சுற்றுச்சூழலை பாதிக்காத நவீன கழிப்பறைகளை தயாரிக்க ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் மத்திய குடிநீர் துறை டெல்லியில் ஒப்பந்தம் செய்தது. இதற்கான விழாவில் கலந்து கொண்ட மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:
உலகிலேயே திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. திறந்தவெளி கழிப்பிடங்களின் தலைநகராக இந்தியா திகழ்கிறது. உலக அளவில் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவோரில் 60 சதவீதம் பேர் இந்தியர்கள். இது வெட்க கேடான விஷயம். அடுத்த 10 ஆண்டில் அனைவருக்கும் கழிப்பறை வசதி செய்து தர அரசு திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக 300 கிராம பஞ்சாயத்துகளில் அடுத்த 2 ஆண்டில் சுற்றுச்சூழலை பாதிக்காத நவீன பயோ கழிப்பறைகள் அமைக்கப்படும். மொத்தம் 1 லட்சம் கழிப்பறைகள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு ரூ.150 கோடி செலவாகும்.
உலகிலேயே மிகப்பெரிய திறந்தவெளி கழிப்பிடமாக இந்திய ரயில்வே திகழ்கிறது. ரயில்களில் தினமும் 1.1 கோடி பேர் பயணம் செய்கிறார்கள். ரயில்களில் உள்ள கழிப்பறைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படு வதோடு, ரயில் தண்டவாளம், ஸ்லீப்பர் கட்டைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க ரயில்களில் உள்ள கழிப்பறைகளை மாற்றி நவீன பயோ கழிப்பறைகள் அமைக்க வேண்டும். தற்போதுள்ள 50 ஆயிரம் ரயில் பெட்டிகளிலும் பயோ கழிப்பறைகளை நிறுவ தயாராக உள்ளோம். மொத்தம் 500 கோடி செலவாகும். இதில் 50 சதவீதத்தை என் அமைச்சகம் ஏற்கும். இது தவிர 15 லட்சம் கழிப்பறைகளில் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் முறை உள்ளது. இதையும் மாற்ற வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment