கராகஸ்: மரணமடைந்த முன்னாள் அதிபர் சாவேஷின் கல்லறையில் படுத்து உறங்குவதாக அவரது தீவிர ஆதரவாளாரும், தற்போதைய வெனிசுலா அதிபருமான மதுரோ தெரிவித்துள்ளார். வெனிசுலாவின் அதிபரான ஹூகோ சாவேஷ் கடந்த மார்ச்சில் புற்று நோய் பாதிப்பினால் மரணாமடைந்தார். அதற்குப் பின்னர், அவரது ஆட்சியில் துணை அதிபராக பதவி வகித்த நிகோலஸ் மதுரோ, கடந்த ஏபரலில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானார். சாவேஷின் தீவிர ஆதரவாளரான மதுரோவை ஏற்கனவே தனது அரசியல் வாரிசாக அறிவித்திருந்தார் சாவேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.அதன்படி, சாவேஷ் வழியிலேயே தற்போது ஆட்சி நடத்தி வருகிறார் மதுரோ. ஏற்கனவே, முன்னாள் அதிபரான சாவேஷ் மரணமடைந்த பிறகு சிறிய பறவையாக மாறி தன்னைச் சுற்றி வருவதாக தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்த மதுரோ, தற்போது சில சமயங்களில் சாவேஷின் கல்லறை மீது படுத்துத் தூங்குவதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். முன்னாள் ராணுவ அருங்காட்சியகத்தில் புதைக்கப்பட்டுள்ள சாவேஷின் கல்லறை மீது படுத்து உறங்குவதாலேயே அவரின் எண்ணாங்கள் மற்றும் கருத்துக்கள் தனக்கும் உருவாவதாகவும், அதன் மூலமே தன்னால் பல நல்ல திட்டங்களை அமுல் படுத்தி ஆட்சி புரிய முடிவதாகவும் தெரிவித்துள்ளார் மதுரோ.
Read more at: http://tamil.oneindia.in/news/2013/08/11/world-venezuelan-president-nicolas-maduro-says-he-sleeps-in-hugo-chavez-181031.html
Read more at: http://tamil.oneindia.in/news/2013/08/11/world-venezuelan-president-nicolas-maduro-says-he-sleeps-in-hugo-chavez-181031.html
No comments:
Post a Comment