
பூமிக்கு வெளியில் விண்வெளியில் நின்று கொண்டு பூமியை நோக்கி மனிதனொருவன் குதிப்பது எப்படிப்பட்டது என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அந்த கற்பனையை நிஜமாக்கும் ஃபெலிக்ஸின் சாதனைக்காக தான் உலகம் இன்று காத்துக்கிடக்கிறது.
வேகமான காற்று திடீரென எங்கிருந்தோ வந்து அவரது பாரசூட் பலூன்களை நிலைகுலைய செய்ததை அடுத்து நேற்று செவ்வாய்க்கிழமையும் இம்முயற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காலநிலை சீர்கேட்டால் தாமதமாகிவந்த இச்சாகசம், நேற்று (செவ்வாய்க்கிழமை) புறப்பட ஆயத்தான இறுதி வினாடியில் இடைநிறுத்தப்பட்டது.
ஆஸ்திரேலிய Skydiver ஆன பெலிக்ஸ், பாரசூட் மற்றும் கேப்சுல் விண்கலம் மூலம் தரையிலிருந்து 120,000 அடி (22 மைல், 36.5 கி.மீ) உயர வான்பரப்பிற்கு சென்று அங்கிருந்து பூமியை நோக்கி குதிக்கும் முயற்சிக்கு சமீபகாலமாக கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றார்.

இந்த சாகசத்திற்கு பின்னால் அவருக்கு Redbull நிறுவனம் துணைநிற்கிறது. இதற்கான பல நூறுபேர் கொண்ட குழுவினர் பின்னின்று உழைத்துவருவதுடன், பெலிக்ஸ் அவ்வாறு தனது சாகசத்தை புரியும் போது அதை நேரடியாக இணையத்தில் யூடியூப் வழியாக நேரலை ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடாகியிருக்கிறது
1960ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் Joe Kittinger எனும் அமெரிக்க விமானப்படை வீரர், தரையிலிருந்து சுமார் 102,800 அடி ( 19.5 மைல்) உயரம் சென்று அங்கிருந்து பூமிக்கே குதித்ததே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது. அதாவது மனிதன் அதிக உயரத்திலிருந்து குதித்த சாதனை அது. அதுவும் யுத்த தேவை கருதி ஒரு பரிசோதனை முயற்சியாகவே நடைபெற்றதால் உயிராபத்தின் மத்தியில் கட்டாய சூழ்நிலையில் அந்த விமானப்படை வீரர் அவ்வளவு உயரத்திலிருந்து குதித்திருந்தார்.

ஆனால் இத்தேவை அதன் பின்னர் எழவில்லை என்பதாலும், எவரும் சாகசத்திற்காக உயிரை துச்சமாக மதிக்க துணியவில்லை என்பதாலும் இன்றுவரை இச்சாதனை முறியடிக்கப்படவில்லை. இதையடுத்தே பெலிக்ஸ் இப்புதிய சாதனைக்காக தன்னை தயார் படுத்திவருகிறார். அநேகமாக நாளை புதன்கிழமை அவர் இச்சாதனை முயற்சியை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கவனிக்க : இச்சாதனை நிகழ்த்துவராயின் ஒலியின் வேகத்தை விட அதிவேகமாக பயணம் செய்யும் உலகின் முதல் மனிதன் எனும் புகழும் பெலிக்ஸுக்கு கிடைக்கும். காரணம் அவ்வளவு வேகமாக பூமியை நோக்கி அவர் வீழ்வார். அவரது சாகசத்தை இந்த இணைப்புக்களின் ஊடாக நீங்கள் நேரடியாக பார்க்க முடியும். :
http://www.space.com/17956-red-bull-stratos-skydive-live-video.html
http://www.youtube.com/redbull
ஃபெலிக்ஸின் சாதனை எவ்வாறானது காண்பிக்கும் அனிமேஷன் வீடியோ :
- 4தமிழ்மீடியாவுக்காக ஸாரா
No comments:
Post a Comment