Saturday, 17 August 2013

கீழக்கரை கைராத்துல் ஜலாலியா மேனிலைப் பள்ளியில் நடை பெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சி - கிழக்குத் தெரு ஜமாத்தார்கள் பங்கேற்பு !

கீழக்கரை கிழக்குத் தெரு கைராத்துல் ஜலாலியா மேனிலைப் பள்ளியில் இன்று (15.08.2013), காலை 9 மணியளவில், இந்திய தேசத்தின்  67 வது சுதந்திர தின விழா, பள்ளி வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் கிழக்குத் தெரு ஜமாஅத் அங்கத்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

 

இந்த நிகழ்ச்சிக்கு கிழக்குத் தெரு ஜமாத் தலைவர். ஜனாப். ப.அ. சேகு அபூபக்கர் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமையாசிரியர் ஜனாப். A. முஹம்மது மீரா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கைராத்துல் ஜலாலியா பள்ளியின் தாளாளர். பேராசிரியர். டாக்டர். ஜனாப். B.J.சாதிக் அவர்கள், பள்ளியின் கல்விக் குழு உறுப்பினர். ஜனாப். M.M.S.செய்யது இப்ராஹீம் அவர்கள், கல்விக் குழு உறுப்பினர். M.K.M.சுஐபு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். 


மேலும் மாணவிகள் ரோசன் சமீஹா, ஸ்மைலா மற்றும் மாணவர். அஜீத் மணிகண்டன் ஆகியோர்கள் இந்திய சுதந்திர தினம் குறித்து சிறப்பாக பேசினர். முன்னதாக மாணவர்களின் சுதந்திர தின விழா அணி வகுப்பு மரியாதயை பள்ளியின் தாளாளர். பேராசிரியர். டாக்டர். ஜனாப். சாதிக் அவர்கள் ஏற்றுக் கொண்டார். 



   

சமாதனப் புறாக்கள் பறக்கவிடப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளியின் முதுகலை ஆசிரியர் சா. சையது அபுதாகிர் அவர்கள் நன்றியுரை வழங்கினார். சுதந்திர தின விழா நாட்டுப் பண்ணுடன் இனிதே நிறைவடைந்து, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

தகவல்  : கீழக்கரை வரலாற்று ஆய்வாளர். ஆனா.மூனா சுல்தான் அவர்கள்

Sunday, 11 August 2013

மறுமை நாளின் அடையாளங்கள்.

1709. ‘கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” .
புஹாரி : 80 அனஸ் (ரலி).
1710. மறுமை நாளுக்கு முன் ஒரு காலக்கட்டம் வரும். அப்போது அறியாமை நிலவும்; கல்வி அகற்றப்பட்டு விடும்; ‘ஹர்ஜ்’ பெருகிவிடும். ‘ஹர்ஜ்’ என்பது கொலையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 7063 அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி).
1711. நபி (ஸல்) அவர்கள் ‘(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்து போய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். ‘ஹர்ஜ்’ பெருகிவிடும்” என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘கொலைகொலை” என்று பதிலளித்தார்கள்.
புஹாரி : 7061 அபூஹுரைரா (ரலி).
1712. ‘நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்துவிட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கி விட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்’ என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.
புஹாரி : 100 அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி).

ன்னாள் அதிபர் சாவேஷின் கல்லறையில் தூங்கும் தற்போதைய வெனிசுலா அதிபர் Read more at: http://tamil.oneindia.in/news/2013/08/11/world-venezuelan-president-nicolas-maduro-says-he-sleeps-in-hugo-chavez-181031.html

கராகஸ்: மரணமடைந்த முன்னாள் அதிபர் சாவேஷின் கல்லறையில் படுத்து உறங்குவதாக அவரது தீவிர ஆதரவாளாரும், தற்போதைய வெனிசுலா அதிபருமான மதுரோ தெரிவித்துள்ளார். வெனிசுலாவின் அதிபரான ஹூகோ சாவேஷ் கடந்த மார்ச்சில் புற்று நோய் பாதிப்பினால் மரணாமடைந்தார். அதற்குப் பின்னர், அவரது ஆட்சியில் துணை அதிபராக பதவி வகித்த நிகோலஸ் மதுரோ, கடந்த ஏபரலில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானார். சாவேஷின் தீவிர ஆதரவாளரான மதுரோவை ஏற்கனவே தனது அரசியல் வாரிசாக அறிவித்திருந்தார் சாவேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.அதன்படி, சாவேஷ் வழியிலேயே தற்போது ஆட்சி நடத்தி வருகிறார் மதுரோ. ஏற்கனவே, முன்னாள் அதிபரான சாவேஷ் மரணமடைந்த பிறகு சிறிய பறவையாக மாறி தன்னைச் சுற்றி வருவதாக தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்த மதுரோ, தற்போது சில சமயங்களில் சாவேஷின் கல்லறை மீது படுத்துத் தூங்குவதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். முன்னாள் ராணுவ அருங்காட்சியகத்தில் புதைக்கப்பட்டுள்ள சாவேஷின் கல்லறை மீது படுத்து உறங்குவதாலேயே அவரின் எண்ணாங்கள் மற்றும் கருத்துக்கள் தனக்கும் உருவாவதாகவும், அதன் மூலமே தன்னால் பல நல்ல திட்டங்களை அமுல் படுத்தி ஆட்சி புரிய முடிவதாகவும் தெரிவித்துள்ளார் மதுரோ.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/08/11/world-venezuelan-president-nicolas-maduro-says-he-sleeps-in-hugo-chavez-181031.html