Monday, 29 April 2013

செளதி அரேபிய கருவூலத்தில் கேரள குடும்பத்துக்கு சொந்தமான ரூ. 5,000 கோடி!

திருவனந்தபுரம்: கேரள குடும்பத்துக்குச் சொந்தமான செளதி அரேபிய கரூவூலத்தில் உள்ள ரூ. 5,000 கோடியை மீட்க கேரள அரசு சிறப்பு அதிகாரியை நியமித்துள்ளது.
இது குறித்து கேரள மாநில சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் நசீகர் கூறியதாவது:
கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த கெயி குடும்பத்தினர் 136 ஆண்டுகளுக்கு முன் புனித மெக்கா நகரில் ஒரு இடத்தை வாங்கினர். அங்கு ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்காக ஒரு இருப்பிடத்தைக் கட்டினர்.
 kerala family may come into 900 million saudi bonanza

1950ம் ஆண்டு மெக்கா நகரை மேம்படுத்தவும், புனித யாத்ரீகர்களுக்கான தங்குமிடங்களை விரிவாக்கவும் கெயி குடும்பத்தினரின் இடத்தை செளதி அரசு கையகப்படுத்தியது. இதற்காக அந்தக் குடும்பத்தினருக்கு ரூ. 1.98 கோடியை (1.4 million Saudi riyals) நிவாரணமாக வழங்கியது.
இந்தப் பணம் செளதி அரேபிய கரூவூலத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பணத்தை கெயி குடும்பத்தினரால் பெற முடியவில்லை. இப்போது அந்தப் பணத்தின் மதிப்பு ரூ. 5,000 கோடியாகிவிட்டது.
செளதி சட்டப்படி இந்தக் குடும்பத்தினர் இந்தப் பணத்தைப் பெற்றால் அதை செளதியிலேயே தான் செலவு செய்ய முடியும். இந்தப் பணத்தை வைத்து புனிதப் பயணிகளுக்காக பெரிய அளவில் தங்குமிடம் கட்டித் தர முடியும்.
2001ம் ஆண்டு முதல் கெயி குடும்பத்தினர் இந்தப் பணத்தை செளதி கருவூலத்தில் இருந்து பெற முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். ஆனால், அதைப் பெற முடியவில்லை. இதையடுத்து இது குறித்து கெயி குடும்பத்தினருக்கு உதவ அப்போதைய கேரள முதல்வராக இருந்த ஏ.கே.ஆண்டனி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இப்போதைய உம்மன் சாண்டி அரசும் இந்த விஷயத்தில் மத்திய அரசு- செளதி அரசுடன் பேச ஒரு சிறப்பு அதிகாரியையும் நியமித்துள்ளது.
இவ்வாறு நசீர் கூறினார்.
இந்த விவகாரத்தையே நசீர் தனது பி.எச்டி படிப்புக்கான கருவாக வைத்து ஆய்வறிக்கையும் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கீழக்கரை கைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளியில் 18 ஆண்டுகள் பணியாற்றிய தாளாளருக்கு 'பிரிவு உபசார விழா' - ஜமாத்தார்கள், சமூக நல அமைப்பினர்கள், பங்கேற்பு !


கீழக்கரை கிழக்குத் தெரு, கைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளியில் 1995 ஆம் ஆண்டு முதல், நேற்றைய தேதி வரை, ஏறத்தாழ 18 ஆண்டு காலங்கள், தொடர்ச்சியாக பள்ளி தாளாளராக, சிறப்பாக பணியாற்றிய  ஜனாப்.செய்யது இபுறாஹீம் (ஸ்டேசன் மாஸ்டர் - ஓய்வு) அவர்களுக்கான பிரிவு உபசார விழா நேற்று (27.04.2013) சனிக் கிழமை மாலை 4.30 மணியளவில் கைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. 



இந்த சிறப்பான விழாவிற்கு கிழக்குத் தெரு ஜமாஅத் தலைவர். ஜனாப். ப.அ. சேகு அபூபக்கர் சாகிபு காக்கா, கல்விக் குழு பொறுப்பாளர் ஜனாப். சுஐபு காக்கா,  கீழக்கரை இஸ்லாமிய பைத்துல்மால் பொறுப்பாளர். ஜனாப்.முஹைதீன் தம்பி காக்கா, கைராத்துல் ஜலாலியா மேனிலைப் பள்ளியின் தாளாளர். முனைவர்.சாதிக் காக்கா, சதக்கத்துன் ஜாரியா நடுநிலை பள்ளியின் தாளாளர். ஜனாப்.ஜமாலுதீன் காக்கா, பள்ளியின் புதிய தாளாளர் ஜனாப். ஜவஹர் சாதிக் காக்கா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.


இந்த விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர். திரு.சுரேஷ் குமார் வரவேற்புரை ஆற்றினார். கீழக்கரை நகர் நல இயக்கத்தின்   செயலாளர் ஜனாப். பசீர் அகமது,  நுகர்வோர் சேவை இயக்கத்தின் செயலாளர். திரு. தங்கம் இராதா கிருஷ்ணன், பள்ளியின் ஆசிரிய பெருந்தகைகள் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். மேலும் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் பொருளாளர் ஜனாப்.ஹாஜா அனீஸ், நிர்வாகி திரு. விஜயன், மக்கள் நல பாதுகாப்புக் கழக பொருளாளர் ஜனாப். முஹம்மது சாலிஹ் ஹுசைன், கிழக்குத் தெரு ஜமாஅத் நிர்வாகிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஜனாப்.செய்யது இபுறாஹீம் அவர்கள் சதர்ன் இரயில் வேயில், தமிழ் நாடு, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் 36 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.  மேலும் சதர்ன் இரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டராக பணியாற்றிய காலத்தில் விபத்துகளே இல்லாமல் மகத்தான சேவை புரிந்தமைக்காக  இரயில்வே அமைச்சரின் கைகளால் விருது, ரொக்கப் பரிசு, பாராட்டிதழ் போன்றவை பெற்று இருக்கிறார். தற்போது இவர்கள் அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் கூட, இளமை துடிப்போடு, எந்நேரமும்  'எறும்பு போல்' சுறுசுறுப்பாகவும்,   நேரம் தவறாமையை தன் வாழ்வில் கடை பிடித்து வருகிறார்.

கீழக்கரை நகரின் சமூக நலனில் அக்கறை கொண்ட  இந்த 86 வயதை கடந்த  இளைஞர், தன் ஓய்வு நேரம் முழுவதும் பொது நல பணிகளுக்காக தன்னை அர்பணித்து வருகிறார். இப்போது கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவராக தலைமையேற்று சேவை ஆற்றி வருகிறார். ஏற்கனவே நுகர்வோர்களுக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கீழக்கரையில் நுகர்வோர் சேவை இயக்கம் ஒன்றை உருவாக்கி, பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். 

இறைவன் அருளால், இளைஞர். ஜனாப்.செய்யது இபுறாஹீம் அவர்கள் இன்னும் பல்லாண்டு காலங்கள், நீண்ட ஆயுளுடனும், சரீர சுகத்துடனும் வாழ்ந்து, அவர்களின் சமூகப் பணிகள் செழித்தோங்க, கீழை இளையவன் வலை தளம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகிறது.

Tuesday, 16 April 2013

ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் மிக பயங்கர நிலநடுக்கம்: 40 பேர் பலி

தெஹ்ரான்: ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் இன்று மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.8 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் டெல்லி, குர்காவ்ன் உள்ளிட்ட இந்தியாவின் வட பகுதிகளும், பாகிஸ்தானும், வளைகுடா நாடுகளும் குலுங்கின.
இன்று மாலை 4.14 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு 8 ரிக்டர் புள்ளிகளாக இருந்ததாக அமெரிக்க நிலவியல் மையம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் இது 7.6 முதல் 7.8 புள்ளிகளாக இருந்ததாக ஈரான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஈரானில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. 40 பேர் வரை பலியாகிவிட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பலி எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
 earthquake at iran pakistan border tremors felt

டெல்லி, குஜராத், சண்டீகர் குலுங்கியது...
இந்தியாவில் இந்த நிலநடுக்கம் டெல்லி, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர், உத்தரப் பிரதேசம், சண்டீகர் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் உணரப்பட்டது. இங்கு வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
கராச்சி, ராவல்பிண்டி, குவெட்டா, இஸ்லாமாபாத்...
அதே போல பாகிஸ்தானின் கராச்சி, ராவல்பிண்டி, குவெட்டா, இஸ்லாமாபாத், ஹைதராபாத் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. அதே போல ஆப்கானிஸ்தானின் காண்டஹார் பகுதியும் இந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்தது.
துபாய், ஷார்ஜா, அஜ்மான்...
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வளைகுடா நாடுகளிலும் உணரப்பட்டது. துபாய், ஷார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட‌ அமீர‌க‌த்தின் ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் நில‌ந‌டுக்க‌ம் உண‌ர‌ப்ப‌ட்ட‌து. அமீர‌க‌த்தின் ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் வ‌சித்து வ‌ரும் ம‌க்க‌ள் த‌ங்க‌ள் க‌ட்டிட‌த்தை விட்டு தெருக்க‌ளில் காத்திருந்த‌ன‌ர்.
அரைம‌ணி நேர‌ம் க‌ழித்து த‌ங்க‌ள‌து இருப்பிட‌ங்க‌ளுக்கு திரும்பின‌ர்.
பஹ்ரைன், கத்தாரிலும்...
அதே போல பஹ்ரைனிலும் கத்தாரிலும் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்தன. இதையடுத்து அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் உயரமான கட்டடங்களில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலநடுக்கம் தெற்கு ஈரான்-பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண எல்லையில் கஷ் என்ற பகுிதியில் மையம் கொண்டிருந்தது. நிலத்துக்கு அடியில் 15.2 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 9ம் தேதி தான் ஈரானை 6.1 ரிக்டர் புள்ளிகள் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதும் அதில் 37 பேர் பலியானதும் நினைவுகூறத்தக்கது.
நிலநடுக்கத்தின் தாக்கத்தை விவரிக்கும் படம்:
கீழே உள்ள படம் அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள படமாகும். இதில் நிலநடுக்கத்தின் தாக்கத்தின் அளவு விவரிக்கப்பட்டுள்ளது.

போலியோ மருந்து கண்டுபிடித்து ஊனத்தை ஒழித்த விஞ்ஞானி ஹிலாரி கோப்ரோவ்ஸ்கி!

பிலடெல்பியா: போலியோ சொட்டு மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானி ஹிலாரி கோப்ரோவ்ஸ்கி இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 96.
பிறக்கும் போது ஊனமாக பிறந்துவிட்டால் விதியே என்று விட்டுவிடலாம். ஆனால் சுகமாக பிறந்து நன்றாக ஓடி ஆடி விளையாடிய பிள்ளைகள் திடீரென நோய் தாக்கி நடக்க முடியாமல் ஊனமடைவது என்பது தாங்க இயலாத துயரம். இந்த துயரத்திற்கு முடிவு கட்டும் வகையில் சொட்டு மருந்து ஒன்றினை கண்டுபிடித்தார் ஹிலாரி கோப்ரோவ்க்ஸ்கி.

Wednesday, 10 April 2013

பத்மநாபசுவாமி கோவில் ரகசிய அறையில் 700 கிலோ தங்க காசுகள் கண்டுபிடிப்பு Read more at: http://tamil.oneindia.in/news/2013/04/11/india-700-kg-gold-coin-found-trivandram-padmanabha-temple-173275.html

திருவனந்தபுரம்: பத்மநாபசாமி கோவில் ரகசிய அறைகளில் இருந்து 700 கிலோ எடை கொண்ட தங்க காசுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு தங்க சங்கிலியில் மட்டுமே 997 வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளனவாம். திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலில் 6 ரகசிய அறைகள் உள்ளன. ஏ முதல் எப் வரை பெயரிடப்பட்டுள்ள இந்த அறைகளில் பல லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் உள்ளன. பி அறையை தவிர மற்ற 5 அறைகள் ஏற்கனவே திறக்கப்பட்டு, அவற்றில் உள்ள பொக்கிஷங்கள் உச்சநீதிமன்றம் நியமித்த 6 பேர் அடங்கிய குழுவினர் மதிப்பீடு செய்து வருகின்றனர். இதன் விபரம் பற்றி 4 மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்யும் படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இது வரை செய்யப்பட்ட மதிப்பீட்டின் விபரங்களை உச்சநீதிமன்றத்தில் இக்குழு தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, 'சி,டி, இ மற்றும் எப் அறைகளில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி முடிந்து விட்டது. ஏ அறையில் உள்ள பொக்கிஷங்களை கணக்கிடும் பணி நடைபெறுகிறது. 216 நாட்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. 1 லட்சத்து 5 ஆயிரத்து 656 பொருட்கள் கணக்கிடப்பட்டுள்ளன. ஒரு நாளில் அதிக பட்சமாக 3 அல்லது 4 ஆபரணங்களை மட்டுமே மதிப்பீடு செய்ய முடிந்தது. ஒவ்வொரு ஆபரணத்திலும் குறைந்தது 75 முதல் 300 வரையிலான வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளது தான் மதிப்பீடு தாமதத்துக்கு காரணம். இதுவரை ரூ. 19.50 லட்சம் தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் எடை 700 கிலோ. இந்த நாணயங்களை மதிப்பீடுவதற்கு குறைந்தபட்சம் 2 மாதமாகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/04/11/india-700-kg-gold-coin-found-trivandram-padmanabha-temple-173275.html 700 Kg Gold Coin Found Trivandram Padmanabha Temple

டெஸ்ட் டியூப் கருத்தரிப்பு முறையை உருவாக்கிய டாக்டர் ராபர்ட் எட்வர்ட்ஸ் மரணம் Read more at: http://tamil.oneindia.in/news/2013/04/11/world-the-father-ivf-sir-robert-edwards-dies-at-87-173267.html

லண்டன்: உலகம் முழுவதும் உள்ள இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ள பெண்களின் கண் கண்ட கடவுளாக போற்றப்படும் சர் ராபர்ட் எட்வர்ட்ஸ் தனது 87வது வயதில் மரணமடைந்தார். இவர்தான் சோதனைக் குழாய் மூலம் கருத்தரிக்கும் முறையை உருவாக்கியவர் ஆவார். எட்வர்ட்ஸ் அன்று ஆரம்பித்து வைத்த இந்த சோதனைக் குழாய் கருத்தரிப்பு முறை உலகம் முழுவதும் இன்று வெகு பிரபலமாக உள்ளது. உலகில் இன்று கிட்டத்தட்ட 50 லட்சம் சோதனைக் குழாய் முறையில் பிறந்த குழந்தைகள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் டாக்டர் ராபர்ட். உலகின் முதல் சோதனைக் குழாய் முறை குழந்தை 1978ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் பிறந்தது. அது ஒரு பெண் குழந்தையாகும். அக்குழந்தையின் பெயர் லூயிஸ் பிரவுன். 2010ம் ஆண்டு ராபர்ட்டுக்கு நோபல் பரிசு கிடைத்தது. 2011ல் இங்கிலாந்தின் நைட் பட்டம் கிடைத்தது. உலகம் முழுவதும் இயற்கையான குழந்தைப் பேறை அடைய முடியாத பெண்களுக்கு தெய்வம் போல இன்று துணை நிற்பது இந்த சோதனைக் குழாய் கருத்தரிப்பு முறைதான். இங்கிலாந்தில் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக 1 லட்சத்து 80 ஆயிரம் சோதனைக் குழாய் குழந்தைகள் பிறப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. தன்னுடைய கண்டுபிடிப்பால் பிறந்த முதல் குழந்தையான லூயிஸ் பிரவுன் மீது மிகுந்த பாசத்துடன் இருந்தார் ராபர்ட். தனது குழந்தை போலவே அதை பாசத்துடன் கவனித்து வந்தார். லூயிஸ் பிரவுனுக்கும், வெஸ்லி முலிந்தருக்கும் திருமணம் நடந்தபோது கூடவே இருந்தார். லூயிஸ் பிரவுனுக்கு 2006ம் ஆண்டு இயற்கையான முறையில் மகன் பிறந்தான். அந்த பிரசவத்தின்போதும் ராபர்ட் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 34 வயதாகும் லூயிஸ் பிரவுன், ராபர்ட்டின் மரணம் தன்னை சிதறடித்திருப்பதாக கண்ணீருடன் குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது தாத்தா போலவே என் மீது பாசமாக இருந்தார் ராபர்ட். அவரது மறைவை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றார். நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ராபர்ட் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு ரூத் என்ற மனைவியும், 5 மகள்கள், 12 பேரக்குழந்தைகள் உள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/04/11/world-the-father-ivf-sir-robert-edwards-dies-at-87-173267.html The Father Ivf Sir Robert Edwards Dies At 87

துபாய்: ஈடிஏ நிர்வாக இயக்குநர் சலாஹூத்தீனுக்கு 'பிரைட் ஆப் இந்தியா' விருது Read more at: http://tamil.oneindia.in/news/2013/04/10/world-the-pride-india-award-eta-md-salahuddin-173184.html

துபாய்: ஈடிஏ அஸ்கான் ஸ்டான் நிர்வாக இயக்குனர் சலாஹூத்தீனுக்கு 'பிரைட் ஆப் இந்தியா' விருது வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, விருது நகர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய தென் தமிழக மாவட்டங்களைக் கொண்ட ரோட்டரி இண்டர்னேஷனல் மாவட்டம் 3212ன் சார்பாக, ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம். சலாஹூத்தீனுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் "THE PRIDE OF INDIA" என்ற விருது வழங்கப்பட்டு சலாஹூத்தீன் கெளரவிக்கப்பட்டார். ஈமான் விழாக் குழு செயலாளர் யஹ்யா முஹ்யித்தீன் இறைவசனங்களைத் தொடர்ந்து டாக்டர் பிரேமச் சந்திரன் இறை வணக்கப் பாடல் பாட, அமீரகத் தமிழ் மன்றம் ஆசிஃப் மீரான் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் 2013-2014 ரோட்டரி கவர்னர் ஜோசைய்யா வில்லவராயர், முன்னாள் கவர்னர்கள் ஜோ வில்லவராயர், டாக்டர் ஷண்முகம், ஆகியோர் சலாஹூத்தீனின் சிறந்த சேவையைப் பாராட்டிப் பேசினர். தொடர்ந்து சலாஹூத்தீன் அவர்களுக்கு விருது வழங்கி பேசிய முன்னாள் கவர்னர் ஆறுமுகப் பாண்டியன், தனது உரையில், சலாஹூத்தீன் மற்றும் ஈடிஏ குழுமத்தின் சாதனைகளை மேற்கோள் காட்டி சுமார் 70,000 குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் அளித்து வரும் சேவையைப் பாராட்டினார். பின்னர் ஏற்புரையாற்றிய சலாஹூத்தீன், ரோட்டரி அமைப்பின் நெட் ஒர்க் மற்றும் அதன் சேவைகளை தன் அனுபவங்களை முன் வைத்து வியந்து பாராட்டினார். ரோட்டரி கிளப்பின் பணிகளுக்கு மத்தியில் தம் சேவை மிகக்குறைவே என்றவர், தனக்கு கிடைத்த பாராட்டுக்களை, ஒரு அறிவுரையாக எடுத்து கொள்வதாக கூறி, ரோட்டரி அமைப்பின் சேவைகளுக்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார். மேலும் விழாவிற்கு வந்த ஏர் இந்தியா துபாய் விமான நிலைய மேலாளர் ராதாகிருஷ்ணனிடம் மதுரை- துபாய் நேரடி விமான சேவையை துரிதப்படுத்த வேண்டியதுடன், பன்னாட்டு விமான சேவைக்கு தூத்துக்குடியை தயார்படுத்தவும் ரோட்டரி கவ்ர்னர்களுக்கு கோரிக்கை விடுத்தார் சலாஹூத்தீன். முன்னதாக இந்தியாவிலிருந்து வருகை தந்த 44 ரோட்டரி நிர்வாகிகளையும் ரோட்டரி செயலாளர் பி.கே. சரவணன் அறிமுகப்படுத்திப் பேச, அவர்கள் அனைவரும் சலாஹூத்தீனுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். அமீரக அமைப்புகளின் சார்பாக, ஈமான் பொதுச் செயலாளர் குத்தாலம் லியாக்கத் அலி, பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் கீழை ராஸா, அமீரகத் தமிழ் மன்றம் ஜெசீலா ரியாஸ், அமீரா அமீன், ரிதம் ஈவெண்ட்ஸ் சபேசன், அமீரகத் தமிழர்கள் அமைப்பு சிம்ம பாரதி, காயிதே மில்லத் பேரவை ஹமீது யாஸீன், முத்தமிழ் சங்கம் ஷாஹூல் ஹமீது, யு.ஏ.இ. தமிழ்ச் சங்கம் ரமேஷ், துபை தமிழ்ச் சங்கம் முஹம்மது தாஹா, மற்றும் ஏர் இந்தியா துபை ஏர் போர்ட் மேலாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் விருது பெற்ற சலாஹூத்தீன் அவர்களை வாழ்த்தி மற்றும் தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த ரோட்டரி விருந்தினர்களை வரவேற்றும் பேசினர். நிகழ்ச்சியை கீழக்கரை ஹமீது ரஹ்மான் தொகுத்து வழங்க, உலக நகைச்சுவையாளர் சங்கம் துபை கிளை நெல்லை முகைதீன் பிச்சை நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரோட்டரி இண்டர்நேஷனல் நிர்வாகிகளுடன் இணைந்து, நெல்லை எஸ்.எஸ். மீரான், மற்றும் அம்பை ஸ்பர்ஜன் சுகுமார் ஆகியோர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்

Read more at: http://tamil.oneindia.in/news/2013/04/10/world-the-pride-india-award-eta-md-salahuddin-173184.html