Monday, 29 October 2012

சீரமைப்பு பணிகள் முடிந்த சுதந்திர தேவி சிலை திறப்பு-புயலால் மீண்டும் மூடல்

 Statue Liberty S Renovated Crown Reopened And Closed
Omar Inaugurates Park, Assures Reno...
 
 
நியூயார்க்: நியூயார்க்கில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர தேவி சிலையின் சீரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஆனால் தற்போது நியூயார்க் நகரை சாண்டி புயல் தாக்கியுள்ளதால் மீண்டும் மூடப்பட்டது.
அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க்கில் வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர தேவியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 126வது ஆண்டு விழாவை கொண்டாடும் இந்த சிலையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வகையில், கடந்த ஒரு ஆண்டாக பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
30 மில்லியன் டாலர் மதிப்பில் சுதந்திர தேவி சிலையில் சீரமைப்புகள் முடிந்து, பார்வையாளர்களுக்காக நேற்று திறந்துவிடப்பட்டது. ஆனால் தூங்காத நகரம் என்ற பெயரை பெற்ற நியூயார்க் நகரை தற்போது சாண்டி புயல் தாக்கியுள்ளது. இதனால் நியூயார்க் நகரம் முடங்கி உள்ளதால், சுதந்திர தேவி சிலைக்கு பார்வையாளர்களின் அமைதி ரத்து செய்யப்பட்டு, மீண்டும் மூடப்பட்டது.
இந்த நிலையில் சுதந்திர தேவி சிலை மீண்டும் நாளை அல்லது நாளை மறுநாள் மீண்டும் பார்வையாளர்களுக்காக திறக்கப்படும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஒரு ஆண்டில் சுதந்திர தேவி சிலையில் பல சீரமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. கால் பகுதியில் இருந்து விளக்கு வரை மொத்தம் 151 அடி உயரம் கொண்ட இந்த சிலை, நட்சத்திர வடிவிலான அடித்தளத்தின் மீது நிறுத்தப்பட்டுள்ளது.
சிலையின் உள்பகுதியில் 354 படிகள் அமைக்கப்பட்டு, பார்வையாளர்கள் சிலையின் மீது ஏறி செல்ல முடிந்தது. ஆனால் நடக்க முடியாத நபர்களால் சிலையை கீழிருந்து மட்டுமே பார்க்க முடிந்தது.
இந்த நிலையில் தற்போது சிலையின் உள்பகுதியில் இருந்த படிகளின் எண்ணிக்கையை 393 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வீல்சேரில் சிலையின் தலை பகுதி வரை செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல சிலையின் உட்பகுதியில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு, குளியலறை, கழிப்பறை வசதிகள் சீரமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் சுமார் 3.5 மில்லியன் மக்கள் சுதந்திர தேவி சிலையை பார்வையிட வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தற்போது செய்யப்பட்ட சீரமைப்பு பணிகளின் மூலம் மேலும் 26 ஆயிரம் பார்வையாளர்கள் அதிகமாக பார்வையிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டின் மூலம் அன்பளிப்பாக அளிக்கப்பட்ட சுதந்திர தேவி சிலை கடந்த 1886ம் ஆண்டு நிறுவப்பட்டது. கடந்த 1924ம் ஆண்டு தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் மூலம் மூடப்பட்ட இந்த சிலை, மீண்டும் கடந்த 2011ம் ஆண்டு பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!

எப்படிப்பா இந்த சிகரெட் 'குடிக்கும்' பழக்கத்தை நிறுத்துவது...உலகம் முழுவதும் இதே பிரச்சினைதான்!. எத்தனையோ உபாயங்களை பலரும் சொல்கிறார்கள், என்னென்னவோ பண்ணிப் பார்க்கச் சொல்கிறார்கள். ஆனால் புகை பிடிப்பதை அடியோடு நிறுத்த அல்லது வெகுவாக குறைக்க ஒரு ஈசியான வழி உள்ளது.
புகை பிடிக்கும் பழக்கம் எல்லோருக்கும் கூடப் பிறந்தது அல்ல, இடையில் வந்ததுதான். எனவே அதை நிறுத்துவது என்பது மலையை சாய்க்கும் காரியம் அல்ல, சற்றே மனது வைத்தால் போதும். மனக் கட்டுப்பாட்டை சற்றே உறுதியோடு கடைப்பிடித்தாலே போதும் இதை எளிதில் சமாளிக்கலாம்.
சரி மேட்டருக்கு வருவோம்... சிகரெட் பிடிப்பதை நிறுத்த மிக மிக ஈசியான வழி ஒன்று உள்ளது. அதுகுறித்துத்தான் இந்த கட்டுரையே...
முதலில் நீங்கள் புகை பிடிப்பதில் 'செயின்' ஜெயபாலா அல்லது 'அக்கேஷனல்' ஆரோக்கியசாமியா, இல்லை 'மிடில்கிளாஸ்' மாதவனாக இருக்கலாம். ஆனாலும் நீங்கள் எப்படியாப்பட்ட 'கிங்ஸாக' இருந்தாலும் இந்த உபாயத்தைப் பயன்படுத்திப் பார்க்கலாம் - நம்பிக்கையோடு.
- நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பவராக இருந்தாலும் பரவாயில்லை, சிகரெட்டை நிறுத்த வேண்டும் என்று முதலில் மனதளவில் தீர்மானியுங்கள். முதலில் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனாலும் கண்ணை மூடிக் கொண்டு முதலில் முடிவை எடுத்து விடுங்கள்.
- முடிவெடுத்து விட்டாயிற்றா, அதை எந்த நாளிலிருந்து அமல்படுத்துவது என்பதையும் தீர்மானியுங்கள். இப்போது முதலே நிறுத்துகிறேன் என்று சவடாலாக முடிவெடுக்க வேண்டாம். அது சாத்தியமில்லாதது. எனவே நாளையிலிருந்து அல்லது அடுத்த வாரத்திலிருந்து என்று ஒரு தேதி குறிப்பிடுங்கள்.
- முடிவு செய்த தேதிக்கு வந்துருச்சா, நீங்கள் தம் அடிக்கும் நேரம் வந்து விட்டதா.. உடனே கடைக்குப் போங்கள். ஒரு சிகரெட்டை வாங்குங்கள். ஆனால் பற்ற வைக்காதீர்கள். அதை வெறுமனே வாயில் வைத்துக் கொண்டு சிறிது நேரம் தம் அடிப்பது போல உணர மட்டும் செய்யுங்கள். ஒரு சிகரெட்டை நீங்கள் எப்படியெல்லாம் அனுபவித்து பிடிப்பீர்களோ, அந்த உணர்வு வருவது போல வாயில் வைத்து எடுங்கள். படு கஷ்டமாகத்தான் இருக்கும். இருந்தாலும் மனதைக் கட்டுப்படுத்துங்கள்.
- வாங்கிய சிகரெட்டை அப்படியே வைத்துக் கொண்டு இதே போல முதல் நாள் முழுவதும் செய்து பாருங்கள். சற்று கட்டுப்படுவது போலத் தோன்றும். ஆனால் பெரும் கஷ்டமாகவும் இருக்கும். இருந்தாலும் மனம் தளர்ந்து பற்ற வைத்து விடாதீர்கள்.
- அடுத்த நாள்தான் 'சத்திய சோதனை'யே ஆரம்பம். 2வது நாளில் நீங்கள் ஒரு சிகரெட்டை கூட வாங்கக் கூடாது. மாறாக கடைக்குப் போய் 50 காசு கொடுத்து கடலை மிட்டாயை வாங்குங்கள். சென்னைப் பக்கம் இதற்கு பர்பி என்று பெயர், மதுரைப் பக்கம் போனால் கடலை மிட்டாய் என்பார்கள். இந்தக் கடலை மிட்டாய்தாங்க உங்களின் புகைப் பழக்கத்தை அடியோடு விரட்டப் போகும் அரு மருந்து. எனவே இதை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள்.
- 2வது நாள் முழுவதும் எப்போதெல்லாம் தம் அடிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஒன்று அல்லது 2 கடலை மிட்டாய்களை வாங்கி வாயில் போட்டு சாப்பிடுங்கள். இது மிகப் பெரிய 'டைவர்ஷனை' கொடுக்கும்- இது அனுபவ வார்த்தை எனவே நம்புங்கள். 2வது நாள் முழுவதும் உங்களுக்கு ரொம்பவே கஷ்டமாகத்தான் இருக்கும், கிட்டத்தட்ட பைத்தியம் பிடிப்பது போலவும் இருக்கும். இருந்தாலும் மனதை கட்டுப்படுத்துங்கள், டைவர்ஷனைத் தரும் வகையிலான சிந்தனைக்கு மாறிப் பாருங்கள், நிச்சயம் புகை பிடிக்கும் உணர்வை கட்டுப்படுத்த முடியும்.
- 3வது நாளில் உங்களுக்குள் பெரிய மாற்றத்தை உணர முடியும். புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வெகுவாக குறைந்திருப்பதை நீங்களே உணர முடியும். அப்படி ஒரு வேளை தவிர்க்க முடியாமல் தோன்றினாலும், உடனே கடைக்குப் போய் கடலை மிட்டாயை வாங்கி வாயில் போடுங்கள்.
இந்த மிக மிக எளிய முறையில் 3 நாட்களிலேயே, ஒரு வேளை உங்களால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் கூடுதலாக 2 நாட்களை எடுத்துக் கொள்ளலாம், உங்களது புகை பிடிக்கும் பழக்கத்தை நீங்கள் கட்டோடு நிறுத்தி விட முடியும் அல்லது குறைத்து விட முடியும்.
அது எப்படிய்யா கடலை மிட்டாயை வச்சு தம் அடிப்பதைக் குறைக்க முடியும், பெரிய டுபாக்கூரா இருக்கே என்று அவ நம்பிக்கையுடன் கேட்கிறீர்களா.. அப்படிச் சொல்லாதீங்க, நிச்சயம் முடியும். உங்களுக்கு மன உறுதியும், கட்டுப்பாடும் மட்டும்தான் இந்த சமயத்தில் மிக மிக முக்கியமாக தேவை.
இன்னொரு விஷயம், இந்த மூன்று நாட்களுமே நீங்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு இதைச் செய்து பார்க்காதீர்கள், சத்தியமாக உங்களால் புகைப் பழகத்தை விடவே முடியாது. நீங்கள் எங்கு வழக்கமாக சிகரெட் வாங்குவீர்களோ அதே கடைக்குப் போய்த்தான் இந்த 'மருந்தை சாப்பிட' வேண்டும். அப்போதுதான் உங்களைப் பிடித்துள்ள இந்த 'நோய்' குணமாகும்.
இதுவும் கூட ஒரு வகையில் 'சைக்கலாஜிகல் அப்ரோச்'தான். அதாவது சிகரெட்டை சிகரெட்டை வைத்தே விரட்டுவது.
விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. 2.50 ரூபாய்க்கு விற்ற கிங்ஸ் இன்று 6 ரூபாய்க்கு வந்து விட்டது. ஒரு நாளைக்கு நீங்கள் சராசரியாக பத்து சிகரெட்டை 'சாப்பிடுவதாக' இருந்தால் ஒரு நாளைக்கு 60 ரூபாய் வரை செலவிட வேண்டும். ஒரு மாதத்திற்கு 1800 ரூபாய் செலாவாகிறது. ஒரு வருடத்திற்கு சராசரியாக 22,000 ரூபாய் செலவாகிறது. கேட்கவே படு கொடுமையாக இருக்கிறதில்லையா.. அதை விட மகா கொடுமை உங்களது வாழ்நாளை நீங்களே தினசரி தீவைத்துக் கொல்வது. ஒருசிகரெட்டானது உங்களது ஒரு நாள் ஆயுளைக் குறைக்கிறதாம். அத்தோடு உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் கூட காவு வாங்கி விடுகிறது.
எனவே இனியும் கையில் 'தம்'மோடு திரியாதீர்கள்.. மனதில் தெம்போடு திரிய கடலை மிட்டாயை வாங்குங்கள், மனம் நிறைய நம்பிக்கையோடு புது வாழ்க்கையைத் தொடங்குங்கள்...
Disclaimer: கடலை மிட்டாய் என்பது ஒரு மீடியம்தான். கடலை  Quit Smoking 3 Days
மிட்டாய்க்குப பதில் சாக்லேட், மின்ட் என எதை வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்தலாம்... உங்களுக்குத் தேவை திசை திருப்ப உதவும் ஒரு டைவர்ஷன் மட்டும்தான். உங்களுக்குப் பிரியமானவர்களை நினைத்துக் கொண்டாலும் கூட நீங்கள் புகை பிடிப்பதை விட முடியும்...!

ரூ. 20,000 கொடுத்து கன்னத்தில் அறை வாங்கிக்குங்க.. இளமை திரும்பிடுமாம்!

 Face Slap Beauty Treatment Make You Young
சான்பிரான்சிஸ்கோ: பழங்களைக் கொண்டு முகத்திற்கு பேஸ்பேக் போடலாம், காய்கறிகளைக் கொண்டும் போடலாம், ஏன் ஒயினை வைத்து கூட முகத்திற்கு அழகு சிகிச்சை செய்கின்றனர். ஆனால் அறைவதன் மூலம் முகத்தை அழகாக மாற்ற முடியும் என்கின்றனர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த அழகியல் நிபுணர்கள்.
இந்த கன்னத்தில் அறையும் அழகு சிகிச்சை மையத்தை நடத்தி வருபவர் அகா டாடா. தாய்லாந்தை சேர்ந்த இவர், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவருடைய அழகு நிலையத்தின் ஸ்பெசல் கன்னத்தில் அறைவதுதான். இதற்கு கட்டணமாக 20 ஆயிரம் ரூபாய் வசூலிக்கிறார்.
மெல்லியதாய் கசியும் இசையை ஒலிக்கவிட்டு அதே ரிதமில் சிகிச்சைக்கு வரும் பெண்களின் கண்ணங்களில் தட்டுகிறார் அழகு நிலையத்தை நடத்துபவர்.இந்த அழகு நிலையம் முதலில் பாங்காக் நகரில்தான் தொடங்கப்பட்டது. தினசரி ஒருடஜனுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்து இவரிடம் கன்னத்தில் அறைவாங்கிக் கொண்டு (முகத்தை அழகு படுத்திக்கொண்டு) செல்வார்களாம்.
இது எந்த பக்கவிளைவையும் ஏற்படுத்தாது. ரசாயனகலவை எதையும் முகத்திற்கு பூசுவதில்லை. ஜஸ்ட் சில செல்லத்தட்டுக்கள்தான் என்கிறார் அழகு நிலையத்தை நடத்தும் அகா டாடா.
ஆறு மாதத்திற்கு ஒருமுறை இந்த சிகிச்சையை எடுத்துக்கொண்டால் முகத்தில் சுருக்கம் நீங்கி இளமை ஊஞ்சலாடும் என்று உத்தரவாதமும் தருகிறார். கன்னத்தில் தட்டும்போது சத்தம்தான் வருமாம், வலிக்காதாம்.
இதுக்கு எதுக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்யனும். நம்ம ஊர் பெண்மணிகள் அவர்களின் கணவரின் கையால் தினசரி இரண்டு தட்டு வாங்கினால் அழகு மிளிராதா என்ன? என்று யாரோ கேட்பது காதில் விழுகிறது!.

பட்டாசு விலையெல்லாம் ரொம்ப ஜாஸ்தி... பார்த்து வாங்கி வெடிங்க

Crackers Price Go High This Diwali
சென்னை: தீபாவளிக்கு பட்டாசுகளை வாங்குவது இந்த முறை பெரும் செலவு பிடிக்கும் சமாச்சாரமாக இருக்கும் என்று தெரிகிறது. காரணம் கடுமையான விலை உயர்வுதான். கிட்டத்தட்ட 40 சதவீத அளவுக்கு விலை உயர்ந்துள்ளதாம்.
இன்னும் 15 நாளில் தீபாவளி வருகிறது. இதனால் ஜவுளி வாங்குவது, பொருட்களை வாங்குவது என மக்கள் பிசியாகி வருகின்றனர். இந்த நிலையில் பட்டாசு விலை விவரம் மக்கள் வயிற்றியில் கந்தகத்தை காய்ச்சி ஊற்றுவது போல உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 40 சதவீத அளவுக்கு விலை உயர்ந்து காணப்படுகிறது பட்டாசுகள்.
தீபாவளி என்றால் சின்னதாக ஒரு குருவி வெடியாவது விட்டால்தான் அது திருப்தியாக முடியும். எனவே பட்டாசு இல்லாமல் தீபாவளி இல்லை. ஆகையால் விலை உயர்வு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதே பட்டாசு விற்பனை பல இடங்களில் தொடங்கி விட்டது. மக்களும் வெடிகளை வாங்கி வெடிக்கவும் ஆரம்பித்து விட்டனர். இடையில் மழை பெய்து வந்ததால் பட்டாசு விற்பனை மக்கிப் போய் இருந்தது. தற்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது. ஆனால் கடைகளுக்குப் போய் விலையைப் பார்த்தால் மயக்கம்தான் வருகிறது.
வழக்கம் போல இந்த முறையும் ஏகப்பட்ட புதிய ஐட்டங்களை இறக்கியுள்ளனர். குறிப்பாக விதம் விதமான பேன்சி ரக பட்டாசுகள்தான் மக்களை ஈர்ப்பதாக உள்ளது. ஆனால் விலையும் கூடுதலாகவே இருக்கிறது.
சாதாரண கம்பி மத்தாப்பின் விலையே கடுமையாக இருக்கிறது. அதேபோல குருவி வெடி, ஜம்போ வெடி, லட்சுமி வெடி ஆகியவற்றின் விலையும்
கடுமையாக உயர்ந்துள்ளது.
அணுகுண்டும் விலை உயர்ந்தே காணப்படுகிறது. கைகளில் பிடித்து சரமாரியாக வெடித்துத் தள்ளும் சரவெடி கெட்ட கெட்டுக்கு அதுவும் விலை உயர்ந்து காணப்படுகிறது. தெளசன்ட் வாலா சரவெடியின் விலை ரூ. 500க்கு மேல் உள்ளது. அதிகபட்சம் ரூ. 5000 வரை சரவெடிகள் உள்ளன.
குறைந்தது ரூ. 50 முதல் 150 வரை விலை உயர்ந்து காணப்படுவதால், முடிந்தவரை சின்ன அளவில் வாங்க வேண்டியதுதான் என்று மக்கள் நினைக்க ஆரம்பித்துள்ளனர்.
மொத்த விலைக் கடைகளிலேயே இந்த விலை என்பதால், சில்லரை விலைக் கடைகளில் இதை விட டபுள் மடங்கு விலை இருக்கும் என்று மக்கள் ஆயாசப்படுகின்றனர்.

700 டன் தங்கத் தாதுவுடன் நடுக்கடலில் மாயமான ரஷ்ய சரக்கு கப்பல்

மாஸ்கோ: ரஷ்யாவில் 700 டன் தங்கத் தாதுவை ஏற்றிச் சென்ற ரஷ்ய சரக்குக் கப்பல் நடுக்கடலில் மாயமாகி இருக்கிறது.
ரஷியாவின் ஓகோட்ஸ் கடற்பரப்பில் 700 டன் தங்கத் தாதுவை ஏற்றிக் கொண்டு அமுர்ஸ்கயா என்ற சரக்குக் கப்பல் சென்று கொண்டிருந்தது. இக்கப்பல் கிரன் துறைமுகத்திலிருந்து ஓகோட்ஸ் துறைமுகம் நோக்கிச் செல்லும் வழியில் திடீரென மாயமானது.
மாயமான தங்கக் கப்பலில் மொத்தம் 8 அல்லது 11 பேர் இருந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்த கடற்பரப்பில் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விமானங்களும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன.

சூடானில் மிகப்பெரிய தங்க சுத்திகரிப்பு ஆலை திறப்பு: ஆண்டுக்கு 270 டன் தங்கம் உற்பத்தி

சூடான்: தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் ஆப்ரிக்க நாடான சூடானில் மிகப்பெரிய தங்க சுத்திகரிப்பு ஆலை திறக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் நாள் ஒன்றுக்கு 900 கிலோ தங்கம் உற்பத்தி செய்ய முடியுமாம்.
சூடான் நாட்டில் இருந்து தெற்குச் சூடான் தனியாக பிரிந்து சென்ற உடன் எண்ணெய் வருமானம் நின்றுபோனது. இதனையடுத்து அந்நாட்டின் வருமானத்தை பெருக்கும் வகையில் தங்க சுத்திகரிப்பு ஆலை திறக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய அந்த ஆலையை சூடான் அதிபர் ஓமர் அல்பஷீர் திறந்து வைத்தார்.
சூடானில் உள்ள தங்கத் தொழிற்சாலைகளில் வருடத்திற்கு 328 டன் தங்கத்தை உற்பத்தி செய்து வருகிறது. இந்த ஆலை உற்பத்தியின் மூலம் சுமார் 300 கோடி டாலர் அளவிற்கு தங்கம் விற்பனை செய்ய எதிர் பார்க்கப்படுகிறது. இப்பகுதியில் வெட்டி எடுக்கப்படும் தங்கம் மட்டும் இல்லாமல் வெளிநாட்டிலிருந்து வரும் தங்கத்தையும் இங்கு சுத்திகரிப்பு செய்ய முடியும்.
இந்த ஆலை ஒரு நாளைக்கு 900 கிலோ தங்கத்தையும் மற்றும் 200 கிலோ வெள்ளியையும் உற்பத்தி செய்யும். இந்த ஆலையில் ஆண்டுக்கு 270 டன் தங்கம் சுத்திகரிப்பு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தங்க சுத்திகரிப்பு ஆலைமூலம் அந்நிய முதலீடு அதிகரிக்கும் என்று அந்நாட்டு அமைச்சர் அலிமுகமது கூறினார்.
சூடான் நாட்டிலிருந்து 58 டன் தங்கம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. சூடான் நாடு பிரிந்த பின்னர் எண்ணெய் வருமானம் இல்லாமல் போனாலும் அந்த வெற்றிடத்தை இந்த தங்கச் சுரங்கம் நிரப்பிவிடும் என்று அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுதான் ஒரு கதவு மூடினால் ஆயிரம் ஜன்னல் திறக்கும் என்பதோ? இனியாவது தங்கம் விலை குறைந்தால் சரிதான்!.Sudan Opens First Gold Refinery

Monday, 22 October 2012

பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம்

சுவிஸ்சர்லாந்தில் பிரபல கட்டிட நிபுணர் Peter Vetsch என்பவர் எண்ணத்தில் உருவான வீடுகள்தான் இந்த பூமியின் வீடுகள்.
சூரிச்சில் இருக்கும் Vetsch Architektur எனும் கட்டுமான நிறுவனம் Vetsch இன் தலைமையில் தனது சொந்த நிலத்தில் இவ்வாறன நிலத்தடி வீடுகளை கட்டி வருகிறது. அதுவும் இவ் வீடுகள் சுற்றுப்புறம் பசுமை சார்ந்தாக இயற்கையுடன் ஒட்டி வாழும் வாழ்க்கை முறையை தரும் என்கிறார்கள்.


இந்த பூமி வீடுகள் சுவிஸ்சர்லாந்தின் Dietikon எனும் இடத்தில் கிட்டத்தட்ட மறைக்கப்பட்ட வீடுகளாகவே கட்டப்படுகிறது. அதாவது மேலிருந்து பார்ப்பதற்கு சாதாரண குடிசை வீடுகள் போல் தோன்றும். ஆனால் உண்மையில் உள்ளே விசாலமாகவும் வசதியாகவே இருக்கிறதாம். இதில் 9 தனித்தனி வீடுகள் உட்பட உள்ளே 3 முதல் 7 வரையிலான படுக்கறைகளை கொண்டுள்ளன. வீடுகளின் நடுவே செயற்கையான ஏரி அமைக்கப்பட்டிருப்பதுடன் வாகன நிறுத்துமிடங்களும் உள்ளன.


இந்த வீடுகளின் மேல் பூமியின் பச்சை புல் படர்ந்து பாதுக்காக்கப்படுவதாகவும் கோடை மற்றும் மாரி காலங்களுக்கு ஏற்ப இவை வெப்பநிலையினை சமப்படுத்துவதாக அமையும் என தெரிவிக்கின்றனர்.


இயற்கை ஒருங்கிணைப்புடன் அமைத்த வீடுகள் மூலம் பெருமையடைவதாக கூறும் Vetsch கட்டும் பெரும்பாலன வீடுகள் நிலத்தடி வீடுகளாகவே உள்ளன.

Sunday, 21 October 2012

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க, இந்த உணவுகளை சாப்பிடுங்க...

தற்போதுள்ள காலத்தில் கூந்தல் பிரச்சனைகள் அதிகம் உள்ளன. அதிலும் பெண்களை விட ஆண்கள் தான் அதற்கு பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சில சமயங்களில் அந்த கூந்தல் உதிர்வதால், பெண்களுக்கு கூந்தல் மெல்லியதாக தான் காணப்படுகிறது. ஆனால் ஆண்களுக்கு அழகை கெடுக்கும் வகையில் வலுக்கை ஏற்பட்டுவிடுகிறது. இதனால் ஆண்கள் இளமையிலேயே முதிய தோற்றத்திற்கு ஆளாகின்றனர். இத்தகைய கூந்தல் உதிர்தலுக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று பரம்பரையாக வீட்டில் இருப்பவர்களுக்கு வலுக்கை இருந்தால், அது தலைமுறை தலைமுறையாக தொடரும். அவற்றை தடுக்க முடியாது.
சிலர் ஆரம்பத்திலேயே கூந்தலை நன்கு பராமரிக்காமல், ஏனோ தானோ வென்று இருப்பார்கள். பின் கூந்தல் நிற்காமல் உதிரும் போது, உதிருகிறது என்று வருத்தப்படுவார்கள். தேவையில்லாமல் அடிக்கடி எதற்கெடுத்தாலும் வருத்தப்படுவது, டென்சன் ஆவது போன்வற்றால் கூட கூந்தல் உதிர்தல் ஏற்படும். மேலும் சிலருக்கு உடலில் போதிய சத்துக்கள் இல்லாவிட்டாலும் கூந்தல் உதிர்தல் ஏற்படும். அதிலும் உடலில் ஜிங்க், வைட்டமின்கள் போன்றவை குறைவாக இருந்தால், கூந்தல் உதிர்ந்து கொண்டே இருக்கும்.
ஆகவே அத்தகைய கூந்தல் உதிர்தலை தடுக்க சில உணவுகள் இருக்கின்றன. மேலும் அந்த உணவுகளில் ஜிங்க் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. இப்போது அத்தகைய உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

Tuesday, 16 October 2012

நான்கு சூரியன்களுடன் புதிய கிரகம் கண்டுபிடிப்பு

நான்கு சூரியன்களுடன் புதிய கிரகம் ஒன்று விண்வெளி ஆராய்ச்சியாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 5,000 ஒளியாண்டுகள் தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இக்கிரகத்திற்கு PH1 என பெயரிடப்பட்டுள்ளது.

பூமியை விட ஆறு மடங்கு பெரியதான இக்கிரகத்தை சுற்றி நான்கு சூரியன்கள் இருப்பது, மிகவும் அரிதான ஒரு நிகழ்வாக விண்வெளியாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இக்கிரகம் குறித்த நான்கு சூரியன்களுக்கும் இடையில் அசையும் போது பட்டுத்தெறிக்கும் ஒளி விட்டு விட்டு பிரகாசிக்க செய்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு நான்கு சூரியன்களுடன் ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டு எமது விண்வெளி ஆராய்ச்சி துறையில் இதுவே முதன்முறை. அமெரிக்காவின் Yale பல்கலைக்கழக விண்வெளி பிரிவு மாணவர்கள் இருவர் தமது கிரக தேடுதல் வேட்டை திட்டத்தின் கீழ் இக்கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.

நான்கு சூரியன்கள் என்பதால் இக்கிரகத்திற்கு மனிதன் சென்றுவிட்டால், எப்போதும் மாலை நேரத்தில் இரண்டு சூரிய மறைவு தருணங்களையும், நள்ளிரவில் இரண்டு பிரகாசமான நட்சத்திரங்களையும் காண முடியும்.

உடலின் கொழுப்பை உபயோகமானதாக மாற்றும் கேழ்வரகு

உடலின் கெட்ட கொழுப்பை நல்ல கொழுப்பாக மாற்றும் அற்புத ஆற்றல் எதில் இருக்கிறது ?
உணவே மருந்தாக இருக்கவேண்டும் என்பதே சித்த மருத்துவத்தின் தத்துவமாகும். பெரும்பாலான சித்த மருந்துகள் உணவின் வடிவத்திலே காணப்படுகின்றன. சூரணம், லேகியம், மணப்பாகு என பல வடிவங்களில் வழங்கப்படும் சித்த மருந்துகள் பெரும்பாலும் அதிக ஊட்டச்சத்து உடையவையாகவும், பலவித சத்துக்களை உள்ளடக்கியதாகவும் காணப்படுகின்றன. ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை உணவாக உட்கொள்ளும் போது செரிமான மண்டலம் சீராக இயங்குவதுடன் பலவித நோய்களின் ஆதிக்கமும் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆகவேதான் இந்திய உணவு வகைகள் பல மக்களின் உடல்வாகுக்கும், சுற்றுப்புற சீதோஷ்ணத்திற்கும் ஏற்றவாறு காணப்படுகிறது.
உடனடி சக்தியை தரக்கூடிய அரிசி உணவை தென்னிந்தியர்கள் அதிகம் உண்பதும், தாமத சக்தியை தரக்கூடிய கோதுமை, கேழ்வரகு போன்ற உணவுகளை வட இந்தியர்கள் அதிகம் உட்கொள்வதும் காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும். உடலின் தன்மைக்காக மட்டுமின்றி, சுற்றுப்புற சீதோஷ்ணத்திற்கும் ஏற்றவாறு நாம் உணவுகளை உட்கொள்வது அவசியமாகும்.
வெறும் அரிசியை மட்டுமே உட்கொள்பவர்களுக்கு சர்க்கரை நோயால் பாதிப்பு உண்டாகும் பொழுது பிற உணவுகளை உடல் ஏற்றுக்கொள்ள மறுப்பதாலும், ருசி பிடிக்காமலும் மறுபடியும் அரிசி உணவுகளையே உட்கொண்டு தங்கள் சர்க்கரைநோயை கட்டுப்படுத்த இயலாமல் திணறுகின்றனர். அது போல் வட இந்தியர்கள் கோதுமை, கேழ்வரகு போன்ற உணவுகளை உட்கொள்வதால் உடனடி சக்தி கிடைக்காமல் உடல் உழைப்பு சற்று குறைந்து காணப்படுகின்றனர். ஆகவே ஒவ்வொருவரும் பலதரப்பட்ட சத்துக்களையும் உள்ளடக்கிய கலப்பு உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அரிசியை விட ஊட்டச்சத்து அதிகம் மிகுந்த கோதுமை போன்ற பல தானியங்கள் நடைமுறையில் உள்ளன. அவற்றையும் அடிக்கடி உணவில் எடுத்துக்கொள்வதால் உடலில் சத்துக்குறைபாடு ஏற்படாமல் தடுக்கலாம். அவ்வாறு நாம் உட்கொள்ளும் உணவானது வெறும் கார்போஹைட்ரேட் மட்டுமின்றி இதர சத்துக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அரிசிக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய தானியங்களில் முக்கியப் பங்கை வகிப்பது ராகி என்று அழைக்கப்படும் கேழ்வரகு ஆகும்.
சிறு குழந்தைகள், வளரும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற உணவாக கேழ்வரகு கருதப்படுகிறது. அரிசியைப் போன்றே சர்க்கரையளவு இதில் காணப்பட்டாலும் சீரண மண்டலத்தில் சர்க்கரையை கொஞ்சங் கொஞ்சமாக வெளியிடுவதால் சர்க்கரை நோயாளிகளும் உட்கொள்ளும் சிறப்பு உணவாக பரிந்துரைக்கப்படுகிறது.
எலுசின் கோரக்கேனா என்ற தாவரவியல் பெயர் கொண்ட போயேசியே குடும்பத்தைச் சார்ந்த புல்லைப் போல் வளரும் கேழ்வரகு தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெருமளவு பயிர் செய்யப்படுகிறது. கருஞ்சிவப்பு நிற ராகியை விட வெள்ளை ராகியே தரம் உயர்ந்ததாக கருதப்படுகிறது. ராகியில் பெருமளவில் புரதம், பாஸ்பரஸ், இரும்பு, தையமின் மற்றும் ரைபோபிளேவின் வைட்டமின்கள் காணப்படுகின்றன. இரத்தத்திலுள்ள கொழுப்பையும் மற்றும் கொழுப்பு அமிலங்களையும் கரைத்து கெட்ட கொழுப்பை நல்ல கொழுப்பாக மாற்றும் அற்புத ஆற்றலை படைத்தது கேழ்வரகாகும்.
கேழ்வரகை களியாக கிண்டியோ, புட்டு போல் வேகவைத்தோ, அடை அல்லது ரொட்யாக சுட்டோ , கூழ் போல் செய்து குடித்தோ பல்லாண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். கால்கிலோ கருப்பட்டியை 300மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து வடிகட்ட வேண்டும். அரைகிலோ ராகிமாவு, கால் தேக்கரண்டி உப்பு மற்றும் நான்கு மேசைக்கரண்டி தேங்காய்த்துருவலுடன், இந்த கருப்பட்டி நீரை கலந்து கெட்டியாக பிசையவும். இதனை நல்லெண்ணெய் ஊற்றி ரொட்டியாக சுட்டு சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் ராகியை புட்டாக செய்து சாப்பிடலாம்.
அரைகிலோ ராகி மாவை தண்ணீர் மற்றும் கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து உதிரியாக கிளறி 10 நிமிடங்கள் இட்லி போல் ஆவியில் வேகவைத்து அத்துடன் பொடித்த ஏலக்காய்த்தூள், தேவையயனில் தேங்காய் துருவல் மற்றும் நெய் கொஞ்சம் சேர்த்து கிளறி வைத்துக்கொள்ள வேண்டும். இது இரத்த சர்க்கரையளவு அதிகப்படாமல் கட்டுப்படுத்துவதுடன், பசியையும் மட்டுப்படுத்தும்.
கேழ்வரகு கொழுப்பு அமிலங்களை மாற்றுவதில் தீவீரமாக செயல்படுவதால் சிலருக்கு தோல் வறட்சியும், அரிப்பையும் உண்டாக்கலாம். அது போன்றவர்கள் உணவில் கேழ்வரகை குறைந்த அளவில் சேர்த்துக் கொள்ளலாம்.
- 4தமிழ்மீடியாவுக்காக:   டாக்டர்.ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை.

துருக்கியில் 7 பதக்கங்களை வென்ற இந்திய டாக்டர்

டெல்லி: துருக்கியில் நடைபெற்ற உலக மருத்துவம் மற்றும் சுகாதார விளையாட்டு போட்டிகளில் 7 பதக்கங்களை வென்ற இந்திய டாக்டர் சுரேந்திர பூனியாவை, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பாராட்டினார்.
துருக்கியில் 33வது உலக மருத்துவம் மற்றும் சுகாதார விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஒலிம்பிக்கில் இடம்பெற்ற 22 போட்டிகள் நடத்தப்பட்டது. 47 நாடுகளை சேர்ந்த 2,300க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்தியாவை சேர்ந்த மேஜர் டாக்டர் சுரேந்திர பூனியா பங்கேற்று பவர் லீப்டிங் போட்டி மற்றும் 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டிகளில் கலந்து கொண்டு தலா 1 தங்கப்பதக்கம் வென்றார். மேலும் 400, 1,500, 5 ஆயிரம் மீ்ட்டர் கிராஸ் கன்ட்ரி ஓட்டம் மற்றும் பென்டதலான் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்ட பூனியா 5 வெள்ளிப்பதக்கங்களை வென்றார்.
இவரது விளையாட்டு திறனை பாராட்டும் வகையில், குடியரசு தலைவர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பூனியாவை, குடியரசு தலைவர் பாராட்டி கவுரவித்ததாக, குடியரசு தலைவர் மாளிகை செய்தியாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் மாளிகையின் பாதுக்காவல் படையில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வரும் பூனியா, 3வது முறையாக சர்வதேச அளவிலான போட்டிகளில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார். கடந்த ஆண்டு லாஸ் பால்மஸ் மற்றும் ஸ்பெயினில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டு 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் வென்றார்.
அவரது விளையாட்டுத் திறனை பாராட்டி இந்த ஆண்டுக்கான விஷிஷ்த் சேவா பதக்கத்தை குடியரசு தலைவர் வழங்கினார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராஜ்புரா என்ற கிராமத்தை சேர்ந்த பூனியா, புனேயில் உள்ள ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்றவர். President Felicitates Surendra Poonia Winning 7 Medals

வேலூர் மாவட்டத்தின் வரலாறு

வேலூருக்கு கோட்டையும், சிறைச்சாலையும் அடையாளங்கள். சுற்றுபுறக் கிராமங்களுக்கான சந்தை நகரம். கோட்டைக்குள் இருக்கும் கோயில் பிரசித்திப்பெற்றது. இங்கு மாவீரன் திப்பு சுல்தானை கி.பி.

1799 இல் தோற்கடித்த போரில் உயிரிழந்த ஆங்கிலேய தளபதி ஒருவரின் கல்லறை உள்ளது. இந்நினைவிடம் வேலூர் கலகத்திற்கும் சாட்சியாக இருக்கிறது. இங்கு பாலாறும் பொன்னையாறும்

ஓடுகின்றன .வேலூர் மாவட்டத்தின் வெயில் ஊருக்கெல்லாம் தெரிந்த செய்தி. வடஆற்காடு பிரிக்கப்பட்டு அம்பேத்கார் மாவட்டமாக விளங்கிறது.பின்பு வேலூர் மாவட்டமாக பெயர் மாற்றப்பட்டது.

வேலூர் கோட்டை 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியின் போது சின்ன பொம்மி நாயக்கரால் கட்டப்பட்டது. 17ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிஜாப்பூர் சுல்தான் இக்கோட்டையை கைப்பற்றினார்.

பின்னர் மராட்டியர்களாலும், தில்லியின் தௌத் கானாலும் கைப்பற்றப்பட்டது. இதன் பின்னர் ஆற்காடு நவாபுகளின் பொறுப்பில் இக்கோட்டை விடப்பட்டது. 1760ஆம் ஆண்டு இக்கோட்டை பிரிட்டிஷ்

கிழக்கிந்திய கம்பெனியினரின் வசம் சென்றது. திப்பு சுல்தானை வென்ற பிறகு அவருடைய மகன்களை இக்கோட்டையில் ஆங்கிலேயர் சிறை வைத்தனர். 1806 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக

இக்கோட்டையில் இந்திய சிப்பாய்கள் கலகம் நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சியை, வேலூர் சிப்பாய் எழுச்சி என்று இந்திய வரலாற்றில் குறிப்பிடுகின்றனர்.

வேலூரில் பொற்கோயில் ஒரு சுற்றுலா தலமாக உள்ளது, இக்கோயிலில் கூரை முழுவதும் தங்கத்தால் வேயபட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து தரிசித்து செல்கின்றனர்.

Monday, 15 October 2012

பஸ் வண்டிக்குள் மாளிகை : அசையும் அழகிய வீடு : புகைப்படங்கள்

ஒரு மிகப் பெரிய பஸ் வண்டிக்குள் ஆடம்பரமாக உயிர் வாழத் தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியுள்ளனர்
கீழே நவீன ரக ஃபெரரி அல்லது லம்போகினி காரை நிறுத்தக் கூடிய வசதியுடனும் கூடிய அழகிய அதிசய வீடு போன்ற பஸ் வண்டிகளை ஜேர்மன் தொழிநுட்பவியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

சுமார் 1.2 மில்லியன் யூரோ பெறுமதியுடைய இந்த அசையும் மாளிகை பஸ் 40 அடி நீளமானது.இது போன்ற பஸ் வண்டிகளுக்குள் தளபாடங்கள் உறுதியான மரத்தில் செய்யப் பட்டது அல்லது இரும்பினால் செய்யப் பட்டது வேண்டுமா என வாடிக்கையாளர் தெரிவு செய்ய முடியும். மேலும் இந்த பஸ் வண்டிக்குள் அதியுயர் தரமுடைய லெதர் இருக்கைகளும் Tiles பொருத்தப் பட்ட சமையலறையும் குளியலறையும் காணப் படுகின்றன.

மேலும் சமையலறையில் மிகப் பெரிய குளிர்சாதனப் பெட்டியும், அழகான Dish Washer உம், மைக்ரோவேவ் மற்றும் டொல்பி ஹோம் என்டெர்டெயின்மென்ட் சிஸ்டமும், நீண்ட திரையுடன் கூடிய தொலைக் காட்சியும் காணப் படுகின்றன.


பல நூறு கிலோ மீட்டர்களுக்கு நாட்டுக்கு நாடு இடையே குடும்பத்துடன் பயணிப்பதற்கு ஏதுவான இந்த பஸ் வண்டி தனது முதலாவது பயணத்தை இம்மாத இறுதிக்குள் ஜேர்மனியின் டஸ்ஸெல்டோர்ஃப் நகரில் இருந்து ஆரம்பிக்க உள்ளது.

மனிதகுலத்தின் மற்றுமொரு மாபெரும் பாய்ச்சல் : பெலிக்ஸ்சின் உலக சாதனை :புகைப்படங்கள்

பூமியின் ஓட்டிலிருந்து குதித்த வீரர் ஃபெலிக்ஸ் பௌம்கார்ட்னர் இன் உலக சாதனை மனித குலத்தின் மற்றுமொரு சாதனை பாய்ச்சல் இதுவென வர்ணிக்கப்படுகிறது.
120,000 அடி உயரத்திலிருந்து பூமிக்கு குதிப்பதற்கு முன்பாக மேற்கொண்ட  தயார்படுத்தல்களை காட்டுகிறது இப் புகைப்படங்கள்.





















தொடர்புச் செய்திகள்: