Saturday, 29 November 2014

வங்கக் கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு நிலை – 24 மணி நேரத்தில் கனமழை Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/rain-tamil-nadu-within-24-hours-meteorological-center-215955.html

சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருவதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறி வருகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். மேலும், அடுத்த 24 மணிநேரத்தில் இது மேலும் வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், கடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கான வாய்ப்பு பெருமளவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் தென்கடலோர மாவட்டமான ராமேஸ்வரம் பகுதியில் அலைகள் மிகவும் சீற்றமாக இருப்பதால் மண்டபம், பாம்பன் மீனவர்கள் தங்களது நாட்டுப்படகுகளைத் நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர். கடந்த 2 நாட்களாக கடல் சீற்றமாக இருப்பதால் குறைவான மீனவர்களே கடலுக்குச் சென்றனர்.இந்த மழை டிசம்பர் 8 ஆம் தேதி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/rain-tamil-nadu-within-24-hours-meteorological-center-215955.html

Tuesday, 18 November 2014

இந்தியாவிலும் பரவியது எபோலா: டெல்லியில் முதல் நோயாளி- தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை Read more at: http://tamil.oneindia.com/news/india/india-s-first-ebola-patient-has-been-quarantined-215159.html

இந்தியாவிலும் பரவியது எபோலா: டெல்லியில் முதல் நோயாளி- தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை

Read more at: http://tamil.oneindia.com/news/india/india-s-first-ebola-patient-has-been-quaraடெல்லி: லைபீரியாவில் டெல்லி வந்த இந்தியரை எபோலா வைரஸ் தாக்கியிருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அவரை தனிமைப்படுத்தியுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, சியர்ரா லியோன், கினியாவில் ஆயிரக் கணக்கானோரின் உயிரை எபோலோ வைரஸ் குடித்துள்ளது. இந்நிலையில் லைபீரியா சென்ற 26 வயது இந்தியரை எபோலா வைரஸ் தாக்கியது. சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த அவர் டெல்லி வந்தார். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில் அவரது ரத்தத்தில் எபோலா இல்லாவிட்டாலும் விந்தணுவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமான நிலையத்தில் உள்ள சுகாதார மையத்தில் அவர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். குணமடைந்த பிறகும் விந்தணுவில் 3 மாதம் வரை எபோலா வைரஸ் இருக்கலாம் என்று நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. அந்த நபர் குறைந்தது 6 மாதங்களாவது உறவு கொள்ளாமல் இருக்க வேண்டும். இல்லை என்றால் ஆணுறை அணிந்து கொள்ள வேண்டும் என்று அது மேலும் தெரிவித்துள்ளது. India quarantines man recovering from Ebola அந்த வாலிபரின் விந்தணு பரிசோதனையில் எபோலா இல்லை என்று வரும் வரை அவர் தனிமைப்படுத்தி வைக்கப்படுவார். அவரால் நோய் பரவும் என்று இல்லை இருப்பினும் மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் விஷப்பரீட்சை வேண்டாம் என்று தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.com/news/india/india-s-first-ebola-patient-has-been-quarantined-215159.htmlntined-215159.html

குழந்தைகள் உயிரிழக்க காரணம் குறைபிரசவம்தான்: முதல்வர் பன்னீர்செல்வம் Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/medical-team-sent-dharmapuri-tamil-nadu-cm-215151.html

சென்னை: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்புக்கு, குறைப் பிரசவம், பிறந்த குழந்தை மிகக் குறைவான எடை கொண்டிருந்தது போன்ற பிரச்னைகளே காரணம் என தெரியவந்துள்ளதாக தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை: தருமபுரி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பச்சிளங்குழந்தை தீவிரசிகிச்சைப் பிரிவில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பச்சிளம் குழந்தைகளில் 11 பச்சிளம் குழந்தைகள் 14.11.2014 முதல் இன்று வரை இறந்துள்ளனர் என்பதை அறிந்து, இது குறித்த ஒரு ஆய்வுக் கூட்டம் இன்று (18.11.2014) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தர்மபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் இறப்புகள் அனைத்தும் பல்வேறு இயற்கையான காரணங்களால்தான் நிகழ்ந்துள்ளது என்பதும், இதில் சிகிச்சை குறைபாடு எதுவும் இல்லை என்பதும் எடுத்துரைக்கப்பட்டது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 14ஆம் தேதியன்று 5 பச்சிளங்குழந்தைகள் இறந்தன என்று தெரிந்தவுடன், சென்னையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையிலிருந்து பச்சிளங்குழந்தைகள் தீவிர கண்காணிப்புப் பிரிவு ஒருங்கிணைப்பு அலுவலர், டாக்டர் சீனிவாசன் உடனடியாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். குறைபிரசவம், எடை குறைவு அவரது ஆய்விலிருந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எந்தவொரு மருத்துவ ரீதியான குறைபாடுகளும் காணப்படவில்லை. தற்போதும் 73 பச்சிளங்குழந்தைகள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி தலைமையில் பச்சிளங்குழந்தை நிபுணர்கள் டாக்டர் நாராயண பாபு, டாக்டர் சீனிவாசன் மற்றும் டாக்டர் குமுதா ஆகியோர் தர்மபுரி மருத்துவமனையில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த 11 பச்சிளம் குழந்தைகளில் 7 குழந்தைகள் இரண்டரை கிலோ எடைக்கு குறைவாக இருந்தன. அதில் 5 பச்சிளம் குழந்தைகள் 1.2 முதல் 1.75 கிலோ எடை மட்டுமே இருந்தன. இந்த குழந்தைகள் குறைப் பிரசவத்தில் பெற்றெடுக்கப்பட்டுள்ளனர். சராசரியாக 37 வார கர்ப்ப காலத்திற்குப் பதிலாக 28 லிருந்து 34 வாரத்தில் குறைப்பிரசவம் நடைபெற்றுள்ளது. இறந்த 11 பச்சிளம் குழந்தைகளில், 8 குழந்தைகள் இதர மருத்துவமனைகளில் இருந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். கடந்த நான்கு நாட்களில் 11 குழந்தைகளின் இறப்புக்குக் காரணம், மிக இளம் வயது தாய்மார்கள், முந்தைய பிரசவத்திற்கும் தற்போதைய பிரசவத்திற்கும் மிகக் குறைந்த இடைவெளி இருந்தது, குறைப் பிரசவம், பிறந்த குழந்தை மிகக் குறைவான எடை கொண்டிருந்தது ஆகியவையே ஆகும். சிசுமரணங்கள் அதிகரிப்பு தர்மபுரி மாவட்டத்தில் சிசு மரண விகிதம் 19 என உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் சராசரியாக மாதமொன்றுக்கு 2050 உயிருள்ள குழந்தைகள் பிறக்கின்றன; 39 சிசு மரணங்கள் ஏற்படுகின்றன. அந்த விகிதாச்சார அடிப்படையிலேயே நடப்பு மாதமும் சிசு இறப்பு ஏற்பட்டிருந்தாலும், நான்கு நாட்களில் சிறிதளவு அதிக இறப்பு ஏற்பட்டுள்ளதால் தொடர் கண்காணிப்புக்காக கீழ்க்காணும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மருத்துவக் கல்லூரி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி தலைமையில் மருத்துவ நிபுணர் குழு அனுப்பப்பட்டு தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அனைத்து பச்சிளங்குழந்தைகளுக்கும் தொடர் கண்காணிப்பு மற்றும் சிறப்பு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் பிரசவம் நடைபெறும் 36 ஆரம்ப சுகாதார நிலையங்களில், கடைசி நேரம் வரை காத்திருக்காமல் சிக்கலான பிரசவங்களை உரிய நேரத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்ப்பகால பராமரிப்பை கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் கூட்டு முயற்சியுடன் மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இணை இயக்குநர் சுகாதாரம், துணை இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மூலம் எடை குறைவான தாய்மார்களை தீவிரமாக கண்காணித்து மேல் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/medical-team-sent-dharmapuri-tamil-nadu-cm-215151.html