ரஷ்யாவில் அமைந்துள்ள ஓய்மைக்கோன் (Oymyakon) எனும் கிராமமே மக்கள் குடியேறி வாழும் உலகின் மிகக் குளிரான கிராமம் ஆகும்.
அங்கு இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் சராசரி வெப்பநிலையாக -50C பதிவாகியுள்ளது. மேலும் இங்கு மிகக் குறைந்த வெப்பநிலையாக -71.2C பதிவாகியுள்ளது. அதி கூடிய குளிரின் காரணமாக இக்கிராமம் 'Pole of Cold' என அழைக்கப்படுகின்றது.
இக்கிராமம் கடல் மட்டத்தில் இருந்து 750m உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு டிசம்பரில் பகல் பொழுது வெறும் 3 மணித்தியாலங்களுக்கும் அதிக பட்சமாக கோடை காலத்தில் 21 மணித்தியாலங்களும் நீடிக்கின்றது. இங்கு மக்கள் தொகை வெறும் 500 பேராகும். மேலும் கடும் குளிரினால் உணவுக்கு அவசியமான மரக்கறிகள் என எதுவும் இங்கு விளைவதில்லை. எனவே குளிரைத் தாக்குப் பிடிப்பதற்காக இவர்களின் முக்கிய உணவாக Reindeer எனப்படும் கலைமான் மற்றும் குதிரைகளின் இறைச்சி விளங்குகின்றது. இருந்த போதும் இவர்கள் போசாக்குக் குறைபாட்டினால் பாதிக்கப் படுவதில்லை என்பது ஆச்சரியமான விடயமாகும்.
இவ்வளவு குளிர் நிறைந்த இக்கிராமத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இங்குள்ள பல வீடுகளின் கழிப்பறையும் குளியலறையும் வீட்டுக்கு வெளியே ஹீட்டர் பூட்டப் படாமல் அமைந்துள்ளன. சில குடிமக்கள் தமது காரை நாள் முழுதும் ஸ்டார்ட்டிங்கிலேயே வைத்துள்ளனர். இதற்குக் காரணம் ஒரு தடவை இது நிறுத்தப் பட்டால் மறுபடி ஸ்டார்ட் ஆவது சந்தேகத்துக்குரியது என்பதனால் ஆகும்.
மேலும் ஒருவர் மரணமடைந்தால் அவரை எரிப்பதற்குக் குழி தோண்ட 3 நாட்கள் எடுக்கும் எனவும் இதற்குக் காரணமாக தோண்டப் படும் நிலத்தில் விறகுகள் மூலம் சிதை உருவாக்கி எரிய வைக்க நேரம் தேவைப்படும் எனவும் கூறப்படுகின்றது.

No comments:
Post a Comment