புதுடெல்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பில் இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக ஹமீத் அன்சாரி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நடந்த கட்சிக் கூட்டத்தில் சோனியாகாந்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.மொத்தம் உள்ளா 790 எம்எல்ஏக்களில் 400 பேரின் ஆதரவு இருப்பதால் அன்சாரியின் வெற்றி உறுதி அடைந்துள்ளது. 2007 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஐமு கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டு துணை ஜனாதிபதி ஆனார். வெற்றி உறுதியானதால் இரண்டாவது முறையாக அன்சாரி துணை ஜனாதிபதி ஆகிறார். மேலும் அன்சாரியை ஆதரிக்குமாறு பாஜ கட்சிக்கு பிரதனர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாஜக தலைவர்கள் அத்வானி மற்றும் சுஸ்மாவிடம் பிரதமர் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
18:01:20
Saturday
2012-07-14
No comments:
Post a Comment