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்குத்தான் நாம் அதிகமாக செலவிடுகிறோம். உலக தங்க கவுன்சில் புள்ளிவிவரப்படி, 2011,2012 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி செலவு 6000 கோடி டாலராக(969டன்) உயர்ந்துள்ளது. அரசு புள்ளி விவரப்படி, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு 15,560 கோடி டாலராக உள்ளது.  எனவே, இந்த இரண்டின் இறக்குமதியையும் குறைத்து விட்டால் நமது பொருளாதார பிரச்னை தீர்ந்து விடும். இறக்குமதி தங்கம் அவ்வளவும் நகைக்காகவோ, கோயில் காணிக்கையாகவோ போகிறது.

இன்னும் ஏன் பழங்கால வழக்கப்படி தங்கத்தின் மீது மக்கள் மோகம் கொண்டிருக்கிறார்கள்? இதிலிருந்து மக்கள் மனநிலை மாற வேண்டும். அதே போல், மும்பை போன்ற நெருக்கடியான நகரங்களில் சைக்கிளில் போனால் வசதி, உடம்புக்கும் நல்லது என்று பிரபலப்படுத்த வேண்டும். தங்கத்தை விட்டு வேறு வகைகளில் சேமியுங்கள். பெட்ரோல் பயன்பாட்டை குறையுங்கள். நாட்டின் பொருளாதாரம் முன்னேறி விடும். இவ்வாறு சக்கரவர்த்தி பேசினார்.

நோன்பு : பகலே இரவாகி, இரவே பகலான விநோதம்!

நோன்பு : பகலே இரவாகி, இரவே பகலான விநோதம்!


ஆம்...சவுதியை பொறுத்த வரை ரமலான் வந்து விட்டால் பகல் இரவாகி விடும். இரவு பகலாகி விடும். 80 சதமான நபர்களுக்கு வேலை நேரமும் மாற்றலாகி விடும். என்னுடைய வேலை நேரமும் மாறி விட்டது. நோன்பு வைப்பதற்காக நடு நிசியில் 3 மணிக்கு சாப்பிட்டு விட்டு 4 மணிக்கெல்லாம் தொழுகைக்கு பள்ளிக்கு சென்று விடுவேன். தொழுது முடித்து அருமையான தூக்கம். அதன் பிறகு 11 மணிக்கு எழும்பி குளித்து விட்டு மதிய தொழுகைக்காக பள்ளிக்கு செல்வேன். அதன் பிறகு அலுவலக வேலை ஆரம்பம். 3 மணி 30 நிமிடத்தில் வேலை முடிந்து விடும். பிறகு மாலை நேரத் தொழுகை. தொழுகை முடிந்து கணிணி முன்னால் உட்கார்ந்து சிறிது டைம் பாஸ். அதன் பிறகு நோன்பு திறக்க தயாராக வேண்டும். நோன்பு திறந்தவுடன் தொழுது விட்டு பிறகு ஒரு குட்டி தூக்கம்.

பிறகு இரவு தொழுகை. தொழுது முடித்து இரவு 10 மணிக்கு வேலை ஆரம்பம். நடுநிசி 2 மணிக்கு வேலை முடியும். பிறகு சிறிது ஓய்வெடுத்து விட்டு சாப்பாடு. இது ரமலானின் எனது தொடர் வேலை. நோன்பின் களைப்பே தெரியாமல் பலருக்கு வேலை அமைந்திருக்கும். எனவேதான் நான் அதிகம் ரமலானில் சவுதியில் இருக்க பிரியப்படுவேன்.



ரமலான் வந்து விட்டால் பார்ட்டிகளுக்கும் குறைவிருக்காது. நோன்பு திறக்க தங்களது உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து சிறந்த உணவு பதார்த்தங்களோடு பார்ட்டிகள் அமைந்திருக்கும். அவற்றில் ஒன்று தான் இந்த காணொளியில் நீங்கள் பார்ப்பது.





நோன்பு வைக்க முடியாத வயோதிகர்கள், நோயாளிகள் அதற்கு பகரமாக ஒரு நபருக்கு உணவு அளிக்கும்படி குர்ஆன் கூறுவதால் பலர் தங்களின் வாகனங்களில் 100, 200 பாக்கெட்டுகள் பிரியாணி மற்றும் பழங்கள் ஜூஸ் வகையறாக்களையும் சமோசாக்களையும் ஏற்றிக் கொண்டு பள்ளிகளில் தந்து விட்டு செல்வர். அரசாங்கமும் பள்ளிகளுக்கு நோன்பாளிகளுக்காக சாப்பாட்டை அனுப்பி வைக்கும். இது பல பள்ளிகளிலும் டென்ட்களிலும் நடக்கும். அதற்கு முன்னால் அழகிய முறையில் இஸ்லாமிய போதனைகள் நடைபெறும். மேலும் சவுதி இளைஞர்கள் உணவுகளை பரிமாறுவதில் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்பர். சவுதி பெண்கள் வீடுகளில் சமைத்த உணவு பதார்த்தங்களை பள்ளிக்கு அனுப்பி வைப்பர். பள்ளிகள் அனைத்தும் தொழுகையாளிகளால் நிரம்பி வழியும். இரவு தொழுகையில் பெண்களும் பங்கு பெற அனைத்து பள்ளிகளிலும் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். பெண்களும் ஆர்வமுடன் பள்ளிக்கு வருவர். தற்போது தமிழகத்திலும் பெண்கள் இரவு தொழுகைக்கு பள்ளிக்கு வருவது அதிகரித்திருக்கிறது.

எங்கு நல்லது நடந்தாலும் அங்கு மூக்கை நுழைக்கும் அமெரிக்கா 'இது போன்ற டென்ட்களில் தீவிரவாத பிரசாரம் நடக்கிறது. எனவே இதனை தடை செய்யுங்கள்" என்று மன்னரிடம் முன்பு கோரிக்கை வைத்தது. அதற்கான ஆதாரத்தை மன்னர் கேட்டார். ஆதாரம் தர இயலாது மூக்குடைபட்டனர் அமெரிக்க அதிகாரிகள்.

"நீங்கள் ஆதாரம் தரவில்லையாதலால் டென்ட்களை தடை செய்யவும் முடியாது" என்று மன்னர் மறுத்து விட்டார். எந்த நேரமும் இசையும், குடியுமாக இருக்கும் பல பிலிப்பைன் நாட்டவர் இஸ்லாத்தை ஏற்றவுடன் எவ்வளவு அழகிய வாழ்க்கை முறையை பேணுகிறார்கள் என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.




ரமலானில் மெக்கா சென்று உம்ரா செய்தால் நன்மைகள் அதிகம் என்பதனால் இந்த மாதத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும். அந்த நேரங்களில் கஃபாவை பார்ப்பதே ஒரு கண்கொள்ளாக் காட்சி. இந்த காணொளியில் அதையும் பாருங்கள்.

பல இந்து கிறித்தவ நண்பர்கள் தாங்களாகவே விரும்பி ரமலான் மாதங்களில் இஸ்லாமியர்களோடு சேர்ந்து நோன்பிருப்பர். அது அவர்களுக்கு பெரும் மன நிறைவை கொடுப்பதை நானே நேரில் பார்த்திருக்கிறேன். நோன்பில்லாத மாற்று மத சகோதரர்கள் யாரும் சொல்லாமலேயே நோன்பாளிகளுக்கு முன்னால் சாப்பிட மாட்டார்கள். 95 சதவீத மக்கள் நோன்பிருப்பதால் அந்த சூழ்நிலையே அவர்களை மறைவாக சென்று சாப்பிட சொல்லும். சிறு குழந்தைகள் நோன்பிருக்கும் பொது அவர்களுக்கு முன்னால் பெரியவர்கள் சாப்பிட்டால் குழந்தைகளின் மனது பாதிக்கப்படும் என்பதாலேயே நோன்பாளிகளுக்கு முன்னால் சாப்பிட வெண்டாம் என்று மாற்று மத நண்பர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். பகல் நேரங்களில் உணவகங்கள் அனேகமாக ஆட்கள் இல்லாததால் பூட்டப்பட்டிருக்கும். இரவில் விடிய விடிய வியாபாரம்தான்.



கஃபாவை சுற்றி இரவில் ஹெலிகாப்டரில் இருந்து எடுக்கப்பட்ட அழகிய காணொளி!



சவுதியில் நோன்பு திறக்க வைக்கும் பதார்த்தங்களில் சமூசா முக்கிய இடம் பிடிக்கும். சேமியானும் முக்கிய இடத்தை பிடிக்கும். அது தயாரிக்கும் முறையை விளக்குகிறது இந்த காணொளி.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! அறிவீனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் நான் நோன்பாளி! என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையைவிடச் சிறந்ததாகும்! (மேலும்) எனக்காக நோன்பாளி தமது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டுவிடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்! (என்று அல்லாஹ் கூறுகிறான்)
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.1894

ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது என்றால், இந்த புனிதமிக்க ரமழான் மாதத்தில் தான் திருகுர்ஆன் அருளப்பட்டதால் இந்த மாதம் சிறப்பு பெறுகிறது. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் இம்மாதம் சிறப்பு மிக்க மாதமாகிறது. நன்மை, தீமைகளை பிரித்து நேர்வழி எது என்பதை பிரித்து காட்டும் அருள் மறை திருகுர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் இரவில் அருளப்பட்டது. ஏனைய நபிமார்களுக்கும் ரமழான் மாதத்தில் தான் அல்லாஹ்(ஜல்) வேதங்களை வழங்கினான். நபி மூஸா(அலை) அவர்களுக்கு தவ்ராத் வேதம் ரமழான் பிறை 13ல் அருளப்பட்டது. நபி ஈஸா(அலை) அவர்களுக்கு இன்ஜில் வேதம் ரமழான் பிறை 25ல் அருளப்பட்டது. நபி இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு ரமழான் ஆரம்ப இரவில் சுஹ்புகள் அருளப்பட்டது. நமது தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு ரமழான் மாதம் லைலத்துல் கத்ர் இரவில் திருகுர்ஆன் அருளப்பட்டது. நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் சிறிது சிறிது பாகங்களாக திருகுர்ஆனை வல்ல அல்லாஹ் அருளினான். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : அஹமது, இப்னு கதீர்

எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்திலிருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான்.

அறிவிப்பவர் : ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி

எல்லோருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.

பர்மிய முஸ்லிம்களின் பதற வைக்கும் எதிர்காலம்!

பர்மிய முஸ்லிம்களின் பதற வைக்கும் எதிர்காலம்!

பர்மியர்களோடு நான் தபூக்கில் இருந்த போது நிறைய பழகி இருக்கிறேன். சொந்த தொழில் செய்வதில் மிகுந்த அக்கறை உள்ளவர்கள். மியான்மரில் இவர்களுக்கு கொடுக்கப்படும் கொடுமைகளை கருத்தில் கொண்டு அகதிகள் அந்தஸ்தில் பல லட்சம் பேர்களை சவுதி அரசு பராமரித்து வருகிறது. அவர்களுக்கு அகதிகள் என்ற தனி அட்டை ஒன்றை கொடுத்து பர்மாவில் பிரச்னைகள் முடியும் வரை சவுதியில் குடும்பத்தோடு தங்க அனுமதிக்கப்பட்டள்ளனர். அந்த வகையில் பல பர்மிய நண்பர்களை பெற்றுள்ளேன்.



சுமார் 15 இலட்சம் முஸ்லி்ம்கள் பர்மாவில் வாழ்கிறார்கள். இதில் பத்து இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பர்மியர்கள். மீதமானவர்கள் வங்காளிகள். இந்தியாவில் இருந்து சென்றவர்கள். தமக்கென தனியான மொழி கலாச்சாரங்களை கொண்டவர்கள். அராபிய மன்னன் அரகனினால் பலாத்காரமாக நாடுகடத்தப்பட்ட அரபு முஸ்லிம் வர்த்தகர்கள் தங்கள் வணிக கலம் நடுக்கடலில் விபத்துக்கு உள்ளானதனால் பர்மாவின் பக்கம் வந்து சேர்ந்தனர். பர்மிய பெண்களை மணந்து அங்கேயே கீழைத்தேய வர்த்தகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இது நடந்தது 9ம் நுற்றாண்டுகளில். மொகாலாய படைகள் தங்கள் எல்லைகளை விரித்த போது இவர்கள் அவர்களிற்கான வர்த்தக முகவர்களாக செயற்பட்டனர். இதன் பலனாக அதிகாரம் மிக்கவர்களாகவும், பணபலமிக்கவர்களாகவும் திகழ்ந்தனர். இது தான் இன்றைய தினத்தில் பெரிய தவறாக பார்க்கப்படுகிறது. பர்மாவை காட்டி கொடுத்தவர்கள். பர்மாவின் செல்வங்களை அரேபியாவிற்கு சுரண்டி விற்றவர்கள், பர்மிய பெண்களை கற்பழித்தவர்கள் பலாத்காரமாக மணந்தவர்கள் போன்ற அரசியல் குற்றச்சாட்டுகளே இன்றைய இனவாத சங்காரத்தின் ஊற்றுவாய்கள்.

1950 களில் ரோகீங்கியா பிரதேசம் தனி பிரதேசமாக இனங்காணப்பட்டது. இதில் இந்திய வங்காள இனத்தவர்கள் ஒன்று சேர்ந்து காணப்பட்டனர். அராஜகமான தங்கள் இராணுவ அரசியல் இருப்பினை பேணிக்கொள்ள பர்மிய ஜெனரல்கள் ரோகீங்கிய முஸ்லிம்களிற்கு எதிரான இனவாத அரசியலை அதன் செயல்நெறிகளில் சுயமாக செயற்பட அனுமதியளித்தனர். பிக்குகள் சொல்லும் திசையில் சுடுமாறு போலிஸாரையும் பிக்குகள் காட்டும் பக்கத்தில் குண்டெறியுமாறு இராணுவத்தையும் பணித்தார்கள் இந்த பாசிஷ இராணுவ ஆட்சியாளர்கள்.

பர்மியா மலாய் முஸ்லிம்கள், பர்மிய சீன முஸ்லிம்கள் போன்றவர்கள் கவனமாக தவிர்க்கப்ட்டு இந்த ரோகீங்கிய முஸ்லிம்கள் மட்டும் இலக்கு வைக்கப்பட்டனர்.


(இந்த குழந்தைகள் அந்த பாவிகளை என்ன செய்தது? என்ன குற்றத்திற்காக இவர்கள் கொல்லப்பட்டனர்?)

கூட்டாக பள்ளிவாசலில் தொழ முடியாது. பள்ளிவாசல் கட்ட முடியாது. மதரஸா நடத்த முடியாது.

பெரிய வியாபார முயற்சிகளில் ஈடுபட முடியாது.

இளைஞர்கள் போலிஸில் பதிவு செய்ய வேண்டும்.

மியன்மாரின் இரசாயன கழிவுகள் இவர்கள் பகுதியிலேயே கொட்டப்படுகின்றன.

கடல்களில் மீன் பிடிக்க முடியாது.

1 ஏக்கரிற்கு மேல் விவசாயநிலங்களை வைத்திருக்க முடியாது.

அவசர பந்தோபஸ்து சட்டத்தின் கீழ் 5 வருடங்கள் தடுத்து வைக்க முடியும்.

பெண்கள் அவர்கள் சம்மதம் இன்றி கட்டாய குடும்ப கட்டுப்ப்பாட்டிற்கு உள்ளாக்கப்படுவர்.

கற்பழிக்கப்பட்டாலோ, படுகொலை செய்யப்பட்டாலோ வைத்திய சான்றிதழை பெறுவது குற்றம்.


(இந்த கோரத்தை செய்தது மனிதர்கள்தானா? அல்ல மிருகங்கள்)

இராணுவ அதிகாரிகள் நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் நினைத்த பெண்களை ட்ரக்குகளில் அள்ளி செல்வர். அது தொடர்பில் பொலிஸில் முறையிட்டால் முறைப்பாட்டாளர் பின்னர் பிணமாக்கபடுவார்.

பல ரோஹியான்கள் மியன்மார் இராணுவத்தில் கூலி வேலை செய்கிறார்கள். இவர்கள் ஆயுட்கால கொத்தடிமைகள்.


(சோகத்திலெல்லாம் பெரிய சோகம் சொந்த மண்ணை பிரியும் சோகமல்லவா?)

இவர்கள் இப்போது கண்ட இடத்தில் நாயை சுடுவது போல சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். வகைதொகையின்றி கற்பழிக்கப்படுகிறார்கள். உலக மீடியாக்கள் செய்தியாக சிலதை சொல்லி பலதை விட்டு விடுகின்றன. இலங்கை விவகாரத்தில் ஜெனீவாவரை சென்று ஆட்டம் போடும் அமெரிக்கா இங்கு நடுநிலை என்கிறது. அரபு நாடுகள் மௌனிக்கின்றன.




16.March.1997 - மண்டலாயின் முதல் மஸ்ஜித் தாக்கப்படுகிறது. 2000 க்கும் மேற்பட்ட பவுத்த கூட்டம் பள்ளிவாசலினுள் புகுந்து குரான் பிரதிகளை பற்ற வைக்கிறது. மஸ்ஜிதை நெருப்பிடுகிறது. பின்னர் உடனடியாக அந்த கூட்டம் முஸ்லிம் வர்த்தக மையங்களை சூறையாடுகிறது. அகப்பட்ட முஸ்லிம்களை போட்டு தாக்குகிறது. ஏன் கொலையும் செய்கிறது. வீடுகள் சூறையாடப்படுகின்றன. இளஞ்சிறுமியர் கற்பழிக்கப் படுகின்றனர். பெண்கள் தீ வைத்து கொளுத்தப்படுகின்றனர். இந்த அநியாயங்களை செய்தவர்கள் மியன்மாரிய இராணுவத்தினர் அல்ல. அங்குள்ள புத்த பிக்குகள். அவர்களே இந்த கொடூரங்களுக்கு தலைமை தாங்கினர். 100 பிக்குகள் கைது செய்ய்ப்பட்டு தேசிய வீரர்களாக பின்னர் விடுதலை செய்யப்படுகின்றனர்.


(தொழும் பள்ளி வாசலைக் கூட கொலைகளமாக்கும் பவுத்தர்கள். மற்றுமொரு காத்தான்குடி)

12.February.2001 - இம்முறை கலவரத்திற்கு ஆளான பிரதேசம் சிட்வே, மற்றும் டாவுன்கு. கேக் விற்பனையில் ஈடுபட்ட ஒரு முஸ்லிம் பெண்ணிடம் கேக் வாங்கி சாப்பிட்ட புத்த பிக்குகள் கும்பல் பணம் தருவதற்கு மறுக்கிறது. அவளுடன் அங்க சேஷ்டையில் ஈடுபட முனைகிறது. ஆத்திரமடைந்த பெண் அவர்களை தாக்க முற்படுகிறாள். அவள் உறவினர் உதவிக்கு விரைந்து அவர்களை விரட்டியடிக்கிறார். சில மணி நேர இடைவெளியில் தலைமை நாயக்க தேரர் தலைமையில் பிக்குகள் வந்து கலகம் செய்கின்றனர். அவர்கள் பின்னால் குண்டர்கள் வன்முறையில் ஈடுபட ஆரம்பிக்கின்றனர். பற்றி எரிகிறது. நகரம். கொலை. கொள்ளை. சித்திரவதை. கற்பழிப்பு என எதுவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து முடிக்கிறது கும்பல். 200 முஸ்லிம்கள் வெறித்தனமாக கொல்லப்படுகின்றனர்.


(இந்த உடல்களை எல்லாம் கடலில் கலந்தால் கடலின் நிறம் கூட சிகப்பாக மாறி விடுமே!ரமலானில் நோன்பு வைத்த நிலையில் தாக்கப்பட்ட தாய் முஸ்லிம்கள்.)

15.May.2001 - தபூ பிரதேசம் கொளுந்து விட்டு எரிகிறது. முஸ்லிம்களிற்கு எதிரான துவேஷ பரப்புரைகள் பிக்குகளால் பன்சலைகளில் செய்யப்படுகின்றன. பன்சலை மணியை அடித்தவுடன் மக்கள் திரண்டு பிக்குகளை பாதுகாக்க முஸ்லிம்கள் மீது தாக்குதல் செய்யும் நிகழ்ச்சி நிரல் நாடு முழுதும் பயிற்றுவிக்கப்படுகிறது. தேவையான பொழுதுகளில் பன்சலை மணி அடிக்கப்படுகிறது. Han Tha மஸ்ஜிதுனுள் புகுந்த பவுத்த கூட்டம் அவர்களை அடித்து விரட்டுகிறது. பின்னர் பிக்குகள் கட்டளையிடுகின்றனர். ”முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்த முடியாது” என. அது சட்ட ரீதியற்ற ஆனால் அதிகாரமிக்க கட்டளையாக பர்மாவில் உருப்பெருகிறது.


(பர்மிர்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த அளவு நெருக்கம் என்பதை விவரிக்கும் அந்த கால அராபிய எழுத்துருக்களைக் கொண்ட நாணயங்கள். இஸ்லாத்தின் அடிப்படையான 'ஏக இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. முகமது நபி இறைவனின் தூதராக உள்ளார்கள்' என்ற வாசகம் அந்த நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது)

பர்மிய ஜீன்டா அரசினுள் ஆதிக்கமிக்க சக்தியாக உள்ளவர்கள் தேசியவாத சிந்தனைகொண்டவர்களும், Theravada Buddhism மதவாதிகளுமாவர். இவர்களே இந்த அநியாயங்களின் பின்னணியில் செயற்படுபவர்கள். மதவாதிகளினதும், தேசியவாதிகளினதும், இராணுவத்தினரினதும் ஒரு கூட்டு தாக்குதலையே ரோகீங்கிய முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ளனர்.

2012 June. இராணுவ ஒத்துழைப்புடன் முஸ்லி்ம்களி்ற்கு எதிரான அநியாயங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. கூட்டு கொலை, கூட்டு கற்பழிப்பு, கூட்டு சூறையாடல் என ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் குழுக்களாக இவை நிகழ்த்தி முடிக்கப்படுகின்றன. மீடியாக்கள் உள்நுழைய முடியாத இரும்பு திரைக்கு பின்னால் பல கொலைகளங்கள் உள்ளன.


கொத்து கொத்தாக இங்கே கொல்லப்படுபவர்கள் முஸ்லிம்கள். முஸ்லிம் சகோதரர்கள். முஸ்லிம் சகோதரிகள். பொஸ்னியாவை நினைவிற்கு கொண்டு வரும் கூட்டு கற்பழிப்பிற்கு உள்ளாக்கப்படுபவர்கள் முஸ்லிம் சகோதரிகள். ஆனால் முஸ்லிம் உம்மா வேடிக்கை பார்க்கிறது. எகிப்தின் முர்ஸி பற்றி பெருமிதப்படும் இஹ்வான்கள் ஒரு அறிக்கையுடன் மியன்மாரை மறந்து விட்டனரா? கிலாபா கனவுகானும் ஹிஸ்பு தஹ்ரீர் தோழர்கள் ரத்தத்தினால் நிரம்பும் மியன்மார் பற்றி சிந்திக்க மாட்டார்களா. பேரீத்தம் பழ பெட்டிகளை அனுப்புதாலும், குர்பான் இறைச்சிகளை அனுப்புவதாலும் மியன்மரிற்கு உரியதை செய்து விட்டோம் என அரபு தேசங்கள் நிம்மதியடைய போகின்றனவா?

மியன்மார் என்பது பொஸ்னியாவின் களத்தை விட மோசமானது. ஹேர்ஸிகோவினாவினது களத்தை விட மோசமானது. கொஸாவோ களங்களை விட மோசமானது. ஈழத்து சோகத்தை விட பெரும் சோக மயமானது. இங்கு காஷ்மீரின் கண்ணீர், காஸாவின் பஞ்சம், செச்னியாவின் அவலம், ஆப்கானின் இரத்தம், முள்ளி வாய்க்காலின் கொடூரம், ஈராக்கின் சோகம் என எல்லாமே கலந்து நிற்கிறது. எல்லாம் நடந்து முடிந்த பின் “ த கில்லிங் ஃபீல்ட் ஆஃப் பர்மா” என டாக்குமெண்டரி தயாரிக்க பலர் உள்ளனர். ஆனால் கொல்பவர்களை தடுக்கவோ அல்லது கொல்லப்படுபவர்களை காக்கவோ யாரும் இல்லை. அவர்களுக்கு இறைவனைத் தவிர உதவ கூடியவர்கள் எவரும் இல்லை. அவர்களின் மரண ஓலங்கள் இன்றும் பல நாடுகளைக் கடந்தும் . நெடுந் தொலைவுக்குக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

சில வாரங்கள் முன்பு லண்டன் வந்திருந்த பர்மாவைச்சேர்ந்த நோபல் பரிசு பெற்ற ’’ஆங்க் சான் சூசீ ‘’ கூட ’’ரோகிங்னியா முஸ்லிம்கள் பர்மாவின் நிரந்தர பிரஜைகள் அல்ல’’ என்ற ரீதியில் தனது கருத்தை தெரிவித்தார். மேலும் ரோகிங்னியா முஸ்லிம்களின் படுகொலைகளை அவர் கண்டிக்கவுமில்லை,மாறாக நாட்டில் இனங்களுக்கிடையில் குழப்ப நிலை உருவாகியுள்ளது.மிகவும் நுணுக்கமாக கையாளா வேண்டும்’’ என்றுமே குறிப்பிட்டார். இந்த மக்களுக்கு ஆதரவு கரம் நீட்ட தற்போது உலகில் எந்த அரசும் தயாராக இல்லை.

தற்போதய பர்மிய முஸ்லிம்கள் எந்த அளவு பர்மாவுக்கு சொந்தக்காரர்கள் என்பதை விவரிக்கும் பர்மாவில் புழக்கத்தில் இருந்த இஸ்லாமிய நாணயம்

எனவே தோழர்களே! தோழிகளே! உங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை இந்த மக்களை நோக்கி திருப்பி விடுங்கள். ஜகாத் பணம், ஃபித்ரா பணம், அன்பளிப்பாக கொடுக்க நினைத்த பணம் அனைத்தையும் இந்த ஏழை மக்களின் அடிப்படை தேவைகளை போக்குவதாக இருக்கட்டும். பணம் கொழிக்கும் அரபு செல்வந்தர்கள் தங்களின் செல்வத்திலேயே மித மிஞ்சிய மயக்கத்தில் உள்ளனர். இறைவன் நினைத்தால் ஒரு நொடியில் நிலைமையை தலைகீழாக மாற்றி விடுவான் என்பதை மறந்து வாழ்கின்றனர்.

"சீனா உலகத்தின் தாதா'வாக (வல்லரசு) நடந்து கொள்ள முயன்று வருகிறது. தனது நாட்டின் சக்தியை நிலைநாட்டிக் கொள்ளும் குறுகிய மனப்பான்மையுடன், வடகொரியா, பர்மா போன்ற மோசமான கொடுங்கோல் அரசுகளுக்குத் துணை நிற்கிறது. இந்தியாவும், சீனாவை அப்படியே காப்பி அடிக்க முயல்கிறது' என்கிறார் அமர்த்யா சென்.
"இந்தியா உலகளவில் செல்வாக்கற்ற நாடாக இருந்த காலங்களில் உலக நாடுகளுக்கு ஒழுக்கம் பற்றி பாடம் எடுப்பதிலேயே நேரத்தை கழித்துக் கொண்டிருந்தோம். சீனா அளவிற்கு இல்லையென்றாலும், ஓரளவிற்கு இப்பொழுது ஆற்றல் பெற்றவுடன், ஒழுக்கத்தையும், விழுமியங்களையும் குழிதோண்டிப் புதைத்து விட்டு, நமது பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கிறேம்'' என்கிறார் சென். “உலகின் மனிதாபிமானம் மிக்க தலைவர்களில் ஒருவரான, எனது இந்திய நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங், மியான்மரின் கொலைகார ஆட்சியாளர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, அவர்களுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியுடன் இணைந்து நின்று புகைப்படும் எடுத்துக் கொள்கிறார். இதனைப் பார்க்கும்போது, இந்தியாவின் விசுவாசக் குடிமகனான எனது இதயம் நொறுங்கி விட்டது'' என்று பேசியுள்ளார் அமர்த்யா சென். பர்மாவில் உள்ள கொடுங்கோலாட்சி பற்றியும் அங்கு உள்ள மோசமான மனித உரிமைச் சூழல் பற்றியும் இந்திய மக்களிடம் பொதுக்கருத்து சிறிதும் இல்லை என்கிறார் அமர்த்யா சென்.


வரும் ரமலானில் இந்த மக்களுக்காக அதிகமதிகம் பிரார்த்தனையில் ஈடுபடுவோம். சவுதியில் ஜூம்ஆ பிரசங்கத்தில் சிரிய முஸ்லிம்களுக்காகவும் பர்மிய முஸ்லிம்களுக்காகவும் அதிகமதிகம் பிரார்த்திக்கப்படுகிறது. உங்களின் பிரார்த்தனையில் இவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நம்பிக்கையான நிறுவனங்களை தொடர்பு கொண்டு அந்த மக்களுக்கு உங்களால் ஆன சிறு உதவிகளையும் செய்ய மறக்காதீர்கள்.

பர்மிய முஸ்லிம்களும், ஈழத்து தமிழர்களும், சிரிய முஸ்லிம்களும் தங்களின் சொந்த நாட்டு பிரச்னைகளை சுமுகமாக முடித்து எல்லா வளமும் பெற்று சுகமாக வாழ எல்லோருக்கும் பொதுவான அந்த ஏக இறைவனிடம் இறைஞ்சி இந்த பதிவை முடிக்கிறேன்.

டிஸ்கி: இப்படி ஒரு பதிவை பதியச் சொல்லி வேண்டுகோள் விடுத்த குவைத்தில் உள்ள முபாரக்குக்கும், உடன் லிங்குகளை அனுப்பித் தந்த வாஞ்சூர் அண்ணனுக்கும், கைபர் தளத்துக்கும், விக்கி பீடியாவுக்கும் நன்றிகள்.


மேலும் விபரங்கள் அறிய

http://en.wikipedia.org/wiki/Rohingya_people

Saturday, 21 July 2012

உலக அதிசயங்கள் காண


உலகின் புதிய 7  அதிசயங்கள் போர்ச்சுக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் நடந்த விழாவில் கடந்த 7-7-2007 ல் அறிவிக்கப்பட்டன .

உலக அதிசயம் ஒன்றை பார்ப்பதற்கே  கொடுத்து வைத்திருக்க வேண்டும் . இவ்வேளையில் சாமானிய மக்களும் உலகின் பல்வேறு பகுதிகளை நேரில் பார்த்த அதே களிப்புடன் பார்வையிட இணையத்தில் வசதிகள் உள்ளன .

இங்கே நான் பகிர்ந்துள்ள தளம் வாயிலாக உலகின் புதிய 7  அதிசயங்களையும் 36ஂ கோணத்தில் பார்வையிடலாம் .கிட்டத்தட்ட அதிசய உலகத்திற்கு நேரில் சென்று பார்த்த திருப்தி ஏற்படுகிறது.

நீங்களும் உலக அதிசயங்களை இலவசமாகக் காண இங்கே சுட்டுங்கள்.

கீழக்கரை பகுதியில் புனித ரமலான் நோன்பு துவக்கம் ! - ஏராளமானோர் இரவு நேரத் தொழுகைகளில் பங்கேற்பு

தமிழகத்தின் செய்யாறு என்ற ஊரில் பிறை பார்க்கப்பட்ட தகவல் அடிப்படையாகக் கொண்டு, சென்னையிலுள்ள தமிழ்நாடு தலைமை காஜீ இன்று நோன்பு துவங்குவதை உறுதி செய்தார். இந்த அறிவிப்பின் படி, இன்று (21.07.2012) முதலாவது நோன்பு என்ற‌ அறிவிப்பை கீழக்கரை டவுன் காஜி காதர் பக்‌ஷ் ஹுஸைன் ஸித்தீகி ஆலிம் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பினை தொடர்ந்து கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இன்று முதல் ரமலான் நோன்பு நோற்கப்படுகிறது. மேலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று (20.07.2012) இரவு முதல் பிறையாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



ரமளான் மாதம் துவங்கிய செய்தி தெரிந்ததையடுத்து, கீழக்கரை நகரில் அனைத்து பள்ளிகளிலும் இரவு நேரத் தொழுகைகள் ந‌டைபெற்ற‌து. மிகுந்த எதிர்பார்ப்புடன் ரமலான் நோன்பை வரவேற்கும் அக மகிழ்ச்சியில் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட ஏராளாமானோர் திரளாக இரவு நேர தொழுகையில் க‌ல‌ந்து கொண்ட‌னர்.



கீழக்கரை பகுதி நோன்பு கால அட்டவணை

நம்மை சிந்திக்க தூண்டும் 'சிந்திக்கவும்' இனைய தளத்தின் ஆசிரியர் திரு.யாழினி அவர்கள் கூறிய புனித ரமலான் வாழ்த்து செய்தி உங்கள் பார்வைக்கு

ரமலான் நோன்பு என்பது தன் உடல் வருத்தி ஏழை எளியவரை நினைக்க வைப்பது. ஆண்டாள் திருப்பாவையில் ”மையிட்டெழுதோம், மலரிட்டு யாம் முடியோம், செய்யாதன செய்யோம்,  தீக்குறளை சென்றோதோம்” என்று சொன்னது போல் மனிதனை புனிதனாக்க, புற அழகை ஓரந்தள்ளி, அக அழகை அதிகரிக்க செய்ய கடைபிடிக்கும் நோன்பு என்பது புரிய வந்தது நான் வளைகுடா நாட்டில் வசிக்க தொடங்கிய பின்னரே..


மனித வாழ்க்கையில் அகம், புறம் தூய்மையடைய ஒரு பயிற்சிதான் நோன்பு. நோன்பு நோற்றிருக்கும் நிலையில் தனக்குச் சொந்தமான உணவையே உண்ணக்கூடாது என இறைவன் தடுத்ததால் உண்ணாமல் விலகி இருக்கின்றார்களே இப்பயிற்சி பெற்றவர்கள்? அப்படிப்பட்டவர்கள், "பிறர் பொருளை அநியாயமாக உண்ணாதே'' என இறைவன் தடுத்திருக்கையில் அதைச் செய்வார்களா...?

நோன்பு நோற்றவன் மனைவியுடன் சேரக்கூடாது என இறைவன் தடுத்திருக்கிறான். தன் மனைவியையே இறைவன் தடுத்ததால் அப்படித் தொடாமல் பயிற்சி பெற்றவன், "விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதே'' என இறைவன் தடுத்திருக்கும் நிலையில் அதன் பக்கம் நெருங்குவானா? அப்படி நெருங்க கூடாது என்பதையே இந்த நோன்பின் மூலம் அவர்கள் பெறவேண்டிய படிப்பினை. 

நோன்பிருப்போர் செய்ய வேண்டியதைப் பின்வரும் நபிமொழிகள் கூறுகின்றன : "யார் பொய்யான பேச்சுகளையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் உண்ணுவதையும், பருகுவதையும் விட்டு விடுவதில் இறைவனுக்கு எந்தத் தேவையுமில்லை.'' மேற்கண்ட பொன்மொழிகளைப் பின்பற்றுவதன் மூலம் நோன்பாளி ஒழுக்க மேம்பாடும், பொறுமையும், தீமைகளிலிருந்து விடுபடவும் பயிற்சி பெறுகிறார். 


 

ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலை மூன்றரை மணி முதல் மாலை ஆறு, ஆறரை மணிவரை கிட்டத்தட்ட பதினான்கு மணி நேரம் பச்சைத் தண்ணீர் பல்லில் படாமல், இருக்க வேண்டும் என்ற கட்டுப் பாட்டை நினைவில் நிறுத்திக்கொண்டு பார்த்தால், சுற்றிலும் உணவு புழங்குகையில் இந்த நோன்பை கடைபிடிப்பது அவர்களுக்கு எவ்வளவு சிரமமாக இருக்கும் என்பது புரியும்.


இஸ்லாமியர்கள் இந்த சிரமங்களுடனே கூட தங்கள் மதக்கோட்பாட்டை கடைபிடிப்பது அவர்களது மன உறுதியையும்,  படைத்த கடவுள் மேல் அவர்கள் வைத்திருக்கும் மரியாதையையும் காட்டுகிறது. அவர்கள் மேல் மரியாதையை கூட்டுகிறது.

ஈதலின் அவசியத்தை உணர்ந்து தன் வருவாயின் சிறு பங்கை வறியோர்க்களிக்க ஈகையை புனிதக் கடமையாய் வலியுறுத்தும் நன்னெறியை அனைவரும் கைக்கொள்வோம். இல்லாதாரின் நிலையை அனைவரும் உணர வழிவகுக்கும் ஈகைப் பெருநாளை நோன்பு மேற்கொண்டு வரவேற்கும் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் .


நட்புடன்...யாழினி...
------------------------------------------------------------------------------------------------------------------------------------------

புனித ரமலான் நோன்பினைத் தொடங்கும் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக வாத்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தினசரி 10 லட்சம் புன்னகை! - பேஸ்புக்கில் கலாம் நன்றி

கொல்கத்தா: குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாமின் பேஸ்புக் பக்கத்தை தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தொட்டுள்ளது. தனது பேஸ்புக் பக்கத்தில் இணைந்துள்ளவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
"தூங்கும் போது காண்பதல்ல கனவு, நம்மை தூங்கவிடாமல் செய்வதே லட்சியக்கனவு" என்று கூறி இந்திய இளைய தலைமுறையினரை கனவு காண அறிவுறுத்தியவர் அப்துல்கலாம். 2020-ல் இந்தியா வல்லரசு ஆவது இளைஞர்களின் கையில்தான் உள்ளது என்று நம்பிக்கையோடு கூறி வரும் அவர் தன்னுடைய அனுபவம், கருத்து ஆகியவற்றைப் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ள சமூக இணையதளமான பேஸ்புக்கில் www.facebook.com/officialkalam எனும் பக்கத்தை அவர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். 81 வயதான கலாம் தனது எண்ணங்களையும் செயல்பாடுகளையும் தினசரி அதில் பதிவு செய்து வருகிறார். இந்த பக்கத்தில் ஏராளமானோர் இணைந்து, கலாமின் கருத்துகளைக் படித்தும், அதற்கு தங்களின் உணர்வுகளையும், எண்ணங்களையும் பதிவு செய்தும் வருகின்றனர். தற்போது கலமின் பக்கத்தை 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தொடர்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.
இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள கலாம் தனது பக்கத்தில், 'நண்பர்களுக்கு நன்றி. நாம் இப்போது 10 லட்சம் பேராக, வலிமை வாய்ந்த சமூகமாக உருவாகி உள்ளோம். தினசரி ஒருவரை புன்னகைக்கச் செய்யவேண்டும் என்று நினைப்பேன். இப்பொழுது நாடுமுழுவதும் பத்துலட்சம் பேர் புன்னகைகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, தங்களது சிறந்த கருத்து, கனவு மற்றும் செயல்பாடுகளை தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள், என்று தெரிவித்துள்ளார்.
கலாம் தனது பேஸ்புக் பக்கத்தில் இணையதளத்தையும், யூ டுயூப், ப்ளாக்ஸ் போன்றவைகளையும் இணைத்துள்ளார். தற்போது கலாம் பவுண்டேசனுக்கு தலைராக உள்ள அவர் இதன்மூலம் நாடுமுழுவதும் கல்வித்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த பாடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Kalams Facebook Page Crosses Million Followers

Thursday, 19 July 2012

நானா அஸ்மா...

நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.

18-ஆம் நூற்றாண்டு...

இன்று நைஜீரியா என்று அழைக்கப்படும் நிலப்பகுதி அது. மிக பரந்த அந்த நிலப்பரப்பை பல்வேறு ஆட்சியாளர்கள் ஆண்டு கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் தான் உஸ்மான் டான் போடியோ. தன்னுடைய சிறிய பகுதியை சிறப்பான முறையில் நிர்வகித்து கொண்டிருந்தார் உஸ்மான். இஸ்லாம் குறித்த அவருடைய தெளிவான பார்வை மக்களுக்கு சிறந்ததொரு நிர்வாகத்தை அளிக்க ஏதுவாய் இருந்தது.

இத்தகையவருக்கு 1793-ஆம் ஆண்டு மகளாக பிறந்தார் நானா அஸ்மா (Nana Asma'u). நபியவர்களின் கஷ்ட காலங்களில் உறுதுணையாக இருந்த நபித்தோழியான அஸ்மா (ரலி) அவர்களின் நினைவாகவே அவருக்கு இந்த பெயர் வைக்கப்பட்டது. சிறு வயதிலேயே தன் தாயை இழந்த அஸ்மா, தன் சித்திக்களின் பொறுப்பில் வளர்ந்தார். எந்தவொரு விசயத்தையும் குர்ஆனின் ஒளியில் பார்க்கும் அத்தகைய பெண்மணிகளின் வளர்ப்பில் சிறப்பான கல்வி கொடுக்கப்பட்டார். இளம்வயதிலேயே ஓரிறைக்கொள்கை குறித்த தெளிவான எண்ணங்கள் அஸ்மாவுக்கு ஏற்றிவைக்கப்பட்டதாக குறிப்பிடுகின்றனர் வரலாற்றாசிரியர்கள்.

நல்லதொரு எதிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அஸ்மாவின் வாழ்க்கையில் கடுமையான சோதனைகள் தலைப்பட ஆரம்பித்தன. அதற்கு காரணம் உஸ்மான் டான் போடியோவின் தீவிர இறைப்பணி. சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் இஸ்லாமை நோக்கி மக்களை அழைப்பதில் தவறியதில்லை உஸ்மான். தன் இடத்தை விட்டு வெகு தூரம் சென்று பல்வேறு நிலப்பரப்புகளில் இஸ்லாமை எடுத்துக் கூறுவார். கால்நடை மேய்ப்பவர்கள், வியாபாரிகள், மார்க்கெட்கள் என்று யாரையும், எந்த இடத்தையும் விட்டதில்லை. இறைவனின் கிருபையால், உஸ்மானின் அழைப்பு பணிக்கு மகத்தான வெற்றி கிடைக்க ஆரம்பித்தது. இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கையும், இஸ்லாமை சரிவர புரிந்துக்கொண்டவர்களின் எண்ணிக்கையும் கடுமையாக உயர ஆரம்பித்தது.

வெளியேற்றம்:

இந்த சூழ்நிலை, அந்தந்த நிலப்பரப்பு ஆட்சியாளர்களை கடுமையாக கோபம் கொள்ள செய்தது. முடிவோ, பெரும் விபரீதமாக அமைந்தது. உஸ்மானின் குடும்பம், ஆதரவாளர்கள் என்று அனைவரும் கூண்டோடு கூண்டாக தங்களுடைய நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் (21st Feb 1804).

இது மிக சோதனையான காலக்கட்டம். பல மக்கள் பாலைவனத்தின் கொடுமை, பசி, நோய் காரணமாக போகும் வழியிலேயே இறந்தனர். இத்தகைய சூழ்நிலை உஸ்மானை நிலைக்குலைய செய்தது. ஆனால் வரலாற்றின் ஒரு சம்பவம் அவருக்கு பக்கபலமாக நின்றது. ஆம், நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து வெளியேறிய அந்த நிகழ்வு தான். இஸ்லாமின் வரலாற்றில் மறக்கவே முடியாத அந்த நிகழ்வை தற்போது தனக்குள் பிரதிபலித்து கொண்டே இருந்தார் உஸ்மான். இது இறைவனின் சோதனை, எப்படி சோதனைகளுக்கு பிறகு மக்கா முஸ்லிம்களின் வசம் வந்ததோ, அது போல, தங்களுக்கும் இறைவன் உதவுவான் என்று தீர்க்கமாக நம்பினார்.

வெற்றி:

உஸ்மானின் அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை. வெளியேறியவர்கள், உஸ்மானின் மகனான முஹம்மது பெல்லோ தலைமையில் படை திரட்டினார்கள், போரிட்டார்கள். கடுமையான சண்டைகளுக்கு பிறகு பெல்லோ தலைமையிலான படை எதிர்தரப்பை வீழ்த்தியது (3rd October 1808). பல்வேறு பகுதிகளையும் இணைத்து சொகாடோ சாம்ராஜ்ஜியம் உருவானது.

பேரரசு உருவான போது நானா அஸ்மா அவர்களுக்கு பதினைந்து வயது. அப்போது குர்ஆனை முழுவதுமாக மனனம் செய்திருந்தார், நான்கு மொழிகளில் (Arabic, Fulfulde, Hausa, and Tamachek) புலமை பெற்றிருந்தார், இஸ்லாமிய சட்டதிட்டங்களில் தீர்க்கமான ஞானம் பெற்றுக்கொண்டிருந்தார், தன் சகோதரர் பெல்லோவின் நண்பரான ஜிடாடோவை திருமணமும் முடித்திருந்தார்.

கூடவே கடுமையான மன உளைச்சலுக்கும் ஆளாகியிருந்தார். அந்த கவலை தன் மக்களை/அரசை பற்றியது. அரசாங்கத்தின் முன்னால் கடுமையான சவால்கள் காத்திருந்தன. பசி, நோய், ஏழ்மை, இஸ்லாமை ஏற்ற பூர்வகுடிமக்களை முஸ்லிம் சமுதாயத்தில் ஒருங்கிணைப்பது என்று இப்படி பல பல சவால்கள்.

1817-ஆம் ஆண்டு, உஸ்மான் இறந்த போது விவகாரங்கள் மேலும் பெரிதாகின.

ஆட்சி பொறுப்பை ஏற்ற முஹம்மது பெல்லோ தன் தங்கையின் திறமை மீது ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருந்தார். அவரை முழுவதுமாக நம்பினார். நாட்டின் பெண்களின் நிலை மாறவேண்டும். மாற்றத்தை கொண்டுவர வேண்டுமென்றால் அதற்கு அஸ்மாவின் உதவி நிச்சயம் வேண்டும். ஆனால், தங்கையின் மனநிலை அவருக்கு மிகுந்த கவலையை தந்தது. குர்ஆனின் உதவியுடன் தன் தங்கையை அணுக ஆரம்பித்தார்.

நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது - குர்ஆன் 94:5

தன் தங்கையிடம் உற்சாகத்தை வரவழைக்க இதுப்போன்ற வசனங்கள் அவருக்கு பெரிதும் உதவின. "உன் இறைவன் வலிமையானவன் என்று தெரிந்தும் நீ கவலைக்கொள்கின்றாயா?", "தன் மீது நம்பிக்கை கொண்டவரை இறைவன் நிராகரிப்பான் என்று எண்ணுகின்றாயா?" - இதுப்போன்ற கேள்விகளையும் தன் தங்கையை நோக்கி கேட்பாராம் பெல்லோ.

கல்வி புரட்சி:

அவருடைய பிரார்த்தனை பொய்யாகவில்லை. உற்சாகத்துடன் எழுந்த நானா அஸ்மா மாபெரும் புரட்சிக்கு அடிக்கோல ஆரம்பித்தார்.

ஒரு நாடு வளம்பெற வேண்டுமென்றால் குழந்தைகள் சரியான முறையில் வளர்க்கப்பட வேண்டும். குழந்தைகள் சரியான முறையில் வளர்க்கப்படவேண்டும் என்றால் பெற்றோர்களுக்கு மார்க்க அறிவு தெளிவாக போதிக்கப்பட வேண்டும். இது தான் அஸ்மாவின் அடிப்படை எண்ணமாக இருந்தது.

பசி மற்றும் நோய்களில் இருந்து மக்களை காக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டே கல்வியை போதிக்க வேண்டும். பாடத்திட்டங்கள் எளிமையாக இருக்கவேண்டும். நாட்டின் பெண்களை ஒருங்கிணைக்க வேண்டும். அவர்களின் அறியாமையை போக்க வேண்டும். அவர்களிடையே சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும்.

திட்டமெல்லாம் ஓகே. எப்படி செயல்படுத்துவது?

முதலில் உதவி தேவைப்படும் கிராமங்கள் மற்றும் ஏனைய பகுதிகளை கணக்கிட ஆரம்பித்தார். அந்த கிராமங்களில் நற்பண்புகள் மிக்கவர்களாக கருதப்பட்ட பெண்களை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார். இப்படியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு தன் வீட்டில் கல்வி, ஒழுக்கம் குறித்த பயிற்சியை தொடங்கினார் (அஸ்மாவின் அந்த வீடு இன்றும் உள்ளது).

நான் முன்னமே கூறியது போன்று அஸ்மா அவர்கள் ஒரு அசாத்திய திறமைசாலி. இறையச்சம் சார்ந்த அற்புத பண்புகளை அவரால் தன் மாணவர்களிடையே எளிதாக கொண்டுவர முடிந்தது. இப்படியாக அஸ்மாவினால் உருவாக்கப்பட்டவர்களுக்கு "ஜாஜிக்கள் (jajis)" என்று பெயர். ஜாஜி என்றால் பொறுப்பாளர் என்று பொருள் கொள்ளலாம். கல்வி பயிற்றுவிக்கப்பட்ட இந்த ஜாஜிக்கள் தற்போது தங்கள் ஊர்களுக்கு சென்று அங்குள்ள பெண்களுக்கு கல்வி போதிக்க வேண்டும்.

இந்த ஜாஜிகளுக்கு துணையாக இருந்தது அஸ்மாவிடம் இருந்து அவர்கள் கற்ற கல்வியும், நபிமொழிகளும் தான். வீடுகளுக்கே சென்று அங்குள்ள பெண்களுக்கு கல்வி போதிக்க ஆரம்பித்தார்கள். பெண்கள் குறித்த குர்ஆன் வசனங்களை சத்தமாக ஓதி காட்டுவார்கள். அது அடுத்தடுத்த வீடுகளிலும் எதிரொலிக்கும். அந்தந்த வீட்டு பெண்கள் இந்த வசனங்களை திரும்ப ஓதி காட்டுவார்கள். இப்படியானது ஒரு யுக்தி.

பெண்களின் கஷ்டங்களை அஸ்மாவின் பார்வைக்கு கொண்டுவந்தார்கள். அவற்றை பொறுமையாக கேட்டறிந்தார் அஸ்மா. உடனுக்குடன் தீர்த்து வைக்கவும் செய்தார். அஸ்மாவின் இத்தகைய நடவடிக்கைகள் பெண்களிடையே பெரும் புரட்சியை உருவாக்கத் தொடங்கின. பெண்களிடையே ஒரு ஒருங்கிணைப்பை அவரால் கொண்டுவர முடிந்தது. பிரச்சனைகளை ஜாஜிக்கள் மூலமாக எளிதாக கையாள முடிந்தது. அவர் எதிர்ப்பார்த்த சகோதரத்துவம் மேலோங்க ஆரம்பித்தது.

தன் மாணவர்களான ஜாஜிக்கள் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார் அஸ்மா. தன் அன்புமிக்க தோழிகள் என்றும், புத்திசாலிதனம் மற்றும் கடமையில் சிறந்தவர்கள் என்றும் அவர்களை குறிப்பிட்டார் அஸ்மா. ஆசிரியர்-மாணவர் உறவுக்கு அஸ்மாவும் ஜாஜிக்களும் மிக சிறந்த உதாரணமாக திகழ்ந்தார்கள் என்றால் அது மிகையில்லை.

ஒருவர் தன் வாழ்நாளிலேயே தன்னுடைய எண்ணங்கள் வெற்றி பெறுவதை பார்ப்பது இறைவனின் மகத்தான கிருபை. அந்த வகையில் அஸ்மா ஒரு அதிர்ஷ்டசாலியே. கட்டுக்கோப்பான சமூகம் உருவாக எண்ணம் கொண்டார். தெளிவான சிந்தனைகள் அடிப்படையில் காய் நகர்த்தி மாபெரும் வெற்றியும் கண்டார்.

I taught them what, in the Faith of Islam, is permissible And what is forbidden, so they would know how to act. I said they must distance themselves from sins such as lying, meanness, hatred and envy, Adultery, theft and self-esteem. I said they should repent Because these things lead to perdition. My women students and their children are well known for their good works. And peaceful behaviour in the community - Nana Asma'u
அவர்கள் எப்படி செயல்பட வேண்டுமென்பதற்காக, இஸ்லாம் அனுமதித்த மற்றும் அனுமதிக்காத விசயங்களை அவர்களுக்கு கற்றுக் கொடுத்தேன். பொய், கயமைத்தனம், தீண்டாமை, பொறாமை, விபச்சாரம், திருட்டு போன்றவற்றிலிருந்து விலகி நிற்குமாறு கூறினேன். தவறு செய்தால் இறைவனிடம் மன்னிப்பு கேட்க சொன்னேன். என்னுடைய மாணவியர்களும், அவர்களின் பிள்ளைகளும் தங்களுடைய சமூக பணிகளுக்காகவும், அமைதிக்காகவும் சமூகத்தில் நன்கு அறியப்பட்டவர்கள் - நானா அஸ்மா

புரட்சிக்கு வித்திட்டு, முஸ்லிம் பெண்களுக்கு தன் வாழ்க்கையை அசத்தலான முன்னுதாரணமாக்கிய நானா அஸ்மா 1864-ஆம் ஆண்டு மறைந்தார். இறைவன் அவரது பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை தந்தருள்வானாக...ஆமீன்.

நானா அஸ்மாவின் தாக்கம் அன்று எப்படி இருந்ததோ அதுபோலவே நைஜீரிய பெண்களிடம் இன்றும் இருக்கின்றது. பெண்களின் முன்னேற்றம் குறித்த தங்கள் எண்ணங்களுக்கு அஸ்மாவின் பாடத்திட்டங்கள் என்றென்றும் துணையாக இருப்பதாக கூறுகின்றனர்.

The aim of FOMWAN is to upgrade the status of Muslim women through increasing their religious awareness and education - exactly what Nana Asma’u did. She mobilised women and brought them together, she taught and reformed them making them better members of society. Our inspiration came from her and we look on her as a model. Whatever we achieve is indigenous. Our ideas do not come from USA, nor the UK, nor from Saudi Arabia. We have our model here. We may learn from others but our upbringing, our development is through Nana Asma’u - Sa’adiyar Omar, Federation of Muslim Women’s Associations of Nigeria [FOMWAN].
முஸ்லிம் பெண்களிடையே மார்க்க விழிப்புணர்வு மற்றும் கல்வியை அதிகரித்து அவர்களது நிலையை முன்னேற்றம் அடையச் செய்வதே "நைஜீரிய முஸ்லிம் பெண்கள்" கூட்டமைப்பின் நோக்கமாகும் - ஆம், அஸ்மா என்ன செய்தாரோ அதே தான். அவர் பெண்களை ஒருங்கிணைத்தார், கல்வி கொடுத்தார், அவர்களிடையே சீர்த்திருத்தம் மேற்கொண்டு சமூகத்தில் சிறந்த மக்களாக மாற்றினார். எங்களுடைய ஐடியாக்கள் அமெரிக்காவில் இருந்தோ, பிரிட்டனில் இருந்தோ, சவூதி அரேபியாவில் இருந்தோ வரவில்லை. எங்களுக்கான முன்னுதாரணம் இங்கேயே உள்ளார். நாங்கள் மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள விரும்புகின்றோம், அதே நேரம் எங்களுடைய வளர்ப்பு, முன்னேற்றம் எல்லாம் அஸ்மாவிடமிருந்தே வருகின்றன - ஸாதியார் உமர், நைஜீரிய முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு.

இறைவா, நானா அஸ்மா போன்ற பெண்களை எங்கள் சமூகத்திற்கு மேலும் மேலும் அதிகரித்து தருவாயாக..ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன். 

'மோனலிசா'வின் எலும்புக் கூடு கண்டுபிடிப்பு...!

லண்டன்: உலகப் புகழ் பெற்ற மோனலிசாவுக்குப் பின்னால் மறைந்துள்ள மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழ்க்கப்படும் சாத்தியக் கூறுகள் உருவாகியுள்ளன. மோனலிசாவின் எலும்புக் கூடு என்று கூறப்படும் ஒரு பெண்ணின் எலும்புக் கூட்டை இத்தாலிய தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது மோனலிசா ஓவியத்திற்கு போஸ் கொடுத்த பெண்ணின் எலும்புக் கூடு இது. டாவின்சியின் ஓவியத் திறமைக்கு மோனலிசா ஓவியம்தான் மிகப் பெரிய உதாரணமாக இன்றுவரை திகழ்கிறது. மந்திரப் புன்னகையுடன் காட்சி அளிக்கும் அந்த மோனலிசா ஓவியத்தின் பின்னால் பல மர்ம முடிச்சுகள் உள்ளன. அந்த ஓவியத்தில் இருப்பது ஆண் என்று ஒரு தரப்பு ரொம்ப நாட்களாக கூறி வருகிறது. அந்த ஓவியத்தில் இருக்கும் பெண் யார் என்பதும் பெரும் மர்மமாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில், இத்தாலியின் புளாரன்ஸ் நகரில் உள்ள ஒரு கான்வென்ட்டில் புதைக்கப்பட்ட ஒரு எலும்புக்கூட்டை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது லிசா ஜெரார்டினி என்ற பெண்ணின் எலும்புக் கூடு என்று கூறப்படுகிறது. இந்தப் பெண்தான் மோனலிசா ஓவியத்திற்குப் போஸ் கொடுத்தவர் என்றும் நம்பப்படுகிறது.
மிகப் பெரிய பட்டு வியாபாரியாக அக்காலத்தில் திகழ்ந்தவரான பிரான்செஸ்கோ டெல் ஜியோகோண்டோ என்பவரின் மனைவிதான் இந்த ஜெரார்டினி.
இவர் தனது கணவரின் மரணத்திற்குப் பின்னர் கன்னியாஸ்திரி ஆகி விட்டார். 63 வயதில், 1542ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி செயின்ட் உர்சுலா கான்வென்ட்டில் மரணமடைந்தார். அங்கேயே அவர் புதைக்கப்பட்டார். அந்த கான்வென்ட் பின்னாளில் அப்படியே கிடப்பில்விடப்பட்டு விட்டது. பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது. அங்கு கடந்த ஆண்டு ஜெரார்டினியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தைத் தோண்டும் பணிகள் தொடங்கின.
இந்த நிலையில் தற்போது ஒரு பெண்ணின் எலும்புக் கூடு முழுமையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த எலும்புக் கூட்டை சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.மேலும் டிஎன்ஏ சோதனையும் செய்து பார்க்கப்படவுள்ளது. இதன் பின்னர் இப்பெண்ணின் இரு குழந்தைகளின் எலும்புக் கூட்டுடன் இவை ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்யப்படும். ஏற்கனவே ஜெரார்டினியின் குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. Skeleton Found Italy May Solve Mona

கொடிகட்டிப் பறக்கும் சதை வியாபாரம்: எலும்பும், தோலும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை!

இறந்த பின்னர் மனித உடலுக்கு மதிப்பில்லை எல்லாம் ஒரு பிடி சாம்பலில் முடிந்து விடும் என்று சித்தர்களும், ஞானிகளும் சொல்லி வந்தனர். இப்பொழுது அந்த வார்த்தையை அப்படியே மறந்து விட வேண்டியதுதான். மனித உடல் பல கோடி ரூபாய் பெறுமானமுடையதாக இருக்கிறது.
இறந்த பின்னர் மனிதனின், தோலும், எலும்புகளும் களவாடப்படுகின்றனவாம். எலும்புகளையும், தோலினையும் வைத்து உறுப்பு மாற்று சிகிச்சை செய்யவும், பற்களுக்கும் பயன்படுத்துகின்றனராம். அதற்கு அந்த நோயாளியின் அனுமதியை பெறுவதில்லை என்று அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றினை கண்டறிந்து வெளியிட்டுள்ளனர் ஐசிஐஜெ எனப்படும் (International Consortium of Investigative Journalists) சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள். இந்த கண்டுபிடிப்பு உலகம் முழுவதும் அபாய மணியை ஒலிக்கவிட்டிருக்கிறது
உலகம் முழுவதும் மனித உடல் உறுப்புக்களை திருடி கள்ளச்சந்தையில் விற்று பணம் பார்க்கும் கும்பல் அதிகரித்து வருகிறது. எட்டு மாதங்களாக 11 நாடுகளுக்கு பயணம் செய்த புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் மனித உறுப்புக்களை திருடும் கும்பலைப்பற்றியும், அதை கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்களைப் பற்றியும் எழுதியுள்ளனர்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இதுபோன்ற இறந்த மனிதர்களின் தசை, எலும்புகளை புதிதாக பயன்படுத்துவதன் மூலம் ஆபத்து அதிகம் இருப்பதாக கூறும் ஆய்வாளர்கள், ஹெச் ஐ வி மற்றும் உயிர்கொல்லி நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் தோலும், எலும்பும் திருடப்பட்டு உயிரோடு இருப்பவர்களுக்கு பயன்படுத்தும் போது அதுவே ஆபத்தாகிவிடும் என்கின்றனர்.
இறந்துபோன மனித உடலில் இருந்து தசைகளையும், தோலினையும் எடுப்பது அவர்களின் உறவினர்களிடையே கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகிவிடுகிறது. இதுபோன்ற மனித உறுப்புகளை திருடி விற்பனை செய்யும் கும்பல் பற்றி ஸ்கார்ட் கார்னி என்னும் எழுத்தாளர் ‘ரெட் மார்க்கெட்' என்னும் நூலில் ஆய்வு செய்து எழுதியுள்ளார்.
உலகம் முழுவதும் மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் வாழும் ஏழை மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் இதயம் இல்லா பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது தி ரெட் மார்க்கெட். (The Red Market).
உலக அளவில் இன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடக்குமளவு மருத்துவத் துறை முன்னேறி இருக்கின்றது. ஆனால் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மாற்று உறுப்புகள் வேண்டுமே? அது தான் இன்றைய விற்பனைப் பொருள். சந்தையில் பல பில்லியன்கள் இலாபம் தரும் நல்ல சரக்கு.
ஒவ்வொரு நாட்டின் காகிதச் சட்டமும் இந்த உடல் உறுப்பு தானத்தை மிக உன்னதமாகக் கருதி, பாதுகாப்பாகவும், சட்டப்பூர்வமாகவும் தானம் செய்ய மக்களை அனுமதிக்கின்றது. ஆனால் ஸ்கார்ட் கார்னி இந்தப் புத்தகத்தினூடே பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, அந்தந்த நாடுகளில் உடல் உறுப்பு சம்பந்தமான திருட்டு, விற்பனை, அதில் கொள்ளை இலாபம் பார்க்கும் ஏஜெண்டுகள், கண்டுகொள்ளாமல் விடும் அரசுகள் என சகலத்தையும் போட்டு உடைக்கிறார்.
உலகம் முழுவதும் பல பணக்கார நாடுகளின் உடற் தேவைகளை அதாவது ரத்தம் முதல் எலும்பு, தசை, கிட்னி, கண், பெண்ணின் கரு முட்டை, தலைமுடி வரை தேவைப்படும் அனைத்தையும் ஈடு செய்வது மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் தான், குறிப்பாக இந்தியா. அதோடு இலவசச் சேவையாக பல பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு சோதனை எலிகளாகவும் இருக்கிறார்கள் இந்திய மக்கள்.
‘தேவைப்படுபவர் வாங்குகிறார், இருப்பவர் விற்கிறார்' என்ற சராசரி சந்தைப் பொருளாக நம் உடல் உறுப்புக்களைப் பார்க்க முடியாது. உயிருக்குக் கொடுக்கப்படும் அதே மதிப்பு உடல் உறுப்புகளுக்கும் கொடுக்கப்படுகின்றது. பணத்தின் முன் ஒரு ஏழையின் உடல் என்பது ரத்தமும் தசையுமான விற்பனைப் பண்டம்.
அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் மருத்துவம் பயிலத் தேவைப்படும் மனித எலும்பு மாதிரிகள் முழுக்கவும் இந்தியாவில் இருந்து அனுப்பப்படுகின்றனவாம். சுடுகாடுகளில், புதைக்கப்படும், எரிக்கப்படும் பிணங்களை திருடி பிணத்திலிருந்து பதப்படுத்தி எலும்புகளை மட்டும் எடுப்பார்கள். அந்த பதப்படுத்தும் முறை கொடூரமாக இருக்கும். பின்பு எலும்புகளை சுத்தமாக பாலிஷ் செய்து பேக்கிங் செய்து விடுவார்கள்.
அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கடுமையான சட்டங்கள் வந்து விட்டன. அமெரிக்காவில் தான் இந்தச் சட்டம் கடுமையானது, அதே அமெரிக்க அரசு இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் மனித உறுப்புகளைக் கண்டுகொள்வதில்லை. இந்த எலும்புத் தொழிற்சாலைகள் நேர்த்தியான கார்ப்பரேட்டுகளாக இயங்குகின்றன.
"மூன்றாம் உலக நாடுகளின் உயிர்கள் எப்பொழுதும் மலிவானவை. இதுதான் காலனியச் சிந்தனை". அதை நிரூபிக்கும் அனைத்து ஆதாரங்களையும் தன் புத்தகத்தில் அனைவருக்கும் எளிதாகப் புரியும் வண்ணம் விளக்கியுள்ளார். இதற்காக நாடு நாடாக, பல ஊர்கள் சுற்றி உடல் உறுப்புகள் பற்றிய சந்தையைப் பற்றி தகவல்கள் திரட்டி நெற்றிப்பொட்டில் அடிப்பது போல் முன்வைக்கிறார் ஆசிரியர் ஸ்கார்ட் கார்னி
உடல் விற்பனை என்பது, குழந்தைகள் கடத்தல், பெண்கள் விற்பனை, பெண்களின் கரு முட்டை விற்பனை, இரத்தம், கிட்னி, இதயம் உள்ளிட்ட இதர உடல் உறுப்புக்கள், இறந்தவர்களின் தோல், எலும்பு, வாடகைத் தாய் முதல் திருப்பதியில் இருந்து ஏற்றுமதி ஆகும் தலை முடி வரை அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் கோடி ரூபாய் பெறுமானமுள்ளவர்கள்தான். இனிமேல் யாரையாவது திட்டும்போது பைசா பெறாதவனே என்று திட்டாதீர்கள் புரிகிறதா?

ரமளான் மாதத்தின் சிறப்புகளும் சட்டங்களும்

  Linked to IslamKalvi.com, Ramadan Malar

செவ்வாயிலிருந்து எடுக்கப்பட்ட மிகத்துல்லியமான புகைப்படங்களை


செவ்வாய்க்கிரகத்திலிருந்து எடுக்கப்பட்ட புத்தம் புதிய புகைப்படங்களை நாசா முதன்முறையாக வெளியிட்டுள்ளது.
செவ்வாய்க்கிரகத்தை ஆய்வு செய்வதற்கான நாசா அனுப்பிய இயந்திர ரோவர் அங்கு தரையிறங்கி இப்புகைப்படங்களை தனது 380 பாகை சுழலக்கூடிய சூப்பர் கெமராக்களால் படம்பிடித்துள்ளது. செவ்வாயில் சுமார் பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றியதாக கருதப்படும் செம்மண்ணால் போர்த்தப்பட்ட எரிமலை குழிகள், இப்புகைப்படங்களில் தெளிவாக தெரிகின்றன.

குறித்த இயந்திர ரோவர், செவ்வாயில் 3,000 மார்டியன் நாட்கள் (8 வருடங்களும் 6 மாதங்களும்) தங்கியுள்ளதுடன், 15 வருடங்களுக்கு அங்கு தங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 1997ம் ஆண்டு ஜூலை 4ம் திகதி குறித்த Mars Pathfinder பூமியில் தரையிறங்கியது.

இப்புகைப்படங்கள் 2011 டிசம்பர் 21 - 2012 மே 8ம் திகதி கால எல்லைக்குள் எடுக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் நாசாவின் மற்றுமொரு ரோவர் செவ்வாயில் தரையிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய குடியரசு தலைவர் தேர்தல் இன்று நடைபெறுகிறது


இந்திய குடியரசு தலைவர் இன்று காலை டெல்லி பாராளுமன்றத்தில் தொடங்கியுள்ளது.
காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது, ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பி.ஏ.சங்மாவும் போட்டியிடுகின்றனர். இதில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இறுதி நேரத்தில் ஆதரவு தெரிவித்ததால் பிரணாப் முகர்ஜி வெற்றி பெறும் வாய்ப்பு 50% வீதத்திற்கு மேல் உள்ளது.

இந்தியாவில் ஜனாதிபதிக்குரிய அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதும், முக்கியமான தருணங்களில் எடுக்கப்படும் அனைத்து அரசியல் சார்ந்த முடிவுகளுக்கும், ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்படவேண்டிய பாரம்பரியம் நிலவுகிறது.

ஊழல் குற்றச்சாட்டுக்கள், திடிரென மந்தமான பொருளாதார வளர்ச்சி என தொடர்ந்து சரிவை சந்தித்துக்கொண்டிருக்கும் காங்கிரஸுக்கு, இத்தேர்தல் முடிவுகள் சாதகமாக இருந்தால் புதிய உற்சாகம் கிடைக்கும் என திடமாக நம்பப்படுகிறது. எதிர்வரும் 2014 இல் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குடியரசு தலைவர் தேர்தல் வெற்றி, நிச்சயம் அதில் செல்வாக்கு செலுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 22ம் திகதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. வெற்றிபெறுபவர், தற்போது குடியரசு தலைவராக இருக்கும் பிரதீபா பாட்டிலின் பதவியிடத்தை கைப்பற்றுவார். இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவர் எனும் பெருமை பிரதீபாவுக்கு ஏற்கனவே உண்டு.

இந்தியாவில் குடியரசு தலைவர், நேரடியாக பொதுமக்களால் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படாது, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்களிப்பின் மூலம் தெரிவாகிறார்.

பிரணாப் முகர்ஜிக்கு உத்தர பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியும், பீஹாரில் ஐக்கிய ஜனதா தால் கட்சியும், மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன. இக்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மிக அதிகமென்பதால், முகர்ஜியின் வெற்றி ஓரளவு உறுதியாகியுள்ளது.

வெளி விவகார அமைச்சுப்பதவி, உள்துறை அமைச்சுப்பதவி, பாதுகாப்பு மற்றும் வணிகத்துறை அமைச்சுக்களில் பதவி வகித்தவர் பிரணாப் முகர்ஜி. அரசியலில் 1969ம் ஆண்டு முதன்முறையாக மேல் சபைக்கு தெரிவாகும் முன்னர் ஆசிரியர், ஊடகவியலாளர், சட்டவியலாளராக பணிபுரிந்தவர். 1986ம் ஆண்டு காங்கிரஸுடன் ஏற்பட்ட தகறாரு ஒன்றினால், அங்கிருந்து விலகி புதுக்கட்சி தொடங்கியவர். இரு வருடங்களின் பின்னர் மீண்டும் காங்கிரஸுடன் இணைந்து கொண்டார். பன்னாட்டு நாணய நிதியம் (IMF), உலக வங்கி என்பவற்றிலும் அதிகார குழுவிலும் இடம்பிடித்தவர்.

பி.ஏ.சங்மா, லோக்சபா மற்றும் நாடாளுமன்ற கீழ் சபையின் முன்னாள் சபாநாயகர் ஆவார். வடகிழக்கு மாநிலமான மெகாலாயாவின் முதலமைச்சராக இருந்தவர். அடிப்படையில் ஊடகவியலாளர், சட்டத்துறை ஆய்வாளர், பேச்சாளர். 1980ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர். 1999ம் ஆண்டு உருவான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர்களில் ஒருவராவார்

Wednesday, 18 July 2012

பஹ்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் விரைவில் நாடு திரும்புகின்றனர்!

சென்னை: பஹ்ரைனுக்கு வேலைக்கு சென்று அங்கிருந்து நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழக தொழிலாளர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுகிறார்கள்.
பஹ்ரைன் நாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் அங்கிருந்து நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். ஒப்பந்த பிரச்சனை, விசா காலாவதியானது, சுற்றுலா விசாவில் சென்று வேலை பார்த்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியர்கள் பஹ்ரைனில் வேலை பார்க்கவும் முடியாமல், தாயகம் திரும்பவும் முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.
அவ்வாறு நாடு திரும்ப முடியாமல் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த பசுபதி மாரியப்பன் என்ற இரும்பு பட்டறை தொழிலாளி மனவேதனையால் பஹ்ரைனில் உள்ள பூங்கா ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து நாடு திரும்ப முடியாமல் தற்கொலை செய்து கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்தது.
இந்நிலையில் தமிழக அரசு ஊழியரான பசுபதியின் சகோதரர் சங்கர் பஹ்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய தொழிலாளர்களுக்காக ஆன்லைனில் ஆதரவு திரட்டினார். ஆன்லைனில் ஆதரவு குவிந்தது பஹ்ரைன் அரசுக்கு பிரச்சனையானது. இதையடுத்து ஊர் திரும்ப தடை செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரையும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்க பஹ்ரைன் அரசு தீர்மானித்துள்ளது.
பஹ்ரைன் நீதிமன்றத்தில் இந்திய தொழிலாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுகிறது. அதன் பிறகு அவர்கள் ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதன் மூலம் பஹ்ரைனில் தவித்து வந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஊர் திரும்பவிருக்கின்றனர்.