
பெண் சிறுமிகளின் கல்வி உரிமைக்காக போராடியதற்காக தலிபான்களால் தீவிரவாதியாக கருதப்பட்டு சுடப்பட்ட பாகிஸ்தான் சிறுமி மாலாவை கௌரவிக்கும் வகையில் இன்று நவ.10ம் திகதி மலாலா தினமாக அறிவிப்பது தொடர்பில் ஐ.நா உத்தேசித்துள்ளது.
இன்றைய நாளில் மலாலா எனும் குறித்த சிறுமியை போன்று உலகில் உள்ள 32 மில்லியன் கல்வி மறுக்கப்படும் பெண் குழந்தைகளை நினைவு கூறும் தினமாக இது கடைப்பிடிக்கப்படலாம் என இங்கிலாந்து முன்னாள் பிரதமரும், ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனின் உலக கல்விக்கான சிறப்பு தூதுவருமான கார்டன் பிரவுன் தெரிவித்துள்ளார்.
மாலா குறித்து ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் கூறுகையில், : கல்வி ஒரு அடிப்படை உரிமை, மனித சமூகத்தின் வளர்ச்சி, சகிப்புத்தன்மை, குடியுரிமை ஆகியவற்றுக்கான பாதையாக கல்வி உள்ளது. மாலா மற்றும் உலகின் அனைத்து பாகங்களிலும் உள்ள சிறுவர் சிறுமியர்களுக்கு கல்வியி உறுதி செய்ய உலக சமூகம் பாடுபடவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
பாகிஸ்தானின் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ஸ்வாட் மாகணத்தில் மிங்கோரா நகரை சேர்ந்த மாலா (15 வயது) அங்கு நிலவும் தலிபான்களில் அதீத கட்டுப்பாடுகளையும் மீறி பள்ளி சென்று பயின்று வந்தார். மேலும் அங்கு தலிபான்களால் தம்மை போன்ற சிறுமியருக்கு நடைபெறும் கொடுமைகள் குறித்து தனது வலைப்பதிவில் பதிவிட்டு வரத்தொடங்கியதன் மூலம் உலக கவனம் பெற்றார். இவர் இந்த வலைப்பதிவை ஆரம்பித்தது தனது 11 வயதில் என்பதை நினைவில் கொள்க.
இந்நிலையில், தமது கொள்கைகளுக்கு முரணாக இப்பெண் சிறுமி செயற்படுகிறார் என குற்றம் சுமத்திய தலிபான்கள், மலாலாவை தாம் கொல்வதற்கு நேரிடலாம் என முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தனர். அவரது வீட்டு நுழைவாயில் கதவுகளில் புள்ளடி அடையாளமிட்டு இந்த எச்சரிக்கையை விடுத்தனர். எனினும் மலாலா தொடர்ந்து தலிபான்களுக்கு எதிராக குரல் கொடுத்துவ் அந்ததால் கடந்த மாதம் அக்.10ம் திகதி மலாலா வை சுட்டனர்.

இதில் காயமடைந்த மலாலா ஐக்கிய அரபு எமிரெட்ஸ் வழங்கிய ஏர் அம்புலன்ஸ் மூலம் லண்டன் கொண்டு செல்லப்பட்டு விசேட சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறார். தற்போது இவர் உடல் நலம் தேறி வருவது குறிப்பிடத்தக்கது. இவர் மீதான தாக்குலுக்கு உலக நாடுகள் கடும்கண்டனம் தெரிவித்திருந்துடன், மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வலுப்பெற்றுள்ளது.
கனடாவின் நான்கு அரசியல் கட்சிகள் உட்பட பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளும் இக்கோரிக்கையை விடுத்துள்ளன. இது தொடர்பிலான மனுவொன்றும் தற்போது நோபல் கமிட்டிக்குழுவுக்கு அனுப்படுவதற்கு தயாராகி வருகிறது.

எனினும் ஸ்வாட் மாகாணத்தில் எந்தவொரு பெண் பிள்ளைகளும் பள்ளி செல்லக்கூடாது எனும் தடை உட்பட பல தடைகள் தலிபான்களால் இன்னமும் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மலாலா விரைவில் குணமடைய உலகெங்குமிருந்து வாழ்த்து அட்டைகள் அனுப்பிய அனைவருக்கும் மலாலா சார்பில் தனது நன்றிகளை பகிர்ந்து கொள்கிரார் அவரது தந்தை.
No comments:
Post a Comment