Sunday, 5 August 2012

கீழக்கரை நகராட்சிக்கு புதிய தனி ஆனையர் முகம்மது மைதீன் – திங்கள் கிழமை (06.08.2012) அன்று பொறுப்பேற்கிறார்..


கீழக்கரை நகராட்சிக்கு தனி ஆனையர் எவரும் இல்லாத நிலையில் கூடுதல் பணியாக இதனை ஆனையர் முஜீபுர் ரஹ்மான் கவணித்து வந்தார். நகராட்சிக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தனி ஆனையர் நியமிக்கவேண்டும் என்ற பல்வேறு தரப்புகளிடமும் இருந்து வந்த கோரிக்கைகளை அடுத்து கடந்த வாரம் நகராட்சித் தலைவர் மீண்டும் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி. முனுசாமி மற்றும் தலைமை ஆணையர் சந்திரகாந்த ஆகியோரை சந்தித்து வலியுறுத்தியதின் பேரில் கீழக்கரை நகராட்சிக்கு முதன்முறையாக தனி ஆணையராக திரு. முகம்மது மைதீன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்பொழுது சென்னை ஆவடி சிறப்பு நிலை நகராட்சியில் பொது நிர்வாக மேலாளராக பணிபுரிந்து வரும் இவர் பதவிஉயர்வு பெற்று கீழக்கரை நகராட்சி ஆனையராக வரும் திங்கள் கிழமை (06.08.2012) அன்று பொறுப்பேற்கிறார்.

மேலும் கீழக்கரை நகராட்சியில் தலைமை கிளார்க் ஆக பணிபுரிந்து வந்த எஸ். சந்திரசேகர் இடமாறுதல் அளிக்கப்பட்டு புதிய தலைமை கிளார்க் ஆக தேவகோட்டையை சேர்ந்த நாகநாதன் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இதுவரை நகராட்சி ஆனையராக பணிபுரிந்து வந்த முஜிபுர்ரஹ்மான் இந்த கூடுதல் பணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கும் தலைமை கிளர்க் சந்திரசேகருக்கும் நமது இனையதளம் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment