Saturday, 16 February 2013

World Press இன் 2012ம் ஆண்டுக்கான மிகச்சிறந்த புகைப்படங்கள்


2012 க்கான World Press Photo போட்டியில் வெற்றி பெற்ற புகைப்படங்கள் இவை. புகைப்பட ஊடகவியல் என்றால் எப்படி இருக்க வேண்டும்? அதற்கான தகுதிகள் என்ன என அழுத்தமாக சொல்கின்றன இப்புகைப்படங்கள்.
Visual Journalism இல் சிறந்து விளங்கும் நடுவர் குழுவினரால் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுகிறார்கள். பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற புகைப்படங்கள் இவ்வருடம் முழுவதும் 45 நாடுகளில் கண்காட்சிக்காக கொண்டு செல்லப்படுகின்றன. மிகச்சிறந்த புகைப்பட ஊடகவியலை கொண்டு,  உலகின் உண்மையான யதார்த்த நிலையை புரிந்து கொள்ளவைப்பதே எங்களது இலக்கு என்கிறார்கள் வெற்றி பெற்றவர்கள்.  பல்வேறு பிரிவுகளில் வெற்றிபெற்ற சில முக்கிய புகைப்படங்கள் கீழே தரப்படுகின்றன.

2012 ம் வருடத்திற்கான Word Press புகைப்படமாக இப்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலின் எரிகணை தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட இரு வயது சிறுமியும், அவரது மூன்று வயது சகோதரனையும், இறுதிச்சடங்குக்காக பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படம். இத்தாக்குதலில் இக்குழந்தைகளின் தந்தையும் பலியாகிவிட்டார். அவர்களது தாயார் ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.


விளையாட்டு பிரிவில் முதலிடம் பெற்ற புகைப்படமிது. இந்தோனேசியாவில் நடைபெறும் மாடுகளின் ஓட்டப்போட்டியில் எடுக்கப்பட்டது

இயற்கை பிரிவில் முதலிடம் பெற்ற புகைப்படமிது

Contemporary பிரிவில் முதலிடம் பெற்ற புகைப்படமிது. கென்யாவின் நைரோபியில் குப்பைகளை பொறுக்கும் பெண்மணி ஒருவர் அங்கு சில புத்தகங்களையும் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்.




No comments:

Post a Comment