Wednesday, 28 November 2012

2013ல் உலகளாவிய இலவச ரோமிங் சேவையை வழங்கும் வாயேஜர் மொபைல்

கணினி, இணைய தளம் மற்றும் மொபைல்கள் வந்த பிறகு இந்த உலகம் ஒரு குக்கிராமமாக மாறியிருக்கிறது. அதுபோல் நாடு விட்டு நாடு பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் அதிகரித்திருக்கிறது. மேலும் அடிக்கடி பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் வெகு வேகமாக அதிகமாயிருக்கிறது.
இந்த நிலையில் நாடு விட்டு நாடு பயணிப்பவர்கள் தங்கள் மொபைல்களைப் போகும் இடமெல்லாம் பயன்படுத்துவதால் அவர்களின் மொபைல் கட்டணம் பலமடங்காக அதிகரிக்கிறது. அதற்கு காரணம் ரோமிங் கட்டணம்.
அதாவது நாடு விட்டு நாடு செல்லும் போது வெளி நாட்டில் மொபைல் போன்களைப் பயன்படுத்தும் போது அழைப்புக்களை பெறுவதற்கும் மற்றும் அழைப்புகளை விடுப்பதற்கும் தனியாக ரோமிங் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த ரோமிங் கட்டணம் தற்போது மிக அதிகமாக இருக்கிறது. அதனால் பலர் உலகப் பயணத்தின் போது தங்களின் மொபைல்களைப் பயன்படுத்துவதில்லை.
ஆனால் 2013க்குள் இலவச ரேமிங்கை வழங்க இருக்கிறது ஒரு தொலைத் தொடர்பு நிறுவனம். அமெரிக்காவைச் சேர்ந்த வாயேஜர் மொபைல் என்ற நிறுவனம் ப்ராஜெக்ட் குளோபல் வாயேஜர் என்ற ஒரு புதிய சேவையை வழங்க இருப்பதாக உறுதி அளித்திருக்கிறது. இந்த சேவை வரும் 2013ல் தொடங்க இருக்கிறது.
இந்த சேவையின் மூலம் உலக அளவில் பயணிக்கிறவர்களுக்கு இலவச ரோமிங் சேவையை இந்த நிறுவனம் வழங்க இருக்கிறது. இந்த சேவை பேட்டன்ட் பென்டிங் குளோபல் வையர்லஸ் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும். மேலும் இந்த சேவையின் மூலம் உலகளாவிய வாய்ஸ், எஸ்எம்எஸ், டூவல் ஜிஎஸ்எம் மற்றும் சிடிஎம்எ சாதனங்களில் உலகளாவிய டேட்டா போன்றவற்றை ரோமிங் கட்டணம் இல்லாமல் பெறமுடியும்.
வாயேஜர் மொபைல் நிறுவனத்தின் தலைவர் ஜான் மார்த்தினி கூறும் போது இந்த புதிய தொழில் நுட்பம் அல்லது சேவை நிறுவனங்கள், வர்த்தகர்கள், பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை உலக அளவில் ஒருங்கிணைக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

உங்களுக்கு நோமோஃபோபியா இருக்கா? படிச்சு பாருங்களேன்...

நோமோஃபோபியா அப்படியெனில் என்னவென்று யோசிக்குறீர்களா? அது வேறொன்றும் இல்லை. இது ஒரு வகையான பய வியாதி தான். சாதாரணமாக ஃபோபியா என்றால் காரணமின்றி தேவையில்லாமல் மனதில் எழும் ஒருவித பயம் என்று அர்த்தம். அந்த ஃபோபியாவில் நிறைய வகைகள் உள்ளன. அவை பூச்சிகளைப் பார்த்து பயப்படுவது, பொது இடங்களில் பேச பயப்படுவது என்பன. அவற்றில் ஒன்றான நோமோஃபோபியா என்றால் தற்போது அனைவரிடமும் இருக்கும் மொபைலை எங்கேனும் தவறிவிட்டாலோ அல்லது மறந்து வீட்டில் வைத்து விட்டு, பின் அதனை நினைத்து வருத்தப்படுவது தான் நோமோஃபோபியா. கடந்த பல வருடங்களாக இந்த வியாதியானது பலரிடம் அதிகம் காணப்படுகிறது.
nomophobia signs you have it
ஏனெனில் தற்போது நமது டெக்னாலஜி அதிகம் வளர்ந்துவிட்டது. அதனால் அவற்றை மக்கள் தெரிந்து கொள்ள அதிக ஆர்வத்துடன் இருக்கின்றனர். பின் அவை மிகவும் பிடித்து, அவற்றின் பயன்பாடு அதிகமாகிவிட்டது. சில நேரங்களில் அவை இல்லாமல் எந்த ஒரு காரியமும் செய்ய முடியாத நிலையில் உணர்கின்றனர். ஆகவே இந்த மொபைலைப் பற்றி மேற்கொண்ட ஒரு ஆய்வில், தங்களிடம் வைத்திருக்கும் மொபைல் போனில் 66 சதவீத மக்கள், இந்த நோமோஃபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

சரி, உங்களுக்கும் நோமோஃபோபியா இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நோமோஃபோபியாவின் அறிகுறிகள்...
* இரவில் படுக்கும் போது மொபைலை தொலைத்துவிடுவது போல் கனவுகள் வந்து, அதனால் மனம் பதறி உடனே எழுந்து மொபைல் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, பின்னர் தூங்கினால், இந்த நோய் உள்ளது என்பதை அறியலாம்.
* தூங்கும் போது மொபைலை அருகில் வைத்துக் கொண்டே தூங்குவது. அவ்வாறு ஒரு நாள் கூட தவறாமல், அந்த மொபைலை படுக்க போகும் போது கையில் எடுத்துக் கொண்டு, தலையணைக்கடியில் வைத்துக் கொண்டோ அல்லது அருகில் வைத்துக் கொண்டோ தூங்கும் பழக்கம் இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இல்லையெனில் இந்த நோயால் பைத்தியம் கூட பிடிக்க நேரிடும்.
* செல்போனானது வீட்டில் எங்கேனும் வைத்துவிட்டு, பின் அது ஏதோ ஒரு பேப்பரின் அடியில் இருக்க, ஆனால் அது நமது கண்களுக்கு தெரியாமல் இருந்து, தொலைந்துவிட்டது என்று மனம் முடிவு செய்துவிட்டால், அப்போது உடனே முகம், உடல் முழுவதும் வியர்க்க ஆரம்பிக்கும். மேலும் மனம் சிறிது அப்செட்டில் இருக்கும். இப்படியிருந்தால், அது இந்நோய்க்கான அறிகுறி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
* குளிக்கும் போது கூட மொபைலை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றால், இதுவும் நோமோஃபோபியாவிற்கு ஒருவித அறிகுறி.
* சிலர் ஒன்றுக்கு இரண்டு மொபைல் போன்கள் வைத்திருப்பார்கள். ஏனெனில் ஒரு மொபைலில் சார்ஜ் அல்லது தொலைந்துவிட்டாலோ, மற்றொன்றை பயன்படுத்தலாம் என்று முன்பே யோசித்து, அவர்களுடனே வைத்திருப்பார்கள். இத்தகைய அறிவு இந்த நோய் இருப்பவர்களுக்குத் தான் அதிகம் இருக்கும்.
* சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும் போது, மொபைலில் சார்ஜ் குறைந்தால், நன்கு பேசிக் கொண்டிருப்பவர்களின் மனநிலையிலும் சார்ஜ் குறையும். பின்னர் மொபைலுக்கு சார்ஜ் போட்டால் தான், இவர்களது மனமும் சற்று பிரகாசிக்கும்.
மேற்கூறியவற்றில் நான்கு அறிகுறிகள் இருந்தாலும், இந்த நோய் உங்களுக்கு உள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.

புவியின் நிலத்துக்கு அடியில் எவ்வளவு தூரம் செல்லலாம்? : புதிய முயற்சியில் மனிதன்

மனிதன் சந்திரனுக்கு சென்று வந்துள்ளான். செவ்வாய்க் கிரகத்திலிருந்தும் சில மாதிரிகளை சேகரிக்கவும் திட்டம் தீட்டியுள்ளான்.
ஆனால் சொந்த பூமியில் நிலத்துக்கடியில் எவ்வளவு தூரம் சென்றுள்ளான்? என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடையாது. ஆனால் இக்கேள்விக்குப் பதில் காண்பதற்கான செயற்திட்டம் சுமார் $1 பில்லியன் டாலர்கள் செலவில் வெகு விரைவில் நடைபெறவுள்ளது,

அதாவது கடலுக்கு அடியில் சுமார் 6 Km தூரத்துக்கு நிலத்தைத் தோண்டி பூமியின் சூடான அடர்ந்த சிலிக்கேட் பாறைகளால் சூழப்பட்ட பகுதி (mantle) அதாவது பூமியின் மையத்துக்கும் மேலோட்டுக்கும் இடையில் (interior between the crust and the core) உள்ள பிரதேசத்துக்குச் செல்லவுள்ளனர்.

மேலும் அங்கு காணப்படும் பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்கு முற்பட்ட சுவடுகளையும், பாறை, மண் மாதிரிகளையும் சேகரிக்கவுள்ளனர். இம்மாதிரிகள் மூலம் புவியின் தோற்றம் மற்றும் பரிணாமம் குறித்த மிகப் பெரிய சவாலான கேள்விகளுக்கு விடை காண முடியும்.

இச் செயற்திட்டத்தின் கடினத் தன்மை காரணமாக அது புவியியல் வரலாற்றிலேயே மிக முக்கியமான மைல்கல் என அழைக்கப் படுகின்றது. ஜப்பானை அடித்தளமாகக் கொண்டு மேற்கொள்ளப் பட இருக்கும் இச் செயற்திட்டம் இன்னும் 10 வருடங்களுக்குள் முடிவடையும் எனவும் 2020 தொடக்கத்தில் புவியின் உள்ளகத்துக்கு மனிதனால் செல்ல முடியும் எனவும் கூறப்படுகின்றது.

அபி ஒன்றாம் வகுப்பு படிச்சிருக்காள்..!


அபி, அர்ச்சனா, அசின், அணு, அருண் என அகர வரிசையில் படு நாகரீகமாகன பெயர்களைக் கொண்டிருந்த அப் பிள்ளைகள், வீடு வீடாகச் சென்று சாப்பாடு கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.
பின் யார்வீட்டிலாவது டி.வி. பாரக்கிறார்கள். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளை ஏக்கத்துடன் பார்த்தபடி நிற்கிறார்கள்.

இந்த குழந்தைகளுக்கு அந்த கிராம மக்கள் அன்போடு உணவளிக்கின்றனர். மாலையில் பள்ளிப் பிள்ளைகள் யாராவது பேச்சுக்கொடுத்து விளையாடினால், பிள்ளைப்பராயக் குதுகலத்துடன் துள்ளி விளையாடுகிறார்கள். ஆனாலும் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டு கதவைத் தட்டி உணவு யாசகம் கேட்பது நெஞ்சைப் பிசைவதாகவே இருந்தது.


யார் இவர்கள்..?

சேலம் மாவட்டம் தாண்டவராயபுரம் கிராமத்தில் கடந்த ஒருமாத காலமாக குறி சொல்லி பிழைப்பு நடத்திவரும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த சுப்ரமணியன் பிள்ளைகளிவர்கள். சுப்ரமணியனும், அவர் மனைவி வள்ளியும், பகல் முழுவதும் தெருத்தெருவாக சென்று குறி சொல்லியும், கைரேகை ஜோதிடம் பார்த்தும் தொழில் நடத்தி வருகிறார்கள்.
மாலையில் தற்காலிமாகத் தங்கியிருக்கும் முருகன் கோவில் மண்டபத்தினருகே அன்றைய வருமானத்தில் சமைக்கும் உணவோடு பிள்ளைகள் வீடுகளில் யாசகம் பெற்ற உணவினையும் சேர்த்து பகிர்துண்டபின் கோவில் மண்டபத்திலேயே உறங்கிவிடுகிறார்கள்.

ஊர் ஊராகச்சென்று ஜோசியம் சொல்லும் சுப்ரமணியத்திற்கு தன் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து எந்தக் கணிப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. அவரிடமே கேட்டோம்; 'ஒரு கீரி கிடைச்சுது அதைக் குழம்பு வைக்கிறேன்... ' எனச் சமையலில் அக்கறை காட்டியவாறே எங்கள் பக்கம் திரும்பிப் பேச்சுக் கொடுத்தார்.

" கொல்லிமலைப் பக்கத்தில் இருக்கிற தொட்டியம் என் சொந்த ஊர். எங்கள் இனத்திலேயே என்னிடம் மட்டும்தான் ரேசன் கார்டு, வாக்காளர் அட்டை எல்லாமே உள்ளது. ஆனால் இப்போது அவற்றுக்கு எந்தப் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது. தொட்டியத்தில் நான் மூன்று வீடு கட்டினேன். என் உடன் பிறந்த சகோதரர்களுக்கு நம்பிக்கையாக வீட்டை எழுதி வைத்தேன், கடைசியில் அனைத்தையும் இழந்து, கடனாளி ஆகி நடுத்தெருவுக்கு வந்து விட்டேன். எங்கள் இனத்தில் உறவினர் அல்லாத மற்றவர்கள் கூட உதவ முன்வருவார்கள். ஆனால் என் தம்பிகள் எனக்கு உதவ முன் வரவில்லை. அதனால் எனக்கு அந்த ஊரில் இருக்க பிடிக்காமல் ஊர் ஊராகச் சென்று குறி சொல்லி, கைரேகை ஜோதிடம் பார்த்து கடந்த 5 வருடங்களாக பிழைப்பு நடத்தி வருகிறேன்" என்றார் சுப்ரமணியன்.

'பெண் குழந்தைகளை பள்ளிக்கும் அனுப்பாமல், இப்படி வீடு வீடாக சென்று பிச்சை எடுக்க விடுகிறீர்களே, உங்களுக்கு மனம் ஒப்புகிறதா என்று கேட்டால் "திருடக் கூடாது, பொய் சொல்லக் கூடாது. கேட்டு வாங்கி சாப்பிடுறதில் தப்பு ஒன்றும் இல்லையே" என்கிறார். மேலும் தொடர்ந்து பேசுகையில் "எங்கள் இனத்தில் எதற்கும் கூச்சப் படக்கூடாது. என் பிள்ளைகள் புத்தி சாலிகள், கூச்சப்பட மாட்டார்கள். என் பெரிய பெண் அபி ஒன்றாம் வகுப்பு வரை படித்து விட்டே ரொம்ப யூகமாக இருக்கிறாள். எங்கள் ஜாதியில் பெண் குழந்தைகள் படிக்க வைத்து ஒன்றும் ஆகப் போவதில்லை. ஆனால் நல்ல யூகம் கிடைக்க ஒரு ஐந்தாம் வகுப்பு வரையாவது படிக்க வைக்க ஆசைப் படுகிறேன். யாராவது இருக்க இடம் கொடுத்து, உதவி செய்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்து விட்டால் நான் பிறந்த பிறப்பு அர்த்தம் உள்ளதாக இருக்கும் " எனச் சொல்லி ஆதங்கப்படுகிறார்.

பேசிக் கொண்டிருக்கையிலேயே மழை வந்துவிட, பூட்டிய கோயிலின் வராண்டாவிலும் தங்க முடியாமல், பக்கத்திலுள்ள ஒரு பெரிய வீட்டின் பந்தல் போட்ட திண்ணையில், தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் ஒதுங்கினார்கள். ஓதுங்கிய அப்பெண் குழந்தைகளின் கண்களில் கன நேரம் ஒரு மிரட்சி எட்டிப் பார்த்தது.

கிடுகிடுவென்று வளர்ந்து வரும் பெண் குழந்தைகளை வெறும் குறி சொல்லி காப்பாற்றி விடுவாரா சுப்ரமணியன்? என எண்ணியதை அவரிடமே கேட்டோம்.

" எங்கள் ஜாதியில் பெண் குழந்தைகளை கட்டிக் கொடுப்பது அப்படி ஒன்றும் சிரமம் இல்லை. பவுன் போடவேண்டிய அவசியம் இல்லை. வளர்த்து ஆளாக்க வேண்டியது மட்டும்தான் எங்கள் வேலை " எனச் சாதாரணமாகச் சொல்லிவிட்டு தூக்கத்திற்குத் தயாரானார் சுப்ரமணியன்.

வசதிகளும் நவீனங்களும் கொண்டு வளர்ந்து வரும் சமுதாயத்தின், நடைமுறை வாழ்வில் இப்படியும் பல குழந்தைகளின் வாழ்நிலை அவலமாகவே இருக்கிறது. அப்படியாயின் எமது சமூகத்தின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சி...?
இப்பதிவினை வாசிக்கும்  சமூக அக்கறை மிக்க வாசகர்கள் யாராவது அப்பகுதியில் இருந்தால்,  யாசகம் கேட்கும் அந்தச் சிறுவர்களுக்கு கல்வித் தானம் கிடைக்க வகை செய்தால், வாழ்வு சிறக்கும். அச்சிறுவர்களின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.

- 4தமிழ்மீடியாவுகாக எழில்செல்வி படங்கள் : எழில்சூர்யா

Wednesday, 21 November 2012

ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவரா? முழங்கால் பத்திரம்

லண்டன்: ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு முட்டி பிரச்சனை வருவதாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த பிரச்சனைக்கு ஆபீஸ் மூட்டி நோய் என்று பெயரிட்டுள்ளனர்.
 desk job could give you office knee disease
இங்கிலாந்தில் பணியாற்றும் கால்வாசிக்கும் மேற்பட்டோர் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். அதற்கு காரணம் உடல் பருமன் மற்றும் காலையில் இருந்து மாலை வரை ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மூட்டு வலி வயது வித்தியாசம் இன்றி அனைவருக்கும் வருகிறது.

ஆனால் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் இந்த பிரச்சனையால் அதிகம் அவதிப்படுகின்றனர். 16 வயது முதல் 65 வயது வரையுள்ள 1,600 பேரிடம் கேட்டதில் சுமார் கால்வாசிக்கும் மேற்பட்டோர் தாங்கள் 2 ஆண்டுகளாக மூட்டு வலியுடன் வாழ்வதாகத் தெரிவித்துள்ளனர்.
அலுவலக மூட்டு நோய்க்கு இன்டர்நெட் சார்ந்த வேலை மற்றும் ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் வேலைகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
அதிக எடையால் மூட்டு எலும்பு நொறுங்குவதை தாங்கள் பார்த்துள்ளதாக எலும்பியல் மருத்துவர் ரானன் பனிம் தெரிவித்துள்ளார். இப்படியே உடல் பரும்ன் அதிகரித்துக் கொண்டிருந்தால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பலருக்கு தேவைப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Monday, 19 November 2012

கடல் வாழ் உயிரினங்கள் பற்றிய அறிவு மனிதனிடம் மிக குறைவாகவே உள்ளது : நியூசிலாந்து ஆய்வாளர்கள்

நியூசிலாந்து கடல் ஆய்வாளர்கள் இணைந்து சமீபத்தில் மேற்கொண்ட சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி ஒன்றின் போது வியப்பான தகவலை வெளியிட்டுள்ளனர்.
அதாவது கடலில் வாழும் தாவரங்கள் மற்று உயிரினங்கள் பற்றிய அறிவு இன்றைய மனிதனிடம் 1/3 பங்கே உள்ளது எனவும் கடல் உயிரினங்கள் பற்றி இன்னும் அதிகளவு மனிதன் கற்க வேண்டியுள்ளது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

உயிரியல் பாடத்திட்டத்தில் சமீபத்தில் சேர்க்கப் பட்ட கல்வியின் படி இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதாவது உயிரியலில் விளக்கப்பட்டுள்ள 226 000 உயிரினங்கள் மற்றும் விளக்கப் படவுள்ள 72 000 உயிரினங்கள் உட்பட சுமார் 1 மில்லியன் உயிரினங்கள் உலகம் முழுதும் கடலுக்கடியில் வாழ்கின்றன.

மிக அரிதான மற்றும் அழகிய கடல் வாழ் உயிரினங்களைக் கொண்டுள்ள நியூசிலாந்தின் கடல் பரப்பில் ஆய்வு செய்து வரும் கடலியலாளர்கள் மேலே கூறப்பட்ட எண்ணிக்கையுடன் மேலும் 20 000 கடல் உயிரிகளை கடந்த 10 வருடங்களுக்குள் கண்டுபிடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து 21 ஆம் நூற்றாண்டே இதுவரை கடல் வாழ் உயிரினங்களை அதிகம் கண்டுபிடித்த நூற்றாண்டாகும் என நியூசிலாந்தின் அவுக்லாந்து பல்கலைக்கழகத்தின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஆய்வின் பொருட்டு உலகி அதி சிறந்த 120 நிபுணர்கள் பணியாற்றியுள்ளனர். இதற்கென கடலில் வாழும் உயிரினங்களான பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, பூச்சிகள், மற்றும் பெரிய தாவரங்கள் ஆகியவற்றை வகைப் படுத்தி ஆராய்ந்துள்ளனர். உலகெங்கும் பரந்து வாழும் கடல் வாழ் உயிரினங்களை வகைப் படுத்தும் பணியில் 32 நாடுகளைச் சேர்ந்த 300 விஞ்ஞானிகளின் திறந்த பாவனைக்கான ஆன்லைன் தகவல் களஞ்சியம் பயன்படுத்தப் பட்டுள்ளது.

Sunday, 18 November 2012

லேசான புல்லட் ப்ரூப்: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

 Paper Thin Bulletproof Super Material Developed
நியூயார்க்: காகிதம் போன்ற மெல்லிய புல்லட் ப்ரூப் பொருளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது லேசானது என்பதால் விவிஐபிக்கள் இனி சிரமமின்றி அணியலாம்.
விவிஐபிக்களுக்கு பாதுகாப்பிற்காக குண்டு துளைக்காக உடையை அணிவது வழக்கம். இதேபோல் குண்டு துளைக்காத கார், ராணுவ தளவாட அறைகள் போன்றவை குண்டுதுளைக்காக வகையில் உருவாக்கப்படுகின்றன. இவை அதிக தடிமனான உலோகங்களால் ஆனாவை. இதனால் இப்படியான உடைகளை அணிவது விவிஐபிக்களுக்கு சிரமமாக இருக்கும்.
அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாண பல்கலைக்கழக தொழில்நுட்ப பிரிவு வல்லுனர்கள், தற்போது "நானோ" தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, காகிதம் போன்ற மெல்லிய புல்லட் ப்ருப் பொருளை தயாரித்துள்ளனர்.இது கண்ணாடி போன்று பளபளப்பாகவும், ரப்பரை போன்று வளையும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.
இந்த மெல்லிய தன்மை வாய்ந்த புல்லட் ப்ருப் பொருள், துப்பாக்கி குண்டுகளை துளைக்க விடாமல் தடுப்பதை வெற்றிகரமாக சோதித்துள்ளனர். இது அதி அற்புதமான கண்டுபிடிப்பு என்று ரைஸ் ஸ்கூல் ஆப் இஞ்சினியரிங் டீன் நெட் தாமஸ் கூறியுள்ளார். இந்த புல்லட் ப்ரூப் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் எளிதாக உடை அணியலாம்

ஓவர் கோபம் உடம்புக்கு ஆகாது! மாராடைப்பு நிச்சயம்!!

ஒரு சிலர் எப்பொழுது பார்த்தாலும் கோபத்துடனே இருப்பார்கள். சிடு சிடு முகமும், சிவந்த கண்களுமாய் இருப்பார்கள். இது போன்ற நபர்களுக்கு மாரடைப்பு எளிதில் தாக்கி மரணம் சம்பவிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கோபத்தினால் பள்ளி மாணவர்களுக்கும் கூட இதயநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் நோயை தடுக்க சினத்தை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.
ரத்தக்குழாய் சுருக்கம்
சிறு குழந்தைகளோ, இளைஞர்களோ இன்றைய இளம் தலைமுறையினருக்கு எதற்கெடுத்தாலும் கோபம் வருகிறது.
கோபத்தை தற்காலிக பைத்தியம் என்றே சொல்லலாம். அடிக்கடி கோபப்படுவதால் ரத்த அழுத்தம் 160-80 என எகிறுகிறது.
கோபப்படும் நேரத்தில் செயல்பாடுகளை நாம் உணர்வதில்லை. அதனால்தான் கோபத்தை தற்காலிக பைத்தியம் என்கிறோம். கோபம் வரும்போது அட்ரினலின் ஹார்மோன் சுரக்கிறது. அதுவே, உடலின் ரத்தக்குழாயை சுருக்கி விடுகிறது. உடலில் ரத்தம் செல்வது குறைவதால், முகத்தில் அதிக ரத்தம் தேங்கி, முகம் சிவப்பாகிறது. அதிக கோபம் வரும்போது, அதிகமான அளவு ரத்தத்தை இருதயம் பம்ப் செய்ய வேண்டியிருக்கிறது. கோபப்படுவதால், மனம் மட்டுமின்றி உடலும் கெட்டுப்போய் திடீர் மரணங்கள் சம்பவிக்கின்றன.
அமெரிக்காவில் இருதய நலன்துறை தலைவரும் மியாமி மில்லர் ஸ்கூல் நரம்பியல் துறை தலைவருமான ரால்க் சாக்கோ, மனிதர்களின் கோபத்தினால் நடத்தையில் மாற்றம் ஏற்படுவது மட்டுமல்லாது, இதய நோய்கள் ஏற்படுவது நிச்சயம் என்று கூறியுள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு இதயநோய்
இன்றைக்கு பள்ளிமாணவர்களுக்கு இடையேயான மோதல்கள் அதிகரித்து வருகின்றன. அவர்களுக்கு ஏற்படும் கோபத்தினால் மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் பள்ளி மாணவர்களை தாக்கத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக கோவையில் ஒரு பள்ளியில் 1,500 மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில், 8 பேருக்கு இருதய நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே மாணவர்களிடையே கோபம் ஏற்படுவதை தவிர்க்க அவர்களுக்கு உளவியல் ரீதியான பயிற்சிகளை அளிக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இருதயம் நன்றாக இருந்தால்தான் ஒரு மனிதன் நன்றாக இருக்கமுடியும். எனவே கோபத்தை தவிர்த்து மகிழ்ச்சியுடன் வாழ நினைத்தாலே மாரடைப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

Saturday, 17 November 2012

அதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க...

புகைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் நாற்பது வயதிற்கு முன்பாக அதனை கைவிட்டு விட்டால் நீண்டநாள் வாழலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதனை ஆதாரப்பூர்வமாக ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர் ரிச்சர்ட் பெட்டோ தலைமையில் இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த புகைப் பழக்கத்திற்கு அடிமையான பத்து லட்சம் பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அதில் நாற்பது வயதுக்கு முன்பாக புகைப் பழக்கத்தை கைவிட்டவர்கள், தொடர்ந்து புகைப்பவர்களை விட சராசரியாக ஒன்பது ஆண்டுகள் அதிகமாக வாழ்கிறார்கள் என்று தெரியவந்தது.
இந்த ஆய்வு பெண்களிடையேசெய்யப்பட்டிருந்தாலும், ஆண்களுக்கும் இந்த முடிவு அதே அளவில் பொருந்தும் என்று ஆய்வுக்கு தலைமையேற்றிருந்த சர் ரிச்சர்ட் பெட்டோ கூறியுள்ளார். புகைப் பழக்கத்திற்கு அடிமையாகி பின்னர் அதை கைவிடுவதை விட எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பதுதான் ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஏற்றது என்றும் ஆய்வாளர் வலியுறுத்தியுள்ளார். இந்த ஆய்வு முடிவு பிரபல மருத்து இதழில் வெளியிடப்பட்டுள்ளது.Women Who Quit Smoking Before Age 40 Reduce Risk

Tuesday, 13 November 2012

ISS உடன் பேச்சு தோல்வி? 2013 ஜூனில் விண்ணுக்கு மனிதனை அனுப்ப சீனா திட்டம்

எதிர்வரும் 2013 ஜூனில் ஷென்ஷொவு -10 எனும் விண்கலத்தின் மூலம் விண்ணுக்கு மனிதனை அனுப்ப சீனா திட்டமிட்டிருப்பதாக சீன வான் ஆராய்ச்சிக் கழகம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நிகழ்த்தப் பட்ட ஷென்ஷொவு-9 செயற்திட்டத்தைப் போலவே இப் பயணத்தின் போதும் இரு ஆண் விண்வெளி வீரர்களும்  ஒரு வீராங்கணையும் இதில் பங்கேற்க உள்ளனர்.

இந்த பயணத்தின் போது விண்ணில் பூமியைச் சுற்றி வரும் டியான்கொங் -1 எனும் ஆராய்ச்சிக் கூடத்தை வீரர்கள் சென்றடையவுள்ளனர். சுமார் 15 நாட்கள் இதில் தங்கியிருந்து தமது விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவுள்ள இவர்கள் பூமியிலுள்ள அவதானிகளுக்கு விஞ்ஞானப் பேருரைகளும் ஆற்றவுள்ளனர்.

இச்செயற்திட்டத்தின் வெற்றி நாசாவின் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தை போன்றே சீனாவும் ஒரு ஸ்பேஸ் லேப்பை அல்லது பணியாற்றும் நிலையத்தை உருவாக்க வழிகோலும் எனக் கருதப்படுகின்றது.

உலகில் விண்ணுக்கு மனிதனை செலுத்திய நாடுகள் மொத்தம் 3 ஆகும். இதில் அமெரிக்கா, ரஷ்யா ஆகியவற்றை அடுத்து இறுதியாக 2003 இல் விண்ணுக்கு மனிதனை செலுத்தியதன் மூலம் சீனாவும் இடம்பிடித்தது. இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சியில் வேகமாக முன்னேறி வரும் சீனா 2020 இற்குள் ஒரு செய்மதி ஆய்வு கூடத்தை நிறுவுவதற்கும் சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதற்கும் திட்டமிட்டுள்ளது.

இதேவேளை ISS எனப்படும் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துடன் சீனாவும் இணைய வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் பயனளிக்கவில்லை. இக்காரணத்தால் சீனாவின் தன்னிச்சையான இந்த ஸ்பேஸ் லேப் செயற்திட்டம் பீஜிங் மற்றும் வாஷிங்டனுக்கு இடையேயான அரசியல் முறுகலை ஏற்படுத்தியிருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Sunday, 11 November 2012

42 ஒளியாண்டு தூரத்தில் பூமியைப் போன்ற கிரகம் (Super earth) கண்டு பிடிப்பு


பூமியில் இருந்து 42 ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் 'HD 40307' எனப் பெயரிடப்பட்ட நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி வலம் வரும் பூமியைப் போல் தண்ணீர் உடையதும் உயிரினங்கள் வசிக்கத் தக்கதும் ஆன Super earth எனப்படும் புதிய கிரகம் ஒன்றை  வானியலாளர்கள் சமீபத்தில் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த Super earth உடன் சேர்த்து மேலும் இரு தண்ணீர் உடைய கிரகங்களும் இந்த நட்சத்திரத்தைச் சுற்றி வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த Super earth பூமியை விட 7 மடங்கு அதிக எடையுடையது. இங்கு திரவ நிலையில் தண்ணீர் இருப்பதும் ஊர்ஜிதப் படுத்தப் பட்டுள்ளது. எனினும் உயிரினங்கள் வாழ்கின்றனவா என உறுதிப் படுத்த அவசியமான இன்னும் பல அவதானிப்புக்கள் தேவை எனவும் வானியலாளர்கள் மற்றும் வான்பௌதிகவியலாளர்கள் (Astrophysicists) கூறுகின்றனர்.

மேலும் இக்கிரகம் சுற்றி வரும் நட்சத்திர்மான HD 40307 நமது சூரியனை விட சற்று சிறியது என்பதுடன் ஆரெஞ்சு நிற ஒளியை வெளிப்படுத்தும் நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் மற்றும் பூமியைப் போன்ற கிரகம் ஆகியவை சிலியில் உள்ள ஐரோப்பிய விண்ணாய்வுக் கழகத்தின் தெற்கு அவதான நிலையமான 'சில்லா' இருந்து கண்டு பிடிக்கப் பட்டன.

HD 40307 நட்சத்திரம் மொத்தம் 6 கோள்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் இது குறித்த அவதானத்தின் அடுத்த கட்டமாக விண்ணில் நிறுத்தப் பட்டுள்ள அதிக வலுவுள்ள தொலைக்காட்டிகள் மூலம் இப் பூமி போன்ற கிரகம் எந்த மூலகங்களால் ஆக்கப் பட்டுள்ளது என்பதை அறிவதே எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Saturday, 10 November 2012

தலிபான்களுக்கு எதிராக போராடியதை சிறப்பிக்க நவ.10ஐ மலாலா நாளாக அறிவித்த ஐ.நா.

 World Marks Malala Day
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் கொள்கைகளுக்கு எதிராக, பெண் கல்வி குறித்து தைரியமாக கருத்து தெரிவித்ததற்காக தலிபான்களால் சுடப்பட்ட மலாலாவை சிறப்பிக்கும் வகையில் நேற்று 'மலாலா' நாளாக ஐ.நா. சபை பிரகடனப்படுத்தியிருந்தது.
தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான மலாலா, உயிருக்கு போராடிய நிலையில் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். குழந்தைப் போராளி மலாலாவைப் பாராட்டி அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இந்நிலையில் அவர் சுடப்பட்ட 30வது நாளை மலாலா நாளாக கொண்டாடுமாறு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனின் உலக கல்விக்கான சிறப்பு தூதரும், இங்கிலாந்து முன்னாள் பிரதமருமான கார்டன் பிரவுன் கேட்டுக் கொண்டிருந்தார்.
மேலும் மலாலா மற்றும் பள்ளி செல்ல உரிமை மறுக்கப்படும் 32 மில்லியன் பெண் குழந்தைகளை நினைவுகூறும் நாளாகவும் கடைபிடிக்கப்படும் என்று கார்டன் பிரவுன் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் நேற்று மலாலா நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி குழந்தைகளின் கல்வி உரிமைக்கான பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நாளை ஒட்டி ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாய் விடுத்த அறிக்கையில், உரிமைக்காகப் போராடிய மலாலாவை சுட்ட தலிபான்களை வேட்டையாடுவோம் என்று அறிவித்திருக்கிறார்.

டெனிம் டிரவுசர்கள் எப்படி தோன்றின : ஒரு வரலாற்று பார்வை

இன்றைய உலகின் தவிர்க்க முடியாத ஆடைகளில் டெனிம் டிரவுசர்களுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகிறது.
கைவசம் இப்போது உங்களிடம் எத்தனை டெனிம் டிரவுசர்கள் உள்ளன? குறைந்தது ஒன்றாவது வைத்திருப்பீர்கள். இந்த டெனிம் டிரவுசர்கள்  எப்படி உருவானவை என்பதற்கு ஒரு சுவாரஷ்யமான வரலாறு உண்டு. அந்தவரலாற்றினை முழுமையாகவும் சுருக்கமாகவும் எழுதியுள்ள வெங்காயம் வலைப்பதிவாளருக்கு நன்றி கூறி அவருடைய இப்பதிவினை இங்கு மீள்பிரசுரிக்கிறோம்.
- 4தமிழ்மீடியா குழுமம்
நீடித்த உழைப்பு சலவை செய்ய வேண்டியதில்லை துணி வெளுத்துப்போனாலும் அதுவும் ஒரு பேஷன் ஆகிவிடும். ஒப்பீட்டளவில் மலிவானது Guess Jeans Diesel Levi's Seven Jeans Apple Bottoms Von Dutch என பல பிராண்ட் களில் வருகிறது.  இது இரண்டு நூற்றண்டுகளுக்கு முன்பே சந்தைக்கு வந்து விட்டது ஸான்ஃப்ரான்சிஸ்கோவில் வாழ்ந்த ஜெர்மனியாரான levistrauss என்னும் வணிகரால் 1850 களில் அடிமைத் தொழிலாளிகளான சுரங்கத்தொழிலாளிகளின் பாவனைக்காகத்தான் இந்த கரடு முரடன துணி முதலில் உருவாக்கப்பட்டது.

"denim" இது பிரெஞ்சு வார்த்தையில் இருந்து தோன்றியது பிரான்ஸ்சில் "nimes" நகரத்தில் பட்டு நூலையும் கம்பளியையும் கலந்து நெய்து serge-de-nimes என்ற பெயரில் தடித்த துணியை தயார் செய்தனர். de -nimes என்றால் நிம்சில் இருந்து என்று பொருள். பின்பு ஐரோப்பாவில் இதன் பெயர் டெனிமாக மாறிவிட்டது.

கலிபோர்னிய சுரங்கத்தொளிலளர்கள் அணிந்திருந்த டெனிம் 1930 ஹோலிவூட் கௌ பாய்சின் கண்களில் பட்டது உடனே அவர்கள் டெனிம்ஐ ஹோலி வூட்டுக்கு எடுத்து சென்று பிரபலமக்கினர்கள். ஹோலி வூட்டால் டெனிம் அசுர வேகத்தில் பிரபலமானது டிவி களில் நிகழ்சிகளில் இளசுகளின் அடையாளமாக டெனிம் காட்டப்பட்டது. இளைஞர்கள் டேனிமை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். இந்தக்கலாச்சாரம் அமெரிக்காவில் வெகு வேகமாக பரவியபோது அமெரிக்க பழமை வாதிகளால் டெனிம் கீழ்தரமானோர் அணியும் ஆடையாக நோக்கப்பட்டது. சில பாடசாலைகள் டெனிம் அணிவதற்கு தடை விதித்தன.
ஆனால் டெனிம்முக்கு ஆதரவு கொடுத்தது யார் தெரியுமா? ஹோலி வூட் அதற்கு முன் யார் என்ன செய்துவிட முடியும். இதனால் எதிர்ப்புக்கள் எல்லாம் தூசாகி விட்டன (இன்றும் ஹோலி வூட் நவீனம்/கலாச்சாரம் என்று எதை அறிமுகப்படுத்தினாலும் இன்றைய உலகம் எதிர்ப்புக்காட்டாமல், அத்தனையும் ஏற்றுக்கொள்ளும்)

ஹோலிவூட்டின் ஆதரவால் அமெரிக்காவை தாண்டி டெனிம் ஏனைய நாடுகளுக்குள் சர்வ சாதாரணமாக பரவியது முதன் முதலில் டெனிம் அறிமுகமாகிய ஹோலிவூட் திரைப்படம்  Rebel Without a Cause
இதை பிரபலமாக்கியதில் அமெரிக்க இராணுவத்தினருக்கும் முக்கிய பங்குண்டு இரண்டாம் உலகப்போரின்போது வீரர்கள் தமது உடைகளுடன் டெனிம்மையும் எடுத்து சென்றார்கள். அங்கு இவர்கள் சாதாரண நேரங்களில் இவற்றையே அணிந்து சென்றார்கள் இவற்றை பார்த்ததும் உள்ளூர் வாசிகள் ஆடிப்போய் விட்டார்கள். பலர் ஆச்சரியமாக வேடிக்கை பார்த்தார்கள் (காஞ்சமாடு கம்பில பிறது மாதிரி)

1950 இல் அமெரிக்காவில் வெற்றிகரமாக தனது கால்தடத்தை பதித்துக்கொண்டது டெனிம், பாடசாலைகள் இதை அணிவதற்கு அனுமதிக்க வேண்டியதாயிற்று. 1960 -70 களில் வேறு வேறு நிறங்களில் டெனிம் வெளி வந்தது. கீழத்தேய நாடுகளில் உள்ளோர் தாம் மேற்கத்தேய கலாச்சாரத்தை பின் பற்றுகிறோம் என்பதைக்காட்டுவதற்கு இவற்றை அணிய ஆரம்பித்தார்கள். 1990 இல் டெனிம் மாற்று உருவம் பெற தொடங்கியது. வயது வேறுபாடு இல்லாமல் பெற்றோர் பிள்ளைகள் என அனைவரும் இதை அணிந்தார்கள். டைம்ஸ் பத்திரிக்கை டேனிமை பற்றி பின்வருமாறு செய்தி வெளியிட்டது. "single most potent symbol of american"

ஆண்டு தோறும் உலகம் முழுவதுமாக 4000 மில்லியன் M துணி விற்பனையாகின்றது. ஜீன்ஸ் விற்பனையில் அமெரிக்காவின் "levis" நிறுவனம் தொடர்ந்தும் முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கின்றது. இதன் உரிமையாளர் Levi Strauss இவர்தான் நீல நிற டெனிமை உரிமத்துடன் விற்பனை செய்பவர். 1996 இல் இந்நிறுவனம் 7.1 பில்லியன் டாலர்களை சம்பாதித்தது இந்நிறுவனத்தின் வருடாந்த குறைந்த விற்பனை 2008 இல் 4400 மில்லியன் டாலர்கள்.
டெனிம்மிற்கு பாரம்பரிய உடைகளை தகர்த்தெறிய எதிர்ப்புக்கள் இருக்கவில்லை மக்கள் தாமாகவே வலிந்து சென்று வாங்கி அணிந்து கொண்டார்கள். உலகில் அதிகம் டெனிம் ஜீன்ஸ் அணிபவர்கள் அமெரிக்கர்கள்தான். அதிகம் இதை விற்பனை செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வருடத்திற்கு 25 மில்லியன் ஜீன்ஸ்கள் டெனிம் விளம்பரங்களுக்காக நிறுவனங்கள் பணத்தை வாரி இரைத்துக்கொண்டிருக்கின்றன இவ்விளம்பரங்கள் 18 -24 வயதனோரை குறி வைத்தே விளம்பரமாக்கப் படுகின்றன.
சில பழமையான விளம்பரங்கள்:








டெனிம் ஜீன்சின் முக்கிய மூலப்பொருள் பருத்திப்பஞ்சு. உலகம் முழுவதுமாக 34 மில்லியன் ஹெக்டயர்கள் பரப்பளவில் பருத்தி பயிரிடப்படுகின்றது. மிக அதிக அளவில் ஜீன்சை பயன்படுத்தும் நாடு அமெரிக்கா. ஆனால் மிக உயர்ந்தளவில் இதற்கான பருத்தியை உற்பத்தி செய்பவை இந்தியாவும் சீனாவும் தான். இந்தியாவில் 2009 இல் 9 மில்லியன் ஹெக்டயர் பரப்பளவில் பருத்தி உற்பத்தி செய்யப்பட்டது. இது வெறுமனே உற்பத்தி சார்ந்த விடயங்கள் அல்ல மேற்கு நாடுகள் தாம் இவற்றை உற்பத்தி செய்வதால் ஏற்படும் பிரச்சனைகள் இடர்பாடுகளை முன் கூடியே திட்டமிட்டு விட்டு இவற்றை மூன்றாம் நாடுகளின் மீது சுமத்தி விடுகின்றன.
இதனால் அதிகம் பாதிப்புற்ற நாடுகளில் உஸ்பெகிஸ்தான் முக்கியமானது. பருத்தி உற்பத்தியில் ஆறாம் இடத்தில் உள்ளது. இதற்கு நல்ல வெகுமதியையும் இந்நாடு கொடுத்துள்ளது. இதன் ஏறல் கடல் இதனால் பாதிப்படைந்தது கடலுக்கு செல்லும் ஆறுகளை பருத்திக்கு பயன்படுத்தியதால் கடல் படிப்படியாக சுருங்கி 100 km வரை உள் வாங்கிவிட்டது.  கரையோர மீனவர்கள் 100 km சென்றுதான் மீன் பிடிக்க வேண்டிய நிலை. 30 வகையான மீனினங்கள் இருந்த இடத்தில் இன்று இரண்டு வகையான மீனினங்கள் தான் எஞ்சி உள்ளன. கடல் வற்றியதால் இன்று 36 000 சதுர கிலோமீட்டர்களுக்கு உப்புக்கள் படிந்து கிடக்கின்றன.  அவற்றை  காற்று அள்ளி சென்று விவசாய நிலங்களை தாக்குகின்றதால் அவற்றிற்கும் அழிவு ஏற்பட்டு வருகின்றது. மோசமான குடி நீர் காரணமாக மக்களுக்கு சிறுநீரக நோய்கள் பல ஏற்படுகின்றன. குழந்தைகளின் மரணம் அதிகமுள்ள நாடுகளில் உஸ்பெகிஸ்தானும் இடம்பெற்றுள்ளது.

இதை விட பருத்திக்கு பயன் படுத்தும் பூச்சிநாசினிகள் மருந்துகள் போன்றவற்றால் சூழல் மாசடைவதுடன் பாதுகாப்பாக கையாளும் அறிவு விவசாயிகளுக்கு இல்லாததால் நோய்களும் மரணங்களும் சர்வ சாதாரணமாகி விட்டன.

இதற்கு நீல நிறமேற்ற இண்டிகோ சாயம் பயன்படுத்தப்படிகின்றது. சாயமூட்டிய ஜீன்சை கற்சலவை செய்ய பியூமைஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளில் பெறப்படும் கற்கள் பயன்படுகின்றன. ஒரு ஜீன்சை சலவை செய்ய இவ்வாறான ஒரு கிலோ கல் தேவைப்படுகின்றது. இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர். இந்தியாவில் மட்டும் ஆறு வயது முதல் 14 வயது வரை உள்ள நான்கரை லட்சம் பெண்கள் இவ்வாறு பருத்தி வயல்களில் வேலை செய்கின்றார்கள். இவர்களுக்கு மிகக்குறைந்த ஊழியமும் போனஸ்சாக பாலியல் கொடுமைகளும் வழங்கப்படுகின்றன. தாய்லாந்தில் இப்படியான ஆடைத்தயரிப்பு நிறுவனத்தில் தொழிலாளர்கள் தமக்கென சங்கம் அமைக்க முயற்சித்தபொழுது உடனடியாக 300 தொழிலாளர்கள் சுடப்பட்டனர். இவ்வாறான இன்னல்களை முன்கூட்டியே யோசித்துத்தான் மேற்குலக நாடுகள் இவற்றை மூன்றாம் நாடுகளின் மீது திணித்துள்ளன. அத்துடன் தமது நிறுவனங்களை எம்மை போன்ற நாடுகளில் நிறுவவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இப்பதிவின் தாயகம் : வெங்காயம்

நவ.10 : 15 வயது பாகிஸ்தானிய சிறுமி மலாலாவின் தினமாக அறிவிக்கப்படலாம்!


பெண் சிறுமிகளின் கல்வி உரிமைக்காக போராடியதற்காக தலிபான்களால் தீவிரவாதியாக கருதப்பட்டு சுடப்பட்ட பாகிஸ்தான் சிறுமி மாலாவை கௌரவிக்கும் வகையில் இன்று நவ.10ம் திகதி மலாலா தினமாக அறிவிப்பது தொடர்பில் ஐ.நா உத்தேசித்துள்ளது.
இன்றைய நாளில் மலாலா எனும் குறித்த சிறுமியை போன்று உலகில் உள்ள 32 மில்லியன் கல்வி மறுக்கப்படும் பெண் குழந்தைகளை நினைவு கூறும் தினமாக இது கடைப்பிடிக்கப்படலாம் என இங்கிலாந்து முன்னாள் பிரதமரும், ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனின் உலக கல்விக்கான சிறப்பு தூதுவருமான கார்டன் பிரவுன் தெரிவித்துள்ளார்.

மாலா குறித்து ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் கூறுகையில், : கல்வி ஒரு அடிப்படை உரிமை, மனித சமூகத்தின் வளர்ச்சி, சகிப்புத்தன்மை, குடியுரிமை ஆகியவற்றுக்கான பாதையாக கல்வி உள்ளது. மாலா மற்றும் உலகின் அனைத்து பாகங்களிலும் உள்ள சிறுவர் சிறுமியர்களுக்கு கல்வியி உறுதி செய்ய உலக சமூகம் பாடுபடவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

பாகிஸ்தானின் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ஸ்வாட் மாகணத்தில் மிங்கோரா நகரை சேர்ந்த மாலா (15 வயது) அங்கு நிலவும் தலிபான்களில் அதீத கட்டுப்பாடுகளையும் மீறி பள்ளி சென்று பயின்று வந்தார். மேலும் அங்கு தலிபான்களால் தம்மை போன்ற சிறுமியருக்கு நடைபெறும் கொடுமைகள் குறித்து தனது வலைப்பதிவில் பதிவிட்டு வரத்தொடங்கியதன் மூலம் உலக கவனம் பெற்றார். இவர் இந்த வலைப்பதிவை ஆரம்பித்தது தனது 11  வயதில் என்பதை நினைவில் கொள்க.

இந்நிலையில், தமது கொள்கைகளுக்கு முரணாக இப்பெண் சிறுமி செயற்படுகிறார் என குற்றம் சுமத்திய தலிபான்கள், மலாலாவை தாம் கொல்வதற்கு நேரிடலாம் என முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தனர். அவரது வீட்டு நுழைவாயில் கதவுகளில் புள்ளடி அடையாளமிட்டு இந்த எச்சரிக்கையை விடுத்தனர். எனினும் மலாலா தொடர்ந்து தலிபான்களுக்கு எதிராக குரல் கொடுத்துவ் அந்ததால் கடந்த மாதம் அக்.10ம் திகதி மலாலா வை சுட்டனர்.

இதில் காயமடைந்த மலாலா ஐக்கிய அரபு எமிரெட்ஸ் வழங்கிய ஏர் அம்புலன்ஸ் மூலம் லண்டன் கொண்டு செல்லப்பட்டு விசேட சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறார். தற்போது இவர் உடல் நலம் தேறி வருவது குறிப்பிடத்தக்கது.  இவர் மீதான தாக்குலுக்கு உலக நாடுகள் கடும்கண்டனம் தெரிவித்திருந்துடன், மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வலுப்பெற்றுள்ளது.
கனடாவின் நான்கு அரசியல் கட்சிகள் உட்பட பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளும் இக்கோரிக்கையை விடுத்துள்ளன. இது தொடர்பிலான மனுவொன்றும் தற்போது நோபல் கமிட்டிக்குழுவுக்கு அனுப்படுவதற்கு தயாராகி வருகிறது.


எனினும் ஸ்வாட் மாகாணத்தில் எந்தவொரு பெண் பிள்ளைகளும் பள்ளி செல்லக்கூடாது எனும் தடை உட்பட பல தடைகள்  தலிபான்களால் இன்னமும் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மலாலா விரைவில் குணமடைய உலகெங்குமிருந்து வாழ்த்து அட்டைகள் அனுப்பிய அனைவருக்கும் மலாலா சார்பில் தனது நன்றிகளை பகிர்ந்து கொள்கிரார் அவரது தந்தை.

Wednesday, 7 November 2012

தீபாவளி எதுக்கு கொண்டாடுறோம் தெரியுமா?

தீபாவளி என்றாலே அனைவருக்கும் மனதில் ஒருவித கொண்டாட்டம். ஏனெனில் அந்த நாளன்று புதிய ஆடை அணிந்து, பலகாரம் செய்து, பட்டாசு வெடித்து, அந்த தினத்தை கோலாகலமாக கொண்டாடுவோம். அதிலும் இந்த நாளன்று வீட்டிற்கு விருந்தினர் பலர் வருகைத் தந்து, தீபாவளியை குடும்பபத்தோடு கொண்டாவார்கள். ஆமாம், இந்த தீபாவளி எதற்கு கொண்டாடுகின்றோம் என்று தெரியுமா?
reasons celebrating diwali festival
தீபாவளி என்றால் என்ன?

'தீபம்' என்றால் 'விளக்கு'. 'ஆவளி' என்றால் 'வரிசை'. அதாவது இந்த நாளில் விளக்குகளை வீட்டில் வரிசை வரிசையாய் அடுக்கி விளக்கேற்றி, இருண்டு இருக்கும் வீட்டை பிரகாசமாக வைப்பது ஆகும். மேலும் இவ்வாறு செய்யும் போது, நமது மனதில் இருக்கும் அகங்காரம், கோபம், பொறாமை போன்ற குணங்களை எரித்துவிட வேண்டும் என்பதையும் குறிக்கும். அதனால் தான் இதற்கு தீபாவளி என்று பெயர் வந்தது.
தீபாவளி எதற்கு கொண்டாடுகின்றோம்?
தீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்ளை, நமது இந்து புராணங்கள் கூறுகின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமா!!!
* இராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால், அந்நாட்டில் உள்ள மக்கள் இராமனை வரவேற்பதற்கு, தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்பதாக இராமாயணத்தில் சொல்லப்படுகிறது.
* கிருஷ்ணன், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அந்த நரகாசுரன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டதால், தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுவதாக கூறப்படுகிறது.
* இலங்கையை ஆண்ட இராவணன், சீதையை கடத்திச் சென்று வைத்துக் கொண்டதால், இராமன் இராவணனை எதிர்த்துப் போராடி, இராவணனை அழித்துவிட்டு, சீதையை மீட்டு கொண்டு, தனது தம்பியான இலட்சுமணனுடன், அயோத்திக்கு செல்லும் போது, அங்குள்ள மக்கள் அவர்களை வரவேற்க, நாட்டில் விளக்கேற்றி கொண்டாடி மகிழ்ந்தனர். அதனால் அந்த நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று இராமாயண இதிகாசத்தில் சொல்லப்படுகிறது.
* சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகெளரி விரதம் முடிவுற்றதும், அந்த நாளன்று சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக் கொண்டு, 'அர்த்தநாரீஸ்வரர்' ஆக உருவெடுத்ததால், தீபாவளி கொண்டாடப்படுவதாக, ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது.
எனவே தான், நாம் தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுகின்றோம். உங்களுக்கு வேறு ஏதாவது காரணங்கள் தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இரண்டாம் முறை அமெரிக்க அதிபராகும் 13 வது தலைவர் ஒபாமா!

 obama is the 12th presidend assumes அமெரிக்க வரலாற்றில் அதிக நாட்கள் அதிபராக இருந்தவர் ப்ராங்ளின் ரூஸ்வெல்ட். மூன்று முறை, அதாவது 12 ஆண்டுகள் ஆட்சியிலிருந்தவர், நான்காம் முறையும் அதிபராகி 83 நாட்களில் இறந்துவிட்டார்.
1955 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டப்படி, ஒரு தலைவர் இரண்டு முறைக்கு மேல் அதிபராக முடியாது என சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த சட்டப்படி ஒருவர் தொடர்ந்து இரு தடவை அதிபராக இருக்கலாம். அடுத்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும், உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் போட்டியிடலாம்
உதாரணத்திற்கு, சட்டப்படி பில் க்ளிண்டன் அடுத்து வரும் 2016ல் போட்டியிடலாம். ஆனால் நடைமுறைப்படி அவர் போட்டியிட மாட்டார். கட்சியும் பெரும்பாலும் அனுமதிக்காது.
அதன் பிறகு இரு முறை அதிபரானவர்கள் பட்டியல் இது.
1. தாமஸ் ஜெபர்சன்
2.ஜார்ஜ் வாஷிங்டன்
3.ஜேம்ஸ் மேடிசன்
4.ஜோம்ஸ் மன்ரோ
5.ஆன்ட்ரூ ஜாக்ஸன்
6.யுலிசஸ் கிரான்ட்
7.குரோவர் க்ளீவ்லாண்ட்
8.வுட்ரோ வில்சன்
9.ட்வைட் ஐஷ்னோவர்
10.ரொனால்ட் ரீகன்
11.பில் க்ளின்டன்
12.ஜார்ஜ் புஷ்
இப்போது பாரக் ஒபாமா!
இவர்களில் குரோவர் க்ளீவ்லாண்ட் தொடர்ந்து இருமுறை பதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை வாய்ப்பு மறுக்கப்பட்டு, ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜெயித்து வந்தார்.
அதிபர்கள் இறந்து அல்லது பதவி விலகிய நேரத்தில் மீதிக் காலத்துக்கு அதிபராக தேர்வு செய்யப்பட்டு (தேர்தல் நடத்தாமல்) , அடுத்த முறை பதவிக்கு வந்தவர்கள் 8 அதிபர்கள். அவர்கள் இந்தப் பட்டியலில் சேர மாட்டார்கள்.

Monday, 5 November 2012

ஹஜ்ஜின் மகத்துவம்...!!! மக்காவில் தெருகூட்டும் தொழிலாளி கோடிஸ்வரனான கதை..!!

பங்களாதேசை சேர்ந்த ஒருவர் மக்காவின் தெருவை கூட்டி சுத்தம் செய்துவரும் பல்தியாவின் கூலி வேலையை செய்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன் அவ்வாறு ரோட்டில் நின்று சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது, இஹ்ராம் அணிந்த நிலையில் உள்ள முதியவர் ஒருவர், திடீரெண்டு தன்னை கட்டி ஆரத்தழுவி தன்னை மன்னித்துவிடும்படி கண்ணீர்விட்டு அழுததை கண்ட அந்த கூலித் தொழிலாளி அதிர்ந்தேவிட்டார்...! ஆம். அதற்கான காரணம் அந்த முதியவர் வேறு யாரும் அல்ல..! தன் உடன் பிறந்த சகோதரர்தான் அந்த முதியவர்.



கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் தமக்கிடையே ஏற்பட்ட சொத்து தகராறில், தன் தம்பிக்கு சேரவேண்டிய பங்கினை தராமலும், பங்கை கேட்கும் போதெல்லாம் தன்னை சிறைக்கு தள்ளிய அந்த கொடூர சகோதரர்தான், தற்போது புனித மக்காநகரில் தன்னை கட்டித்தழுவி மன்னிக்கும்படி மன்றாடிய அந்த முதியவர் ஆவார்.

மேலும் இந்த இரு சகோதரர்கள் ஒன்றும் பொருளாதாரத்தில் சாதாரண நிலையில் உள்ளவர்களும் அல்ல. பொருளாதாரத்தில் மிக வலிமையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களின் கைவசம் இருக்கும் ரொக்கம் மட்டுமே இந்திய ரூபாயில் சுமார் 25 கோடிக்கும் மேல். இது அல்லாமல் பல சொத்துக்களுக்கும் சொந்தக்காரர்கள் ஆவார்கள். இப்படிப்பட்ட நிலையில் வாழ்ந்த இந்த இளைய சகோதரர்தான் இன்று மக்கா நகரில் சில நூறு ரியால் சம்பளத்திற்காக தெருக்களை கூட்டி சுத்தம் செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். தன் மூத்த சகோதரர் தனக்கு செய்த தவறினால் சவூதி சென்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.

கடந்த ஐந்து வருடத்திற்கு முன், மூத்த சகோதரர் தன்தம்பிக்கு, தான் செய்த தவறை நினைத்து வருந்தி தன் தம்பியை தேடி பல இடங்களுக்கும் அலைந்துள்ளார். கான்போரிடம் எல்லாம் தன் தம்பியை கண்டுபிடித்து தந்தால் தக்க சன்மானம் வழங்குவதாகவும் தெரிவுத்துள்ளார். இந்த நிலையில், இந்த வருடம் புனித ஹஜ் சென்றபோதுதான் மக்கா நகரின் தெருவில் ஏதேச்சையாக தன் சகோதரரை கண்டு ஆரத்தழுவி உள்ளார். தன்னை மன்னிக்கும்படியும் மன்றாடியுள்ளார். தற்போது தான் புற்று நோயால் (கேன்சர்) அவதிபடுவதாகவும், இன்னும் எத்தனை காலம் இந்த உலகில் தான் வாழப்போகிரேனோ தெரியவில்லை என்றும், உடனே ஊருக்கு திரும்பும்படியும், தன் தம்பிக்கு சேரவேண்டிய அணைத்து பங்கினையும் தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

தம்பியும் தன் சகோதரர் தனக்கு செய்த அணைத்து பாவங்களையும் மன்னித்து விட்டதாகவும், சகோதரருடன் ஊருக்கு திரும்பவும் சம்மதித்துள்ளார். மேலும் தனக்கு தம் சகோதரர் செய்த அணைத்து தீமைகளையும் மன்னித்துவிட்டு ஊர் சென்று புதுவாழ்வு தொடங்க உள்ளதாகவும், தான் எப்போதும் ஏழைகளிடமும், தேவை உள்ளோரிடமும் இறக்கம் காட்டுவதாகவும், அவர்களுக்கு உதவி செய்யப் போவதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏழ்மை என்றால் என்ன என்ற பாடத்தை தான் கற்றுக்கொண்டதாகவும், கோடிஸ்வரனாக இருந்து குப்பை பொறுக்கி தற்போது மீண்டும் கோடிஸ்வரனாக மாறியுள்ள அந்த சகோதரர் கூறியுள்ளார்.

பொருமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் என்ற வசனத்திற்கு இந்த நிகழ்வை ஆதாரமாகவும், தான் செய்த நல்ல அமல்கள் மட்டுமே தன் மரணத்திற்கு பின் வரும் தாங்கள் சேர்த்து வைத்த சொத்துக்கள் அல்ல என்ற உண்மையையும் பிரிந்த அந்த சகோதரர்களை இணைத்து வைத்து அல்லாஹ் இந்த ஹஜ்ஜின் மூலம் நிலைநாட்டியுள்ளான்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் மூலம் அன்று பிறந்த பாலகன் போல் தான் திருப்ப வேண்டும் என்று மூத்த சகோதரரின் நினைப்பிற்கும், தனக்கு அநீதி இழைக்கப்பட்ட காரணத்தினால் கடும் வெயிலில் நின்று தெரு கூட்டி பிழைத்தாலும், மன்னிப்பைவிட இந்த உலகில் சிறந்த பண்பு வேறொன்றும் இல்லை என்ற இளைய சகோதரரின் நடத்தைக்கும் அல்லாஹ் அவர்களுக்கு சிறந்த வாழ்வை தர நாமும் துவா செய்வோம்.

இந்த நிகழ்வுமூலம் பல முஸ்லிம் சகோதர்களுக்கு நல்ல படிப்பினையுண்டு.

Saturday, 3 November 2012

டோக்கியோவை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றும் நிலக்கீழ் சுரங்கம்


ஜப்பானின் டோக்கியோ எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சிறிய அரச கட்டடம் ஒன்றின் பின்புறமும் நிலத்துக்குக் கீழ் சுரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள காற்பந்து மைதானம் மற்றும் பனிச்சறுக்குப் பூங்கா ஆகியவற்றின் நிலத்துக்குக் கீழ மிக ஆழமாக நிலக்கீழ் சுரங்கம் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. இது ஜப்பானிய பொறியியலின் மகத்தான படைப்பாகும்.

இச் சுரங்கம் எதற்காக உபயோகிக்கப் படவுள்ளது என்பது இதை விட ஆச்சரியமான ஒரு விடயமாகும். அதாவது ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் வாழும் சுமார் 13 மில்லியன் மக்களையும் அங்கு வருடாந்தம் ஏற்படும் சைக்கிளோன் புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு எனபவற்றில் இருந்து இந்த சுரங்கம் பாதுகாக்க வல்லது.

சுமார் 4 மைல் ஆழமுள்ள இந்தச் சுரங்கம் ஐந்து மாடிக் கட்டம் ஒன்றை விட பல மடங்கு பெரியதாகும். டோக்கியோவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் வெள்ளம் இந்தச் சுரங்கம் வழியே வழிந்து சென்று விடும் வகையில் இது அமைக்கப் பட்டுள்ளது. இப் பணிக்காக போயிங் 737 ரக விமானத்தில் பயன்படுத்தப் படும் ஜெட் எஞ்சினுக்கு சமனான எஞ்சின்கள் மூலம் இயக்கப்படும் 4 டர்பைன்கள் செயற்படுத்தப் படுகின்றன.

இந்த சுரங்கத்தின் நுழை வாயில் எப்போதும் மூடப் பட்டிருப்பதால் சாதாரண குடிமகன் ஒருவர் இதைப் பற்றி அறியாமலேயே இதன் மீது பல தடவை நடந்திருப்பார் எனக் கூறப்படுகின்றது. இச்சுரங்கம் சுமார் $ 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் 1993 - 2006 காலப் பகுதியில் கட்டப்பட்டது ஆகும். ஜப்பானில் இயற்கை அன்னையின் சீற்றத்தில் இருந்து குடிமக்களைக் காப்பாற்றுவதற்கான இது போன்ற செயற்திட்டங்கள் அங்கு வசிக்கும் பொறியியலாளர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டுவதுடன் வருங்காலத்திலும் இது போன்ற பல வேலைப்பாடுகளை மேற்கொள்ள உதவும் எனக் கருதப் படுகின்றது.

கின்னஸ் புத்தக்த்தில் பஞ்சாப் தம்பதி: இப்படி இருக்க ஆசைப்படுங்க!

 World S Longest Married Couple Is From Punjab
லண்டன்: இங்கிலாந்தில் வாழும் பஞ்சாபைச் சேர்ந்த கரம் சந்த், கத்தாரி தம்பதிக்கு திருமணமாகி 87 ஆண்டுகள் ஆகிறது. உலகிலேயே அதிக ஆண்டுகள் தம்பதிகளாக உள்ளவர்கள் என்ற பெருமையை அவர்கள் பெற்றுள்ளனர்.
கலாச்சாரத்திற்கு பெயர் போன இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் விவாகரத்து என்பது சகஜமான ஒன்றாகிவிட்டது. சின்ன சின்ன காரணங்களுக்காக எல்லாம் விவாகரத்து பெறும் காலமாகிவிட்டது. இந்நிலையில் உலகிலேயே அதிக ஆண்டுகள் தம்பதிகளாக உள்ள பெருமையை பஞ்சாபைச் சேர்ந்த கரம் சந்த், கத்தாரி தம்பதி பெற்றுள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள பிராட்போர்டில் வசிப்பவர் கரம் சந்த்(107). அவரது மனைவி கத்தாரி(100). கடந்த 87 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான அவர்களுக்கு 8 குழந்தைகளும், 28 பேரக்குழந்தைகளும் உள்ளனர். உலகிலேயே அதிக ஆண்டுகள் தம்பதிகளாக உள்ள பெருமையைப் பெற்றுள்ள அவர்கள் விரைவில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளனர்.
இது குறித்து கரம் சந்த் கூறுகையில், கத்தாரியை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பேன். அவரை ஜோக்ஸ் சொல்லி சிரிக்க வைப்பேன். இது தான் என்னுடைய ரொமான்ட்டிக் வழி என்றார். கத்தாரி கூறுகையில், நான் இளமையாக இருக்கையில் தினமும் இரவு அவருக்கு சுடச் சுட சமைத்துக் கொடுப்பேன். நாங்கள் சைவம் என்பதால் நிறைய காய்கறிகள் வாங்குவேன். அவருக்கு சத்தான உணவு கிடைக்கும்படி பார்த்துக் கொள்வேன் என்றார்.

பீகிங் பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த வாங்க: கலாமுக்கு சீனா அழைப்பு

 China Invites Abdul Kalam Teach At
பீஜிங்: பீகிங் பல்கலைக்கழகத்தில் வந்து பாடம் நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் முதன்முறையாக சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவில் உள்ள புகழ்பெற்ற பீகிங் பல்கலைக்கழக தலைவர் ஜு ஷான்லு கலாமை நேற்று இரவு சந்தித்து பேசினார். அப்போது அவர் கலாமை பீகிங் பல்கலைக்கழகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை பாடம் நடத்த வருமாறு அழைத்தார். கலாமும் அவரது அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அவர் நாளை பீகிங் பல்கலைக்கழகத்திற்கு சென்று மாணவர்களை சந்தித்து பேசவிருக்கிறார்.
இது குறித்து கலாம் கூறுகையில்,
நான் ஒரு ஆசிரியர். நான் அமெரிக்காவில் பாடம் நடத்துகிறேன். இளைஞர்களை சந்தித்து அவர்கள் அறிவை வளர்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம் என்றார்.
விஞ்ஞானியாக தனது வாழ்க்கையைத் துவங்கிய கலாம் இந்தியாவின் ஜனாதிபதியானார். அதன் பிறகு அவர் நாட்டில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு சென்று மாணவ-மாணவியரை சந்தித்து உரையாடி மகிழ்கிறார்.