
சுவிடன் நாட்டின் நகரங்களில் உள்ள ரயில் சுரங்கப்பாதைகளில் உள்ளே செல்லும் போது ஓர் திகைப்பூட்டும் அனுபவம் கிடைக்கும் எனலாம்.
ஏனனில் அங்கு முற்றிலும் வண்ண வண்ண ஓவியங்கள், சிற்பங்கள் என கலைப்படைப்பாய் மாற்றியிருக்கிறார்கள்.
அந்நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள சுமார் 100ற்கும் மேற்பட்ட சுரங்கப் பாதை ரயில் நிலையங்கள் கலை நயத்துடன் காட்சியளிக்கின்றன. சுரங்கப்பாதை அமைப்பினரின் உதவியுடன் சுமார் 150 கலைஞர்கள் இந்த கலைப்படைப்பை தயாரித்துள்ளனர். உலகின் மிக நீளமான ( 110 km(68.3 miles) கலை கண்காட்சியாக ஸ்டாக்ஹோமில் உள்ள சுரங்க ரயில் பாதை அமைந்துள்ளது.

கலை ஓவியங்களை கொண்டுள்ள சுரங்கப் பாதை ரயில் நிலையங்களினுள் பயணிக்கும் பயணிகளுக்கு இதமான அனுபவங்களை தருவதோடு இதனால் குற்றச் செயல்களை குறைக்கவும் வழி செய்வதாக அந்நகரின் போக்குவரத்து துறையினர் கருதுகின்றனர்.
















No comments:
Post a Comment